Latest Posts

சிறு, குறு நிறுவனங்களுக்கு பதிவு செய்தால் தான் சலுகையா?

- Advertisement -

மிககுறைந்த முதலீட்டில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro small and medium Enterprise) என்று அழைக்கப்படுகிறது. சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்படுத்துதல் (MSMED) சட்டம் 2006 ஆனது இவைகளை உற்பத்தி நிறுவனங்கள் என்றும் சேவை நிறுவனங்கள் என்றும் இரண்டாக வகைப்படுத்துகின்றது. அதாவது, தொழில் மேம்படுத்துதல் சட்டம் 1951 இன் படி, பொருளை உற்பத்தி செய்யும் அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை உற்பத்தி நிறுவனங்கள் என வரையறுக்கப் படுகின்றது. சேவை வழங்கு வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சேவைத் துறை நிறுவனங்கள் என வரையறுக்கப்படுகின்றது.

மேலும், எந்திரங்களின் மொத்த மதிப்பு இருபத்தைந்து இலட்சத்திற்கு மிகாமல் இருப்பவை மிகச் சிறிய உற்பத்தி நிறுவனங்கள் என்றும், எந்திர மதிப்பு இருபத்தைந்து இலட்சத்திற்கு மேல் இருந்தால் சிறு உற்பத்தி நிறுவனங்கள் என்றும், மதிப்பு ஐந்து கோடிக்கு மேல் ஆனால் பத்து கோடிக்கு மிகாமல் இருப்பவை நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என்றும் இந்த சட்டம் வரையறுக்கின்றது.

Also read: நிறுவனங்களின் சட்டம் 2013, நன்மைகளும் விதிவிலக்குகளும்

சேவைத்துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகளின் முதலீடுகள் பத்து இலட்சத்திற்கு மிகாமல் இருப்பவை மிகச் சிறிய சேவைத்துறை நிறுவனங்கள் என்றும், பயன்படுத்தும் கருவிகளின் முதலீடுகள் பத்து இலட்சத்திற்கு மேல் ஆனால் இரண்டு கோடிக்கு மிகாமல் இருப்பவை சிறு சேவைத்துறை நிறுவனங்கள் என்றும், பயன்படுத்தும் கருவிகளின் முதலீடுகள் இரண்டு கோடிக்கு மேல் ஆனால் ஐந்து கோடிக்கு மிகாமல் இருப்பவை நடுத்தர சேவைத்துறை நிறுவனங்கள் என்றும் இந்த சட்டம் வரையறுக்கின்றது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தொழிலகங்கள் மேம் படுத்துதல் சட்டம் 1951 இன்படி பதிவுசெய்து கொள்ளவேண்டும்

சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India), குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் துறை அமைச்சகத்தால் அறிமுகபடுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள கடன் உத்திரவாத திட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யும் நிறுவனங்கள் தேவையான கடன்வசதிகளை பெறமுடியும். மேலும், MSME ஆக பதிவுபெற்ற நிறுவனங்கள் ISO சான்றிதழ் பெறுவதற்காக செலவிட்ட தொகையை இந்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்று கொள்ளமுடியும். அதுமட்டும் அல்லாது, MSME ஆக பதிவுபெற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டண சலுகைகளை பெறமுடியும் அதனோடு இவ்வாறான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை சேவைகளை பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான தொகையை 15 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தவறினால், அதிகபட்சம் 45 நாட்களுக்கு மேல் செலுத்த வேண்டும். மேலும், இந்திய அரசின் தொழில்துறை ஊக்குவிப்பு மானியத் தொகையை பெறமுடியும்.

– ச. குப்பன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news