தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர் வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் உள்ளன. 4 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதம் வரை இதற்கு வட்டி வழங்குகிறது.
இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உள்ளது. அஞ்சலகங்களில் ரொக்கப் பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன.
இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு காலமான ஐந்து ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடை வெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்தலாம்.
ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 விழுக்காடு அளிக்கப்படுகிறது. மாதம் 10 ரூபாய் செலுத்தியிருந்தால்,ஆண்டு இறுதியில் அதன் முதிர்ச்சித் தொகை 717.43 காசுகளாக வளர்கிறது.
முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப் தொகையுடன் கணக்கைத் தொடங்கலாம்.
தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக (ஜாயின்ட் அக்கவுன்ட்) இருப் பின் 9 லட்சமும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 விழுக்காடு.
அஞ்சலக நிலையான வைப்புத் திட்டத்தில் குறைந்த பட்சம் 200 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கலாம். காலாண்டு வாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஒருவரது நிலையான வைப்புக் கணக்கை ஒரு அஞ்சல் நிலையத்தில் இருந்து மற்றொரு அஞ்சல் நிலையத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தரப்படுகிறது.
ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 விழுக்காடு வட்டியும், இரண்டு மற்றும் மூன்று ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். ஐந்து ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.
செல்வ மகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரிதி திட்டம் பெண் குழந்தைகளுக்காக, அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம். ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 250 ரூபாய் செலுத்தினால் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அண்மையில் அரசு அறிவித்தது. இது முன்னர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு வரை கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தையின் பெற்றோரோ, சட்டப் படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவ லரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி உள்ளது. இரண்டு குழந்தைகளாக இருந்தால் இரு வேறு கணக்குகளைத் தொடங்கலாம்.
இவ்வாறு அஞ்சல் அலுவலகங்களில் ஒன்பது விதமான சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அவை 4 முதல் 8.3 சதவீதம் வரையில் வட்டி அளிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் மற்றும் செல்வ மகள் திட்டம் இரண்டிலும் 8.3 மற்றும் 8.1 சதவீத வட்டி அளிக்கப் படுகின்றன
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் (SCSS) திட்டத்தில் அயீக பட்சம் பதினைந்து லட்சம் ரூபாய் வரை ஒரே டெப்பாசிட்டாக முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற இருப்பவர்கள் என யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் தங்கள் மனைவி அல்லது கணவருடன் சேர்ந்து கூட்டுக் கணக்காகவும் இதில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் ஆகும். அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறந்தும் முதலீடு செய்ய முடியும். தேவைப்பட்டால் கணக்கை ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றமும் செய்து கொள்ளலாம். ஒருவரே எத்தனை கணக்குகள் வேண்டும் என்றாலும் திறக்கலாம்.
முதிர்வு காலம் முடிந்த பிறகு ஒரு ஆண்டு நீட்டிப் பிற்குப் பிறகு கணக்கு செயல் படாது.
மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்த ஒரு ஆண்டிற்குப் பிறகு கணக்கை இடையில் மூடும் போது 1.5 தொகை கழித்துக் கொண்டு திருப்பி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை மூட முயலும் போது 1 சதவீத தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை திருப்பி அளிக்கப்படும்.
பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். மொத்தமாக அல்லது மாதத் தவணை முறையிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயது நிறைவடைவதற்குள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பதினைந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்யலாம். இடையில் தவணைத் தொகையினைத் தாமதமாகச் செலுத்தி னால் அபராதம் உண்டு. பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு 50 சதவீத தொகையினை எடுக்க முடியும். 21 வயது முடிந்த பிறகு மொத்தமாக இந்தக் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
இந்திய அஞ்சல் துறையின் சேமிப்புக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் வரம்பின்றிப் பணம் எடுக்கலாம். அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு கணக்குத் திட்டங்களில் கணக்கைத் தொடங்கி, வங்கிக் கணக்கு போன்றே இணையதள வங்கி வசதி, ஏடிஎம் வசதி, காசோலைப் புத்தக வசதி, மொபைல் செயலி வங்கிச் சேவை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
சேமிப்புக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையும் மிகக் குறைவு. அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் போது பணமாக மட்டுமே டெபா சிட் செய்து கணக் கைத் திறக்க முடி யும். காசோலை தேவைப் படாத சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ.50-ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகை யாகச் செலுத்தினால் போதும்.
இதுவே காசோலைப் புத்தகம் வேண்டும் என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 ஆகும். இருப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி அளிக்கப்படும். ஒரு அஞ்சல் நிலையத்தில் தனிநபர் ஒருவரால் ஒரே ஒரு சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும். அஞ்சல்அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கை 10 வயது முதலே திறக்க முடியும். அது மட்டும் இல்லாமல் மைனர் குழந்தைகள் தாங்களாகவே தங்களது சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கவும் செய்யலாம்.
அஞ்சல் அலுவலகச் சேமிப்பு கணக்குகளைப் பொருத்தவரை மூன்று பேர் வரை இணை சேமிப்புக் கணக்கு களில் இணையலாம். வங்கி கணக்குகளில் எப்படி இணையதள வங்கி சேவையைப் பயன்படுத்துகின்றோமோ அப்படியே அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்கிலும் பயன்படுத்தி பணத்தைப் பிற வங்கி கணக்குகளுக்கும், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுக்கும் அனுப்பலாம், பெறலாம். ஏடிஎம், ஏடிஎம் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி எத்தனை முறை வேண்டு மானாலும் அனைத்து வங்கி ஏடிஎம் களிலும் பணம் எடுக்கலாம். பரிமாற்றக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் தினசரி வரம்பு அளவு உண்டு. சேமிப்புக் கணக்கு திறக்க ரூ.20 கட்டணமாக பெறப் படுகிறது. அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் மூன்று நிதி ஆண்டுகளில் ஒரு முறையாவது பணத்தைப் போடவோ, எடுக்கவோ செய்ய வேண்டும். இல்லை என்றால் கணக்கு தானாகவே மூடப்படும்.
– தமிழரசு