Latest Posts

உள்ளீட்டு வரி வரவை மேலும் ஈட்ட..

- Advertisement -

பெரும்பாலான சரக்கு சேவைவரி (GST) வல்லுநர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உள்ளீட்டு வரிவரவு (Input TaxCredit(ITC)) மறு ஒத்திசைவை (Reconciliation) செய்யாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஐ.டி.சி மறு ஒத்திசைவை செய்வது மிகவும் அதிக காலஅவகாசம் எடுத்து கொள்ளும் என்பதும் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டணங்கள் போதுமானதாக இருக்காது. மேலும், வாடிக்கையாளர்களின் பரிமாற்றங்கள் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் செய்ய வேண்டிய வேறு சில மறு ஒத்திசைவுகள் போன்ற பல்வேறு பணிச்சுமைகள் மிகவும் அதிகமாக இருக்கும்போது இந்த உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசைவை செய்வதற்காக அவர்கள் அதிக ஆற்றல் செலவிடவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது.

இருப்பினும், உள்ளீட்டு வரிவரவை மறு ஒத்திசைவை செய்யாமல் விடுவது வாடிக்கை யாளர்களை மோசமாக பாதிக்கலாம். மேலும் வாடிக்கையாளருக் கான உள்ளீட்டு வரிவரவு இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகும். அதுமட்டுமல்லாது ஜிஎஸ்டிஆர் 2 ஏ இல் காட்டப்பட்டுள்ளதை விட அதிகமான வரவு இருப்பதன் காரணமாக சசேவ துறையிலிருந்து இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பைப் பெறுவதற்கான சூழலும் உருவாகும். அதைவிட இயல்புநிலை வழங்குநர்களுக்கு முழுமையாக தொகை செலுத்த தவறுதல். இயல்புநிலையில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை இழத்தல், அதிகப் படியான வரவு மீள்திருத்த உரிமை கோருதலால் வாடிக்கையாளருக்கான கூடுதல் வட்டி செலவு ஆகியவற்றிற் கான வழிவகுக்கின்றது. உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசைவு என்பது சசேவ இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்து வோரின் கொள்முதல் விவரங் களுடன் பொருளை அல்லது சேவையை வழங்கியோர் பதிவேற்றிய விவரங்களுடன் பொருத்தமாக இருக்கின்றதா என சரிபார்ப்பதற்கான ஒரு செயல்முறையாகும். பொதுவாக, பொருளை அல்லது சேவையை வழங்குபவர் தனது ஜிஎஸ்டிஆர் 1 இல் பதிவேற்றிய அத்தகைய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் ஜிஎஸ்டிஆர் 2 ஏவில் எதிரொளிக்கும். பொருளை அல்லது சேவையை வழங்குபவர் பதிவேற்றிய விவரங்களில் விலைப்பட்டியல் மட்டு மல்லாது பற்று குறிப்புகள், வரவு குறிப்புகள் மற்றும் எந்தவொரு ஆவணத்திற்கும் செய்யப்பட்ட திருத்தங் களும் அதில் உள்ளடங்கும்.

பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்து வோரால் இவ்வாறான உள்ளீட்டு வரிவரவு மறுஒத்திசைவிற்காக ஜிஎஸ்டிஆர் 2 ஏ உடன் ஒப்பிடுகையில் எந்தெந்த பதிவுகள் பொருந்துகின்றன, எவை பொருந்த வில்லை ஆகிய விவரங்களை இதன் மூலம் எளிதாக அடையாளம் காண முடியும். இவ்வாறான உள்ளீட்டு வரிவரவு மறு ஒத்திசைவின் மேற்கொள்வதால் ஆலோசனைக்கான வாடிக்கையாளர் சார்பு அதிகரித்தல் வாடிக்கையாளர் நம்பிக்கை அதிகரித்து வரிவரவை பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் வரிசெலுத்துதலைச் சேமித்தல் உள்ளீட்டு வரிவரவு இழப்பைத் தவிர்த்தல்.

மேலும், மறுஒத்திசைவின் போது அடையாளம் காணப்பட்ட முரண்பாடுகள் குறித்து மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான நடவடிக்கையினால் மிகவும் துல்லியமான உள்ளீட்டு வரிவரவை பெற்று செலவைப் குறைப்பதற்கு வழிவகுக்கும் அதன் வாயிலாக வாடிக்கையாளருக்கு செலவிலிருந்து சேமிப்பு உருவாகும்.

பொதுவாக, ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ, கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டும் வழக்கமாக மாதாந்திர அடிப்படையில் மறு ஒத்திசைவு செய்யப்படும். இருப்பினும், பதிவுசெய்யப்பட்ட அனைத்து வரி செலுத்துவோருக்கும் இது சாத்தியமில்லை. இதுபோன்ற தருணங்களில், ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ, கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டையும் ஆண்டு மறு ஒத்திசைவு செய்வது மிக அவசியமாகும். மேலும், இவ்வாறு மறு ஒத்திசைவு செய்யப்பட வேண்டிய செயலை அந்த நிதியாண்டைத் தொடர்ந்து அடுத்துவரும் செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர ஜி.எஸ்.டி ஆண்டு அறிக்கையை சமர்ப்பிதற்கு முன் செய்யப்பட வேண்டும். சான்றக 2018-19 நிதியாண்டில், செப்டம்பர் 2019 மாதத்தில் ஜிஎஸ்டி ஆண்டுஅறிக்கையை சமர்பிப் பதற்கு முன் வருடாந்திர மறுஒத்திசைவு செய்யப்படவேண்டும். அவ்வாறான, கொள்முதல் தரவுகளுடன் ஜிஎஸ்டிஆர் 2 ஏ-வை மறுஒத்திசைவு செய்யும்போது, பின்வரும் நான்கு வகை முடிவுகளைப் பெறலாம்.

பொருந்திய விலைப்பட்டியல்கள்- இவை ஜிஎஸ்டிஆர் 2 ஏ, கொள்முதல் தரவு ஆகிய இரண்டிலும் ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடியதாக அமைகின்றன. அத்தகைய அனைத்து பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளீட்டு வரிவரவு ஒரே மாதிரியாக கிடைக்கின்றது.

பொருந்தாத விலைப்பட்டியல்கள்- இவை ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ, கொள்முதல் தரவுகள் ஆகிய இரண்டிலும் விலைப் பட்டியல்கள் உள்ளன. ஆனால், இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட விலைப் பட்டியலின் விவரங்களில் முரண்பாடு களுடன் உள்ளன. விலைப் பட்டியல் மதிப்பு, விலைப்பட்டியல் தேதி, வரி தொகை, விலைப்பட்டியலின் எண் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த முரண்பாடுகள் இருக்கலாம். பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் அத்தகைய முரண்பாடுகளை இதை வழங்கு பவருக்கு அறிவிப்பார், உடன் வழங்கு பவர்கள் அந்த விவரங்களை திருத்திடு வார்கள்.

அத்தகைய விவரங்கள் திருத்தப் பட்டதும், புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்து வோரின் ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ-யில் தோன்றும். அதன்பிறகு, வரிவரவு கோரப் படும். வழங்கப்படும் இடம், வழங்கல் தேதி போன்ற திருத்த முடியாத ஒருசில பிழைகள் அடையாளம் காணப்படும். இந்த நேரங்களில், ஆவணம் நிராகரிக்கப்பட வேண்டும். மேலும், புதிய ஆவணம் வழங்கு பவரால் புதுப்பிக்கப்பட வேண்டும். GSTR 2A இல் இல்லாதவை கொள்முதல் தரவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஒருசில விலைப் பட்டியல்கள் இருக்கலாம். ஆனால், GSTR 2A இல் காணப்படவில்லை எனில் வழங்குபர் தனது அறிக்கையை சமர்பிக்காத காரணத் தால் இருக்கலாம். இதுபோன்ற நேரங்களில், பதிவுசெய்யப் பட்ட வரி செலுத்துவோர் காணாமல் போன விலைப் பட்டியலில் உள்ளீட்டு வரிவரவை பெறுவது கடினமாகும். இதுபோன்ற நேரங்களில், பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் வழங்குபவரைத் தொடர்பு கொண்டு அதற்கு ஏற்ப சரியான விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.

கொள்முதல் தரவில் இல்லாதவை-ஜி.எஸ்.டி.ஆர் 2 ஏ-யில் புதுப்பிக்கப்பட்ட ஒருசில விலைப் பட்டியல்கள் இருக்கலாம். ஆனால், கொள்முதல் தரவுகளில் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான விலைப் பட்டியல் பெறவில்லை அல்லது கொள்முதல் தரவில் புதுப்பிப்பதை தவற விட்டு இருக்கலாம். அத்தகைய விலைப் பட்டியல்கள் கொள்முதல் பதிவில் சேர்க்கப் படவேண்டும். மேலும், அது தகுதி உடையதாக இருந்தால் உள்ளீட்டு வரிவரவைப் பெறலாம். சான்றாக, வணிக பயணங்களுக்காக ஊழியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான விலைப்பட்டியலில் ஜிஎஸ்டியில் பொதுவாக கொடுக்கப்பட்ட ஜிஎஸ்டி எண்ணின் படி, புதுப்பிக்க வேண்டும். வரி வல்லுநர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால் களிலும், உள்ளீட்டு வரிவரவு செய்வது முக்கியமாகும். பொதுவாக, அதிக பணிச்சுமையைக் கையாள வழக்கமாக மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்து கிறோம். ஆனால், இதில் அதிக அளவு சம்பாதிக்க வாய்ப்பு இருந்தால் எந்த வகையான மென்பொருள் கருவியைப் பயன்படுத்துகின்ற ஒருசில கருவிகள் சந்தையில் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை உள்ளீட்டு வரிவரவு செய்ய உதவும் மேசைக்கணினி கருவிகள் ஆகும். இருப்பினும், அத்தகைய மென் பொருள் கருவிகள் நம்மை அடிப்படை நல்லிணக்கத்திற்கு மட்டுமே கட்டுப் படுத்துகின்றன. அங்கு அவை பொருந்திய பதிவுகளை மட்டுமே அடையாளம் காண உதவுகின்றன. ஆனால், பொருந்தாத மற்றும் காணாமல் போன பதிவுகளை கையாளு வதற்காக GSTHero என்பது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட GST Suvidha வழங்குநராகும். மேலும், இது ஒரு மேம்பட்ட உள்ளீட்டு வரிவரவு நல்லிணக்க சிறப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு மென்மையான பொறிமுறையுடன் கூடிய மேககணினி அடிப்படையிலான பல பயனர் மென்பொருளாகும். இது வாடிக்கையாளர் களுக்கு உள்ளீட்டு வரி வரவைக் கையாளுவதற்காக ஒரு தானியங்கி கருவியை வழங்குகின்றது.

– முனைவர். ச. குப்பன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news