Latest Posts

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

- Advertisement -

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள் சொந்தமாக கார் பழுது பார்க்கும் தொழில் தொடங்குவது பற்றிச் சிந்திக்கலாம்.

ஒரு காரில் பல்வேறு பொறியியல் நுட்பங்கள் அடங்கி உள்ளன. அனைத்து நுட்பங்களின், எந்திரங்கள் – கருவிகளின் கூட்டமைப்புதான் ஒரு கார். இதில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நுட்பங்களும், கருவிகளும் அடங்கும். விதம்விதமான கார்கள், அவற்றில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பழுதுகள். அத்தனையையும் நுணுக்கமாக உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வரும் புதுப்புது தொழில் நுட்பங்களை கவனித்த வண்ணமே இருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வாகனங்கள் துறை சார்ந்த புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.

இடம் தேர்வு

சொந்தமாக ஒரு நவீன கார் சர்வீஸ் நிலையத்தை தொடங்க, சரியான ஒரு இடம் அமைய வேண்டும், அது கார் பழுது பார்ப்பு தொழிலுக்கு வாய்ப்பு உள்ள இடமாக இருக்க வேண்டும், எல்லோரும் எளிதில் வந்து போகும் இடமாகவும் இருக்க வேண்டும். குறைந்தது ஆயிரம் சதுர அடியாவது இருக்க வேண்டும். அகலமான சாலை உள்ள இடமாக இருக்க வேண்டும். தேவையான தொழில் நுட்ப கருவிகளை எவைஎவை தேவையோ அவற்றை எல்லாம் வாங்கி வைத்து இருக்க வேண்டும். காரை அடியில் இருந்து பழுது பார்ப்பதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்து இருக்க வேண்டும்.

தொடக்கத்தில் வரும் வாடிக்கையாளர்களின் கார்களை நல்ல முறையில், நியாயமான கட்டணத்துடன் சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும். ”மிகவும் நேர்த்தியாக வேலையை முடித்துக் கொடுக்கிறீர்கள். வழக்கமான மெக்கானிக்குகள் போல இல்லாமல் சுத்தமாக இருக்கிறீர்கள். உங்கள் இடமும் தூய்மையாக இருக்கிறது” என்று வாடிக்கையாளர்கள் கூறும் அளவுக்கு உங்கள் பணித் திறன் இருக்க வேண்டும். காலப் போக்கில் நாட்டில் விற்பனை ஆகும் அத்தனை வகையான கார்கள் பற்றியும் உங்களுக்கு அத்துப்படி ஆகி விடும்.

Also Read: Housekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி

விளம்பரம்

தொழில் தொடங்கிய உடனேயே உங்களுக்கு படிப்படியாக வரவேற்பு கிடைக்கத் தொடங்கி விடும். உங்கள் நிறுவனம் பற்றி சுவரொட்டிகள் அடித்து ஒட்டலாம்.  விளம்பர அறிக்கைகளை உங்கள் பகுதியில் உள்ள கார்கள் வைத்து இருப்பவர்கள் வீடுகள்தோறும் கொண்டு கொடுக்கலாம். ஒவ்வொரு இல்லத்திலும் உங்கள் நிறுவனம் பற்றிய செய்தி சென்று சேர வேண்டும். இப்போது இணைய தளத்தையும் உங்கள் நிறுவனத்தை பலரையும் அறியச் செய்யலாம். உங்களின் தொழில் நுட்ப அறிவும், சேவையும் முழுமையாக வெற்றி அடைவது என்பது வாடிக்கையாளர்களின் மனநிறைவில்தான் உள்ளது. எனவே ஒரு வாடிக்கையாளர்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன? என்பதை,  உணர்ந்து செயல்பட வேண்டும்.

Also Read: மேடு பள்ளங்களாக வரும் தடைகளைத் தாண்டுவது எப்படி?

வாடிக்கையாளர்களின் தேவை

ஒரு காரை சொந்தமாக வாங்கி, பயன்படுத்தும் போது அவர்களுக்கும் ஓரளவு கார் பற்றிய புரிதல் இருக்கும். அவர்கள் சொல்லும் கருத்திற்கு நீங்கள் ஒருபோதும் முரணாக இருக்கக் கூடாது. அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கார் உங்கள் நிலையத்திற்கு வரும் போது, பணி அட்டையில் வாடிக்கையாளர்கள் கூறும் குறைகளை குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த காரை ஆய்வு செய்து, என்னென்ன சேவைகள் செய்யப்பட வேண்டும், உறுப்புகள் ஏதேனும் மாற்ற வேண்டி இருந்தால் எந்தெந்த உறுப்புகள் மாற்றப்பட வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். இதற்கு ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்து தோராயமான தொகையைச் சொல்லி, அவர்களின் அனுமதி பெற்று, பணியைத் தொடங்க வேண்டும்.

காரை ஓட்டிப் பார்க்க வேண்டும்

பயிற்சியும், அனுபவமும் பெற்ற பணியாளர்கள் ஒரிருவரை தொடக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவர்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப உயர்த்திக் கொள்ளலாம். பழுது பார்ப்புக்கு வரும் ஒவ்வொரு காரையும், பழுது பார்ப்பதற்கு, முன்னர் நீங்களே ஓட்டிப் பார்க்க வேண்டும். அதே போல், அனைத்துப் பணிகளும் முடிந்த பிறகும் நீங்கள் ஓட்டிப் பார்த்து மனநிறைவு அடைந்த பின்னரே வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்களுடன் ஆன நேரடி தொடர்பு அதிகரிக்கும். நல்லுறவு உருவாகும்.

குறுஞ்செய்தி வழியாக சர்வீஸ்

உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பற்றிய விவரங்களை கணினியில் பதிந்து வைக்கத் தவறக் கூடாது. இவர்களை  மின்னஞ்சல் மூலமாகவும், எஸ்எம்எஸ், வாட்சாப் வழியாகவும் அவ்வப்போது தொடர்பு கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் உங்களை நாடி வருவதற்கு இவை பாலமாக அமையும். வாகனத்திற்கு காப்பீடு செய்யவும், உரிய நேரத்தில் புதுப்பிக்கவும், உதவியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பது வாடிக்கையாளர்களின் மனதில் நிலையான இடம் பிடிக்க உதவும். சில நேரங்களில் சிறப்பு பரிசுகளையும், சலுகைகளையும் தரலாம். கூடுதாலாக புதிய கார் வாங்குவது தொடர்பாகவும், பயன்படுத்திய காரை விற்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கலாம். பழைய கார்களை விற்றுக் கொடுப்பதன் மூலமான கமிஷனையும் பெறலாம். விபத்தில்பழுதடைந்த கார்களுக்கான் இன்சூரன்ஸ் தொகையை வாங்கிக் கொடுப்பதிலும் உதவலாம்.

Also Read: சில்லரை வணிகத்தில் தெற்கு மாவட்ட மக்களே அதிகமாக இருப்பது எதனால்?

– எஸ். எஸ். ஜெயமோகன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]