Tuesday, March 23, 2021

மனதே உற்சாகம் கொள்

https://youtu.be/E90fZK-GaYQ சில நேரங்களில் நமக்கு மனம் உற்சாகம் இல்லாமல் காணப்படும். மனதை உற்சாக நிலைக்கு கொண்டு வருவது எப்படி? மனநல ஆலோசகர் திருமதி. ஜான்சிராணி சில வழிகளைச் சொல்லித் தருகிறார்.

Latest Posts

1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்!

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட...

பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது!

தமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

நாட்டுக் கோழி வளர்த்து நல்ல லாபம் பெறுவது எப்படி

ப்ராய்லர் கோழிகளை வளர்ப்பதைப் போலவே நாட்டுக் கோழிகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. ப்ராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகளின் இறைச்சியே உடலுக்கு நல்லது என கருதும் போக்கு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டுக் கோழிகளின், நாட்டுக் கோழி முட்டைகளின் விற்பனையும் குறிப்பிடத் தக்க அளவு கூடி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், பரம்புவிளையில் கேவிஎஸ் நாட்டுக் கோழிப்பண்ணை என்ற பெயரில் நாட்டுக் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார், திரு. ஷிபின். அவரிடம் நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றிக் கேட்டபோது,

”நான் சிறுவனாக இருக்கும்போதே எங்கள் வீட்டில் சுமார் ஐம்பது கோழிகள் வளரும். பலரும் எங்கள் வீட்டுக்கு வந்து கோழிகளையும், முட்டைகளையும் வாங்கிச் செல்வார்கள். நல்ல லாபம் கிடைக்கும்.

நான் நான்கு ஆண்டுகளாக நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறேன். எங்கள் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வயல் பகுதியில் எங்கள் கோழிப் பண்ணை அமைந்து உள்ளது. வீடுகள் உள்ள பகுதியின் அருகிலேயே பண்ணையை வைத்தால், தூசுகள் காரணமாக கோழிகளுக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. வயல்வெளிப் பகுதியில் பண்ணையை வைத்தால் மற்றவர்களுக்கும் எந்த இடைஞ்சலும் இருக்காது.

Also read: கால்நடைகள், கோழி வளர்ப்பு: சில பொதுவான செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் குளிர் கூடுதலாக உள்ள பகுதி என்பதால் இங்கு ப்ராய்லர் கோழிகள் நன்றாக வளர்வது இல்லை. அதனாலும் இங்கு நாட்டுக் கோழிப் பண்ணைகளே அதிகமாக உள்ளன.

பண்ணை தொடங்கிய காலத்தில் கோழி வளர்ப்பு தொடர்பான சில நுட்பங்கள் தெரியாததால், கொஞ்சம் கோழிகள் இறந்து விட்டன. அதன் பிறகு வேறு சில நணபர்களின் கோழிப் பண்ணைகளுக்கு சென்று அவர்களிடம் இருந்து நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். பண்ணையை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். நோய்ப் பரவலைத் தடுக்க தரையில் சுண்ணாம்புத் தூள் தூவி வைத்து இருக்க வேண்டும். நோய்களால் பாதிக்கப்படும் கோழிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட கோழி சோர்வாக இருக்கும். தீவனம் எடுத்துக் கொள்ளாது. இந்த கோழிகளை பண்ணையிலேயே விட்டு வைத்து இருந்தால் இதன் எச்சத்தை மற்ற கோழிகள் மிதிப்பதன் மூலம் நோய் மற்ற கோழிகளுக்கும் பரவி விடும். லுசோட்டா என்ற ஒரு மருந்து இருக்கிறது. இந்த நோய்த் தடுப்பு மருந்தை மாதம்தோறும் கொடுத்து வந்தால் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கோழிகளுக்ககு அம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பு மருந்து உள்ளது. கோழிக் குஞ்சுகளுக்கு முப்பது நாள் ஆனவுடன் இந்த தடுப்பு மருந்து ஊசி போட்டு விட வேண்டும்.

கோழியின் எச்சம் வெள்ளையாக இருந்தால் அதை வெள்ளைக் காய்ச்சல் என்பார்கள். சிவப்பாக இருந்தால் ரத்தக் காய்ச்சல் என்பார்கள். அததற்க்கு தனித்தனியே மருந்து இருக்கிறது. இந்த மருந்துகளைக் கொடுத்து அந்த கோழிகளைக் காப்பாற்றி விடலாம். ஆர்டிஏகே என்ற ஒரு நோய் இருக்கிறது. இந்த நோய் வந்தால் கோழியைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். நோய் வந்து இறந்த கோழிகளை நான் இறைச்சி விற்பனைக்கு கொடுப்பது இல்லை. அவற்றை புதைத்து விடுவோம்.

கோழிகளுக்கு இடையே சண்டை வந்து காயங்கள் ஏற்பட்டால் அதன் மூலம் கோழிப் பண்ணையில் நாற்றம் வரும்; கோழிகள் இறந்து அதைக் கவனிக்காமல் விட்டாலும் மறுநாள் நாற்றம் வரும். உணவு செரிமானம் ஆகாமல் கோழிகள் வாந்தி எடுத்தாலும் நாற்றம் வரும். அந்த மாதிரி நேரங்களில் அந்த பகுதியை நன்றாக தூய்மை செய்து சுண்ணாம்புப் பொடி போட்டு விட்டால் நாற்றம் போய் விடும்.

நான் நாட்டுக் கோழிகளை மட்டுமே வளர்த்து வருகிறேன். ஆண்டுக்கு ஒரு கோழியிடம் இருந்து இருநூற்று ஐம்பது முட்டைகள் வரை கிடைக்கும். நாட்டுக் கோழி முட்டைகளுக்கு ப்ராய்லர் கோழி முட்டைகளை விட அதிக விலை கிடைக்கும். எங்களிடம் முட்டை வியாபாரிகள் எட்டு ரூபாய் வீதம் வாங்கிச் சென்று பத்து ரூபாய் அல்லது பன்னிரெண்டு ரூபாய் என்று விற்பனை செய்வார்கள்.

இரண்டாயிரம் சதுர அடியில் கொட்டகை அமைத்து இருக்கிறேன். தற்போது சுமார் இருநூறு கோழிகள் இருக்கின்றன. வேலைக்கு ஆட்களை யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எல்லா வேலைகளையும் நானே பார்க்கிறேன்.

காலையில் ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் ஒரு முறையும், மாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு முறையும் என இரண்டு வேளைகள் தீவனம் வைப்பேன். தீவனத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன். மக்காச் சோளம், உருட்டுக் கம்பு, வெள்ளைச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுப்பேன்.

ஐம்பது கிலோ சோளம், ஐம்பது கிலோ அரிசித் தவிடு, ஐம்பது கிலோ தேங்காய்ப் புண்ணாக்கு, ஐம்பது கிலோ உருட்டுக் கம்பு, ஐந்து கிலோ கருவாடு, இரண்டு கிலோ சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொள்வேன். இந்த தீவனத்தில் நாட்டுக் கோழிகளுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கும். மதியம் மூன்று மணி அளவில் எல்லா கோழிகளையும் கூண்டில் இருந்து திறந்து விட்டு விடுவேன். ஐந்து மணி வரை வெளியே சுற்றி விட்டு தீவனம் வைத்த உடன் திரும்ப ஷெட்டுக்கே வந்து விடும்.

Also read: பண்ணையில் மீன் வளர்ப்பு

நூற்று இருபது நாட்களில் ஒரு கோழியின் எடை இரண்டரை கிலோ வந்து விடும். இந்த எடை வந்த உடன் விற்று விடுவேன். சில கோழிகள் தொன்னூறு நாட்களிலேயே இந்த எடையை அடைந்து விடும். ப்ராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகளின் விலை அதிகம். ஒரு கிலோ இருநூறு ரூபாய் வரை போகும். இறைச்சியின் விலை இன்னும் அதிகம்.

நானே ஒரு கோழி இறைச்சிக் கடையும் வைத்திருக்கிறேன். புதிய கோழிகளை என் பண்ணையில் இருந்தே கொண்டு வருவதால் வாடிக்கையாளர்கள் மனநிறைவுடன் வாங்கிச் செல்கிறார்கள்.

நான் கோழிகளுடன் வான்கோழி, காடையையும் வளர்த்து வருகிறேன். அவற்றையும் அக்கறையுடன் கவனித்து வருகிறேன். வான்கோழிகளுக்கு வந்த நோய்கள், கோழிகளுக்கு வராமல் இருக்க இரண்டு இடங்களிலும் வேறுவேறு செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

நான் முழு நேரமாக இந்த தொழிலைத்தான் செய்கிறேன். கோழிப் பண்ணைகளுக்கு என அரசு உரிமம் தருகிறது. அந்த உரிமத்தையும் வாங்கி வைத்து இருக்கிறேன். தரமான இரும்புத் தூண்கள், தரமான ஷீட்டுகள் கொண்டு பண்ணையை அமைத்து இருக்கிறேன். இன்னும் கோழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறேன்” என்றார் திரு. ஷிபின்.

– ச. சங்கீதா

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்!

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட...

பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது!

தமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

Don't Miss

சின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்

வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...

15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்

வரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.