கம்பெனிகளின் பெயர் மாறுதல் செய்வது என்பது கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு 13(2)உம் கம்பெனிகள் உருவாக்குதல் விதிகள் 2014 பிரிவு 29(1), 29(2) ஆகியவை சார்ந்தது ஆகும். ஒரு நிறுவனத்தின் பெயரில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால், அவ்வாறான மாற்றங்கள் கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு நான்கின் உட்பிரிவுகள் (2) மற்றும் (3) ஆகியவைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கம்பெனியின் பெயர் மாறுதலுக்கு பிறகான கம்பெனியைப் பதிவு செய்ததற்கான புதிய பதிவு சான்றிதழை படிவம் எண் ஐஎன்சி-25 வாயிலாக வழங்கப்படும். இதற்கான படிமுறைகள் பின்வருமாறு,
பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர் கம்பெனிகளின் விவாகாரத் துறைக்கான (Ministry of Corporate Affairs( MCA) ) இணைய பக்கத்தில் முதலில் ஒரு புதிய பயனாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கம்பெனியின் பெயரை மாற்றி அமைக்க முடிவு செய்த உடன், கம்பெனியின் பெயர் மாற்றத்திற்கு தேவையான தீர்மானத்தை அந்த கம்பெனியின் இயக்குநர்களின் குழுக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். ஆயினும் கம்பெனிகளின் பதிவாளர் ஒப்புதல் அளிப்பதற்கு ஏற்ப கம்பெனியின் புதிய பெயரை இயக்குநர்களின் குழு பரிசீலனை செய்து முடிவு செய்ய வேண்டும்.
Also read: விற்பனையும், மார்க்கெட்டிங்கும் ஒன்றா? வேறுவேறா?
இயக்குநர் குழுவினால் (போர்டு ஆஃப் டைரக்டர்கள்) இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதற்கு தேவையான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், நிறுவனத்தின் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட எம்சிஏ (MCA) இணைய பக்கத்தில் கம்பெனி பெயர் ஒதுக்கீடு பெறுவதற்கான ஆர்யுஎன் (RUN) என்று சுருக்கமாக அழைக்கப்படும். ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு சேவையின் (Reserve Unique Name service ) வாயிலாக அந்த கம்பெனிக்கான புதிய பெயரை பெற்றுக் கொள்ளலாம். அதனால் முதலில் இந்த ஆர்யுஎன் எனும் சேவையின் மூலம் நம் கம்பெனிக்கான புதிய பெயர் வேண்டி விண்ணப்பிக்கவும், அவ்வாறு விண்ணப்பிக்கும் போது பின்வரும் கடேட்டாக்களை நிரப்ப வேண்டும்.
நியூ ரெக்வெஸ்ட் (New Request) எனும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். என்டிட்டி டைப் (Entity type) என்பதில் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக கம்பெனியின் வகையை தேர்வு செய்ய வேண்டும். சிஐஎன் (CIN) இதில் பெயர் மாறுதல் செய்ய விருக்கும் கம்பெனியின் சுட்டி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பிரப்போஸ்டு நேம்ஸ் (Proposed Names) இதில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அதிக பட்சம் இரண்டு பெயர்களை மட்டும் உள்ளீடு செய்ய வேண்டும்.
அடுத்து கமென்ட் செக்ஷன் (Comment section). இதில் கம்பெனியின் நோக்கங்களை பற்றி ஒரு வரிக்குள் குறிப்பிட வேண்டும். சூஸ் ஃபைல் டேப் (Choose file Tab) இயக்குநர்களின் குழுக் கூட்டத்தில் பெயர் மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கண்டிப்பாக இதில் இணைக்க வேண்டும். இந்த நிலையில் பின்வரும் கருத்துகளை மனதில் கொள்ள வேண்டும்.
நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட பெயர்கள் தனித்துவம் மிக்கதாக ஏற்கனவே உள்ள கம்பெனிகளின் பெயர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரைகளாக இல்லாமல் வேறுபட்டதாக இருக்க வேண்டும். ஆர்யுஎன் எனும் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நம் விருப்பப்படி, அதிக பட்சமாக இரண்டு பெயர்களைப் மட்டுமே பெற முடியும். இந்த நிலையில் பொருத்தமான பெயர்கள் கிடைக்க வில்லை எனில், மீண்டும் புதிய பெயர்களை தேர்வு செய்வதற்காக மற்றொரு முறை மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். அதாவது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இந்த சேவை பெயரை தேர்வு செய்துக் கொள்ள அனுமதிக்கும். அதற்கு மேல் அனுமதிக்காது.
ஆர்ஓசி (ROC) என சுருக்கமாக அழைக்கப்படும் கம்பெனிகளின் பதிவாளரால் கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அதிக பட்சமாக இருபது நாட்களுக்கு மட்டும் நமக்கான ஒதுக்கீடாக அனுமதிக்கப்படும். அதன் பின்னர் இந்த பெயருக்கான அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் மீண்டும் புதியதாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
கம்பெனிகளின் பதிவாளரால் கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட உடன் இஜிஎம் (EGM) என சுருக்கமாக அழைக்கப்படும் உறுப்பினர்களின் அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்தை கூட்டி, அதில் இவ்வாறு கம்பெனியின் பெயர் மாறுதல் செய்வதற்கு தேவையான சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், இவ்வாறு பெயர் மாறுதலை MOA, AOA ஆகிய கம்பெனியின் அடிப்படை ஆவணங்களில் தேவையான திருத்தம் செய்வதற்காக பொதுப் பேரவையின் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற்ற பின்னர், பின்வரும் இரண்டு மின்னணு படிவங்களை ஆர்ஓசி என சுருக்கமாக அழைக்கப்படும் கம்பெனிகளின் பதிவாளரிடம் வழங்க வேண்டும்.
முதல் படிவமாக மின்னணு படிவம் எண் எம்ஜிடி (MGT-14) என்பதை அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்ற முப்பது நாட்களுக்குள் ஆர்ஓசி இடம் எம்சிஏ இணைய பக்கத்தின் வாயிலாக வழங்கி ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறான முதல் மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14-ஐ வழங்கும் போது பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து வழங்க வேண்டும்.
அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்திற்கான இஜிஎம் அழைப்பு அறிவிப்பு. அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்தில் இஜிஎம் பெயர் மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப் பட்ட சிறப்பு தீர்மான நகல்.
பெயர் திருத்தம் செய்யப்பட்ட பின்னரான MOA,AOA ஆகிய கம்பெனியின் அடிப்படை ஆவணங் களின் நகல்கள்.
– இவ்வாறு இணைக்கும் அனைத்து ஆவணங்களும் பிடிஎஃப் (Pdf) வடிவமைப்பில் இணைக்க வேண்டும்.
மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14 ஐ தேவையான ஆவணங்களுடன் ஆர்ஓசி இடம் எம்சிஏ இணைய பக்கத்தின் வாயிலாக வழங்கிய பின்னர் ஆர்ஓசி ஆனவர் அதனை சரி பார்த்து இதற்கு ஒப்புதல் வழங்குவார். அவ்வாறான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மற்றொரு மின்னணு படிவம் எண் ஐஎன்சி-24 என்பதை இரண்டாவது படிவமாக அசாதாரண பேரவைக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்ற முப்பது நாட்களுக்குள் ஆர்ஓசி இடம் எம்சிஏ இணைய பக்கத்தின் வாயிலாக வழங்க வேண்டும்.
இவ்வாறான இரண்டாவது மின்னணு படிவம் எண் ஐஎன்சி-24 ஐ வழங்கும் போது பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து வழங்க வேண்டும்.
அசாதாரண பொதுப் பேரவைக் கூட்ட இஜிஎம் நடவடிக்கை குறிப்புகளின் நகல்.
அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்திற்கான இஜிஎம் அழைப்பு அறிவிப்பு.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்தில் இஜிஎம் பெயர் மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மான நகல்.
அதன் உடன் பெயர் திருத்தம் செய்யப்பட்ட பின்னரான விளிகி ,கிளிகி ஆகிய கம்பெனியின் அடிப்படை ஆவணங்களின் நகல்கள்.
இவ்வாறு இணைக்கும் அனைத்து ஆவணங்களும் பிடிஎஃப் வடிவமைப்பில் இணைக்க வேண்டும்.
மேலே கூறிய தேவையான ஆவணங்கள் தயாராக இருக்கின்றது எனில் மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14, மின்னணு படிவம் எண் ஐஎன்சி-24 ஆகிய இரண்டு மின்னணு படிவங்களையும் எம்சிஏ இணைய பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மிகச் சரியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்புவதற்கான விளக்க குறிப்புகள் பின்வருமாறு,
மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14
முதலில் கம்பெனியின் பதிவு எண்ணை சிஐஎன் (CIN) உள்ளீடு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானத்தை பதிவு செய்வதற்கான தேர்வுசெய் பெட்டிகளை நிரப்ப வேண்டும். அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்திற்கான இஜிஎம் அழைப்பு, அறிவிப்பு விவரங்களையும் அவைகளை அனுப்பிய நாளையும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளையும் நிரப்ப வேண்டும்.
சிறப்பு தீர்மான விவரங்கள் தொடர்பு உடைய சட்டப் பிரிவு, அதற்கான நோக்கம், தீர்மான விவரங்கள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்குவதற்கான உரிமை பெற்றவர்கள் சாதாரண தீர்மானமா அல்லது சிறப்புத் தீர்மானமா என்பதற்கான தேர்வுசெய் பெட்டியை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்ட ஆவணங்களை இந்த படிவத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த படிவத்தில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட இயக்குநரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் அதனை CA அல்லது CS அல்லது CMA ஆகியோர்களுள் ஒருவரால் அளிக்கப் பட்ட சான்றுடன் வழங்க வேண்டும்.
மேலே கூறிய படிவத்தையும் ஆவணங்களையும் எம்சிஏ இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன் இவை அனைத்தும் மிகச் சரியாக இருக்கின்றதா என மீண்டும் ஒருமுறை முழுவதுமாக முன் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் இந்த மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14 ஐ. அதன் இணைப்புகளுடன் எம்சிஏ இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14 உம் அதன் இணைக்கப்பபட்ட ஆவணங்களையும் முழுவதுமாக ஆர்ஓசியால் ஆய்வு செய்யப்பட்டு சரியாக இருக்கின்றது எனில் இதற்கு ஒப்புதல் வழங்குவார். இதனை தொடர்ந்து மின்னணு படிவம் ஐஎன்சி-24 ஐ பின்வருமாறு தயார் செய்ய வேண்டும்.
மின்னணு படிவம் எண் ஐஎன்சி-24:
கம்பெனியின் பதிவு எண்ணை சிஐஎன் உள்ளீடு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். கம்பெனியின் புதிய பெயர் ஒப்புதல் பெறுவதற்கான ஆர்ஓசி இடம் வழங்கிய தனித்துவமான பெயர் ஒதுக்கீட்டிற்காக ஆர்யூஎன்-இல் விண்ணப்பித்த போது உருவான சேவை கோரும் எண்ணை (Service request number (SRN)) உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் தேவையான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
Also read: செயற்கை நுண்ணறிவு மூலம் விசால் சிக்கா செய்த மாற்றங்கள்
பெயர் மாறுதல் செய்வதற்கான முழுமையான காரண விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளையும், மின்னணு படிவம் எண் எம்ஜிடி-14ஐ ஆர்ஓசி இடம் வழங்கப்பட்ட நாளையும் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே கம்பெனியை பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட கம்பெனிப் பதிவு சான்றிதழில் குறிப்பிட்டு உள்ள கம்பெனியின் பெயரை குறிப்பிட வேண்டும். அது மட்டும் இன்றி பின்வரும் விவரங்களை மிகச் சரியாக நிரப்ப வேண்டும்.
அசாதாரண பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர் களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிட வேண்டும். சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றுவதில் கலந்து கொண்டு ஓட்டு எடுப்பில் சிறப்புத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் எண் ணிக்கை, அவர்களின் பங்குகளின் எண் ணிக்கை விவரங்களை குறிப்பிட வேண்டும். சிறப்புத் தீர்மானம் நிறை வேற்றுவதில் கலந்து கொண்டு ஓட்டு எடுப்பில் சிறப்புத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிட வேண்டும்.
சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றுவதில் கலந்து கொண்டு ஒட்டு எடுப்பில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் எண் ணிக்கை, அவர்களின் பங்குகளின் எண் ணிக்கை விவரங்களை குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டு உள்ள ஆவணங்களை இந்த படிவத்து டன் இணைக்க வேண்டும். இந்த படிவத்தில் கையொப்பமிட அங்கீகரிக்கப் பட்ட இயக்குநரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் அதனை CA அல்லது CS அல்லது CMA ஆகியோர்களுள் ஒருவரால் அளிக்கப்பட்ட சான்றுடன் வழங்க வேண்டும்.
மேலே கூறிய படிவத்தையும் ஆவணங்களையும் எம்சிஏ இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன் இவை அனைத்தும் மிகச் சரியாக இருக்கின்றதா, என மீண்டும் ஒரு முறை முழுவதுமாக முன் ஆய்வு செய்ய வேண்டும்.
பின்னர் இந்த மின்னணு படிவம் எண் ஐஎன்சி-24 ஐ அதன் இணைப்புகளுடன் எம்சிஏ இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர் மின்னணு படிவம் எண் ஐஎன்சி-24 உம் அதன் இணைக்கப்பட்ட ஆவணங் களையும் முழுவதுமாக ஆர்ஓசியால் ஆய்வு செய்யப்பட்டு சரியாக இருக்கின் றது எனில் படிவம் எண் ஐஎன்சி-25 இன் வாயிலாக கம்பெனிக்கான புதிய பெயர் உடன் இந்த கம்பெனியை பதிவு செய்ததற்கான சான்றிதழை வழங்குவார்.
கம்பெனியின் பெயரை மாற்றுவதற்கு உரிய கட்டணங்களை செலுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
– முனைவர் ச. குப்பன்