குப்பைகளைப் பிரித்து விற்பனை செய்யும் ஆப்

சென்னையில் மட்டும் நாள்தோறும் 5000 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து சேகரித்து அகற்றப்படும் குப்பைகளைப் பிரித்து அப்புறப்படுத்துவது என்பது சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய கடினமான செயலாக இருக்கின்றது. எனவே சென்னையில் உருவாகும் குப்பைகளைப் பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்றும் இணையதளம் ஒன்றை சென்னை பெருநகர மாநகராட்சியும், நகர அமைப்பினரும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

Also read: பிளாஸ்டிக் பைகளை விட தீங்கு நிறைந்தது பேப்பர் பைகள்

இந்த இணையதளம் மூலம் விற்பனையாளர் மட்டுமல்ல நுகர்வோரும் பலன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில், நம்மிடம் அதிக அளவில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் உலோகக் கழிவுகளைப் பற்றிய தகவல்களை பதிவு செய்தால், தேவையானவர்கள் குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அதற்கு இதில் கணக்குத் தொடங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு madraswasteexchange.com எனும் இணைய முகவரிக்குச் செல்லவும்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here