Latest Posts

உணர்வுகளையும், ஆற்றலையும் ஒன்று படுத்தும் தேநீர்

- Advertisement -

 

உலகம் முழுதும் பயிரிடப்படும் தேயிலையின் மூலம் பர்மா மற்றும் சீனத்தின் தென் மேற்கு மாகாணம் என அறியப்படுகிறது தேயிலை, ‘தீயேசியே’ (Theaceae) குடும்பதைச் சேர்ந்த குற்றுச் செடி ஆகும். குட்டையாக இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும். ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண் வளம் சிறப்பாக உள்ள மலைச்சரிவுகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

Also read: உடற்பயிற்சி மனதை சீராக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும்!

இன்று, இந்தியாவின் பானத் தேர்வு இன்னும் மசாலா சாயாகவே இருக்கிறது.  இன்னும் பெரும்பாலான மக்கள் பிரீமியம் தேநீர் கலவைகளைத் தேர்வு செய்கிறார்கள்.

சிறந்த சுவைக்கு மூன்று இலைகளும், ஒரு இலை மொக்கும் உள்ள ‘ஃப்ளஷ்’ (Flush) எனப்படும் செடியின் மேற்பகுதியில் வளரும் இலைகள் மட்டுமே பறிக்கப்படும். தேயிலை வகைகளில் சீனா மற்றும் இந்திய அசாம் தேயிலை என இரண்டு வகைகளே பயிரிடப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தேயிலை தற்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.

உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், நுகர்வு நாடாகவும் இந்தியா விளங்குகிறது..

இந்தியாவின் மாகைபரி தோட்டத்தின் தேயிலை ஒரு கிலோவுக்கு டாலர் 1,850 என்ற அளவில் விற்கப்படுகிறது. இம்பீரியல் தேநீர் உலகின் மிக விலையுயர்ந்த தேயிலைகளில் ஒன்றாகும். டார்ஜிலிங்கில் இருந்து வரும் ஓலாங் தேநீர் தேயிலைகள் பறிக்கும் பருவத்தில் பௌர்ணமி நாட்கள் மற்றும் இரவுகளில் மட்டுமே பறிக்கப்படுகிறது.

மாம்பழம் மற்றும் புதினா கலந்த பச்சை தேயிலை முதல் மல்லிகை கலந்த வெள்ளை தேநீர் வரை கலவைகள் உள்ளன.

Also read: மகிழ்ச்சி அதிகரிக்கும், இவற்றைப் பின்பற்றினால்!

இன்று, இந்தியர்களுக்கு [மற்ற நாடுகளைப் போலவே] ஒரே மாதிரியான தேநீர் மற்றும் வேறு பலசுவைகளிலும் கிடைக்கின்றன.

ஒரு பிரீமியம் தேநீர் மற்றும் ஒரே கலவை அல்லது சுவை கொண்ட வழக்கமான ஒன்றுக்கு இடையேயான வேறுபாடு அதிகம். மேலும் தேநீர் குடிப்பவர்கள் தேர்வு செய்வதற்கு முன்பு பல காரணிகளைக் கருதுகின்றனர்.

தேயிலை மீதான காதல் இளைஞர் களிடையே அதிகரித்து வருகிறது. இந்திய தேயிலை வாரியத்தின் கூற்றுப்படி, 80 சதவீத இந்தியர்கள் தங்கள் பால் தேநீரை சர்க்கரையுடன் விரும்புகிறார்கள் என்றாலும், சர்க்கரை இல்லாமல் பால் அல்லாத தேநீர் நுகர்வும் அதிகரித்து வருகிறது.  அமெரிக்காவில், காப்பி தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேநீர்தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

அசாம் தேநீர் பெரும்பாலும் வட இந்தியாவில் உட்கொள்ளப்பட்டாலும், நீலகிரி தேநீர் இந்தியாவின் தெற்குப் பகுதியில் விரும்பப்படுகிறது. ஆனால் டார்ஜிலிங் தேநீர் தான் பெருமைக்குரிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளது. டார்ஜிலிங் தேயிலை சீனாவிலிருந்து வந்திருந்தாலும், இந்திய வடகிழக்கு நிலப்பரப்பு மற்றும் காலநிலை டார்ஜிலிங் தேயிலைக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது.  டார்ஜிலிங்கில் பயிரிடப்படும் தேயிலையானது இயற்கை உரம் கொண்டு பயிரடப்படுகிறது.

இந்தியாவே பல கப்கள் தேநீரால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Also read: ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நடைமுறைகள்

தங்களின் எல்லா உணர்வுகளும் ஆற்றலும் ஒன்று கூட தேநீரை அருந்துவது பயன் அளிக்கிறது என்கிறார்கள் தேநீர் விரும்பிகள். கொரோனா ஊரடங்கின்போது தனியாக தங்கி இருந்தவர்கள் அதிகம் தவித்துப் போனது தேநீருக்காகத்தான். தேநீர் கடைகள் திறப்புக்குப் பின்னரே அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

– த. செந்தமிழ்ச் செல்வன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news