Friday, December 4, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

நிறுவனங்களின் சட்டம் 2013, நன்மைகளும் விதிவிலக்குகளும்

எந்தவொரு நிறுவனத்திலும் உள்ள பங்குதாரர் ஒவ்வொருவரும் தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றி அமைப்பதால் தம்முடைய நிறுவனத்திற்கு ஒரு சில நன்மைகளும், விதிவிலக்குகளும் கிடைக்கும் என்ற செய்தியை நினைவில் கொண்டு தம்முடைய நிறுவனத்தினை சிறிய நிறுவனமாக மாற்றி அமைத்திடலாமா என சிந்தித்து அதன்படி செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (85)இன்படி சிறு நிறுவனம் என்றால் பொது நிறுவனங்கள் தவிர, செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகையானது ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கக் கூடாது. இந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை வருவாய் ஆனது *** [உடனடி முந்தைய நிதியாண்டிற்கான இலாப நட்டக் கணக்கின் படி] ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் இருக்கக் கூடாது. ஆகிய இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அது ஒரு சிறு நிறுவனம் ஆகும்.

இந்நிலையில் அவ்வாறான நிபந்தனைகளுக்கு உட்பட்டவை அனைத்தும் சிறுநிறுவனங்களா என்ற கேள்வி மனதில் எழும். ஆயினும், மேற்கண்ட இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தாலும், முதன்மை நிறுவனம் அல்லது துனைநிறுவனம், நிறுவனங்களின் சட்டம் 2013 பிரிவு 2 (8)இன்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம், சிறப்பு சட்டத்தின் படி நிறுவுகை செய்யப்பட்ட நிறுவனம் அல்லது அமைப்பு ஆகியவை சிறிய நிறுவனங்களின் வகைக்கு உட்பட்டவை அல்ல.
இதனை எளிய மொழியில் கூற வேண்டும் எனில் எந்தவொரு தனியார் நிறுவனமும், ஒரு தனியார் நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தொகை ரூபாய்50/- இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அந்நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை வருவாயானது ரூபாய் 2/- கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆகிய இரு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது, அந்நிறுவனம் சிறிய நிறுவனம் என்ற வகையின் கீழ் உள்ளடங்கும்.

இதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நிறுவனம் சிறுநிறுவனமாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வரும் அடுத்த ஆண்டுகளில் ஏதேனும் ஒரு காரணத்தால் மேலே கண்ட இருநிபந்தனைகளான செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் அல்லது வருடாந்திர விற்பணைவருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உயரும்போது, அந்நிறுவனமானது சிறிய நிறுவனத்தின் வகையின் கீழ் வராது. மேலும், சிறிய நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் / விதிவிலக்குகளையும் அந்நிறுவனம் கைவிட வேண்டும்.

நிறுவனங்களின் சட்டம் 2013 இன்கீழ்சிறிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் பொதுவான நன்மைகள் / விதிவிலக்குகள் பின்வருமாறு,

இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்துதல் : – சிறிய நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான வியாபார வணிக செயல்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் அவ்வாறான சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம் 2013 இன்படி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் நான்கு இயக்குநர்களின் குழுக்கூட்டங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை பின்பற்றத் தேவையில்லை. அதற்கு பதிலாக, சிறிய நிறுவனங்கள் ஒரு ஆண்டில் இரண்டு இயக்குநர்களின் குழுக்கூட்டங்களை மட்டுமே நடத்தினால் போதும். அதாவது, ஆண்டின் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டமும் இரண்டு கூட்டங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் தொண்ணூறு நாட்கள் இடைவெளியிலும் கூட்டப்பட வேண்டும்.

தணிக்கையாளர் நியமனம் செய்தல்: – தனிநபர் தணிக்கையாளர்கள் எனில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது கூட்டாண்மை நிறுவன தணிக்கையாளர்கள் எனில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக ஒரு நிறுவனத்தின் தணிக்கையாளர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்யவேண்டும் என நிறுவனச்சட்டம் 2013 இன் பிரிவு 139 (2) இல் குறிப்பிடப்பட்டு உள்ள நிபந்தனையை சிறிய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் விதிவிலக்குகள்: – நிறுவனங்களின் (கணக்குகள்) விதிகள், 2014 , விதி -8 இன்படி இயக்குநர்களின் குழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள் அடக்கங்களாக சேர்க்கப்பட வேண்டிய இனங்கள் அல்லது விவரங்கள் என்பவை சிறிய நிறுவனத்திற்கு பொருந்தாது.

நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் கையொப்பம் இடுதல்: – சிறிய நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் நிறுவனத்தின் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும், அல்லது நிறுவன செயலாளர் இல்லாத நிலையில், நிறுவனத்தின் ஏதேனும் ஒரு இயக்குநர் கையெழுத்து இடலாம்.

நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையில் குறிப்பிடவேண்டிய ஊதிய விவரங்கள்: – நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 இன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் இயக்குநர்கள் , முக்கிய நிருவாக பணியாளர்கள்(Key Managerial Person(KMP)) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்ட ஊதியம் குறித்த விவரங்களை கண்டிப்பாக தனித்தனியே குறிப்பிட வேண்டும். ஆனால், சிறிய நிறுவனங்கள் எனில் அதற்கு பதிலாக “இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம்” என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது ஆகும்.

நிறுவனங்களின் ரொக்கஓட்ட அறிக்கை: – ஒரு சிறிய நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அதன் நிதி அறிக்கையின் ஒரு பகுதியாக ரொக்கஓட்ட அறிக்கையையும் (CASH FLOW STATEMENTS) சேர்த்து சமர்பிக்கத் தேவையில்லை.

தணிக்கை அறிக்கையில் விலக்குகள்: – அக நிதிக் கட்டுப்பாடுகள் குறித்த நிதி அறிக்கைகள், தணிக்கை கட்டுப்பாடுகளின் இயக்க செயல்திறன் ஆகியவற்றை பற்றிய விவரங்களை சிறிய நிறுவனங்கள் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடத் தேவையில்லை.நிறுவனங்கள் சட்டம், 2013 . பிரிவு 446 பி இன் கீழ் சிறு நிறுவனங்களின் அபராதத்தொகை: – சிறிய நிறுவனங்கள் நிறுவனங்களின் சட்டம், 2013 பிரிவு 92 (5), பிரிவு 117 (2) அல்லது பிரிவு 137 (3) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ள விதிகளை பின்பற்றத் தவறினால், அத்தகைய சிறிய நிறுவனமும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரும் அத்தகைய நிறுவனத்தின் இயல்புநிலை அபராதத்திற்கு பொறுப்பாவார்கள். ஆனால், அத்தகைய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ள அபராதத்தில் பாதிக்கு மேல் அபராதத் தொகை இருக்கக் கூடாது.

– முனைவர். ச. குப்பன்

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.