டிடி நிறுவனத்தை விரிவுபடுத்துவதில் லியூவின் பங்கு

ஜின் லியூ (Jean Liu) சீன நாட்டை சேர்ந்த இவர், தற்போது உள்ள டேக் உலகத்தில் ஒரு ஆற்றல் வாய்ந்த பெண்மணி. இவர் டிடி ச்யூசிங் (Didi Chuxing) நிறுவனத்தின் தலைவர். டிடி நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய அளவில் சவாரி சேவையை (Ride Hailing) வழங்கி வருகின்றது.

ஒரு நாளைக்கு சராசரியாக இந்த நிறுவனம் 30 மில்லியன் சவாரிகளை உலகம் முழவதும் செய்து வருகின்றது. அது அமெரிக்க நாட்டை சார்ந்த ஊபர் (Uber) நிறுவனத்தை விட ஒரு நாளைக்கு 10 மில்லியன் அதிகம்.

2019 வருடம் உலகத்தின் அனைத்து தொடக்க தொழில் நிறுவனங்களின் (Startup) பட்டியலில் டிடி ச்யூசிங் $56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் இரண்டாம் இடத்தை பிடித்து மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் என பெயர் பெற்றது. இதற்கு முன்பு பட்டியலில் முதல் இடத்தில் பைட்டான்ஸ் (bytedance) எனப்படும் சீன தொழில்நுட்ப நிறுவனம் இருக்கின்றது. பைட்டான்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் பலவித ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. இதன் சந்தை மதிப்பு $75 பில்லியன் டாலர்கள்.

ஜின் லியூ பற்றி பார்க்கும் போது, இவர் சீன தலைநகரம் பெய்ஜிங்கில்(Beijing) 1976-ல் ஜூன் மாதம் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலை கழகத்தில் (harvard university) Msc கம்ப்யூட்டர் சயின்ஸ் 2002-ல் படித்து முடித்தார்.

Also read: இயற்கை வேளாண்மை செய்யும் அனுராதா!

சீனாவில் மிகவும் பிரபலமான மனிதர்களில் Tech Icon-களுள் ஜின் லியூவின் தந்தை, லில் சுயூஅன்ச்இ (Lil Chuanzhi) யும் ஒருவர். இவர் சீன நிறுவனமான லெனோவோ(Lenovo) வின் நிறுவனர். எப்படியாவது தனக்கென ஒரு தனி பெயரை உருவாக்க வேண்டும் என்பது ஜின்லியூ-வின் எண்ணம்.

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் படிப்பை முடித்த பிறகு 12 வருடங்கள் இவர் கோல்டுமேன் சக்ஸ் (goldman sachs) எனப்படும் பிரபல அமெரிக்க பங்கு நிறுவனத்தில் ஆசிய பிரிவில் டேக் பிரிவில் மேலாண்மை பணியாற்றினார்.

பின்னர், ஜூன் மாதம் 2014-ல் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் மட்டுமே ஆன டிடி ச்யூசிங் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது தொடங்கியது இவருக்கும் டிடி நிறுவனத்துக்கும் இடையேயான பயணம். ஒரு நாள் ஜின் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வரும் பெண் கம்ப்யூட்டர் இன்ஞினியர், நான் கருவுற்று இருப்பதால் வேலையை விட்டு விலகுகிறேன் என்று கூறினார். அதற்கு ஏன் வேலையை விட வேண்டும் என்று கேட்டார் ஜின். அவர், வேலைக்கு வருவது எனக்கு சிக்கல் இல்லை. தினமும் வழக்கமாக மூன்று மணிநேரம் பயணம் செய்து வருவதுதான் கடினமாக இருக்கின்றது. தொடர்வண்டி மற்றும் சுரங்கப்பாதையில் நெரிசலில் என்னால் வேலைக்கு தொடர்ந்து வர முடியாது என்றார். அப்போது, ஜின்லி தனது நிறுவனத்தை பெரியதாக்க வேண்டும் என்று நினைத்தார். மற்றும் சீனாவின் மிகவும் பெரிய சிக்கல்களில் ஒன்றான போக்குவரத்தை முறைபடுத்த வேண்டும் என்று எண்ணினார்.

தனது அடுத்த கட்ட முயற்சியாக நிறுவனத்தை விரிவு படுத்த முதலீட்டாளர்களை அதிகபடுத்தினார். சீனாவில் இயங்கி வரும் மற்றொரு உள்ளூர் சவாரி சேவையை வழங்கி வரும் நிறுவனமான க்வாய்டி(kuaidi) யை தனது நிறுவனத்துடன் இணைத்து கொண்டார். இந்த நிறுவனம் டிடி க்கு தொடக்க காலத்தில் மிகவும் சவாலாக இருந்தது.

அந்த இணைப்பு நடைபெற்று சில மாதங்களிலேயே ஜின்லி-க்கு மார்பக புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் புற்று நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்து பணிக்கு விரைவில் திரும்பினார்.

எங்கள் நிறுவனம் தொடங்கி மூன்று வருடங்கள் ஆன போது அமெரிக்க நாட்டு நிறுவனமான ஊபர் சீனாவில் கால்பதித்தது. அந்த நேரத்தில் ஊபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருந்தது. ஊபர் நிறுவனம் சீனாவில் தொடங்கிய போது அவர்கள் முதலீடு செய்த பணம் எங்களின் அப்போதைய சந்தை மதிப்பை காட்டிலும் மிக அதிகம் என்றார் ஜின் லியூ. அதனால் நாங்கள் அச்சப்பட்டோம், தொடர்ந்து இன்னும் கடினமாக பயணிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது. பின்வாங்க கூடாது என்று அழுத்தமாக முடிவு எடுத்து இருந்தோம்.

2019-ல் நடைபெற்ற வேல்டு எக்கனாமிக் ஃபோரம் (world economic forum) நிகழ்வில் உரையாற்றிய ஜின் லி, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு குழுவினர், ஊபர் சீனாவில் நுழைந்த தொடக்கத்தில், மூன்று மாதங்கள் எங்கும் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி, உறங்கி வேலைபார்த்தனர். மூன்று மாத கடின உழைப்புக்கு பின்னர் உருவாக்கிய திட்டங்களை புதிய மார்க்கெட்டிங் யுத்திகள் மூலம் அறிமுகப் படுத்தினோம் என்றார்.

ஊபர் அறிமுகப்படுத்த பட்ட சில மாதங்களில் மக்களுக்கு நிறைய சலுகை விலையில் சவாரிகளை அளித்தோம். ஊபர் மற்றும் டிடி இரண்டு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பல பில்லியன்களை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளாய் செலவு செய்தனர்.

டிடி நிறுவனம் சீன மக்கள் மற்றும் சீனாவின் சந்தை நிலவரம் ஆகியவற்றை நன்கு அறிந்து செயல்பட்டது. சீனாவின் மிகப்பெரிய கட்டண சேவையை வழங்கி வரும் நிறுவனங்களான அலீ பே (Ali pay) மற்றும் வீசாட் பே (wechat pay) டிடி நிறுவன பயணிகளுக்கு மென்மையாக கட்டணம் செலுத்தும் வழியை அமைத்து தந்தது.

ஆகஸ்ட் மாதம், 2016-ல் டிடி நிறுவனம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, ஊபர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதற்கு முதன்மைக் காரணம் ஜின் லியூ வின் பெறும் முயற்சிகளே. ஆப்பிள் நிறுவனர், டிம் குக் என அழைக்கப்படும் Timothy Donald Cook-ஐ நேரில் சந்தித்து பேசினார். டிடி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு டிம் குக்கை கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது டிடி நிறுவனத்தின் லோகோ ஆரஞ்சு பழத்தின் நிறம் என்றும், எங்கள் நிறுவனத்தின் பெயர் ஒரு ஆப்பிள் பழம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் டிம்.

இந்த சந்திப்பு நடைபெற்று இருபத்து ஐந்து நாள்களில் ஆப்பிள் நிறுவனம் டிடி நிறுவனத்தில் $1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது. ஆப்பிளின் இந்த முதலீடு பணத்தின் உதவியுடன் டிடி நிறுவனம், ஊபர் நிறுனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

டிடி ச்யூசிங் நிறுவனம் உலகம் முழுவதும் விரிவடைய தொடங்கியது. லத்தின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சில ஆசிய நாடுகளில் தற்போது இயங்கி வருகின்றது. சீனாவுக்கு வெளியில் மட்டும் டிடி நிறுவனம் ஒரு நாளைக்கு 4 மில்லியன் சவாரிகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது உலகில் டிடி நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தை தெற்கு ஆசிய நாடுகள் தான். ஊபர் நிறுவனத்தின் அமெரிக்க போட்டியாளரான லைஃப்ட் (Lyft) நிறுவனம் தான் இன்று டிடி க்கு உள்ள மிக பெரிய காம்படேட்டர்.

இணைப்புக்கு பிறகு ஊபர் மற்றும் டிடி நிறுவனம் நட்பு கொண்டு இருந்தனர். தற்போது டிடி நிறுவனம் மற்ற சேவைகளான மக்களுக்கு உணவு வழங்குதல்(Food Delivery) மற்றும் பொது இடங்களில் மின்சார பைக் பகிர்வது (e-Bike Sharing) போன்ற சேவைகளிலும் பெரிய அளவில் விரிவு படுத்த திட்டங்கள் திட்டி வருகின்றது. முன்பு இருந்தே டிடி நிறுவனம் வாகன காப்பீடு சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.

27 ஆகஸ்ட் 2018-ல் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன மக்கள் டிடி நிறுவனத்தின் ஆப்பை தங்களது மொபைல் ஃபோன்களில் இருந்து நீக்கினர். அதற்கு காரணம் இரண்டு பெண் பயணிகள் டிடி நிறுவனத்தின் காரில் பயணம் செய்து கொண்டு இருந்த போது, அவர்கள் இருவரும் அந்த கார் ஒட்டுநரால் கொலை செய்யப்பட்டனர். இந்த செய்தி சீன முழுவதும் பரவியது. சீன மக்களுள் சிலர் டிடி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தனர்.

நவம்பர் மாதம் 2019-ல் ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் நான் புற்றுநோயால் பாதிக்க பட்ட போது கொஞ்சம் கவலை மற்றும் மரணத்தை எதிர் கொள்ளும் பயம் என்னை சூழ்ந்தது என்றார். ஜின் லியூ 2018-ல் நடந்த சம்பவத்தை அவரது புற்றுநோயுடன் எதிர்கொண்டதை இணைத்து குறிப்பிட்டார்.

Also read: சிறுதானிய சகோதரிகள்

2018-ல் சம்பவம் நடந்த நாளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 2019 வரை கிட்டதட்ட 306,000 நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி கொண்டு இருந்த ஒழுங்கற்ற ஓட்டுநர்களை நிறுவனத்தில் இருந்து வடிகட்டி நீக்கினார்.

சின்ன ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தில் இருந்து டிடி நிறுவனம் தற்போது 13,000 நபர்களை பணி அமர்த்தி வேலை செய்து வருகின்றது. கடந்து 2018-ஆம் நிதி ஆண்டில் மட்டும் டிடி நிறுவனம் கிட்ட தட்ட $1.6 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது என்று தெரிவித்தனர். இருப்பினும் நீண்ட கால பயணத்தில் டிடி நிறுவனம் கண்டிப்பாக நல்ல லாபத்துடன் பயணிக்கும் என்று நிறுவனத்தின் பங்குதாரர்கள் நம்புகின்றனர்.

ஊபர் நிறுவனத்தை சீனாவில் இருந்து முற்றிலும் வெளியேற்றிய பிறகும் டிடி நிறுவனத்திற்கு தற்போது அந்த ஊர்களில் உள்ள பிராந்திய ஆப்பரேட்டர்கள் மூலம் போட்டிகள் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் (COVID-19) காரணமாக சீன அரசு பல நகரங்களில் பயணம் செய்ய பயண கட்டுபாடுகளை விதித்து உள்ளது. கொரோனா வைரசால் டிடி நிறுவனம் எதிர்பார்த்து இருந்த வாய்ப்புகள் மற்றும் கணக்குகள் தேங்கி நிற்கின்றன. மக்களும் உள்ளூரிலேயே பயணம் செய்வதை முற்றிலும் குறைத்துக் கொண்டு உள்ளனர்.

தற்போது ஜின் லியூ வின் நிறுவனமும் ஒரு கேள்வி குறியில் இருக்கின்றது. எனினும் டிடி நிறுவனம் மீண்டும் தன் பயணத்தை தொடரும் என்றும் வெகுவிரையில் சீனாவும், சீன நாட்டு மக்களும் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு தங்களது சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி தொழில் ஓட்டத்தை தொடங்குவார்கள் என்று நம்புவோம்.

– செ. தினேஷ் பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here