தொழில் அதிபர்களில் எழுதுபவர்கள் மிகச் சிலரே! என்னதான் வணிகக் கல்வி வழங்கும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தொழில் பற்றியும் வணிகம் பற்றியும் எழுதினாலும், தொழிலதிபர்கள் எழுதும் எழுத்துகள் அளவுக்கு அனுபவம் சார்ந்து இருக்காது. அதனாலேயே தொழிலதிபர்கள் எழுதும் நூல்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகமாக உள்ளது. ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்.
திரு. ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) அமெரிக்காவைச் சேர்ந்த தொழி லதிபர். இவர் தொழில் முன்னேற்றம் குறித்தும், வாழ்வில் உயரத் தேவையான பண்புகள் குறித்தும் நிறைய எழுதி இருக்கிறார். தன்னம்பிக்கை உருவாக்கும் பயிற்சியாளர். வணிகக் கல்வி அளிக்கும் ரிச் டாட் (Rich Dad) பயிற்சி நிறுவனத்தை தோற்றுவித்தவர். இவர் எழுதிய ரிச் டாட் புவர் டாட் (Rich Dad Poor Dad) புத்தகம் உலக அளவில் அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்று.
திரு. ராபர்ட் கியோசாகி, வெற்றிக்கான முதன்மையான பதினைந்து விதிகளாக பின்வருவனவற்றைக் கூறுகிறார்.
1. நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான நேரங்கள் உங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நீங்கள் வேகமாக செயல்படுவீர்கள்.
2. வெற்றி நோக்கியே உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் தொழில் வெற்றியே உங்களுக்கான முதன்மை இலக்காக இருக்கட்டும். கவனம் முழுவதும் வெற்றயை நோக்கியே குவியட்டும்.
3. வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அது உங்கள் உறுதித் தன்மையை அதிகரிப்பதோடு தன்னம்பிக்கை யையும் அதிகரிக்கும்.
4. உங்கள் திறமைகளை அதிகரிக்க, வல்லமையை அதிகரிக்க அனுபவங்கள் நிச்சயம் கைகொடுக்கும், அவை நல்ல அனுபவங்களாக இருந்தாலும், கெட்ட அனுபவங்களாக இருந்தாலும்.
5. ஏதேனும் தவறுகள் நடந்து விட்டால், அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
Also read:உங்களுக்கு உதவும் குறிப்புகள்
6. தொடர்ந்து கற்றுக் கொள்வது என்பது உங்கள் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகட்டும். ஒரு போதும், எந்த வயதானாலும் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.
7. பணம் தொடர்பான இலக்குகளில் தெளிவாக இருங்கள். அவை முடிந்த வரை துல்லியமாகவும் இருக்கட்டும்.
8. பொறுப்புகளை ஏற்கத் தயங்கா தீர்கள். பெரும்பாலான மனிதர்களுக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் குணம் இருக்கிறது. வளர்ச்சிக்கு பயன்படாத இயல்பு இது.
9. எல்லோரும் திடீரென மாட்டிக் கொண்டு தவிப்பது, எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும்போதுதான். எனவே எதிர்பாராத, எதிர்கால செலவுகள் குறித்தும் திட்டங்களுடன் இருங்கள். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வைத்திருங்கள்.
10. செலவுகள் எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். தேவை யற்ற செலவுகளை தவிர்க்கத் தயங்கா தீர்கள்.
11. உங்களை மதிக்கும், உங்களுக்கு ஆதரவாக இருக்கும், உங்களைப் போல எண்ணும் மனிதர்களின் எண்ணிக்கை உங்கள் நட்பு வட்டத்தில் அதிகமாக இருக்கட்டும். இதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.
12. தோல்விகளையும், இழப்புகளை யும் கண்டு அஞ்சாதீர்கள். இவற்றைக் கண்டு அஞ்சினால் உங்கள் ஓட்டம் உங்களை அறியாமலேயே தடைபட்டு விடும்.
13. எதற்காக உழைக்கிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். இது வேறு ஒன்றுமில்லை, தெளிவான இலக்கு உங்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் கடினமாக உழைப்பதற்கான பயன் கிடைக்கும்.
14. நீங்கள் ஈட்டும் பொருளை சேமிப்பதை விட முதிலீடு செய்யுங்கள். சரியாக முதலீடு செய்யப்படும் பணம் கூடுதல் லாபத்தை ஈட்டித் தரும்.
15. ஒரு பொருளை வாங்கும் முன், இது இப்போது தேவைதானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கான பணத்தை எப்படிக் கொண்டு வரப்போகிறோம் என்பதிலும் தெளிவாக இருங்கள்.
– மலர்