வெந்தயக்கீரை சாகுபடியை பொறுத்தவரை, மூன்று மாதங்களில் பூத்துக் காய் காய்ந்து பலன் தரக்கூடியது. பூக்கள் பூக்கும் முன்னரே, செடிகளை பிடிங்கி அறுவடை செய்ய வேண்டும். வெந்தய கீரையானது, சிறு சிறு இலைகளாகவும், சிறு துண்டுகளாகவும் இருக்கும். சிறிது கசப்பு சுவையுடையது என்றாலும் இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. வெந்தயம் கீரை சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் போதுமானது.
வெந்தயம் கீரையை பயிரிடுவதற்கு சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களே ஏற்றப் பருவக் காலங்கள் ஆகும். நல்ல மண்ணும், மணல் கலந்த சற்று அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள் மற்றும் செம்மண் நிலங்கள் ஆகியவை வெந்தயம் கீரை சாகுபடி செய்ய உகந்த நிலங்கள் ஆகும்.
வெந்தய கீரையின் விதைகளை சிறிது மணலில் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, நீர் பாசனம் செய்ய வேண்டும். வெந்தயம் விதைகளை விதைத்தவுடன், பாத்திகளில் நிதானமாக நீர் பாய்ச்ச வேண்டும். பின் கையால் லேசாக கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும்.
வெந்தயம் கீரை சாகுபடி முறையில் நடவு செய்த 7 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை ஜீவாமிர்தம் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். அவ்வாறு செய்தால் பயிர் வளர்ச்சி நன்கு சீராக இருக்கும்.
விதைகள் விதைத்த 6-ம் நாட்களில் முளைகள் விட தொடங்கும். 10 நாட்கள் கழித்து களைகளை நீக்க வேண்டும்.
கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் கீரையைத் தாக்காது.
வெந்தயம் விதைத்த 21-25 நாட்களில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். அதை, வேருடன் பிடிங்கி விற்பனை செய்யலாம்.