தீவன வகைகளான கம்பு நேப்பியர் கோ (CN) 4, கினியா புல் கோ சிளி (GG) மல்டிகட் தீவன சோளம் கோ(FS) 29, மற்றும் லூசெர்ன்கோ 1 போன்ற கால்நடைகளுக்கான தாவர தீவனங்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் நடுவே மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த வகைகள் தேசிய அளவில் தீவனம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஒரு புதிய காலக்கட்டத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில கால்நடை விவசாயிகளுக்கு இந்த வகை தீவனங்கள் பெரும் வாய்ப்பாக உள்ளன. இவ்வகை தீவனங்களின் சாகுபடி கால்நடை விவசாயிகள் வெண்மைப் புரட்சிக்கு தங்கள் பங்களிப்பை வெற்றிகரமாக அளிக்க வழி வகுக்கிறது.
கம்பு நேப்பியர் கலப்பின புல் கோ (சி.என்) 4
கம்பு நேப்பியர் கலப்பின புல் கோ (சி.என்) 4, சிறந்த அம்சங்களை கொண்டு உள்ளது. இதன் தண்டு மென்மையாகவும், நார்ச்சத்து குறைந்தும், சர்க்கரை சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இத்தீவன தண்டில் வெள்ளை நிற பூச்சு பரவலாக இருக்கும். இதில் தூர்கள் பல இருக்கும் அது வேகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கும். இது நீளமான இலைகள், இலைக் கதிர்கள் மற்றும் உறையில், இலை விளிம்புகள் மென்மையானதாகவும் கூர்மை அற்றதாகவும் இருக்கிறது. இலை தண்டு விகிதம் அதிகமாக உள்ளது. கறவை மாடுகள், ஆடுகள் இவ்வகை தீவனங்களை விரும்பி உண்ணுகின்றன.
கோ (சி.என்) 4 சராசரி பச்சை தீவன புல்லின் மகசூல் 382 டன் / எக்டர் / வருடம் இது சிளி 3 தீவன புல் இரகத்தை காட்டிலும் 32.9% உயர்விளைச்சலை கொண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கம்பு நேப்பியர் கலப்பு கோ (சி.என்) 4 தாக்கம்
2008 ல்இருந்து 2014 வரையிலான கால கட்டத்தில் 1,07,03,873 மொத்தம் தண்டு வெட்டி இந்தியாமுழுவதும் 15 மாநிலங்களில் பரவி பரந்துள்ளது.
Also read :பால்பண்ணைகளை நம் நாட்டுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்
கினியா புல் கோ (GG) 3
கினியாபுல் கோ 3, மும்பாச பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீவனமாகும். இது அதிக அளவில் தூர் உண்டாகின்ற நல்ல வீரியம் உள்ளது. இது அதிகப் படியான இலை, தண்டு விகிதம் பெரிய மற்றும் நீண்ட இலைகள் கொண்டு உள்ளன. கறவை மாடுகள், செம்மறிஆடுகள், பன்றிகள் மற்றும் ஈமு பறவைகள் இத்தீவனத்தை விரும்பி உண்கின்றன. இந்த பசுந்தீவன புல்லின் மகசூல் ஒரு எக்டருக்கு 320 டன்கள். இது கோ 2 தீவன புல்லின் மகசூலுடன் ஒப்பிடும் போது 18.5 சதவீதம் உயர் விளைச்சலாகும். .
மல்டிகட் தீவன சோளம் கோ(FS) 29
சோளம், மற்றும் குதிரை மசால் முதன்மை தீவனப் பயிராக மேற்கு உத்திர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தில்லி நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் தீவன சாகுபடி காரிப் பருவத்தில் செய்கின்றனர்.
இந்த பிரபலமான மல்டிகட் தீவன சோளம் கோ 29. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் தீவன பயிர்த் துறையால் 2001 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு ஆண்டில் 6-7 அறுவடைகள் செய்யப்படுகின்றன. மற்றும் மகசூல் 170 டன்/எக்டர்/ஆண்டு. இது வறட்சியை மிதமாக தாங்கக் கூடியது.
குதிரைமசால், கோ 1
இத்தீவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தீவன பயிர் துறையால் 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்பயிர் ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 80-90 டன்கள் மகசூல் தரக்கூடியது. இது 30 நாட்கள் இடைவெளியில் ஒரு ஆண்டிற்கு அதிகபட்சமாக 12 முறை அறுவடை செய்யலாம்.
– எவ்வி