நகைக் கடனா? கவனம்

0
266

ங்க நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறீர்களா? நீங்கள் பல எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் என்ன தேவைக்காகக் கடன் வாங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக          இருங்கள். விவசாயக் கடனா, வணிகத்திற்கானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடனுக்கான தவணைக் காலத்தைத் தெளிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாகவே நகைகளை மீட்டுக் கொள்வது வட்டிச் சலுகை உள்ளிட்ட பல பயன்களைப் பெற வழிவகுக்கும்.

அடகு வைத்த நகைகளுக்காக வங்கியில் தரும் அட்டையைப் பத்திரமாக வைத்திருங்கள். அதைக் கொடுத்தால்தான் மீட்கும் போது நகைகளை வாங்க முடியும். தொலைத்துவிட்டால் அப்புறம் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டிவரும். அதற்கு முத்திரைத்தாள் செலவு அதிகப்படி.

சில பேர் இந்த அட்டையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் பற்றிய விவரங்களை எழுதி வைப்பதுண்டு. எதற்காக என்று கேட்டால் என்ன நகை வைத்தோம் என்பது மறந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்பார்கள்.

நல்ல முன் யோசனை தான். எழுதி வையுங்கள். ஆனால் இந்த அட்டையின் மீது அல்ல. வேறு இடத்தில். வீட்டில். நாட்குறிப்பில்.

நகையை அடகு வைத்த பின் நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டி இருக்கிறதா? வர நாளாகுமா? அப்படியானால் உங்கள் குடும்பத் தில் உள்ள வேறொருவரின் பெயரில் அடகு வைப்பது நல்லது. அப்போதுதான் மீட்கும்போது நகைகளை வாங்க நீங்கள் இருந்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்படாது.

வாங்கிய கடனை ஒரேயடியாக முழுப் பணத்தையும் செலுத்தித்தான் மீட்க வேண்டும் என்பது இல்லை. சிறுகச் சிறுகக் கட்டலாம். அதற்கு அனுமதிக்கிறார்களா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.