Latest Posts

அச்சுத் துறையில் மகளிருக்காக பொறியியல் பட்டப்படிப்பு

- Advertisement -

வேலை வாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளுக்கு அடுத்தபடியாக உள்ளது, அச்சுத் துறையாகும். இது எழுதப் படிக்கத் தெரிந்த, எந்த நிலையிலும் உள்ள எந்த ஒரு மக்களாலும் தவிர்க்க முடியாத துறையாகும். காரணம் மனித அறிவுடன் நேரடியாகத் தொடர்புடையது, இந்தத் துறை.


இப்படிப்பட்ட சிறப்புடைய இந்தத் துறை நவீன அறிவியல், தொழில்நுட்பம், கணினி வளர்ச்சியால் மிக வேகமாகவும், நிலையாகவும் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு வளர்ந்து வருவது இந்தத் துறையின் சிறப்புகளுள் ஒன்றாகும்.


இன்று அச்சுத்துறையில் வேலை வாய்ப்பு என்பதும், சுயதொழில் வாய்ப்பு என்பதும் அதிகமாக இருக்கிறது.
தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியால் இன்று அச்சுத் துறையில் படித்தவர்களுக்கு தேவையும் அதிகமாகி வருகிறது.

அதற்குத் தகுந்தாற் போல அச்சுத்துறை சார்ந்த படிப்புகள் பல நிலைகளில் சொல்லிக் கொடுக்க கல்வி நிலையங்களும் முயற்சித்து வருகின்றன.


+2 முடித்த, அல்லது டிப்ளமா முடித்த மாணவியருக்கு அச்சுத் துறையில் பொறியியல் பட்டம் பெற அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது. கோவை அவிநாசிலிங்கம் மகளிர் உயர்கல்விப் பயிலகத்தில் (பல்கலைக் கழகம்) National Board of Accreditation (NBA)யால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அச்சுத் துறைக்கான இளம் பொறியியல் பட்டப்படிப்பு (BE Printing Technology) பெண்களுக்காக நடத்தப்படுகிறது.


இந்தியாவிலேயே பெண்களுக்காக இளம் பொறியியல் பட்டப் படிப்பு நடத்து ஒரே பயிலகம் இது என்பது குறிப்பிடத் தக்கதாகும். (அச்சுத்துறைப் பயிற்சி படிப்பு கள் நடத்தும் மற்ற கல்வியகங்களில் மாண வர்க்காக மட்டும் அல்லது இரு பாலருக் குமாகவே நடத்தப்படுகின்றன)


இந்தப் பல்கலைக் கழக முதன்மைப் பகுதியிலேயே சாரதாலயா அச்சகம் என்ற பெயரில் அச்சகமும் நடத்தப்படுகிறது. இத னால் மாணவியருக்கு அனைத்துப் பகுதிக ளிலும் நேரடி செயல்முறைப் பயிற்சியும் கிடைக்கிறது. அது தவிர தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பெரிய அச்சகங் களுக்கும் மாணவியர் அழைத்துச் செல்லப் பட்டு செயல்விளக்கம் தரப்படுகின்றனர்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் அச்சுத்துறைக் கண்காட்சிக ளுக்கும் மாணவியர் அழைத்துச் செல்லப் படுவதால் துறையில் அறிமுகப் படுத்தப் படும் புதிய கருவிகள், எந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய இற்றைப்படுத்த லும் இவர்களுக்குக் கிடைக்கிறது.


பல்கலைக் கழகத்தின் ஆசிரியையர் மட்டுமல்லாது, அச்சுத் துறையில் பட்டறிவு மிக்க அச்சகத்தினரையும் நேரில் வரவ ழைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


உயர்கல்வித் துறை அறிவித்துள்ள கட்டணம் மட்டுமே வாங்கப்படுகிறது. நன் கொடை உள்ளிட்ட வேறு எந்தவொரு வகையிலும் பணம் வாங்கப்படுவது இல்லை. சிறந்த மாணவியருக்கு, அனைத்திந்திய அச்சகதாரர் பேரவை (All India Federation of Master Printers (AIFMP) மூலமாக ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.


பொதுவாகக் கருதப்படுவதைப் போல, மாணவியருக்கு இங்கு வழங்கப்படும் கல்வி, அச்சகங்களில் வெறும் எந்திரங்களை இயக்குவதற்கான படிப்பு மட்டும் அல்ல. மாறாக அவர்களுக்குப் பல்வேறு மேலாண்மைத் திறன்களுடனேயே கல்வி வழங்கப்படுகிறது.


இதுவரையிலும் இங்கு படித்துள்ள மாணவியர் அனைவரும் நல்ல நிறுவனங் களில் பணி வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
வெளியூர் மாணவியர் தங்கிப் படிப்ப தற்காக, அழகிய எழில் சூழ்ந்த மலையடி வாரத்தில், தூய்மையான சுற்றுச்சூழல் நிலவும் இடத்தில், பாதுகாப்பான தங்கும் விடுதி வசதியும் உள்ளது.


அச்சக நண்பர்களின் குடும்பத்துப் பெண் குழந்தைகளுக்கு துறை சார்ந்த உயர்கல்வி பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

-முனைவர். டிகேஎஸ். லட்சுமிபிரியா, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், அச்சுத் தொழில்நுட்பத் துறை, அவிநாசிலிங்கம் மகளிர் உயர்கல்விப் பயிலகம், கோவை – 641 108 (பேசி:99401 63309)

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news