Thursday, September 23, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

முயலுக்கு கொடுக்க வேண்டிய தீனிகள்

ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயி கள் பலர். இந்த வகையில் முயல் வளர்ப்பிலும் சிலர் ஈடுபட்டு வருகின் றனர்..

- Advertisement -

சின்ன அளவில் ஒரு முயல் பண்ணை அமைக்க ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் தேவை. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை வகை முயல்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.

வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்தும் முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுர அடி இடம் தேவை. அதாவது, இரண்டு அடிக்கு இரண்டு அடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்து அடி நீளம், நான்கு அடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்… செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.

குட்டி ஈனும் முயலுக்கு.., இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதே போல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு நிப்பில் அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.

சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (நான்கு மாதம் வயது உடையவை), ஆறு மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் திணறுகி றார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, மூன்று மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித் தனியாக விட்டுவிட வேண்டும்

ஆறு மாதங்களில் பெண் முயல் பருவத்துக்கு வரும். எட்டு மாதங்களில் ஆண் முயல் பருவத்துக்கு வரும். பெண் முயல் இணை சேரும் பருவத்துக்கு வந்து விட்டால், மூலையில் வலை தோண்டுவது போல கால்களால் பறிக்கும். அமைதியில் லாமல் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த செயல்பாடுகள் மூலம் கண்டு பிடித்து இணை சேர்க்கலாம்.

பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் விட்டு இரண்டு நாட்களில் பிரித்து விட வேண்டும். இணை சேரும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆண் முயல்களைத் தனியாக பிரித்துதான் வைக்க வேண்டும். இணை சேர்ந்த இருபத்தெட்டாம் நாளில் இருந்து முப்பதாம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டி ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முயல் தன் முடிகளை உதிர்க்கத் தொடங்கும். அந்த முடிகளை குவித்து அதன் மீதுதான் குட்டி ஈனும்.

இனச் சேரக்கைக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆண் முயலுடன் சேர்ந்த பதினைந்து நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றி விட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார்க் கழிவுகளை போட வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு முறைகள் குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்த பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம்.

முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் ஐந்து முதல் ஒன்பது குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை அறுபது கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டியின் எடை எழுநூற்று ஐம்பது கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை கூடி விடும்.

முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெர்ரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந் தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம்.

காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலையில் முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, அருகம்புல், தட்டைச் சோளம், மல்பெர்ரி இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்…. என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது.

பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் இருநூற்றைம்பது கிராம் கிராம் பசுந்தீவனமும், நூறு கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.

குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் நூற்று ஐம்பது கிராம் அடர் தீவனமும், இருநூற்று ஐம்பது கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு ஐம்பது கிராம் அடர் தீவனமும், நூறு கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும்.

முயல்கள் பகல் வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தை ஒரு முயலுக்கு 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும் குடிக்கத் தண்ணீரையும் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு முயலும் சராசரியாக ஆண்டுக்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஐந்து குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும் ஏழு பெண் முயல்கள் மூலமாக ஆண்டுக்கு இருநூற்றுப் பத்து குட்டிகள் கிடைக்கும்.

நான்கு மாதம் கழித்து விற்கு போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். முயல் வளர்ப்பில் பராமரிப்பு செலவு குறைவு. பகுதி நேர வேலையாகக் கூட செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

அடர் தீவனத்தை கடையில் வாங்குவதற்கு பதிலாக பண்ணையாளர் களே தயாரித்துக் கொள்ள முடியும். அடர் தீவனம் தயாரிக்கும் முறை பின்வருமாறு –

மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமைத் தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

தீவனம் வைப்பதற்கு பன்னிரெண்டு மணி நேரத்துக்கு முன், பதிமூன்று கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊற வைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது நூறு கிலோ தீவனம் தயாரிப்பதற்கான சுமாரான அளவு. எத்தனை முயல்கள் இருக்கின் றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவு தான். வீட்டில் இருக்கும் கொஞ்ச இடத்தில் கூட அதற்கேற்ற எண்ணிகை யில் முயல்களை வளர்க்க முடியும்.

முயல்களுக்கான கொட்டகைகளை காற்றோட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது. கொட் டகைக்குள் வெளிச்சம் குறைவாக இருக்கு மாறு அமைக்க வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைத்தால் வெயில் காலத் தில் தகரக்கூரை மீது தென்னை ஓலை களை பரப்பி வைக்கலாம்.

முயல்களைப் பெரும்பாலும் காதைப்பிடித்துதான் தூக்குவார்கள். ஆனால், அது தவறு. இடுப்பைப் பிடித்துதான் தூக்க வேண்டும். முயலை அடிக்கடி தூக்கினால் ரோமங்கள் உதிரும். அதனால், தேவையில்லாமல் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

முயல்களுக்கு நாற்பத்தைந்து நாட்க ளுக்கு ஒரு முறை. மருத்துவர் பரிந்து ரைக்கும் மருந்தைக் கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முயல்களுக்கு சொறி நோய் தாக்கினால், வேப்பெண் ணெய் தடவ வேண்டும். வேறு நோய்கள் பெரும்பாலும் வராது.

கொட்டகையில் சிதறிக் கிடக்கும் தீவனங்கள், கழிவுகளை தினமும் தவறாமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும் போதும், தண்ணீர் வைக்கும் போதும் கிண்ணங்களை சுத்தமாகக் கழுவித்தான் வைக்க வேண்டும். தினமும் முயல்கள் சரியாக சாப்பிடுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

– சுந்தரகாளத்தி

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.