fbpx
Home செய்திகள்

செய்திகள்

நமக்கு தேவையான இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தை வாங்கி விட்டால் மட்டும் போதுமா? தொடர்ந்து அதனை பதிவு செய்ய வேண்டும்; காப்பீடு செய்ய வேண்டும்; அவ்வப்போது பணிமனையில் விட்டு பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் அது இயங்குவதற்கு தேவையான எரிபொருளை அவ்வப்போது நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே...
தற்போது தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல பல்வேறு பொருள் போக்குவரத்து நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாலைவழி போக்குவரத்து, தொடர் வண்டி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து, கப்பல் வழி போக்குவரத்து என ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பொருட்களை உரிய இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நிறுவனத்தை பல்லடுக்கு போக்குவரத்து நிறுவனம் (Multi...
எல்லோரும் சமம் என்கின்ற போது, சிலருக்கு மட்டும் இட ஒதுக்கீடு தவறுதானே? -இப்படி சிலர் கேட்கிறார்கள். கண்டிப்பாக இட ஒதுக்கீடு என்பது தவறுதான். இட உரிமை என்பதே சரியான பொருள் தரும். பிராமணர் அல்லாதோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட உரிமையை, 1902 இல், கோல்காபூர் சமஸ்தானத்தின் மகாராஜா, திரு. ஷாகு, கிடைக்கப் பெறச் செய்கிறார். அனைவ ருக்கும் இலவசக் கல்வி,...
கூகுள் வழங்கும் கூகுள் மை பிசினஸ் (Google My Business) என்பது ஒரு இலவச சேவையாகும். இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நம் தொழில் விவரங்களை பதிவு செய்து விட வேண்டும். நம் வலைத்தளம் என்று மட்டும் இல்லாமல் இணையத்தில் பரவலாக நம் தொழில் தொடர்பான விவரங்கள் பரவி இருந்தால் வாடிக்கையாளர்கள் தேடும்பொழுது நம் தொழில் பற்றிய செய்திகள் அவர்களுக்கு தெரிய வரும்....
பத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக் கூறிய போது, ''ஒரு ஆண் அதிகாலை 4 மணி முதல் மரம் ஏறணும் இருபது முதல் இருபத்தைந்து மரம் ஏறி பாளைய சீவி ஊறி...
உலக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடக்க நிலையில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு பின்னர் பெரிய அளவில் வளர்ந்து உள்ளன. இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த...
பனை மரம் பல பயன்களைக் கொடுக்கும் இயற்கை வளம். இந்தியா, மற்றும் இலங்கையில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைக்கிறார்கள். உலக அளவில் சுமாராக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டு உள்ளது. இந்தியா: 60 மில்லியன் மேற்கு ஆபிரிக்கா - 50...
-நெல் அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் புதிய தலைவர் திரு. திராவிடமணி சிறப்புப் பேட்டி சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் 'செங்குன்றம் சுற்று வட்டார நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம்' செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக திரு. திராவிட மணி அண்மையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். நெல், அரிசி வணிகத்தில் செங்குன்றம் பெற்று இருக்கும் இடம், இன்றையா வணிக...
நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன் ஐஐடி. மற்றும், ஐஐஎம் நிறுவனங்களால் நடத்தப்படும் அமைப்பு, ழிறிஜிணிலி NPTEL ( National Programme Technology Enhanced Learning ) ஆண்டிற்கு இரண்டு முறை (ஜனவரி முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) குறுகிய கால சான்றிதழ்...
இன்றைக்கு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து செயல் பாடுகளுக்கும் வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்று என்று ஆகி விட்டது. இதற்குக் காரணம், வெப் சைட் எனப்படும் இணைய தளம் மூலமாக இருபத்து நான்கு மணி நேரமும் நம் நிறுவனத்தைப்பற்றி உலகில் எங்கு இருந்தும் அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, வணிக வாய்ப்பையும் அதிகரிக்கின்றன என்பதுதான். ஆனாலும் சில வணிகர்களுக்கு...