Latest Posts

மாடித் தோட்டம்: புதினா வளர்ப்பு

- Advertisement -

புதினா சைவ மற்றும் அசைவ உணவுகளில் அதிகம் பயன்படக்கூடிய ஒரு தாவரமாகும். இது, மணம் நிறைந்த தாவரம் என்பதால் பிரியாணியில் அதிகம் பயன்படுத்துவார்கள்.

ஒரு மண்தொட்டியில் மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை நிரப்பி அவற்றில் முற்றிய புதினா கீரையின் தண்டு பகுதியை 2 அங்குலம் அளவிற்கு நடவேண்டும். நடவு செய்த பின், சரியான நிழலும், சூரிய ஒளியும், தண்ணீரும் புதினா செடிக்கு கிடைக்கும் பட்சத்தில் மூன்று வார காலத்தில் நன்கு வளர்ந்து நிற்கும். செடியில் பூக்கள் பூப்பதற்கு முன் அறுவடை செய்ய வேண்டும். இல்லையெனில் இலைகள் பழுத்து உதிர்ந்து விடும்.

Also read : வெந்தயக்கீரை சாகுபடி

இதை பொறுத்தவரை, பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்கள் இருக்காது. எனவே, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு அவற்றில் முளைத்திருக்கும் களைகளை அகற்ற வேண்டும்.

தொட்டியில் வளர்ந்த புதினா செடிகளை, முழுமையாக பிடிங்கி அறுவடை செய்யாமல், சிறிது தண்டுகளை விட்டுவிட்டு கட் செய்தால் மீண்டும் அவற்றில் தளிர்கள் விட தொடங்கும். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வரை வளர்க்கலாம். அதன் பிறகு, புதிதாக தண்டுகளை நட்டு மீண்டும் புதினா செடிகளை வளர்க்கலாம்.

Also read: நகரத்துக்கு நடுவே ஒரு பசுமைத் தோட்டம்

புதினாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ஸ்பியர் வகை புதினா, மற்றொன்று மிளகுக்கீரை இவை புதினா செடியின் தண்டு, நறுமண இலை, புத்துணர்ச்சியூட்டும் சுவை ஆகியவற்றால் வேறுபடுகிறது.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news