Home வேளாண்மை

வேளாண்மை

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப்...
நன்கு பளுத்து முற்றிய திரண்ட மஞ்சள் நிறப் பழங்களை பாலீதின் உரச்சாக்குப் பைக்குள் 10-15 நாட்கள் நட்டு வைத்துப் பிறகு நிழலில் உலர்த்திய பின் அவை விதைகளாகத் தயாராகின்றன. பிறகு நிழலில் உலர்த்திய விதைகளை   உடனே முளைக்க வைக்க வேண்டும். தாமதம் ஆனால், முளைப்புத்திறன் பாதிக்கும். இந்த முறையில் நெல்லிவிதை தயாரிக்கப்பட வேண்டும். இந்த விதைகளே தரமான விதைகளாகும். விதை விதைப்பதற்கு முன் கன்றுகளின் வளர்ச்சியைத் துரிதப் படுத்திட...
பனைமரத்தின் தொடக்கம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் பொராச ஸ் ஃப்லாபெல்லிஃபர் - குடும்பம் : அகேசியே (Borassus flabellifer (Family: Arecaceae) என்ற இனமே இக்கட்டுரையில் விவரிக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் பால்மிரா. டாடி பால்ம் (palmyrah, toddy palm) என்று வழங்கப்படும். நன்றாக வளர்ந்த...
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய இப்பயிர் உலகின் வெப்ப மண்டலத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. நன்கு முற்றிப் பழுத்த பழங்களின் சதைப்பகுதி                                  இனிமையான சுவையுடனும், அதிக சாறுடனும் இருக்கும். பாலைவனப் பகுதிகளில் தாகத்தை அடக்கும் முக்கிய பழமாக இது பயன்படுகிறது. பூசணி இனப் பயிர்களிலேயே...
மனித உழைப்பே மிகுந்திருந்த மரபு வழி வேளாண்மைத் தொழிலில், இன்று எந்திரங்கள் மிகுதியாக இடம் பெற்று வருகின்றன. குறைந்த உடல் உழைப்பைக் கொண்டு, குறுகிய காலத்தில் விரிந்த நிலப்பரப்பில் கூடுதலான வேலைகளைச் செய்து முடிக்கப் புதிய பண்ணைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. பண்டை நாள் கருவிகள் மனித சக்தியை எண்ணத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. பெரும்பான்மையும் மனித சக்தியால் இயங்கக்கூடியவையாகவும் இருந்தன. மனித சக்திக்கு அப்பாற்பட்டவற்றிற்குக் கால்நடைகள் பயன்படுத்தப் பெற்றன. இப்போது விசையால்...
கேரள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தமிழ் நாட்டு விவசாயிகள் மற்றும் அவர்களது வேளாண்முறை குறித்த உண்மையான தகவல் களை மறைத்து வேண்டும் என்றே பொய்ப் பரப்புரை யில் ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வேளாண் வேதித்துறையின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளுள் ஒன்றான இந்திய பயிர் பாதுகாப்புக் கூட்டமைப்பு (Crop Care Federation of India) கூறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வரும்...