கேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் ‘டூட்டி ஃபுருட்டி’ என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது.
“டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி. அதைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
வெட்டிய துண்டுகளில் ஒரு கிலோவுக்கு 5 கிராம் சுண்ணாம்பும், 2 கிராம் படிகாரமும் கலந்து, பப்பாளித் துண்டுகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற விட வேண்டும். இந்த செய்முறை மூலமாக பப்பாளிக் காயிலுள்ள பாலெல்லாம் போய் விடும். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு மீண்டும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். ஒரு கொதி வந்தததும் கிண்டி விட்டு, இரண்டாவது கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிலோ காய்க்கு 17 கிலோ சர்க்கரை தேவை. முதலில் முக்கால் கிலோ சர்க்கரையை நன்றாக பாகு காய்ச்சி இறக் கவும். இறக்கிய பாகில் தயாராக உள்ள பப்பாளிக் காய்த் துண்டுகளைப் போட வேண்டும். மறு நாள் எடுத்துப் பார்த்தால் லேசான பழுப்பு நிறத்தில் இருக் கும். மீண்டும் முக்கால் கிலோ சர்க்கரையைக் காய்ச்சி, அதில் 2 கிராம் சிட்ரிக் அமிலம் சேர்த்து பப்பாளித் துண்டு களை வேக வைக்க வேண்டும். பதத்துடன் வந்ததும் ஃபுட் கலரான சிவப்பு, பச்சை, மஞ்சள் என விருப்பமான வண்ணங்களைக் கலந்து,
பப்பாளிப் பொருட்கள்!
உலக அளவில் பப்பாளி பல தொழில்களில் பயன்படுகிறது. இதில் இருந்து சோப்புவகைகள், முக கிரீம்கள், உடல் லோஷன்கள், செரிமானத் துக்கான சுவைக்கும் மாத்திரைகள், சூயிங் கம்கள், மிட்டாய்கள் போன் றவை தயாரிக்கப்படுகின்றன.
மாம்பழப் பழக்கூழ் உற்பத்தி செய்வதைப் போலவே பப்பா ளிப் பழக்கூழும் (Pulp) உற்பத்தி செய்யப்படுகிறது.
மருந்துத் தொழிலில் பயன் படும் பப்பாளியின் பொடி பப்பாளிக் காயைக் கீறி சேகரிக் கப்படும் பாலில் இருந்து தயா ரிக்கப்படுகிறது.
5 நிமிடங்கள் கழித்து இறக்கி, 5 கிராம் சோடியம் பென்சோயட் சேர்த்து கிளறி, ஆற விட்டு ஈரம் போனவுடன் பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம். 200 கிராம், 500 கிராம், 1 கிலோ , 2கிலோ என பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம். 1 கிலோ அல்லது இரண்டு கிலோ என குறைந்த அளவில் தயாரித்து இலாபம் பார்க்க முடி யாது. 50 கிலோ முதல் 100 கிலோ வரை தயாரித்து விற்பனை செய்தால் மட்டுமே இலாபம் பார்க்க முடியும். டூட்டி ஃபுருட்டியின் இன்றைய சந்தை விலையை விசாரித்து அதற்கேற்ப விலை வைக்க வேண்டும். ஒரே ஆள் ஒரு நாளைக்கு ஐம்பது கிலோ வரை தயாரிக்க முடியும். பப்பாளியை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொடுக்கும் எந்திரங்களும் உள்ளன. ஓரளவுக்கு வளர்ந்த பிறகு எந்தரம் வாங்குவது பற்றி சிந்திக்கலாம்.
டூட்டி ஃபுருட்டியை தரமாக தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, சர்க்கரை அளவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை அளவு குறைந்தால் டூட்டி ஃபுருட்டியின் பள பளப்பு குறையும். அதே மாதிரி, சர்க்கரையை பாகு செய்யும் போது, பக்குவத்தில் இறக்க வேண்டும்.
பாகு அடிப்பிடித்து விட்டால் டூட்டி ஃபுருட்டிக்கு பயன் படுத்தக் கூடாது. மீறிப் பயன் படுத்தினால் ஒரு மாதத்திற்குள் டூட்டி ஃபுரூட்டி கெட்டு விடும். பதத்தில் காய்ச்சினால் ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
‘டூட்டி ஃபுருட்டிக்கு முக்கிய மூலப்பொருளே பப்பாளிதான். கிராமங்களில் டன் கணக்கில் பப்பாளியை சேகரிக்க முடி யாது. கொள்முதல் செய்யவும் முடியாது. கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளில் மொத்தமாக கிடைக்கும். மற்ற நகரங்களில் உள்ள சந்தைகளிலும் கிடைக்கும். ஆந்திராவில் அதிகமாக பப்பாளி விளைகிறது. அங்கிருந்து இங்கு உள்ள பெரிய சந்தைகளுக்கு வருகிறது.னர்” என்றார் திருமதி. ரோஸ்லின் ஜீவா.
தாமிரபரணி