ஜேசி பென்னி, கேமார்ட், சியர்ஸ் போன்ற பெரிய, பெரிய நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வால்மார்ட் முன்னணிக்கு வருவதற்குச் சின்ன யோசனைதான் காரணம். வால்மார்ட்டை உருவாக்கிய சாம் வால்டன் தனது யோசனையில் நம்பிக்கை வைத்திருந்தார். பெரிய கண்டுபிடிப்புத்தான் தேவை என்று காத்திருக்கவில்லை.சாம் வால்டன் சொல்வார். நான் ஏதாவது ஒரு பொருளுக்கு ஒரேயொரு டாலர் அதிகமாகத் தர வேண்டும் என்றாலும் அதன் பின்னணியை யோசிப்பேன். யாரோ ஒருவருடைய இயலாமை காரணமாகத்தான் இந்த அதிகப்படி ஒரு டாலர் செலவு. அந்த இயலாமையை நான் விலை கொடுத்து வாங்குகிறேன் என்று.
குறைந்த விலையில் கொள்முதல் செய்வது எப்படி? பொருட்களைத் தேங்கவிடாமல் விற்றுத் தீர்ப்பது எப்படி? கொள்முதல் செய்யும் இடத்தில் இருந்து நுகர்வோர் வசம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் சிக்கனத்தைப் புகுத்துவது எவ்வாறு? இவையே அவரது யோசனையாக இருக்கும்.
– நித்யா கணேசன், திண்டுக்கல்