கல்வி என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாகும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச கல்வி அளிப்பது அரசின் கடமையாகும். ஆகவே, ஒரு கல்வி நிறுவனம் அதனுடைய மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு முந்தைய சேவை வரி சட்டத்தில் அறிவிப்பு எண்: ST-25/2012 நாள்: 20-06-2012 படி விலக்கு அளிக்கப்பட்டது.
வரி விலக்கு அளிக்கப்பட்ட சேவைகள்:
கல்வி நிறுவனங்களுக்கு பிறரால் வழங்கப்படும் சேவைகளுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கு 01-04-2014 முதல் மாற்றி அமைக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி (அ) அதற்கு சமமான பள்ளிகளுக்கு கீழ்க்கண்ட சேவைகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது.
- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் போக்குவரத்து வசதி.
- உணவு வழங்குதல், மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டம் ஆகியவைகளுக்கு வழங்கப்படும் சேவை.
- கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சேவை.
- கல்வி நிறுவனத்தில் செய்யப்படும் துப்புரவு சேவை.
- கல்வி நிறுவனத்தில் செய்யப்படும் மிட்டு பராமரிப்பு சேவை.
- பள்ளியில் சேரும் மாணவர்களுக்கான சேர்க்கை, மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல் போன்ற சேவைகள்.
Also read: புதிய ஜி.எஸ்.டி படிவங்களை பற்றிய ஒரு அறிமுகம்
மேலே குறிப்பிடப்பட்டுள் சேவைகள் தவிர, வேறு எந்த சேவையும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால் அவை வரிக்கு உட்பட்ட சேவையாகும். இந்த சேவைகளுக்கு ஜிஎஸ்டி அறிவிப்பு எண்: 12/2017(வ.எண் 66)/28-06-2017 படி ஜிஎஸ்டி சட்டத்திலும் வரிவிலக்கு உண்டு.
கல்வி என்றால் என்ன?
சிஜிஎஸ்டி சட்டத்தில் கல்வி என்பதற்கான விளக்கம் எங்கும் குறிப்பிடப் படவில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் லோகோ ஷிக்ஷனா டிரஸ்ட் எதில் சிஐடி என்ற வழக்கில் கல்வி என்பதற்கான விளக்கத்தை கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
மாணவர்களின் அறிவு திறன் மற்றும் தன்மை ஆகியவற்றை பயிற்றுவித்தல் மற்றும் வளர்த்தல் இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுகிறது.
கல்வியை ஒரு சேவையாக மட்டுமே வழங்கும் பள்ளிகளால் வசூலிக்கும் கட்டணத்திற்கு வரி செலுத்த வேண்டியது இல்லை. இத்தகைய பள்ளிகள் ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவும் செய்ய தேவை இல்லை.
சில கல்வி நிறுவனங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகம், காலணிகள் மற்றும் சீருடைகள் வழங்கும் சேவைகளையும் செய்கின்றன. இந்த சேவைகள் கல்விச் சேவையாக கருதப் படாததால், இந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். புத்தகங்களை வழங்குவதற்கு மட்டும் ஜிஎஸ்டி சட்டத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
கல்வி சேவைகளின் வகைப்பாடு:
கல்வி சேவைகள் 9992 என்ற தலைப்பில் அறிவிப்பு எண்: 11/2017/28-06-2017 படி கீழ்க்கண்டவாறு வரிவிதிக்கப்படுகிறது.
கல்வி சேவைகள் வரிசை எண் 30படி 18% வரி (9% மத்திய வரி + 9% மாநில வரி)
தொழில்நுட்ப உதவிகள், கல்வி, மறுவாழ்வு, தொழில் பயிற்சி மற்றும் பார்வையற்றோரின் வேலை வாய்ப்புக்கான பிரெய்ல் தட்டச்சு பொறி, பிரெய்ல் கடிகாரம் கற்பிக்கும் மற்றும் கற்பதற்கான சாதனங்கள், தொழில் உதவிக்கான பிரெய்ல் கருவிகள் காகிதம் போன்றவை 5% வரிசை எண்: 257
மத்திய அரசு வழிகாட்டுதல் படி அவர்களின் மாணவர்களுக்கு கல்வி திட்டங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தில் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கு வரி கிடையாது.
- மேலாண்மையில் முதுகலை பட்டயப்படிப்பு, நிர்வாகத்தில் இரண்டு ஆண்டு முழுநேர முதுகலை திட்டத்திற்கு வழங்குதல்
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பாடநெறியில் சேர நடத்தப்படும் சேர்க்கை சோதனை
- நிர்வாகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த திட்டம்
- நிர்வாகத்தில் சக திட்டம்
தனியார் பயிற்சி மையம் மற்றும் தொலைதூரக் கல்வி:
தனியார் பயிற்சி மையம் மற்றும் நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டம் கிடையாது. அதற்காக எந்த தேர்வையும் நடத்தி அதற்கான சான்றிதழ்களை வழங்குவதில்லை. ஆகவே, இந்த சேவைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
Also read: சிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்
தொலைதூரக் கல்வி, பெரும்பாலும் உயர்கல்வி சேவையாக கருதப்படுகிறது. ஆகவே, இதற்கும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
எழுது பொருள்களுக்கு வரி:
சீருடை, எழுதுபொருள் மற்றும் கல்விசாரா பிற பொருள்கள் வழங்கப்பட்டால் அதற்கும் 18% ஜிஎஸ்டி வரி உண்டு. இது தவிர பள்ளிக்கு பிறகான நடவடிக்கைகளுக்காக பிறரால் வழங்கப்படும் இசைக் கருவிகள், கணினிகள் மற்றும் விளையாட்டுப் பொருள்களுக்கும் வரி உண்டு.
யோகா நிகழ்ச்சிகள்:
பயிற்சி திட்டங்கள், முகாம்கள், யோகா நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் வணிக நடவடிக்கையாக கருதப்படுவதால் அவைகளுக்குப் போடும் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி வரி உண்டு.
அறக்கட்டளை:
கல்வி நிறுவனங்கள் நடத்தும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. பொதுவான வரிவிலக்கு தவிர, வருமான வரிச்சட்டம் பிரிவு 12AA இன் கீழ் பட்டியல் இடப்பட்ட தொண்டு நடவடிக்கைகளுக்கு வரி விலக்கு உண்டு.
கிராம புறங்களில் வசிக்கும் ஆதாரவற்றோர் குடியிருக்க இடம் இல்லா குழந்தைகள், உடல்/மனநலம் பாதிக்கப் பட்டோர், ஏழைகள் போன்றவர்களுக்கு கல்வி கற்பித்தலில் ஒரு அறக்கட்டளை ஈடுபட்டால் அந்த கல்வி நிறுவனம் தொண்டு நிறுவனமாக கருதப்படும். இத்தகைய வருமானங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
சேவை பெறுபவரின் இருப்பிடம்:
ஜிஎஸ்டி சட்டம், 2017, பிரிவு 12(7) இன்படி கீழ்க்கண்டவை சேவை வழங்கும் இடமாக கருதப்படும்.
- ஒரு கலாச்சார, கலை, விளையாட்டு, அறிவியல், கல்வி(அ) பொழுதுபோக்கு நிகழ்வின் அமைப்பு தொடர்பான சேவை வழங்கல். ஒரு நிகழ்வு/சேவைகளை ஒழுங்கமைக்க துணை சேவை(அ) அத்தகைய நிகழ்வுகளுக்கு ஆதரவு அளித்தல்( ஸ்பான்சர்ஷிப்).
- பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு, அத்தகைய நபரின் இருப்பிடம்
- பதிவு செய்யப்பட்ட நபரை தவிர வேறு ஒருவருக்கு உண்மையில் நிகழ்வு நடைபெறும் இடம்.
Also read: அச்சுத் துறையில் மகளிருக்காக பொறியியல் பட்டப்படிப்பு
கல்வி நிறுவனங்களுக்கு வெளியீட்டு சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். இந்த நிறுவனங்கள் அவர்கள் செலுத்தும் எந்த உள்ளீட்டு வரிக்கும் வரவு பெற முடியாது.
கல்விச் சேவை கூட்டு வழங்கலா?
போர்டிங் பள்ளிகள் அதில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கல்விச் சேவையோடு அவர்கள் தங்க குடியிருப்பு, உணவு ஆகியவற்றை சேர்த்து வழங்குகின்றன. ஆகவே, இது கல்வியும் பிற சேவைகளும் பிரிக்கப்பட முடியாத ஒரு சேவையாகும். இத்தகைய சேவைகளுக்கு பிரிவு2 (30) இல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கையின் அடிப்படையில் வரி விதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
சிஜிஎஸ்டி சட்டம், 2017 பிரிவு8- இன் படி இதுபோன்ற சேவைகள் உறைவிடப் பள்ளிகள் இயற்கையாக தொகுக்கப்பட்டு சாதாரணமாக வழங்கப்படுகின்றன. இதில் முக்கிய சேவை கல்வியாகும். கல்வியை வழங்குவதற்கான அதோடு இணைத்து பிற சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே, பிற சேவை வழங்கல் வரி பொறுப்பை நிர்ணயிக்க கருதப்படாது. ஆகவே, முழு சேவைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
முடிவுரை:
இந்தியாவில் உள்ள குழந்தைகள் அனைவரும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற நோக்கில் பெரும்பாலான கல்வி சேவைகளுக்கு ஜிஎஸ்டி சட்டம் வரிவிலக்கு அளித்து உள்ளது. இதர சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கல்வி அறிவு பெருகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
– சு. செந்தமிழ்ச் செல்வன்