Latest Posts

என்ன செய்தால், எப்படி செயல்பட்டால் நாம் வளரலாம்?

- Advertisement -

-உலகின் மிகப் பெரிய வெற்றியாளர்கள் தரும் குறிப்புகள்

பொதுவாக உலகின் தொழில்துறையாக இருந்தாலும் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் பரந்த மனம் கொண்டவர் களாகவே இருக்கிறார்கள். தாங்கள் வளரும்போதே மற்றவர்களும் வளர் வேண்டும் என்ற எண்ணம் கொண்டே செயல்படுகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்டவற்றை அவர்கள் கமுக்கமாக வைப்பது இல்லை. அவற்றை அனைவருக்கும் தெரிவிக்கவே விரும்புகி றார்கள். அப்படி சில பெரிய தொழில் அதிபர்கள் தெரிவித்த பயன்படக் கூடிய கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.


ஜாக் மா (Jack Ma)


இவர் சீனாவின் மிகப் பெரிய தொழில் அதிபர். அலிபாபா இணையம் வாயிலான விற்பனைப் பேரங்காடியை நிறுவியவர் மற்றும் அதன் தலைவர். சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் சந்தித்தவர். அவற்றை எல்லாம் தன் திறமையாலும், தன்னம்பிக்கையாலும், செயல்பாடுகளாலும் வெற்றி கண்டவர். அவர் கூறும் ஆலோசனைகள்: >மற்றவர்களின் புறக்கணிப்பை ஆக்க பூர்வமாக பயன்படுத்துங்கள்.

> உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).

> ஒவ்வொன்றைப் பற்றியும் குறை கூறிக் கொண்டு இருக்காதீர்கள். அவற்றில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.

> தொலைநோக்குடன் சிந்திக்கப்பட்ட உங்களின் முயற்சி வெற்றி அடையாது, என்று யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ளா தீர்கள்.

> உங்களை வளர்த்துக் கொள்ள கற்றுக் கொண்டே இருங்கள்.

> செயல்பாடுகளில் ஒரு முனைப் படுத்துல் இருக்கட்டும். கவனத்தை ஒரு முகமாக குவித்து ஆர்வமாக செயல்படுவதே சிறந்த வெற்றிக்கு வழி வகுக்கும். அலைபாய்ந்து கொண்டே இருப்பது வெற்றிக்கு வழி வகுக்காது.

> உங்கள் தொழில் வளர்ச்சிக் கனவின் மீது தீராத பற்று கொண்டிருங்கள்.

> முதலில் வாடிக்கையாளர்கள்; இரண் டாவது ஊழியர்கள்; மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள் என்று வரிசைப்படுத்தி செயல்படுங்கள்.

> நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல் போன்றவற்றில் தொடர்ந்து ஆர்வம் செலுத்துங்கள். > உங்கள் நிறுவனத்துக்கான தனிப் பண்பாட்டை உருவாக்குவதிலும் உங்கள் முயற்சி இருக்கட்டும்.

> உங்கள் நிறுவனத்திற்கான பெயரை தேர்ந்து எடுப்பதில் கவனமாக இருங்கள். அது ஒரு அழகான, எவரும் நினைவில் வைத்திருக்கும் வகையிலான நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.


லாரி பேஜ் (Larry Page)


கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர். அதன் தொடக்க நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர். அவர் வெற்றிக்கான வழிகளாக எவற்றைக் கூறுகிறார் என்று பார்க்கலாம்.

> தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.

> நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்கு படுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி கட்டமையுங்கள்.

> உங்கள் கனவு இலக்குகளை பின்பற் றுங்கள் (Follow Your Dreams).

> சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு போதுமான தெளிவு இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.

> உங்கள் திட்டத்தை தொலை நோக் குடன் நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.

> சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

> ஒரே நிலையில் தங்கி விடாதீர்கள். ”சரியான ஆட்களை” தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி பொறுப்புகளைக் கொடுத்து நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.

> தொழில் துறையில் ஏற்படும் மாற்றங் களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

> பெரிய சிக்கல்களைத் தீர்க்க உணர்ச்சி வசப்படாமல் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் சிக்கலுக்கான தீர்வுகள்தான் புதிய தொழில்களுக்கு வழி வகுக்கின்றன. தகவல்கள் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட சிக்கலின் தீர்வுதான் கூகுள்.


முகேஷ் அம்பானி (தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்)

> உங்கள் பார்வையை விரிவாக்குங்கள்.

> எதற்கெடுத்தாலும் அஞ்சிக்கொண்டே இருக்காதீர்கள். உங்களை வலுவானவராக நினைத்து செயல்படுங்கள். இடையில் வரும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்ளுங்கள்.

> இலக்குகள் குறித்து சிந்தியுங்கள். இவை தொடர்பானவற்றைத்தான் ‘கனவு காணுங்கள்’ என்று கூறுகிறார்கள்.

> மன உறுதியுடைய குழுக்களை, வணிக வலைப்பின்னல்களை உருவாக்குங்கள்.

> புதிய முயற்சிகள் என்றில் நிச்சயம் ஒருபுறம் இடர் இருக்கவே செய்யும். இடர்களைத் தாண்டி சிந்தித்து இத்தகைய ரிஸ்க் எடுப்பதில் இருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

> வெற்றியின் மீது எப்போதும் விருப்பம் கொண்டிருங்கள்.

> உறுதியான உங்கள் உள்ளுணர்வுகளை நம்புங்கள்.

> நீங்கள் செய்த செயல்கள்தான் உங்க ளைப் பற்றி பேசும்.

> எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்.


ஜெஃப் பெசாஸ் (Jeff Bezos) அமேசான்.காம் நிறுவனர்

> நீங்கள் எடுத்த முடிவுகள் ஒரு வேளை தோல்வியைத் தந்தாலும் அதற்காக வருத்தப் படாதீர்கள். அடுத்த என்ன செய்வது என்பது குறித்து சிந்தியுங்கள்.

> நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).

> உங்களுக்கு பேரார்வம் (Passion) இருக் கும் துறைகளிலேயே செயல்படுங்கள்.

> வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

> நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்:து எடுங்கள்.

> வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுப வத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.

> மார்க்கெட்டிங்குக்கு செலவிடுவதைப் போலவே, வாடிக்கையாளர்களின் சேவை களுக்கும் அதிகம் செலவிடுங்கள்.

> உங்கள் நிறுவனத்துக்கென்று தனி பண் பாட்டை உருவாக்குங்கள்.

> சில நேரங்களில் மதிப்பு மிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தும்.

> உங்கள் அறிவையும், உள்ளுணர்வையும் சரியான விகிதத்தில் பயன்படுத்துங்கள்.


ராபர்ட் கியோசாகி Robert Kiyosaki


இவர் அமெரிக்க தொழிலதிபர். பங்கு முதலீட்டாளர். வாழ்வியல் எழுத்தாளர். கல்வியாளர். தன்னம்பிக்கை பயிற்சியாளர்.

> உங்களைச் சுற்றி உங்களைப் போன்ற போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனநிலை கொண்ட மனிதர் களை வைத்திருங்கள்.

> கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.

> நீங்கள் சேமிப்பதை விட கூடுதலாக முதலீடு செய்யுங்கள். சேமிப்பில் இருந்து வரும் வட்டி போன்ற லாபத்தை விட முதலீடே அதிக லாபத்தை அடைய வழி வகுக்கும்.

> எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், இந்த பொருள் இப்போது தேவைதானா? என்று கேளுங்கள். அந்த கேள்விக்கான பதில், கண்டிப்பாக தேவைதான் என்று இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

> உங்கள் வாழ்க்கையை மிக எளிமையாக்குங்கள்.


எலன் மஸ்க் Elon Musk


இவர் டெஸ்லா மோட்டார்சின் இணை நிறுவனர். ஸபேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. சோலார் சிட்டியின் இணைநிறுவனர் மற்றும் தலைவர். ஓப்பன் ஏஐ-யின் துணைத் தலைவர். பே பால் ஆஃப் கான்ஃபினிட்டி உடன் இணைக்கப்பட்ட எக்ஸ் டாட் காம் நிறுவனர்.

> நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்கள்.

>தோல்வியைக் கூட உங்களுக்கு விருப்பமானதாக நினைக்கத் தொடங்குங்கள். தோல்வி அடைவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் புதுமையாக எதையும் செய்ய இயலாது.

>நீங்கள் இளைஞராக இருக்கும் காலத்திலேயே துணிச்சலுடன் செயல்படும் மனப்பக்குவத்தைப் பெறுங்கள்.

நீங்கள் செய்வதை, ஏதேனும் சிக்கல் வரும்போது இடையில் விட்டு விடாதீர்கள். தொடர்ந்து வெற்றி பெற உழையுங்கள்.

>வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.

>நீங்கள்தான் செய்தாக வேண்டும் என்ற உங்கள் முதன்மையான பணிகள் மீது கவனம் செலுத்துங்கள்.

>உங்களுக்கு அப்பால் உள்ள சிக்கல்களையும் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

>விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் பணி புரிவதற்கான நேரம்தான் என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.


ஆலன் சுகர் Alan Sugar


மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவன தலைவர். தொழில் மற்றும் அரசியல் ஆலோசகர்.

>பின்னடைவுகளுக்கும் தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, பேரார்வம் கொண்டு இயங்குங்கள்.

>உங்களுக்கு அனுபவம் இருக்கும் தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுது போக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம். சிலர் தெரியாத தொழிலையும் தொடங்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதையும் மறக்க வேண்டாம். இவர்கள் அந்த தொழிலைத் தொடங்கிய பின் தங்கள் செலவில் அனுபவம் பெற்றவர் களாக இருப்பார்கள்.

>உங்கள் தொழில் சார்ந்த வல்லுநர் களிடம் ஆலோசனை கேளுங்கள். நண்பர்கள் என்பதற்காகவோ, உறவினர்கள் என்பதற்காகவோ அவர்களுக்கு சற்றும் தொடர்பு இல்லாத தொழில் சார்ந்தவை குறித்து ஆலோசனை கேட்காதீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். உண்மையான கருத்துகளை சொல்லத் தயங்குவார்கள்.

>ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். நீங்கள் நடக்கப் பழகும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். முதலில் சிறியதாக தொடங்குகள். ஒன்றில் வெற்றி பெற்ற பின் அடுத்த முயற்சியைத் தொடங்குங்கள்.

>உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை ஒத்த நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் என்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? அவர்களை எப்படி வரவழைக்க வேண்டும் என்று ஆராயுங்கள்.

>முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்து கொள்வதற்கு உதவும். மற்றவர்கள் செய்ய வேண்டிய செயல்களை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து நிர்வகிக்க இந்த திட்டமிடல் உதவும்.

>உங்களுக்கென்று தனித்துவமான செயல்முறையைக் கண்டு பிடியுங்கள். அது புதியதாக இருக்க வேண்டும் என்பது இல்லை. பல செயல்முறைகள் முன்பே செய்தவைதான் என்றாலும் செய்யும் விதத்தை சிறந்ததாக மாற்றுங்கள்.

>வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப் பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் முதலில் உங்களிடம் இருக்கும் பணத்தை போடுங்கள், அது கொஞ்சமாக இருந்தாலும் பரவாக இல்லை. எந்த தொழிலையும் குறைந்த முதலீட்டிலும் தொடங்கி பின்னர் பெரிதாக வளர முடியும். தொழிலில் நம்பகத் தன்மையுடன் இருப்பதை வங்கிகளுக்கு உணர்த்தினால் அவர்கள் தயக்கம் நீங்கி கடன் கொடுக்க முன்வருவார்கள்.

>இயல்பாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயல்படுத்த முடியுமா? என்பதை விருப்பு – வெறுப்பு இல்லாமல் சிந்தியுங்கள்.


மார்க் கியூபன்
Mark Cuban


அமெரிக்கத் தொழலதிபர், பங்கு முதலீட்டாளர். எச்டி டிவி கேபிள் நெட்ஒர்க் சேர்மன். டல்லாஸ் மாவெரிக்ஸ், லேண்ட்மார்க் தியேட்டர்கள், மேக்னோலியா பிக்சர்ஸ் உரிமையாளர்.

> உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த திறமைகளை இன்னும் உயர்த்திக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

> நீங்கள் தொடங்க இருக்கும் தொழில் மீது உங்களுக்கு பேரார்வம் இல்லை என்றாலும் இல்லையென்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிப்படைக்கவில்லை என்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் ஒன்றின் மீது பேரார்வம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

> உங்கள் தொழில் எதிர்மறையாக செல்லும்போது, அதில் இருந்து மீட்டு எடுக்க இந்த பேரார்வம் மட்டுமே கை கொடுக்கும்.

> உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்து எடுங்கள். ஆட்களைத் தேர்ந்து எடுக்கும்போது இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக முதன்மையான பணிகளில் ஆர்வம் இல்லாதவர்களைப் போட்டால் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்கள் செயல்பாடுகள் அமையாது.

> உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டப் போகிறது, எப்படி விற்பனை செய்யப் போகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இது தொடர்பாக உங்களுக்கு வழி காட்ட ஆடிட்டர்கள் உதவக் கூடும்.

> நிறுவனத்தில் வேலை பார்ப்பது பணியாளர்களுக்கு பிடிக்குமானால், நேரத்தை எப்படி பயன் உள்ளதாய் செலவழிப்பது என்பதை அவர்களே கண்டு பிடித்து விடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி விடுவார்கள்.

> அலுவலகத்தை தடுப்புகள் இல்லாமல் திறந்த அலுவலகமாக அமையுங்கள். எங்கிருந்து பார்த்தாலும் முழு அலுவல கமும், பணி புரிவோரும் அனைவரின் கண்களிலும் படுமாறு இருக்கட்டும். அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்க ளுக்கும் என்ன நடக்கிறது என்பது தெரிய வரும். இது அவர்களின் ஆற்றலை அதிகரிக்கும்.

> உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். அதைப் போலவே உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பங்கள் உங்கள் நிறுவனத்துக்கு பயன்படுமாறு அமையும் என்றால் அவற்றையும் பயன்படுத்த அனுமதியுங்கள்.

> நிறுவன கட்டமைப்புகளை உருவாக் குங்கள். யார், யாரிடம் தங்கள் பணிகள் தொடர்பான அறிக்கைகளை வழங்க வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்து அறிவியுங்கள்.

> தேவை அற்ற ஆடம்பரமான பொருட் களை வாங்காதீர்கள்.

> உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (பிபீஓ) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அது அவர்களுடனான நெருக்கத்தை அதிக ரிக்கும் என்பதோடு உடனுக்குடன் அவர்க ளுக்கான சேவைகளை செய்து கொடுக்கவும் உதவும்.


கெம்மன்ஸ் வில்சன்
Kemmons Wilson


இவர் ஹாலிடே இன் ஓட்டல்களின் நிறுவனர்.

>தினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள், நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும்.

>உழைப்புதான் எல்லா வாய்ப்புகளை யும் திறக்கும் சாவி.

> உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சியை உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எப்படி பயன் படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

>ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத் திறனை விட மனப்பாங்கே (ஆட்டிட்யூட்) முதன்மையான பங்காற்றுகிறது.

> வெற்றியடைய துணிச்சலாய் செயல் களைச் செய்ய வேண்டும்.

> அதிகமாக உழைத்தால் அதிக பயன் அடையலாம். உழைக்கும் அளவை விட அதிகமாக பொருளீட்ட இயலாது.

> எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.

> கவலைப்படாதீர்கள். கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்டால் அது உங்கள் நிகழ்கால வளர்ச்சிக்கு எதிராக அமைந்து விடும். கவலையால் எந்த நன்மையையும் விளையாது.

> வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத் தான் ஏற வேண்டும்.

>வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள பயப் படாதீர்கள்.


ஆர். ஜி. சந்திரமோகன்


இவர் இந்தியாவின் மிகப் பெரிய பால் பொருட்கள் நிறுவனமான ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர். அருண் ஐஸ் கிரீம், ஐபாகோ ஐஸ் கிரீம், ஆரோக்யா பால், கோமாதா பால் ஆகியவை இவர்களின் முதன்மையான தயாரிப்புகள்.

> பிசினசில் இருப்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே பாதுகாப்பு என்ற பெயரில் வீடு, மனை என்று பணத்தை முடக்கக் கூடாது. அந்த பணத்தை வைத்து தொழில் செய்தால் நாலு பேருக்கு வேலையும் கொடுக்கலாம் நாமும் முன்னேறலாம்.

>நல்ல தொழில் ஆலோசகர்களை நம் முடைய வட்டத்தில் வைத்திருக்க வேண்டும்.

>குறிப்பிட்ட தொழில் தொடர்பான புதிய செய்திகளை, தொழில் நுட்பங்களை அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

> ஒரு தொழிலிலும் ஒரு புதிய நுட்பத்தைப் பயன்படுத்துவது, தரத்தை உயர்த்தும் என்றால் அதனை பயன்படுத்த தயங்கக் கூடாது. அதற்கேற்ற புதிய எந்திரங்களை வாங்கி நிறுவி விட வேண்டும்.

>காலத்திற்கேற்ற உத்திகளை வடிவ மைத்து பயன்படுத்த வேண்டும்.


சாம் வால்டன்
Sam Walton


அமெரிக்க தொழிலதிபர். வால்மார்ட் நிறுவனர்.

> தீர்க்க முடியாத சிக்கல் என்று எதையும் நினைக்க வேண்டியது இல்லை. மேல்பார்வைக்குத் தீவிரமாகத் தோன்றுகிற சாவால்களைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். வென்றால் மகிழ்ச்சி; தோல்வி அடைந்தால் அனுபவம். இரண்டுமே விலை மதிக்க முடியாத சொத்துக்கள்!

> வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும், ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பெரிய வெற்றிகளை பெறமுடியும்.

> ஒரு நல்ல சிந்தனையை மீண்டும் மீண்டும் உரசிப் பார்த்து, அது சரியாக வரும் என்ற முடிவுக்கு வந்து விட்டால் உடனே செயல்படுத்துங்கள்.

> நாம் நம்முடைய பழைய வெற்றிகளில் மனநிறைவு அடைந்து விட்டால் நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்து விட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகுவதே நம்மை மேலும் உற்சாகம் உள்ளவர் களாகவும், புதிய வெற்றிகளை அடைபவர் களாகவும் செய்யும்.

> தனிப்பட்ட முறையிலும், தொழிலிலும் சிக்கனம் என்பது முதன்மையானது. நாம் சேமிக்கிற ஒவ்வொரு துளியும், தவிர்க்கிற ஒவ்வொரு தேவையற்ற செலவும் நமது லாபத்தை அதிகரிக்கும்.

> பணமும், வெற்றியும் நமக்கு கிடைக் கும் போது, அதோடு சேர்ந்து வருவது மற்ற சிலரின் பொறாமை. நம்மைப்போல் வெற்றியடைய முடியாதவர்கள், அந்த இயலாமையில் நம்மைப் பற்றி பல விதமாக பேசுவார்கள். நமது முன்னேற்றத்திற்கு தடைபோட முயல்வார்கள். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், நமது வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும்.

> வணிகத் துறையில் பெரியதாக வெற்றி பெற வேண்டுமென்றால், நாம் நம்முடைய லாபத்துக்காக மட்டும் உழைக்கக் கூடாது. நமது வாடிக்கையாளர்களுடைய லாபத்துக் காகவும் உழைக்க வேண்டும்.


டோனால்ட் டிரம்ப்
(Donald Trump)


அமெரிக்க தொழிலதிபர். எழுத்தாளர். தலைவர், டிரம்ப் ஆர்கனைசேஜன். அமெரிக்க குடியரசுத் தலைவர்.

>நீங்கள் பணத்திற்காக மட்டும் என்று உங்கள் வேலையை செய்ய வேண்டாம்.

>தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

> குறிக்கோளை உயர்வாக வையுங்கள்.

>ஒரு போதும் நீங்கள் செய்யும் செயலில் இருந்து பின்வாங்காதீர்கள்.

> உங்கள் துறை சார்ந்த கூடுதலான செய்திகளை அறிந்து வைத்து இருங்கள்.

> உங்களுக்கு விருப்பமான செயலில் சிக்கல்கள் இருந்தாலும் அதிலேயே கவனத்தை செலுத்துங்கள்.

> திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.


தொகுப்பு: சந்தோஷ்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]