Latest Posts

இலவசமாக விளம்பரம் செய்ய உள்ள வழிகள்

- Advertisement -

மாரிசாமி ஊமைத்துரை:

தற்போது எனக்கு 25 வயது. சொந்தத் தொழில் தொடங்கி உள்ளேன். அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன் ஆனால் வணிகர்களிடம், வாடிக்கையாளர் களிடம் கொண்டு செல்லும்போது பெரும்பாலும் அனைவரும் ”பார்க்கலாம்.., பார்க்கலாம்..” என்றே கூறுகின்றனர். சந்தைப் படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. உழைக்க தயாராக உள்ளேன். சந்தைப்படுத்துவதற்கான உங்கள் ஆலோசனைகள் என்ன?

Also read: வணிக உறவு வலைப்பின்னல் வணிகத்தை அதிகரிக்கும்

பொறியாளர் பழனிச்சாமி, குவைத்:

தற்போது உள்ள வணிக சந்தையில் உங்கள் பொருட்களை சந்தைப்படுத்து வதற்கு சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தலாம். முகநூலில் உள்ள நீங்கள் உங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்த முகநூல் இலவசமாக வழங்கும் தனிப் பக்கங்கள் எதையாவது தொடங்கி உள்ளீர்களா? இல்லை எனில் அதை முதலில் செய்யுங்கள்.

கூகுள் வழங்கும் இலவச வலைப்பூ (blog) ஒன்றை தொடங்குங்கள். கூகுள் இலவசமாக வழங்கும் லோக்கல் பிசினஸ் (Google Local Business) பக்கம் ஒன்றை தொடங்கி உங்களது சேவை குறித்து அல்லது உற்பத்திப் பொருள் குறித்து விளம்பரப் படுத்துங்கள். கூகுள் வழங்கும் இலவச ஒரு பக்க இணைய தளத்தை உருவாக்கி அதிலும் விளம்பரப்படுத்துங்கள்.

தனியாக ஒரு இணைய தளத்தை (வெப்சைட்) தொடங்கி, கூகுளில் யாராவது உங்கள் சேவை அல்லது பொருள் தொடர்பாக தேடும்போது அந்த கூகுள் தேடுபொறியில் (Google Search Engine) முதல் பக்கத்தில் வரும்படி நிலைநிறுத்துங்கள். இதற்கு செர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷட் தொழில் நுட்பத்தைப் (SEO) பயன்படுத்த வேண்டும். Pinterest ல் உங்கள் பொருள் பற்றி இலவசமாக விளம்பரம் செய்ய முடியும்.

Also read: பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவன ரகங்கள்

இனி வரும் பத்து ஆண்டுகளில் சந்தை முழுவதையும் இணையமே ஆளும். ஏனென்றால் நம் அடுத்த தலைமுறை உள்ளங் கையிலேயே உலகத்தைத் தேடி தங்களுடைய அனைத்து தேவைகளும் ஒரு சுட்டியில் (click-ல்) தன் வீட்டு வாசல்படியில் வந்து நிற்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது.

இது எதையுமே பொத்தாம் பொதுவாக உங்களுக்கு சொல்லவில்லை. நான். வளைகுடா நாடுகளில் இந்த வழிகளைப் பயன்படுத்தி நாள்தோறும் நூற்றுக் கணக்கானோரிடம் தொழில் செய்து வருகிறேன்.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news