அஞ்சலகம் குறித்த கால வைப்பு திட்டம்

இந்த கணக்கில் யார் வேண்டுமானாலும் முதலீட்டு செய்யலாம். அதாவது தனிநபர், இருவர் இணைத்து 18 வயதுக்கு உட்பட்ட இளையவர்கள் அல்லது குழந்தைகள் MINORS இந்த திட்டத்தில் சேரலாம். இளையவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலமாக தொடங்கலாம்.

குறைந்த பட்ச முதலீடு ரூபாய் 200/- அதிகபட்சம் வரம்பு கிடையாது. ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த கணக்கானது ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து வருடங்கள் கால அளவைக் கொண்டது. வட்டி விகிதம் ஒன்று, இரண்டு, முன்று ஆகிய ஆண்டுகளுக்கு 6.9 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கு 7.7 சதவீதமும் என வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு வாரிசுகளை நியமிக்கும் உரிமை உண்டு. 5 வருடங்களுக்கு முதலீடு செய்யும் போது வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு உண்டு. உரிய காலத்திற்கு முன்பே, பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. அதற்கு வட்டிவிகிதம் குறைத்து தரப்படும்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here