Thursday, December 3, 2020

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

கால்நடைகள், கோழி வளர்ப்பு: சில பொதுவான செய்திகள்

கோழி வளர்ப்பு: முட்டை கோழி பண்ணை, கறிக்கோழி பண்ணை, நாட்டு கோழி பண்ணை.

ஆடு வளர்ப்பு: செம்மறி ஆடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு.

மீன் வளர்ப்பு: பேன்சி மீன் வளர்த்தல், உண்கின்ற மீன்கள் வளர்த்தல், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான தொழில்கள்.

கோழி வளர்ப்பு:

முட்டை கோழி வளர்ப்பு சிறிய அளவிலான ப்ராஜெக்ட்

சுமார் 5000 முட்டைக் கோழிகள் வளர்ப்பதற்கான கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு 12,50,000 ஆகும். நீளம் 120 அடி அகலம் 30 அடி இருக்க வேண்டும்.

ஒரு முட்டை உற்பத்தி செய்ய உண்டாகும் செலவு விவரம்:

ஒருநாள் முதல் 16 வாரம் வரை சுமார் நான்கு மாதங்கள் வரை 0.66 ps

வளர்ப்பு செலவு + தினசரி தீவனச் செலவு 2.75 ps

முட்டை கோழி விற்பதால் கிடைக்கும் லாபம் ஒரு முட்டைக்கு 0.32 ps

கோழிப்பண்ணை முதலீட்டுக்கான வட்டி செலவு (12.5 Lacs 10% Bank interest/ annum) 0.10 ps

இதர செலவு 0.15 ps

Also read: முயலுக்கு கொடுக்க வேண்டிய தீனிகள்

உற்பத்தி செலவு 3.34 ps

ஒரு முட்டை சராசரி விலை 3.65 ps

நிகர லாபம் 0.31 ps

தினமும் 4000 முட்டைகள் உற்பத்தி செய்யும்போது ஒரு நாளைக்கான வருமானம் Rs. 1240.

ஒரு மாதத்திற்கான வருமானம் Rs. 37,200.

ஒரு ஆண்டிற்கான வருமானம் Rs. 5,02,200.

கறவை மாட்டினங்கள்:

உள்நாட்டு கறவை இனங்கள்: சிவப்பு சிந்தி, தார்பார்க்கர், சாகிவால், கிர்.

வெளிநாட்டு கறவை இனங்கள்: ஜெர்சி, ஹோல்ட்டியன், பிரிசியன்.

உள்நாட்டு எருமை இனங்கள்: முர்ரா, சுர்தி, பாதாவாரி, ஜாப்ராபாடி, மேஹ்சானா, நாக்புரி.

கறவை மாடுகளை தேர்வு செய்தல்: அதிக பால் உற்பத்தி தரக்கூடிய கலப்பின பசுக்கள், முதல் அல்லது இரண்டாம் ஈற்று மாடுகள். அகன்ற வயிற்று பகுதியுடன் நீளமான உடலமைப்பு, பளபளப்பான கண்கள், மினுமினுப்பான தோல் மற்றும் ஈரமான நாசிப்பகுதி. பால் மடி பஞ்சு போன்று நன்கு விரிந்து உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். மடியின் இரத்த நாளங்கள் படைத்து, வளைந்து நெளிந்து இருக்க வேண்டும். பால் கறந்தபின், மடி சுருங்கி விடவேண்டும். மடிக்காம்பு நான்கும் சம இடைவெளியில் ஒரே அளவு இருத்தல். மாடுகள் சுறுசுறுப்பாக அசை போட வேண்டும். கன்று ஈன்ற 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு மாடுகளை வாங்க வேண்டும்.

கறவை மாடுகளுக்கு கொட்டகை அமைத்தல்:

ஒரு வரிசை கொட்டில், இரு வரிசை தலையும், தலையும் பார்க்கும்படி, இருவரிசை வாலும், வாலும் பார்க்கும்படி. மேடான இடத்தில் கொட்டகை. 10-15 மாடுகளுக்கு ஒற்றை வரிசை முறை. 15 மாடுகளுக்குமேல் வால்-வால் அமைப்பில் இரு வரிசை. ஒரு மாட்டிற்கு 60 சதுரஅடி இட வசதி. கொட்டகையின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக அமைத்தல். தரைப்பகுதி வழுக்காமல் சிமெண்ட் கான்க்ரீட் கொண்டு அமைத்தல். தரைப்பகுதியில் மாடு நிற்கும் இடத்தில் 40 அங்குலத்திற்கு ஒரு அங்குலம் அளவிலும், கழிவு நீர்க்கால்வாயில் 60 அங்குலத்திற்கு 1 அங்குலம் வரையிலும் சரிவு கொடுக்க வேண்டும்.

கொட்டகைச் சுகாதாரம் மற்றும் கோடை கால பராமரிப்பு:

உயர் அழுத்த நீர் தெளிப்பான், கொட்டகையின் கூரையின் மேல் நீர் தெளிப்பான், மாட்டின்மேல் நீர் திவளை தெளிப்பான், கொட்டகையினுள் மின்விசிறி, கொட்டகையினுள் மின்விசிறியுடன் திவளை நீர்த்தெளிப்பான், இரப்பர் மேட்.

கறவை மாடுகளில் சினைத்தருண அறிகுறிகள்:

மாடு அமைதியின்றி காணப்படும். அடிக்கடி அடிவயிற்றில் இருந்து கத்திக் கொண்டு இருக்கும். தீவனத்தில் நாட்டம் இருக்காது. பிறப்பு உறுப்பில் இருந்து கண்ணாடி போன்ற நிறமற்ற வழுவழுப்பான திரவம் வடியும். பிறப்பு உறுப்பின் வெளிப்பகுதி தடித்து சிவந்து இருக்கும். வாலை ஒதுக்கிக் கொண்டு இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். மாடுகள் மேல் தாவும், மற்ற மாடுகளை தன்மேல் தாவ அனுமதிக்கும். பால் அளவு சற்று குறையும்.

கறவை மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மை:

கலப்பின கிடேரிகள் 9 முதல் 18 மாதங்களில் சினைப் பருவத்திற்கு வரும். பருவமடைந்த மாடுகள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்திற்கு வரும். சினைப் பருவம் தொடங்கி சுமார் 8 முதல் 16 மணிநேரம் வரையில் உள்ள மைய சினைத்தருணம் மாடுகளை சினைப்படுத்துவதற்கு ஏற்ற காலமாகும். பொதுவாக காலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மாலையிலும், மாலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது நலம். சினைப்பருவத்திற்கு வந்த 8 முதல் 16 மணி நேரத்தில் செயற்கை முறை கருவூட்டல் செய்ய வேண்டும். சினைத்தருண அறிகுறிகள் 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் இரண்டாவது முறையும் கருவூட்டல் செய்யலாம். கருவூட்டல் செய்த மாடுகளை 60 நாட்கள் கழித்து சினைப் பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று முறை கருவூட்டல் செய்தும் சினையாகாத மாடுகளுக்கு தக்க சிகிச்சை மேற்கொள்ளல் வேண்டும்.

Also read: குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்

கறவை மாடுகளுக்கு சினைப்பருவ ஒருங்கிணைப்பு:

கறவை மாடுகளில் தீவன சத்துப்பற்றாக்குறை இருக்கக் கூடாது. கறவை மாடுகளுக்கு தினமும் 30 கிராம் தாது உப்புக்கலவை அவசியம் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கறவை மாடுகளில் இனப்பெருக்க உறுப்பு குறைபாடுகள் இருக்கக் கூடாது. கன்று ஈன்ற பின் 60 -90 நாட்களுக்குள் மாடுகளை சினைப்படுத்த வேண்டும்.

கறவை மாடுகளுக்கு அடர்தீவனம் அளித்தல்:

உடல்நிலை பராமரிப்பிற்கு ஒரு கறவை மாட்டிற்கு தினமும் 1.5 கிலோ அடர் தீவனம் தேவைப்படும்.

தினசரி சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவை மாட்டிற்கு 1.5 கிலோ தீவனம் போதும். 2.5 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கும் மாட்டிற்கு ஒரு கிலோ சேர்த்து கொடுக்க வேண்டும்.

சினை மாடுகளுக்கு உடல் எடையை பொறுத்து தினமும் 1.0-1.5 கிலோ அடர் தீவனம் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

பால் வற்றி சினையின்றி உள்ள மாட்டிற்கு 1.5 கிலோ போதுமானதாகும்.

கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம்:

புல்வகை தீவனம்: கம்புநேப்பியர் ஒட்டுப்புல் (கோ.4), கினியாப்புல் (கோ.3)

தானியவகை தீவனம்: சோளம் (கோ.எஃப்.எஸ்.29), மக்காச் சோளம் (ஆப்பிரிக்கன் நெட்டை).

பயறுவகை தீவனம்: வேலி மசால், குதிரை மசால்.

மரவகை தீவனம்: அகத்தி, சூடாபுல்.

மாடுகளுக்கு அவற்றின் உடல் எடையில் 2.0 முதல் 2.5 சதவிகிதம் உலர் பொருள் தேவைப்படும். மாட்டின் எடையில் ஒவ்வொரு 100 கிலோ கிராம் எடைக்கும், 1.0 கிலோ உலர்ந்த தீவனமும், 5.0 கிலோ பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். கொடுக்கும் தீவனங்களில் மூன்றில் ஒரு பங்கு பயறு மற்றும் மர வகை இருக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் – ஊறுகாய் புல்:

கோடைகாலங்களிலும், தீவனப் பற்றாக்குறை காலங்களிலும் தீவனத்தைப் பதப்படுத்தி கொடுக்கலாம். சோளம், மக்காச்சோளம், கம்பு மற்றும் கோ 4 ஆகிய பசுந்தீவனங்களை பூக்கும் பருவத்தில் அறுவடை செய்து பதப்படுத்தி ஊறுகாய் புல் தயாரிக்கலாம். அறுவடை செய்த பசுந்தீவனத்தை 3 முதல் 4 மணிநேரம் உலரவிட்டு 4 அல்லது 5 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக வெட்ட வேண்டும். சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பசுந்தீவனத்தை சிமெண்ட் தொட்டியிலோ அல்லது மண்குழியிலோ காற்றுப்புகாமல் நிரப்ப வேண்டும். இடையில் யூரியா, உப்பு மற்றும் கரும்புச் சக்கரைப்பாகு ஆகியவற்றை தூவ வேண்டும். பின், அதன் மீது பாலிதின் பேப்பரை விரித்து அதன்மேல் மண்ணை கொட்டி காற்று போகாதவாறு பூசி மூடவேண்டும். மூன்று மாதங்களுக்கு பிறகு, அதை பயன்படுத்த தொடங்கலாம்.

மாடுகளின் எடையை கண்டறிதல்:

மாடுகளின் எடையை கணிக்க உடல் நீளம், மார்பு சுற்றளவு ஆகியவற்றை அங்குலத்தில் எடுக்க வேண்டும். உடல் எடையை கிலோகிராமில் அறிய உடல் நீளமுடன் மார்புச் சுற்றளவைப் பெருக்க 600ஆல் வகுத்தால் அறியலாம்.

எடையை பவுண்டில் அறிய உடல் நீளத்தை மார்புச் சுற்றளவுடன் பெருக்கி 300ஆல் வகுக்க வேண்டும். கன்றுகளுக்கு ஒருவார வயதிற்குள் கொம்புக் குருத்தை நீக்கி கொம்பு வளர்வதை தடுக்கலாம். இறைச்சிக்காக வளர்க்கப்படும் காளைக் கன்றுகளை 8 முதல் 10 வார வயதில் பர்டிசோ கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யலாம்.

கறவை மாட்டுப் பண்ணை கருவிகள்:

தீவனப்புல் வெட்டும் எந்திரம், தீவனப்புல் அறுக்கும் எந்திரம், பசுந்தீவனம் வெட்டவும், தீவன மூலப்பொருட்கள் அரைக்கவும் பயன்படும் எந்திரம், வைக்கோல் கட்டி தயாரிக்கும் எந்திரம், பால்கறவை எந்திரம் சாணம் சேர்க்கும் ஊர்தி, தானியங்கி நீர் தொட்டி.

மாடுகளை தாக்கும் நோய்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்:

அடைப்பான் நோய்: இதன்மூலம் மாடுகள் திடீரென்று இறக்கும், இறந்தவுடன் ஆசனவாய், நாசித்துவாரம் மற்றும் வாயிலிருந்து கருஞ்சிவப்பு இரத்தம் வரும். இதை தடுக்க 6-வது மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும். பின்னர், ஆண்டு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்.

கோமாரி நோய்: உதடுகளின் உட்புறம், ஈறுகள், மேல்தாடை, நாக்கின் பின்புறம் கொப்புளங்கள் உண்டாகி உடைந்து, வலியினால் மாடு தீவனம் உட்கொள்ளாது. கும்புகளுக்கிடையேயும் கொப்புளங்கள் தோன்றுவதால் இரணமாகி மாடு நொண்டும். இந்த நோயைத் தடுக்க 3 வது மாதத்தில் நோய்த் தடுப்பூசி போட வேண்டும். பின்னர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசிப் போட வேண்டும்.

Also read: கமலா ஆரஞ்சு எப்படி பயிரிடப்படுகிறது?

சப்பை நோய்: மாடுகளின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு இறந்து விடும். இதற்கு கன்றுகளுக்கு 5 வது மாதத்தில் தடுப்பூசி போட்டபின், ஆண்டிற்கு ஒருமுறை தடுப்பூசிப் போட வேண்டும்.

தொண்டை அடைப்பான் நோய்: தொண்டையின் அடிப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மாடுகள் மூச்சுவிட சிரமப்பட்டு இறந்துவிடும். தடுக்க, கன்றுகளுக்கு 6 வது மாதத்தில் முதல் தடுப்பூசி போட்டபின், ஆண்டிற்கு ஒருமுறை போடவேண்டும்.

காசநோய்: மாடு மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும். நோயுற்ற மாடுகளைப் பிரித்து அப்புறப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

கறவை மாடுகளில் மடிநோய் மற்றும் அறிகுறிகள்:

கன்று ஈன்ற மாடுகளில் காம்பு மற்றும் மடி வீங்கிச் சிவந்து காணப்படும். தொட்டால் மாட்டிற்கு வலிக்கும். பால் மஞ்சளாக இரத்தம் கலந்து வரும். வீக்கம் குறைந்த மாடுகளில் பார் திரிதிரியாக இருக்கும்.

கறவை மாடுகளில் மடிநோய் தடுப்பு:

கிருமி நாசினி மருந்து கொண்டு தொழுவத்தை சுத்தம் செய்தல். தரையை உலர்ந்த நிலையில் வைத்தல். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பாலைப் பரிசோதனை செய்து நோய் உள்ளதா என கண்டறிதல். பால் மடிகளில் தேங்கக் கூடாது. பால் கறந்தபின் காம்பின் துவாரம் 30 நிமிட நேரம் வரை திறந்திருப்பதால் மாடுகள் படுக்கும் தருவாயில், கிருமிகள் மடிக்குள் சென்று மடிநோயை ஏற்படுத்தும். எனவே மாடுகள் படுக்காமல் இருக்க தீவனம் கொடுப்பதன் மூலம் மடிநோயை வராமல் தடுக்கலாம்.

கறவை மாடுகளுக்கு வழக்கில் இல்லாத தீவனப் பொருட்களை அளித்தல்:

மரவள்ளிக் கிழங்கு திப்பி, புளியங்கொட்டை, பார்லிக் கழிவு, முந்திரிப் பழம், கரும்புத் தோகை மற்றும் சக்கை, கழிவுப் பஞ்சு.

100 லிட்டர் பாலில் இருந்து கிடைக்கும் பால் பொருட்கள்:

கெசின்: 6.8 கிலோ பசு, 7.5 கிலோ எருமை.

கொழுப்பு நீக்கிய பால்: 90.2 லி பசு, 85.5 லி எருமை.

பன்னீர்: 11.0 கிலோ பசு, 14.0 கிலோ எருமை.

– டாக்டர் வி. சி. பழனிச்சாமி, பிவிஎஸ்., சாணார் பாளையம், வில்லரசம் பட்டி, ஈரோடு, (9449025866)

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

Don't Miss

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.