அடுத்துவரும் காலங்களில் எரிஎண்ணெய் இல்லாத இயற்கை வளங்களை கொண்டு வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, வளைகுடா நாடுகளின் உலக அரசியல் போன்ற பல்வேறு காரணங்களால் எரி எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. உலகிலுள்ள அனைத்து நாடுகளின் ஆய்வுகளை மேற்கொண்டு தண்ணீர், காற்று, சூரியஒளி, கடல் அலை, காந்தப்புல இயக்கம், சமன் உருளை இயக்கம், மணல் மின்கலம் போன்ற இயற்கை ஆற்றல்கள் மூலம் உற்பத்தி செய்து வாகனங்களை இயக்கி வருகின்றார்கள்.
தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வாயு கொண்டு தமிழக மாணவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கிக் காட்டி வருகின்றனர். வழக்கமான வாகன தொழில் நுட்பத்தில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
காற்று ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் கார்களை இயக்கி வருகின்றார்கள். சூரியஒளி தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, ஆட்டோ, கார்களை இயக்கி வருகிறார்கள். 2020 ஆண்டிலிருந்து மிதிவண்டி முதல் கனரக வண்டிகள் வரை பேட்டரியில் இயங்கும் மின் வாகனங்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. நடுவண அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
உலகளவில் 197 நாடுகளை உறுப்பினர் களாக கொண்டு 1992ல் தொடங்கப்பட்ட United Nation Frame work Convertion Change Conference அமைப்பு கொண்டு வரும் தீர்மானங்களை எல்லா நாடுகளும் செயல்படுத்த வேண்டும்.
Also read: கடலில் இருந்து மின்சாரம் எப்படிப் பெறப்படுகிறது?
இந்தியாவில் 2001 முதல் 2016 ஆண்டுவரை 230 மில்லியன் உள்எரிப்பு எந்திரங்கள் ICE -International Confusion Engine விற்பனையாகி உள்ளன. இந்த வாகன மூலங்கள் 47.40 டன் எரி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு 84.60 டன் கார்பன் டை ஆக்சைட் வெளியிடப்பட்டு உள்ளது.
2015 ஆம் ஆண்டு FAME -Faster Adoption and Manufacturing of Hybrid Electric Vehicle மின் வாகனங்கள் உற்பத்தி விரைவாக ஏற்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு 2019-2020 நிதியாண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் 17 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றில் காலாவதியான வாகனங்கள் 7 கோடிக்கு மேல் உள்ளன. ஒரு வாகனத்திற்கு ஆண்டிற்கு 200 லிட்டர் வீதம் 3400 லிட்டர் எரி எண்ணெய் செலவாகிறது. மின் வாகனங்கள் பயன்படுத்துவதால் 340 கோடி மிச்சமாகும். அடுத்த 7 ஆண்டுகளில் அனைத்து இருசக்கர மோட்டார் வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும். மேலும், 2025 ஆண்டிற்குள் 3 கி.மீ.க்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க வேண்டும்.
தற்போதுள்ள அரசு கழிப்பறை கட்டுவது, பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்குவதும் தான் தூய்மை என்று கருதுகிறது. தூய்மை என்பது சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் அல்லது தடுத்தல் ஆகும். சுற்றுச்சூழல் காற்று மாசு, தண்ணீர் மாசு, மண் மாசு, வெப்ப மாசு, அணுக்கதிர் மாசு, ஒலி மாசு, ஒளி மாசு, குப்பை மாசு, பிளாஸ்டிக் மாசு போன்றக் காரணிகளால் மாசுபடுகிறது.
இந்தியாவில் 90% வாகனங்கள் மூலம் காற்று மாசு, வெப்ப மாசு, ஒலி மாசு, ஒளி மாசு போன்ற மாசுகள் உருவாக்கப்படுகின்றன. மீதமுள்ள மாசு தொழிற்சாலைகள் மற்றும் உயிரினங்களால் ஏற்படுகிறது. மத்திய அரசு FAME திட்டத்தின் மூலம் மின்வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. மின்னூட்ட மைய உள் கட்டமைப்பை ஊக்குவிக்க உதிரிபாகங்களுக்கு சுங்க வரிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. மத்திய வாகனச்சட்டங்களில் திருத்தங்கள் வர இருக்கின்றன. BS4- Bharat Stage Emission Standards வாகனங்களை பதிவு/புதுப்பிக்க தடை விதிக்க இருக்கிறார்கள். வாகன உற்பத்தியாளர்களுக்கு BS6 வாகனங்களை உற்பத்தி செய்யவும், பெட்ரோல் உற்பத்தி செய்யவும் பரிந்துரை செய்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன வாகனங்களை அழிப்பதற்கு 2020ல் சட்டம் கொண்டுவர இருக்கிறார்கள்.
மாநில அரசு, “தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019” அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு 100% வாகனவரி செலுத்திய தொகையை பின்னர் வழங்கப்படும். (Central GST, State GST வரியை முதலில் அரசிற்கு செலுத்தி விட வேண்டும். பின்பு, பயனாளிக்கு திரும்ப வழங்கப்படும். ஆனால் மத்திய அரசு GST 12% லிருந்து 5% குறைப்பதாக பரிசீலனையில் உள்ளது. ஆனால் நடுவண மாநில அரசுக்கு செலுத்திய முழு வரித்தொகையும் மாநில அரசு வழங்குமா என்று தெரியவில்லை. மேலும் கலப்பின வாகனங்களுக்கு CST 43% வரிவிகிதமாக உள்ளது. அந்த வாகனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.)
மின்வாகன உதிரிபாகங்கள், பேட்டரி, மின்னூட்ட உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ரூபாய் 50 கோடி முதலீடு செய்து 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும். (என்ன சிறப்பு சலுகை என்பது தெரியவில்லை).
மின்சார வாகனங்கள் 15% மானியமும், மின் கலங்கள் உற்பத்தி தொழிலுக்கு 20% மானியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏற்கனவே, தொழில் வளர்ச்சிக்கு 15% முதல் 30% மூலதன மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இது புது சலுகையாக தெரியவில்லை).
அரசு தொழில் பூங்காக்கள் மூலம் அமைக்கப்படும் தொழிற்பூங்காக்களில் நிலம் வாங்குவதில் 20% மானியம் வழங்கப்படும். (அரசு நிலங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. அரசு நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தங்கள்தான் செய்யப்படுகிறது. மேலும், பல நிபந்தனைகள் உள்ளன. அந்த பூங்காவின் அருகிலுள்ள நிலத்தின் மதிப்பை விட பன்மடங்கு விலை அதிகமாக உள்ளது).
தென்மாவட்டங்களில் தொடங்கப்படும் மின்வாகன நிறுவனங்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். (எந்தெந்த மாவட்டங்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே, தென் மாவட்டங்களில் வாகனங்கள் உற்பத்தி, பழப்பதப்படுத்தும் தொழில் பூங்காக்களில் நிலம் கட்டிடம் விற்பனை ஆகாமல் வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன).
மின் வாகனங்கள் மற்றும் மின்னூட்டும் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில்சாலைகளுக்கான நிலத்திற்கு 100 சதவீத முத்திரைத்தாள் கட்டணம் விளக்கு அளிக்கப்படும்.
மின்சார வாகனங்கள் மற்றும் மின்னேற்றும் உபகரணங்கள் உற்பத்தி தொழில்களுக்கு 100% (GST) வரி விலக்கு அளிக்கப்படும். (மின் கட்டணத்திற்கு 18% GST வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் TNGEDCO நிறுவனத்திடம் எந்த அறிக்கையும் இல்லை).
மின்வாகனத் தொழில் தொடங்கிய நிறுவனங்களுக்கு 2025 ஆண்டுவரை சேம நல நிதி (ESI) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்திய தொழிலாளர்கள் சேம நல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும். (இ.எஸ்.ஐ நிறுவனங்கள் பங்களிப்பு தொகை 0.75% திரும்ப வழங்கப்படும்).
மின் வாகன தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வரம்பை விட 20% கூடுதல் மூலதனம் மானியம் வழங்கப்படும்.
தொழில் துறை சார்பாக மின்சார வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு பூங்காக்கள் உருவாக்கப்படும்.
தனியார் உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகளில் மின்னேற்றும் வசதி ஏற்படுத்தப்படும்.
மேலும், அரசு போக்குவரத்து மேலும் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கு வாங்குவதற்கு நிதியுதவி வழங்கப்படும்.
ஆட்டோகளுக்கு திறந்த நிலை அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
நகரங்களிலுள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாகனங்களுக்கு மின்னேற்றும் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் கட்டுமான சட்டங்களில் தேவையான மாறுதல்கள் செய்யப்படும்.
பொது வசதி மையங்கள் (C.S.C. Common Service Centre) மூலம் புதியதாக தொடங்கப்படும் மின்னுட்ட மையங்களுக்கான பதிவு நடுவண அரசால் செய்யப்படும். மத்திய அரசு வெளியிடும் மொபைல் ஆப்ஸ் மூலம் மின்வாகன பயன்பாட்டாளர்கள் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மின் வாகன உற்பத்தி தொடங்கப்படும் புதிய தொழிலுக்கு தனி கவனமும், ஊக்கமளிக்கும் வகையில் மையங்கள், ஆய்வு மையங்கள், சோதனை கூடங்கள், ஆலோசனை மையங்கள், பொது வசதிகள் போன்ற அனைத்து வசதிகளுக்கு செய்து கொடுக்கப்படும்.
நடுவண அரசு மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது. இருச்சக்கர வாகனத்திற்கு ரூ 4000 முதல் 5000 வரை (அ) 20% 3-4 சக்கர வாகனங்களுக்கு ரூ 60,000 (அ) 4 சக்கர வாகனங்களுக்கு 1,00,000 (அ) 20% கனரக வாகனங்களுக்கு. 4,00,000 (அ) 20% வரை மானியம் வழங்கப்படுகிறது.
1728ல் அன்யிஸ் ஜெடிக் என்ற ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் முதன் முதலில் மின் வாகனத்தை வடிமைத்தார். அதன்பின், 1890ல் மேம்பட்ட வாகனம் நேர்மின் மோட்டாரில் இயங்கும் வாகனம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
1890-ஆம் ஆண்டுகளில் வாகனங்கள் நேர்மின்சாரத்தில் இயங்கியன. அந்த காலக்கட்டத்தில் DC மோட்டாரின் முடுக்கு விசை, இழுவிசை, மோட்டார் சுழற்சி, மின் கலங்களில் சேமிப்பு திறன், ரீசார்ஜ் போன்ற வசதிகள் இல்லை. அதனால் மின்வாகனங்களின் பயன்பாடு குறைந்தது. மேலும், உள்ளக எரிபொருள் வாகன இயக்க தொழில் நுட்பம், மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு தேவையான எரிபொருள்கள் கிடைத்தாலும் கடந்த 130 ஆண்டுகளில் வாகனங்கள் அதிக வளா;ச்சி அடைந்து, உலக பொருளாதாரத்தை மாற்றி அமைத்துவிட்டது. சுற்றுச்சுழலையும் மாசுப்படுத்தி விட்டது.
கடந்த 100 ஆண்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சியால் புதிய மின் வாகனங்கள் அறிமுகமாகிவிட்டது. மேலும் ஐ.சி என்ஜினை விட பல மடங்கு இழுத்திறன் வேகம் உடையதாகவும் நேர்மின் மோட்டாரின் சுழற்சி உடையதாகவும் உள்ளது.
ஒவ்வொறு பயன்பாட்டிற்கும் தகுந்த மின் மோட்டார்கள் அறிமுகமாகி விட்டது. பல ஆயிரம் டன் எடையுள்ள பயணிகளை ஏற்றி செல்லும் ரயில் நேர்மின் மோட்டாரில்தான் இயங்குகிறது. அரசு பேருந்துகள், டிராக்டர், டிப்பர், சொகுசு பேருந்து, சிற்றுந்து, சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் முற்றிலும் மாசு, சத்தம் இல்லாத குறைந்த பயணச்செலவுடைய வாகனங்கள் சாலைகளில் பயணிக்க தொடங்கி விட்டன. கேரளாவில் சோலார் ஆட்டோரிக்ஷா அதிக அளவில் ஓடத்தொடங்கி விட்டன.
Also read: இதுவா, பொருளாதார வளர்ச்சி ?
மின்சார வாகனங்களில் 2000 வாட்ஸ் இயக்க திறனுள்ள மோட்டாரும் 48 முதல் 60 ஓல்ட் ஆற்றல் உடைய BLDC மோட்டார்கள் பொறுத்தப்படுகிறது. இதனால் மின்வாகனம் 60 முதல் 100 கி.மீ மேல் வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் உடையது. லித்தியம் அயன் பேட்டரிகள் விரைவில் சார்ஜ் ஆவதோடு நீண்டநாள் உழைக்க கூடியது. வாகன பதிவு, காப்பீடு, அரசு மானியம், வரி சலுகை பெறக்கூடிய வாகனங்களை, பல நிறுவனங்களின் ஸ்கூட்டர் பைக்குகள் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
21 ஆம் நூற்றாண்டில் பேட்டரி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்வதால் பேட்டரிகளின் விலை குறைந்து விட்டது. சோடியம் அயன் பேட்டரி, மணல் பேட்டரி, அலுமினியம் ஏர் பேட்டரிகள், கார்பன் அயன், துத்தநாக பேட்டரி, சில்வர் ஆக்சைட் பேட்டரி, போன்ற புது வகையான பேட்டரிகள் விற்பனைக்கு வர உள்ளன. இதனால், மக்கள் குறைந்த விலையில் பேட்டரிகளை வாங்கவும், நீண்ட காலம் பயன்படுத்தவும் முடியும். இதனால் மின்சார வாகனங்களின் இயக்கம் தொடங்கி விடும். தற்போது மாருதிவேன், ஆட்டோக்கள், சிற்றுந்து, பேருந்து, படகு, தொடர்வண்டி, விமானம் போன்றவை சோலாரில் இயங்கி வருகின்றன. விண்கலங்கள் 1960 முதல் சோலாரில் இயங்கி வருகின்றன. காற்று ஆற்றல் மூலம் பாய்மர கப்பல் ஆயிரம் ஆண்டுகளாக இயங்கி வந்தது.
- மின் வாகனத்தைச் சார்ந்த தொழில்கள்
- மின் வாகன மின்கலங்கள் மின்னேற்றும் நிலையம்.
- மொபைல் ஆப்ஸ் மூலம் மின்னுட்ட நிலையம், உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் முகவரி, மின் வாகன ஒர்க்ஷாப் விவரங்கள்.
- மின் வாகன சேவை மையம் பணிமனை.
- மின் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையம்.
- முச்சக்கரம், நாற் சக்கர ஆட்டோ ரிக்சா, பயணிகள் சரக்கு வாகனம் வாடகைக்கு விடுதல்.
- மின் வாகன சிறப்பு பழுது நீக்கம் இதர நிகழ்ச்சி ஒளிபரப்புதல்.
- மின் வாகன உதிரிபாகங்கள் இணையதள விற்பனை.
- மின் வாகன பணிமனை.
- நடமாடும் பழுது நீக்கும் மற்றும் மின் கலன் வழங்குதல்.
- மின்வாகனங்கள் அங்கிகார விற்பனையாளர்கள்.
- பெட்ரோல் டீசல் வாகனங்கள் அழிப்பு பணிமனை.
- மின்வாகனங்கள் ஆலோசனை மையம் (வாகன பதிவு, உரிமம் மானியம், நிதியுதவி, இதர சேவைகள்).
இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனையாகும் மின் வாகனங்கள்
மிதிவண்டிகள்: எலக்ட்ரான், ஹல்கா எலக்ட்ரோ, ஆம்பியர், பிஎஸ்ஏ மோட்டார், இ.பைக், எலக்ட்ரோதிராம், எக்கோ, இ. ட்ரியோ பைக், ஓ.எம்.ஓ பைக், ஸ்பீரோ, எனர்ஜி.
ஸ்கூட்டர்: காட்டி யவா, துன்வால் இ பைக், ஏதர் எனர்ஜி, பேட் ஆர்எஃப், கேஎல்பி கோம்பாகி, லைட் எக்ஸ் மோட்டார், ஒகினவா, பிலாட்டினா, ஷிமா இ வெக்கிள், என்.ஓ.எஸ்,
மோட்டார் சைக்கிள்: எஸ்.வி.எம். பைக், ஓ.கே. பிளே, ரெக்ஸ் நாமோ, ஆக்லோஸ், கேஎல்பி கோமாக்கி, ஏல்லி எலக்ட்ரான், வோல்டா, மகேந்திரா, ஓ.கே. பிளே,
சிற்றுந்து: எக்கோயான், மஹிந்திரா, டாடா ஏய்ஸ் எலக்ட்ரிக், அசோக் லேலேண்ட்.
பேருந்து: அசோக் லேண்ட், டாடா ஸ்டார் பஸ்,
படகு: ஆதித்யா.
தொடர்வண்டி: 1925 ஆண்டு முதல் மின் தொடர்வண்டி எந்திரத்தை இந்திய ரயில்வே துறை உற்பத்தி செய்து வருகிறது.
– க. கலைச்செல்வன், கம்பம் (9840650150)