Monday, March 27, 2023

Latest Posts

செயற்கை நுண்ணறிவு மூலம் விசால் சிக்கா செய்த மாற்றங்கள்

- Advertisement -

ஒரு நிறுவனத்தை AI -க்கு மாற்றுவது வணிகங்களை மேம்படுத்துவதற்கும், அவற்றின் மனித நேயத்தை பெருக்குவதற்கு மான ஆற்றல் ஆகும் என்கிறார் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷால் சிக்கா. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் புதிய முயற்சியை கடந்த 2019 செப்டம்பர் மாதம் தொடங்கினார்.

இவர் கூறியதாவது, ஆகஸ்ட் 2019, இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளிவரும்போது, எனக்கு வயது ஐம்பதை கடந்து விட்டது. அடுத்து வரும், இருபத்தைந்து வருடங்களை யும், கடந்த இருபத்தைந்து வருடங்களையும் நினைத்து பார்ப்பேன். அப்போது கூகுள், முகநூல், ஊபர், டெஸ்லா மற்றும் ஏர்பின் இவை எதுவும் பயன்பாட்டில் இல்லை. ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாபும் இல்லை. அமேசான் நிறுவனமும் தொடக்கநிலையில் இருந்தன. அடுத்துவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இந்த புதிய மாற்றங்களே சான்றாகும்.

Also read: ராபர்ட் கியோசாகி சொல்லும் பதினைந்து வழிகள்

என்னுடைய நோக்கம் எல்லாம் தொழில்நுட்பமானது எப்போதும் மனிதநேயம் உடையதாக இருக்க வேண்டும் என்பதே அவற்றில் சில நம்மை மேம்படுத்தும், உருவாக்கும், பலவற்றை பார்க்க வைக்கும், செயல் புரிய வைக்கும். அதே நேரத்தில் தொழில்நுட்பத்தால் வரும் எதிர்மறை விளைவுகளைப் பார்க்கும்போது எதிர்மறையாக தான் சிந்திக்கத் தோன்றுகின்றது.

தற்போது, சில செய்திகளை அடையாளப் படுத்தி நன்கொடைகள் பெற்று வினை என்ற புதிய வலிமையான தொழில் நுட்பத்தை உருவாக்கினேன். பாலியில் பிறந்த முதல் குழந்தை வியன் என்ற பெயரை கொண்டவன். வியன் என்னும் பெயர் விவியன் என்பதில் இருந்து திரிந்து வந்தது. அதன் பொருள் வாழ்க்கையில் முழுமை மற்றும் பேரறிவு என்பதாகும். வியன் என்னும் பெயர் இரண்டு வாழ்வியலை தாங்கி நிற்கிறது.

2019 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வினை நிறுவப்பட்டது. அதிகாரப் பூர்வமாக செப்டம்பர் 12 -ம் தேதி நிறுவப்பட்டது. இதில், தொழிலாளர்கள், வணிகர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஆலோசகர்கள் என்று 30 நபர்களைக் கொண்ட மேன்மைப் பொருந்திய குழு உள்ளது. இதை பொருளாதார அளவில் முன்னேற்ற வேண்டும். நான் எப்போதும் செயல்களின் நன்மையை கருதியே செயல்படுவதால், இந்த துறையில் அதையே கொண்டுவர விரும்புகிறேன். செய்யும் வேலையின் மூலமாக ஏற்படும் தாக்கத்தை அளவிட்டு உறுதி செய்யவேண்டும். தொடக்க சிக்கல்களில் பணியாற்றினால், பாதிப்பு களைக் குறைக்கலாம் என்பதே இதன் இலக்கு ஆகும். இந்தத் துறையில் சில தவறுகள் இருப்பினும் அதை நல்ல வழியில் மட்டுமே விரிவுபடுத்துவோம்.

Also read: என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு பெரிய ஆற்றலை தரும். இது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக தான் நான் பார்க்கின்றேன். தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சந்தைத் தேவை அந்த வாய்ப்பை இது வழங்குகின்றது. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் முடிவு வடிவமைப்பு, வளர்ச்சி, தீர்வு வழங்குதல் ஆகியவற்றிற்கு இந்த இடங்களில் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்த முயற்சியால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.

– சிவ. தினகரன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news