Thursday, September 23, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

தனி வீடு வாங்க ஆர்வம் காட்டுவது ஏன்?

– ரியல் எஸ்டேட் ஆலோசகர் திரு. செல்வகுமார்

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னும் விற்க முடியாமல் திணறுகின்றன, அடுக்கு மாடிக் குடியிருப்பு நிறுவனங்கள். அவசரத்துக்குக் கூட வீட்டையோ, மனையையோ முன்பு போல உடனே விற்பனை செய்ய முடியாத நிலை. இந்த நிலையில் நிறைய பேர் ரியல் எஸ்டேட் தொழிலில் நீடிக்க முடியாமல் இந்த தொழிலை விட்டே போய் விடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன, ரியல் எஸ்டேட் தொழில் எப்போது மீண்டு வரும் என்பது போன்ற கேள்விகளை சென்னை, செங்குன்றத்தில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் திரு. ஆர். செல்வகுமார் இடம் கேட்ட போது,

”தற்போது அரசாங்கம் புதிதாக அறிவித்த ஆணைப்படி முன்பாகவே அங்கீகரிக்கப் பட்ட வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய முடியும். ரியல்எஸ்டேட் தொழில் செய்வோர் வீட்டு மனைகளுக்கு சிஎம்டிஏ அங்கீகாரம் பெற அணுகும்போது, விரைவில் கிடைப்பது இல்லை. ஆறு மாதங்களுக்கு மேல் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிப் பொனதற்கு இது ஒரு முதன்மையான காரணம் ஆகும்.

மேலும், புதிய வீட்டு மனைகளுக்கு மக்களிடம் குறிப்படத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லை. முன்பே அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள வீடுகள் மற்றும் வீட்டுமனைகள்தான் ஓரளவுக்கு விற்பனை ஆகின்றன.

இணைய வழி ரியல் எஸ்டேட் வணிகமும், வழக்கமான ரியல் எஸ்டேட் தொழில் முனைவோரை பாதிக்கத் தொடங்கி இருக்கிறது. படித்த இணைய சேவைகளை பயன்படுத்தத் தெரிந்தவர்கள் தாங்கள் வாங்க விரும்பும் சொத்துகள் குறித்து இணையத்தில் தேடுகிறார்கள். அதற்கேற்ப பல இணைய தளங்கள் மாதக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம் வாங்கிக் கொண்டு அத்தகைய செய்திகளைத் தருகின்றன.

ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் கிடைக்கும் சேவைகள் அவர்களிடம் கிடைக்காது. சொத்துகளை விற்க விரும்பும் எல்லோருமே அந்த இணைய தளங்களில் பதிவு செய்வது இல்லை. எங்கள் பகுதிகளில் உள்ள சொத்துகள், விலை விவரங்களை இணையத்தில் இருந்து தெரிந்து கொள்வதை விட எங்களிடம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். சில நுணுக்கமான செய்திகளை எங்களால்தான் வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியும். வாங்குவோருக்கும், விற்போருக்கும் பாலமாக இருந்து விலை முடிவு செய்வது முதல் பத்திரப் பதிவு வரை எங்களிடம் நட்புடன் கூடிய சேவை கிடைக்கும். இத்தகைய காரணங்களால் இணையத்தை நாடிப் போகிறவர்களை விட எங்களை நாடி வருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இணைய தளங்களால் எங்களுக்கு பாதிப்பு என்று கூற முடியாது.

2016 இறுதியில் மத்திய அரசால் கொண்டு வரப் பட்ட பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எங்களுடைய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். இந்த பண மதிப்பு இழப்பு சிக்கலால் பெரிய சொத்துகள் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பத்து இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பு உள்ள சொத்துகளை வாங்குவதற்கு கண்டிப்பாக வருமானவரி அட்டை இருக்க வேண்டும் என்பதால், வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள விலை குறைவான, அதாவது பத்து லட்சம் ரூபாய் விலைக்குள் உள்ள சிறிய அங்கீகரிக்கப் பட்ட வீடுகள் மற்றும் வீட்டு மனைகளை வாங்கவே பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழக அரசால் 01.09.2016 முதல் 23.03.2017 வரை மற்றும் 21.04.2017 முதல் 12.05.2017 வரை இரண்டு முறை பத்திரப்பதிவு செய்வதற்குத் தடை செய்யப்பட்டு இருந்தது.

இந்த பத்திரப்பதிவுத் தடை காலத்தில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஏனென்றால், வாங்கிய வீடுகள் மற்றும் மிட்டு மனைகளை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பத்திரப் பதிவுத் தடை இருந்ததால் அந்த நேரத்தில் தங்கள் வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான பணத் தேவையில் இருந்தவர்கள், வேறு அவசரத் தேவைகளுக்கு காலத்தில் பணம் தேவைப்பட்டவர்கள், பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுக்கு பணம் தேவைப்பட்டவர்கள் என பலரும் தங்கள் சொத்துகளை விற்க முடியாமல் பெரிதும் தவித்தனர்.

தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் (இணைய வழி) பத்திரப் பதிவு திட்டத்தால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக முதலில் ஆன்லைனில் எல்லா கணக்குகளையும் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
எதேனும், தவறு இருந்தால் பத்திரப் பதிவு செய்ய இயலாது. பதிவு செய்யும் போது சான்றுக்கு, பட்டா எண் இல்லை என்றால் அந்த இடத்திற்கு பத்திரப் பதிவு செய்ய இயலாது. அது மட்டும் இன்றி ஆன்லைன் பதிவு திட்டத்தால் யார் வேண்டுமானாலும், எங்கு இருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதிவதற்கான முதல் கட்ட பணிகளைச் செய்யலாம். இது போன்ற நன்மைகள் சில இருந்த போதும் சிக்கல்களும் உள்ளன.

பதிவு செய்யபட்ட பத்திரங்களில் எதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதற்கு மாவட்ட பத்திரப்பதிவு கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றுதான் சரி செய்ய முடியும் என்ற சூழ்நிலை இருக்கின்றது. இப்படிப்பட்ட சிக்கல்களை அரசு விரைவில் தீர்த்து வைத்தால் மக்களுக்கு எளிதாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் தொழிலைப் பொறுத்த வரை அரசு எங்களுக்கான கமிஷன் ஆக 2% -ஐ நிர்ணயித்து உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட 2% கமிஷன் பணம் என்பது, எல்லா நேரங்களிலும் சரியாக கிடைக்கும் என்று கூற முடியாது. எனென்றால் சிலர் நாங்கள் 1% கமிஷன்தான் கொடுப்போம் என்று கூறுவார்கள். சொத்தை வாங்கும் சிலர், எங்களிடம் கமிஷன் எதுவும் எதிர்பார்க்காதீர்கள், விற்பவர்களிடம் கமிஷன் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள். சிலர் ஒரு இடத்தின் பத்திரப்பதிவு முடிந்த உடன் சற்றும் தயங்காமல் 2% கமிஷன் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இது தான் கமிஷன் தொடர்பான நிலவரம்.

மக்களிடம் அடுக்குமாடி வீடுகள் வாங்குவதில் இப்போது ஒரு தயக்கம் ஏற்பட்டு உள்ளது. தனி மனைகள் வாங்கவே பலரும் விரும்புகிறார்கள். மேலும் தற்போது அடுக்க மாடி வீடுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. இந்த விலைக்கு தனி வீடுகளே கிடைக்கின்றன. அடுக்கு மாடி வீடுகளில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான மெயின்டனன்ஸ் கட்டணம் வாடகை வீட்டில் குடியிருப்பதைப் போன்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 58,000 கட்டி முடிக்கப் பட்ட அபார்ட்மென்ட்கள் வீடுகள் விற்கப்படாமல் இருக்கின்றன(தி இந்து நாளேட்டில் வந்த செய்தியின்படி).

இப்போது மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான விலையில் ஒருவர் சொத்து வாங்கும் போது, கட்டாயமாக வருமானவரி அட்டை தேவைப்படுவதால் பெரும்பாலான பத்திரப் பதிவுகள் வங்கிக் கடன் உதவி மூலமாகவே நடைபெறுகிறது. ஒரு பத்திரப் பதிவு அலுவலகத்தில் நூறு பத்திரங்கள் பதியப்படுகின்றன என்றால் அவற்றில் ஐம்பது பத்திரங்கள் வங்கிக் கடன் உதவி மூலமாகவே பதியப்படுகின்றன. இனி வரும் காலங்களில் வங்கிக் கடன் வாங்கியே பெரும்பாலான சொத்துகள் வாங்கப்படும் நிலை வரும் என்று நம்புகிறேன்.

இளைய தலைமுறையினரை ரியல் எஸ்டேட் தொழில் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதில் உள்ள நிலையற்ற தன்மை, மொபைல்களிலேயே மூழ்கிக் கிடப்பதால் பலரிடமும் இயல்பாக பேசும் ஆற்றல் இளைஞர்களிடம் குறைந்து வருவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.” என்றார் திரு. செல்வகுமார். (9444150356).

– செ. தினேஷ் பாண்டியன்

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.