Latest Posts

வாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு

- Advertisement -

வாழை மேம்பாட்டிற்காக 1993-ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Centre for Banana) திருச்சியில் நிறுவப்பட்டது.


இங்கு வாழை வகைகள் மேம்பாடு, வாழை உற்பத்தியை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய வாழை நிர்வாகம், வாழை பாதுகாப்பு என்பவை போன்ற அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.


ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மைப் பணிகள்:
வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.


வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும், உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும் செயல்படுகிறது.


பழங்கால மற்றும் உயிரி தொழில் நுட்ப முறைகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட வகைகளை உருவாக்குதல்.


இடம் சார்ந்த வகைகள் மற்றும் அவற்றில் ஏற்படும் சிக்கலைகளைக் களையவும் ஆன ஆராய்ச்சிகளையும் செய்கிறது.


வாழையை பயிரிடுவதற்கு ஏற்ப நிலத்தை தயார் செய்தல்,, வாழை பயிரிடும் முறை குறித்த செய்தகளைத் தருதல், அதிக லாபம் தரும் வாழை வகைகளை தேர்தெடுக்கும் வழிமுறைகள், தரமான வாழைக் கன்றுகளை தேர்ந்தெடுதல், வாழையை நோய்களிடம் இருந்து பாதுகாத்தலி, தரமான வாழைப் பழங்களை உற்பத்தி செய்வதற்கான நுட்பங்கள் தருதில், புயல் போன்ற இயற்கை சீற்றகளில் இருந்து வாழையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கற்பித்தல், நீர்ப் பாசன முறைகளைக் கற்பித்தல், ஒவ்வொரு மாதமும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கூறுதல், உரமிடுதல், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் உற்பத்தி, இலாபம் ஈட்டும் சந்தை வாய்ப்புகள், அறுவடைக்குக் பிந்தைய வாழை நிர்வாகம், அறுவடைக்கு பின்னர் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் முறைகள், மேம்பட்ட சேமிப்பு வசதிகள், போன்ற வாழை தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது.


வாழை தொடர்பான பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. வாழையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்தல், அறுவடைக்குப் பின்னர் பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட வாழை உற்பத்தி , தரமான வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்யும் முறைகள் போன்றவற்றின் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சார்ந்த பயிற்சிகள் –

  • வாழைப்பழ சாற்றை தெளிவுபடுத்துதல்
  • தண்டில் இருந்து சாறு
  • வாழை மாவு தயாரித்தல்
  • வாழைக்காய் சிப்ஸ்
  • வாழைப்பழ சிப்ஸ்
  • வாழைப்பழ கூழ்
  • வாழைப்பழ சாறு
  • வாழைப்பழ பார்
  • வாழைப்பழ பிஸ்கட்
  • வாழை ஜெல்லி
  • வாழைப்பழ ஜாம், ஊறுகாய்
  • வாழை நார் கழிவில் இருந்து மண்புழு உரம்
  • வாழைபட்டையில் இருந்து வாழைநார் பிரித்தெடுத்தல் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல்.


ஏற்றுமதிக்கான பழங்களைக் கையாளுதல், சேமித்துவைத்தல், பழுக்க வைத்தல், பேக்கேஜிங் செய்தல்.


இந்த மையம் திருச்சிக்கு அருகே சோமரசம்பட்டி – தோகைமலை சாலையில் உள்ள தாயனூரில் உள்ளது. இணைய முகவரி – ஸீக்ஷீநீதீ.க்ஷீமீs.வீஸீ

-சந்தோஷ்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news