வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

0

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை “Prevention” என்ற அமெரிக்க இதழ் பட்டியல் இட்டு உள்ளது.

அதில் வலுவான கால் தசைகள் முதலாவதாக குறிப்பிப்பட்டு உள்ளது. நலமான வாழ்க்கைக்கு வலுவான கால்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் இரண்டு வாரங்களுக்கு உங்கள் கால்களை நகர்த்தாவிட்டால், உங்கள் காலின் வலிமை 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்கிறது இந்த இதழ்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் நடந்த ஓர் ஆய்வில், வயதானவர்களும் இளம் வயதினரும் இரண்டு வாரங்களுக்கு செயலற்று இருந்தால், கால்களின் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு குறையக் கூடும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். நம் கால் தசைகள் பலவீனமடைந்தால், குறிப்பிட்ட காலம் பொருத்தமான உடற்பயிற்சிகள் செய்தால்தான் மீண்டும் வலு அடையும்.

எனவே, நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் மிகவும் இன்றியமையாதவை.நம் முழு உடல் எடையையும் நம் கால்கள்தாம் தாங்கி நிற்கின்றன. கால்கள் என்பவை மனித உடலின் எடையைத் தாங்கும் தூண்கள். ஒரு நபரின் எலும்புகளில் 50 சதவீதமும் தசைகளில் 50 சதவீதமும் இரண்டு கால்களிலும் உள்ளன.மனித உடலின் மிக வலிமையான மூட்டுகளும் எலும்புகளும் கால்களில்தாம் உள்ளன.

“வலுவான எலும்புகள், வலுவான தசைகள், நெகிழ்வான மூட்டுகள் – உறுதியான முக்கோணத்தை உருவாக்குகின்றன. ஒருவரது வாழ்க்கையில் 70% மனித செயல்பாடுகளும் 70% ஆற்றலை எரிப்பதும் இரண்டு கால்களால் மட்டுமே செய்யப்படுகின்றன.

இது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய தொடைகள் ஒரு சிறிய காரைத் தூக்க போதுமான வலுவைப் கொண்டு உள்ளன!

பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்தத்தின் மின்னோட்டம் சீராக ஓடுகிறது. எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக வலுவான இதயம் இருக்கும்.மனித உடலின் வயது மூப்பு கால்களிலிருந்து மேல்நோக்கி தொடங்குகிறது.

60 வயதிற்குப் பிறகும் கால்களுக்கு உரிய பயிற்சிகள் எடுப்பது என்பது ஒருபோதும் தாமதமாகாது. நம் கால்களுக்கும் படிப்படியாக காலப்போக்கில் வயது மூப்பு ஏற்படும் என்றாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணியாகும்.கால்களை வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதாவதைத் தடுக்க முடியும். கால்கள் போதுமான உடற்பயிற்சியைப் பெறுவதை உறுதி செய்யவும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாகவும் நெகிழ்வாகவும் இருப்பதை உறுதி செய்யவும் தினமும் குறைந்தது 35-45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

  • குணசேகரன்

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ”கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை இருந்து இருக்கக் கூடும். மேலும் கடன் வாங்கி விட்டால் திரும்பக் கட்டுவது பற்றிய அச்ச உணர்வு அதிகம் இருந்திருக்கலாம். இன்றைக்கும் கூட கடன் வாங்காமல் இருப்பது என்பது கொள்கை அளவில் நல்லதுதான். இப்போதும் கூட வீட்டுச் செலவுக்கு என்று கடன் வாங்குவது அத்தனை வரவேற்கத்தகுந்த செயல் அல்ல.

ஆனால் தொழில் என்று வரும்போது இந்தக் கருத்துக்கு அங்கே இடம் இல்லை. தொழில் வளரவளர அதில் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைய எண்ணுபவர்கள் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். தேடித்தேடிப் பார்த்தாலும் இன்று உலகில் கடன் வாங்காத தொழில் நிறுவனங்களே கிடையாது. தொன்னுற்று ஒன்பது விழுக்காடு நிறுவனங்கள் கடன் வாங்கித்தான் தங்கள் தொழிலை வளர்க்கின்றன. எனவே கடன் வாங்காமல் யாரும் தொழிலில் வளர முடியாது.

தொழில் தொடங்க நிறைய முதலீடு தேவைப்படுகிறது. அவ்வளவு பணம் யாரிடமும் ரொக்கமாக இருக்காது. தங்களிடம் இருக்கும் சொத்தை பிணையமாக காட்டி தொழிலுக்குத் தேவையான ரொக்கப் பணத்தைப் பெற முடியும் என்கிறபோது அதைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய, சிறிய என்று எந்தத் தொழில்கள் ஆனாலும் அவற்றில் அவர்கள் சொந்தப் பணம் என்பது கால் பங்குதான் இருக்கும்.

எந்த திட்டத்துக்கும் தொடங்குநர் முதலீடு குறைந்த அளவாக இருபத்தைந்து விழுக்காடு வேண்டும். பெரிய திட்டங்களில் இந்த அளவுக்கு தொடங்குநர் முதலீடு இல்லாவிட்டால் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டுத் திரட்டிக் கொண்டு பின்னர் நிதி நிறுவனங்களிடம் கடனுக்குச் செல்கிறார்கள். எனவே தொழிலுக்கு கடன் வாங்குவது தவறு அல்ல. வாங்கிய கடனைத் தவறாகப் பயன்படுத்தினால் அதுதான் தவறு.

ஒரு தொழில் முனைவோர் கடன் பெறுவது குறித்து எப்போது திட்டமிட வேண்டும்? ஒரு தொழில் முனைவோரின் முதல் தேவை என்ன தொழில் செய்யலாம் என்பது குறித்த ஐடியா. அதாவது தொழில் தேர்வு. என்ன தொழில் என்ற ஐடியா வந்தவுடன் அது தொடர்பான திட்டம் இரண்டாவது தேவை ஆகும். தொழில் தொடங்க பணம் மட்டும் போதாது. இன்றைக்கு ஐடியாதான் விலை மதிப்பு இல்லாதது. அடுத்ததாக தொடங்குநர் முதலீட்டுத் தொகை, நிர்வாக அறிவு, பிணையம் கொடுப்பதற்கான சொத்து இவை அனைத்தும் இருந்தால் அதுதான் கடன் பற்றிய முயற்சிகளைத் தொடங்க சரியான நேரம் ஆகும். நல்ல திட்டம் ஆக இருந்தால் எத்தனையோ நிதி நிறுவனங்கள் கடன் வழங்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. வங்கிகள் புதியபுதிய கடன் திட்டங்களையும்

திரு. சுப்புராஜ்

அறிவித்துக் கொண்டு இருக்கின்றன.

கடன் வாங்கித் தொழில் செய்யும் போது வீண் செலவுகள் செய்யக் கூடாது. குறிப்பாக சிறு தொழில் அதிபர்கள் நட்சத்திர ஓட்டல், உடனே கார் என்று தேவையற்ற செலவுகளில் பணத்தைச் செலவழித்து விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது.

பொது முடக்கம் நிறைய தொழில்களை பாதித்து இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர தொழில் முனைவோர் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டிய நேரம் இது. புதிய தொழில்களை தொடங்க திட்டம் இடுவோர் பொது முடக்கத்தில் இருந்து முழுமையான தளர்வுகள் வரும் வரை காத்திருந்து பின்னர்தான் தொடங்க வேண்டும்.

– வி. கே. சுப்புராஜ், ஐஏஎஸ் (மேனாள் இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – TIIC)

 

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI – பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்!

ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய பல்வேறு நுட்பங்களை அனைத்து நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. அம்மாதிரியான பயனுள்ள செயல்பாடுகளில் ஒன்றுதான், சோ ரெய். அதாவது காலை நேரக் கூட்டம். தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இந்தக காலை நேரக் கூட்டத்தை நடந்தத் தவறுவது இல்லை.

ஒவ்வொரு கூட்டத்தின் போதும் நிறுவன வளர்ச்சிக்கு பணியாளர்களின் பங்கு முதல், வாடிக்கையாளர்களுக்கு முழு மனதுடன் செய்ய வேண்டிய சேவை வரை ஏதாவது ஒரு தலைப்பில் முதன்மை அதிகாரிகள் குறுகிய உரை நிகழ்த்துவார்கள். பணியாளர்களுக்கும் இவ்வாறு உரை நிகழ்த்தும் வாய்ப்பும் வழங்கப்படும். அவர்கள் நிறுவனத் தொடர்பான் ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்த பேசச் சொல்வார்கள். இந்த வாய்ப்பை பணியாளர்களுக்கு வழங்குவதன் வாயிலாக அவர்களின் பேச்சாற்றலையும் வளர்க்கிறார்கள்.

பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்கள் காலை ஒன்பது மணிக்கு இயங்கத் தொடங்குகின்றன. வேலை தொடங்கும் நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னதாகக் காலை நேரக் கூட்டம் தொடங்கப்படுகிறது. பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் கூட்டம் முடிந்து விடும்.வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றிய பகிர்வுகள் இந்தக் கூட்டங்களின் முதன்மையாக நடக்கும்.

கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ் வொருவரும் உற்சாகமாக காலை வணக்கம் சொல்ல வேண்டும். பெரிய விற்பனை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் முதலில் படுபவர்கள் விற்பனைப் பிரிவில் உள்ள பெண்கள்தான். அவர்கள் உடுத்தி இருக்கும் உடைகள் கண்ணியமாகவும் நாகரிகமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். தூய்மைக்கு முதன்மையான இடம் தரப்படுகிறது. ஒரு பணியாளர் மற்றொரு பணியாளரின் குறையைச் சுட்டிக் காட்டலாம். இது குற்றம் சாட்டும் வகையில் இல்லாமல் யோசனை சொல்கிற வகையில் அமையும்.

எந்த நிறுவனமாக இருந்தாலும் காலை நேரக் கூட்டம் ஆன சோ ரெய் கட்டாயமான ஒன்று, பல பிரிவுகனாக இயங்கும் நிறுவனங்களில் அந்தந்தப் பிரிவு பணியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்தப் பிரிவுக்குத் தலைமை ஏற்றுள்ள அலுவலர் சிறிது நேரம் உரையாடுவார். அந்த உரை பெரும்பாலும் வேலையைப் பற்றியதாகவே இருக்கும். பொன் மொழிகளும் சொல்லப்படும். நடப்புச் செய்திகளை மேற்கோள் காட்டியும் பேசப்படுவது உண்டு. இதில்எல்லோருமே முழு ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். தொழிலில், பணியில் ஏற்படும் சிக்கல்களையும் சொல்லலாம்.

”காலை நேரக் கூட்டங்களின் மூலம் தகவல் பரிமாற்றம் மேம்படுகிறது பணியாளர்களின் ஒழுக்கம் உயர்கிறது. ஒற்றுமை உணர்வு அதிகரிக்கிறது. குறிக்கோளை எட்டுவதற்காக இணைந்து உழைக்கும் ஆர்வம் கூடுகிறது” என்பது உறுதி ஆகியுள்ளது. நாளொன்றுக்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்களை இப்படிச் செலவு செய்வதன் மூலம் சிறந்த பயனை அடைய முடிகிறது என்கிறார்கள். ஜப்பானியர்களின் அனுபவத்தைப் புரிந்து கொண்ட பிற நாட்டினரும் இது போன்ற கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டு கிறார்கள். தமிழ்நாட்டிலும் சில பெரிய நிறுவனங்களில் சோ ரேய் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

-ஹென்றி

பிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்..! தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்

  1. தொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது?                                                                     உங்களுக்கு உள்ள தொழில் அனுபவம், உங்களிடம் உள்ள முதலீடு, தொழில் செய்யும் ஊர், அங்கு கிடைக்கும் மூலப்பொருள், தொழிலாளர்கள் கிடைப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு தொழிலைத் தேர்ந்து எடுங்கள். இன்றைய காலக் கட்டத்தில் மூலப் பொருள்களை எங்கு இருந்தும் வரவழைக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தொழிலைத் தொடங்கிய பிறகு அத்தொழில் லாபம் ஈட்ட சிறிது காலம் ஆகலாம். தொழிலை நடத்தும் போது சில சிக்கல்கள் வரலாம். அந்த சிக்கல்களை எல்லாம் பொறுமையுடன், திறமையுடன் சமாளித்து தொழிலில் வெற்று பெற முயற்சி செய்யுங்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வதற்கு ஏற்ப இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கு முன் வேறு தொழில்கள் பற்றி சிந்திக்காதீர்கள்.
  2. அனைத்திலும் தரம் இருக்க வேண்டும்                                                                      நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும். ஒரு பொருளைத் தயாரிக்கத் திட்டமிடும் போதே, அதைத் தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்களை தரம் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும். தொடக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் விற்பனை செய்து பயன்படுத்துவோரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கருத்துகளின் அடிப்படையில் தேவைப்படும் மேம்பாடுகளைச் செய்த பின் அதிக அளவில் உற்பத்தியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளும் குறைந்தது பத்து புது வாடிக்கையாளர்களைக் கொண்டு வர வேண்டும்.
  3. திறமையானவர்களைப் பணிக்கு வைத்துக் கொள்ளுங்கள்                                       வெற்றியுடன் தொழில் செய்பவர்கள், திறமையானவர்களைத் தேர்ந்து எடுத்து பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். நீங்கள் அப்படி திறமையானவர்களை பணியில் அமர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். திறமையான தொழிலாளர்கள் முதலில் கிடைப்பது சிரமமாக இருந்தாலும் காலப் போக்கில் கிடைக்கத் தொடங்கி விடுவார்கள். நிர்வாகத் துறையில் படிப்பும், அனுபவமும் உளளவர்கள், விற்பனைத் துறையில் வல்லவர்கள், உற்பத்தி தொடர்பான திறமை வாய்ந்த நண்பர்கள் மற்றும் தொழில்முறை ஆலோசகர்களிடம் ஆலோசனைகளை விரும்பிக் கேட்டு உங்களுக்கு ஏற்றவற்றை மடடும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.   திறமைசாலிகள் உங்கள் தொழிலகத்தில் தொடர்ந்து பணி செய்யும் வகையில் அவர்களுக்கு பொறுப்பு மற்றும் ஊதியங்களை வழங்குங்கள். நல்ல பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்கள் ஒரு நிறுவனத்தின் முதன்மையான சொத்து என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.
  4. தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துங்கள்                                                      பெரும்பாலும் ஒரு தொழிலுக்கு வளர்ந்து முடிந்த நிலை என்று ஒன்று கிடையாது. அது தொடர்ந்து வளர வேண்டும். அப்படி வளராவிட்டால் நாளடைவில் அது நலிந்து போய் இழப்பில் முடியும். ஒரு தொழிலை நடத்திச் செல்வது என்பது இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டிச் செல்வதற்கு ஒப்பானது ஆகும். மூலப் பொருள்களின் விலை, பணியாளர்களின் சம்பளம், வட்டி, தேய்மானம் போன்றவை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், நம் தொழிலும் தொடர்ந்து வளர்ந்தால்தான் இவற்றை ஈடுகட்ட முடியும்.
  5. வாய்ப்புகளை அறியுங்கள்; பயன்படுத்துங்கள்                                                         வாய்ப்புகளை அறிய நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல வாய்ப்புகளைக் கூட தவற விட்டு விட வாய்ப்பு இருக்கிறது. வெற்றி பெறும் மனிதர்களைப் பார்த்தால், அவர்கள் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை எந்த அளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். செய்தித் தாள்களில் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உங்கள் தொழில் சார்ந்த செய்திகளில் கவனம் செலுத்துங்கள். புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். பெருந்தொற்று ஒரு முடிவுக்கு வந்த உடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் உங்கள் தொழில் சார்ந்த பொருட்காட்சிகள், கருத்தரங்குகளில் பங்கு பெறுங்கள்.
  6. நீங்களும் வெற்றி பெறுங்கள்; அவர்களும் வெற்றி பெறட்டும்                                   விளையாட்டில் ஒரு அணி வெற்றி பெற, மற்றொரு அணி தோல்வி பெற வேண்டும். ஆனால் தொழிலில் அனைவரும் வெற்றி பெற முடியும். உங்களுக்கு மூலப் பொருள் விற்பவர்களுக்கும், உதிரி பாகங்கள் செய்து கொடுப்பவர்களுக்கும் உரிய காலத்தில் பணத்தைக் கொடுங்கள். இன்றைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடாதீர்கள். அவர்கள் இடையூறு இல்லாமல் தொழில் செய்யும்போதுதான் தொடர்ந்து உங்களுடன் மகிழ்ச்சியுடன் வணிகம் செய்வார்கள். உங்கள் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் கொடுத்த பணத்துக்கு மதிப்பு உள்ள பொருளைப் பெற்றோம் என்ற மனநிறைவு கொள்ளும் அளவுக்கு உங்கள் பொருளின் தரம் இருக்க வேண்டும். இப்படி எல்லோரும் வெற்றி பெறுகிறார்கள் என்ற நிலை உங்கள் தொழில் வெற்றிக்குத் துணை நிற்கும்.
  7. புதிய பாதைகளையும் சிந்தியுங்கள்                                                                         பிறர் வெற்றி பெற்ற தொழில்களை அவர்கள் போலவே நடத்தி வெற்றி பெறுபவர்கள் நிறையப் பேர். பிறர் சென்று பாதை அமைத்த தொழில்களில் வெற்றி பெறுவதும் ஒப்பீட்டளவில் எளிது. அப்படி இருந்தாலும் அதே தொழில்களில் புதுமையை எற்படுத்துவது வெற்றி வாய்ப்புகளை இன்னும் அதிகரிக்கும். மசாலா பொடிகள் லாலா மசாலா காலத்தில் இருந்தே இருப்பதுதான். ஆனால் சக்தி மசாலாவும், ஆச்சி மசாலாவும் இந்த அளவுக்கு விற்பனை ஆவதற்கு என்ன காரணம்? அவர்கள் கடைப்பிடித்த புதுமையான உத்திகள்தான். வீட்டு பயன்பாட்டு பொருள்கள் விற்பனைக் கடைகள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிக் பசார் நிறுவனத்துக்கே ரோல் மாடலாக அமைந்த சரவணா ஸ்டோர்சின் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு என்ன காரணம்? அது வரை பொருள்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை வேறு எந்த கடைகளும் வழங்கவில்லை. கூடவே வேறு எந்தக் கடையை விடவும் எங்களிடம் விலை குறைவாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்கள். இந்த இரண்டு செயல்பாடுகளும் வாடிக்கையாளர்களை அள்ளிக் கொண்டு வந்து குவித்தன. தங்கள் பிக் பசார் முயற்சிக்கு ரோல் மாடல் சரவணா ஸ்டோர்தான் என்று அதன் நிறுவனர் திரு. கிஷோர் பியானி தான் எழுதிய நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பல தொழில்களிலும் புதுமைகளைப் புகுத்திய முன்னோடிகளையும், அவர்கள் பெற்ற வெற்றியையும் காண முடியும்.
  8. தொழில் செய்ய பணம் மிகத்தேவை                                                          பணத்தை எந்த அளவுக்கு நல்ல முறையில் பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் லாபம் கூடுகிறது. உங்கள் சொந்தப் பணத்தை வைத்து தொழில் செய்வது மிகவும் நல்லது. ஆனால் பெரிய அளவில் ஒரு தொழிலைச் செய்யும்போது, வங்கிக் கடனை பயன்படுத்துவதும் மிகத்தேவை. வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அந்த கடன் தொகையைப் பயன்படுத்தி மூலப் பொருள் வாங்கி, பொருள் உற்பத்தி செய்து விற்று, பணம் பெறுவதை அதிக அளவாக மூன்று மாதங்களுக்குள் முடித்து விட வேண்டும். அப்படி செய்யும்போது வங்கிப் பணத்தை ஒரே ஆண்டில் நான்கு முறை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறைக்கும் 10% லாபம் என்று வைத்துக் கொண்டால் 40% லாபம் கிடைக்கும். இதில் வங்கிக் கடனுக்கான வட்டி 20% என்று வைத்துக் கொண்டால் கூட உங்களுக்கு 20% லாபம் கிடைக்கும். இப்படி உங்கள் தொழிலுக்கு ஏற்ற கணக்கிட்டு தொழிலை நடத்த வேண்டும்.
  9. பாதி தொழிலுக்கு, கால்பங்கு சேமிப்புக்கு, கால்பங்கு சொந்த செலவுக்கு..               ஒரு பொருளின் விலையை நிர்ணயிக்கும்போது அது ஈட்ட வேண்டிய லாபத்தையும், அதே நேரத்தில் சந்தையில் அந்த பொருளின் விலையையும் கருத்தில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். எந்த தொழிலையும் லாபம் இன்றி தொடர்ந்து நடத்த முடியாது. அப்படி வரும் லாபத்தில் பாதியை தொடர் தொழில் வளர்ச்சிக்கும், கால் பாகத்தை சேமிப்புக்கும், கால் பாகத்தை சொந்த செலவுக்கும் என பிரித்து செலவு செய்ய வேண்டும். சேமிப்பையும் நிலம், தங்கம், வங்கி வைப்புகள் என்று பிரித்துப் போட வேண்டும். எதிர் பார்க்கும் லாபத்தை மனதில் வைத்து செலவு செய்யாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வராமல் போய்விடலாம்.
  10. தொடர்ந்து இழப்பு வந்தால்..?                                                                                   துணிச்சல் இன்றி லாபம் இல்லை. துணிச்சலுடன்தான் ஒரு தொழிலில் இறங்குகிறோம். நம் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த தொழில் லாபம் ஈட்டித் தராமல், தொடர்ந்து இழப்பையே தந்து கொண்டு இருந்தால் அந்த தொழிலை மூடி விடுவது நல்லது. ஒரு தொழிலை எப்போது தொடங்க வேண்டும் என்பதைப் போலவே, அதை எப்போது மூட வேண்டும் என்றும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இழப்பை ஏற்படுத்தி வரும் தொழிலை நிறுத்தி விட்டு, மீண்டும் புதிய ஒரு தொழிலில் உங்கள் முயற்சியைத் தொடங்குங்கள். அப்போது உங்கள் தொழில் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.                                                                                                                                                               – கே. கே. இராமசாமி

வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் புதிய தொழில் நுட்பங்கள்!

0

வயல்களை வைத்து இருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் ஒவ்வொன்றாக தீர்வு கண்டு வருகிறது. ஏற்றம் போட்டு நாள் முழுவதும் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த நிலையை மோட்டார் மாற்றியது. சுவிட்சைப் போட்டவுடன் கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்துக் கொட்டியது. டிராக்டரும், பவர் டில்லரும் உழவில் பெரிய புரட்சியை ஏற்படுத்தின. அறுவடை எந்திரம் அடுத்த புரட்சியை செய்தது. இன்னும் நாற்று நடும் கருவிகள், விதைத் தெளிப்பு கருவிகள், களை எடுக்கும் கருவிகள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள் என்று வேளாண்மை படிப்படியாக எளிமையாகிக் கொண்டே வருகிறது. குறைந்த ஆட்களைக் கொண்டு பணிகளை முடிக்கும் நிலையை இந்த கருவிகள் ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலை இன்றைக்கு படித்த இளைஞர்களையும், நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களையும் வேளாண்மை நோக்கித் திருப்பி வருகிறது. ஓரளவுக்கு வேளாண்மை பின்னணி இருப்பவர்கள், வேளாண்மையில் இறங்கும் போது அவர்களால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. அவ்வாறு சிறிதும் வேளாண்மை பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் சிலர் நில புரோக்கர்களின் பேச்சைக் கேட்டு பொருத்தம் இல்லாத நிலங்களில் முதலீடு செய்து விட்டு தொல்லைக்கு ஆளானதையும் பார்க்க முடிகிறது. இவர்களும் கூட விடாமுயற்சியுடன் வேளாண்மை தொடர்பான அனுபவம் உள்ளவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றி பெற்று விட முடியும். அதற்கு பொறுமை மிகத்தேவை.

அந்த அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் வாங்கிய நிலத்தை அப்படியே போட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போவதையும் காண முடிகிறது. இவர்கள் இன்னும் ஒரு சிக்கலுக்கும் ஆளாகிறார்கள். வேலை பார்த்த போது மாதம்தோறும் சுளையாக நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த நிலையில் அந்த வருமானத்தை வேளாண்மையில் உடனே எடுக்க முடியாத நிலை வரும்போது மனதளவில் சோர்ந்து போகிறார்கள். இன்னும் சிலர் இயற்கை வேளாண்மை என்று மாட்டிக் கொள்கிறார்கள்.

விடா முயற்சி உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் தங்களுக்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் குறுகிய கால பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். உலக அளவில்  வேளாண்மைத் தொழில் நுட்பங்களில் ஏற்படும், குறிப்பாக ட்ரோன்கள் வாயிலாக மருந்துகளை, உரங்களை தெளிக்கும் செய்திகளை கவனிக்கிறார்கள். நீர் மேலாண்மை குறித்த நுட்பங்களை அறிந்து, குறைந்த அளவு நீரில் நிறைய பயிரிடும் முறைகளைக் கையாளுகிறார்கள். அரசு வழங்கும் மானிய உதவிகளுடன் சொட்டு நீர்ப் பாசன முறையை அமைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மன மகிழ்ச்சியுடன் திகழ்கிறார்கள்.

இவர்களுக்கும், வேளாண்மைத் தொழில் முனைவோருக்கும் அடுத்த வாய்ப்பாக டிஜிட்டல் தொழில் நுட்பம் கைகொடுக்க வந்து இருக்கிறது. புதிதாக அறிமுகமாகி இருக்கும் மொபைல் ஆப்கள் அதிசயங்களை நிகழ்த்தத் தொடங்கி இருக்கின்றன. தண்ணீர் பயன்பாட்டை, உரத்தை பயிர்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்த இந்த ஆப்கள் உதவுகின்றன. தண்ணீர் வீணாதல் குறைவதால் ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு அளவுக்கு தண்ணீர் மிச்சம் ஆவதாகவும், உரமும் மிச்சம் ஆவதாகவும் கூறுகிறார்கள். ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில் நுட்பத்தை இந்த ஆப்கள் பயன்படுத்துகின்றன. மொபைல் ஃபோன்களும், மொபைல் ஃபோன்களுடன் இணைந்து செயல்படும் டிஜிட்டல் கருவிகளும் எதிர்காலத்தில் இந்திய வேளாண்மைச் சூழலை பெரிய அளவுக்கு மாற்றி அமைக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

வயலுக்கு நேரடியாகச் செல்லாமலேயே நிறைய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் கருவிகள் வந்து இருக்கின்றன. நிறைய சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட கருவி வயலில் பொருத்தப்பட்ட பின், தட்பவெப்ப நிலை குறித்த, மழைப் பொழிவு, காற்றின் வேகம் குறித்த செய்திகளை உடனுக்குடன் அனுப்பி வைக்கிறது. நிலத்தின் ஈரப்பதம் குறித்த செய்திகளை அனுப்பும் ஆப்களும் வந்து இருக்கின்றன. இவை எல்லாம் இப்போது தொடக்க நிலையில் இருந்தாலும் விரைவிலேயே பரவலாக பயன்படுத்தப்படும் அளவுக்கு சந்தையில் கிடைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்காலாம். வயல்களுக்கு என வந்து இருக்கும் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால், எங்கு இருந்தபடியும் வயலைக் கண்காணிக்க முடியும் என்ற நிலையும் உருவாகி இருக்கிறது.

விளைவிக்கும் பொருள்களின் சந்தை விலையை தெரிந்து கொள்ளும் ஆப்கள் முன்பே வந்து விட்டன. ஆன்லைனிலேயே பொருள்களே விற்பனை செய்யும் பிளாட்ஃபார்ம்களும் உருவாகி வருகின்றன.

– க. ஜெயகிருஷ்ணன்

 

தடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்!

தமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக இருந்த போது, இவர் பணியாற்றும் வேகம் கண்டு சென்னை மக்கள் வியப்பில் ஆழ்ந்தபடி இருந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் எள் என்பதற்குள் எண்ணெயாக இருந்தவர். இன்றைக்கு  இவருக்கு ”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை” கொடுக்கப்பட்டு இருக்கிறது. பதவி ஏற்ற உடனேயே தன் பணிகளை விரைவாகத் தொடங்கி விட்டார். இவர் செயலாற்றும் பாங்கு கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதிலும் இவருக்கு வாக்கு அளித்த சைதாப்பேட்டை மக்கள் கூடுதலாக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மா. சு. பிறந்தது, வாணியம்பாடி அருகில் இருக்குமு ஒரு சின்ன கிராமம். ஆனால், சின்ன வயதிலேயே சித்தூர் பக்கத்தில் இருக்கும் புல்லூர் கிராமத்தில் குடியேறிய சூழலில், அங்கேதான் தொடக்கக்கல்வி படித்தார். இதன் பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்தனர். மா. சு. அப்பாவுக்கு மீன் பிடிப்பதுதான் தொழில். நிறைய தமிழர் குடும்பங்களில் உள்ளதைப் போலவே, குடும்பத்திலேயே  முதல் பட்டதாரி இவர்தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். சமூகநீதி கருத்துகளில் உறுதியானவர்.

இவர் மனைவி பெயர் காஞ்சனா.இரண்டு மகன்கள். ஒருவர் பெயர், இளஞ்செழியன், லண்டனில் மருத்துவராக இருக்கிறார். மருமகளும் மருத்துவர். இரண்டு பேரக் குழந்தைகள். பேரன் பெயர் இன்பன்; பேத்தி மகிழினி. இன்னொரு மகன் அன்பழகன். மாற்று திறனாளியாக இருந்த இவர், அண்மையில் காலமாகி விட்டார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். தி.மு.க-வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும்கூட.

எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர் என்று அனைத்து ஊடகர்கள் நடுவிலும், மக்களிடமும் பெயரெடுத்தவர். இதை எல்லாம் தாண்டி அறுபது வயதை தாண்டிய நிலையில் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பல கிலோ மீட்டர்கள் ஓடி பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்களில் இவரும் ஒருவர்.
இத்தனைக்கும் 2004-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், `இனி இவரால் நடக்க முடியுமா’ என்று மருத்துவர்களே சந்தேகப்பட்ட நிலையில், அதையும் தகர்த்து, இன்று மாரத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறார்.

தன்னுடைய உடல் நலன் பற்றிக் கூறும்போது, “எனக்கு சர்க்கரைநோய் பாதிப்பு இருப்பது, 1995-ம் ஆண்டுதான் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் முறையாக நடைப் பயிற்சி போகத் தொடங்கினேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக  நடைப் பயிற்சி மட்டும்தான்.

2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு கட்சி விழாவுக்காக மதுரைக்குப் போயிருந்தோம். எங்க கார் மேல ஒரு கன்டெய்னர் லாரி மோதி விட்டது. அது மிகப் பெரிய விபத்து. என் கூட வந்த என் நண்பர் ஜம்புலிங்கம் ஸ்பாட்லயே இறந்து விட்டார். எனக்கு வலது கால் மூட்டு உடைந்து விட்டது. மருத்துவர்கள், கம்பி போட்டு, காலை ஒட்ட வெச்சாங்க. `இனிமே வாழ்நாள் முழுக்க உங்களால சம்மணம் போட்டு உட்கார முடியாது, ஓட முடியாது’ ன்னும் சொன்னாங்க..

அதன்பிறகு என்னோட காலைச் சரி பண்றதுக்காக பிசியோதெரபி ட்ரீட்மென்ட் ஆறு மாசம் எடுத்துக்கிட்டேன். ஆனா, அதனால பெரிய மாற்றம் ஏதுவும் ஏற்படலை. அடுத்ததா, யோகா கத்துக்கத் தொடங்கினேன். கொஞ்ச நாள்லயே எல்லா வகை ஆசனங்களையும் செய்யக் கத்துக்கிட்டேன். நான் பத்மாசனம் செய்யிறதைப் பார்த்த என் டாக்டர் வியந்து போயிட்டார்.

அதனாலே கால் நிலைமை ஓரளவுக்குச் சரியாகிடுச்சு. அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு வாக்கிங், ஜாக்கிங் மட்டும்தான் போயிட்டிருந்தேன். 2013 -ம் ஆண்டுலதான் `சரி ஓடிப் பார்க்கலாம்’ னு முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல கொஞ்ச தொலைவு ஓடினேன். நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமா ஓடுற தொலைவை அதிகப்படுத்திக்கிட்டேன். முதன்முறையா, 2014-ம் ஆண்டு பிப்ரவரியில பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்த மாரத்தான் போட்டியில நண்பர்களோட சேர்ந்து கலந்துக்கிட்டேன். மொத்த தொலைவூ 21 கி.மீட்டர். என் கூட வந்த நண்பர்கள் எல்லாரும் மூணு மணி நேரத்தைத் தாண்டியும் ஓடிட்டு இருந்தாங்க. நான் வெறும் 2:30 மணி நேரத்துல 21 கி.மீட்டர் தூரத்தை ஓடி முடிச்சுட்டேன். இத்தனைக்கும் என்கூட வந்த நண்பர்கள் என்னைவிட 20 வயசு குறைஞ்சவங்க.

அப்பத்தான், என்னால முடியும்னு எனக்குள்ளயே ஒரு நம்பிக்கை வரத் தொடங்கியது.  `இனி எந்த மாரத்தான் போட்டியையும் விடக் கூடாது’ னு முடிவு பண்ணி, எங்க போட்டி நடந்தாலும் தேடித்தேடிப் போய் ஓடத் தொடங்கினேன். இந்திய அளவுல டெல்லி, மும்பை, புனே, சிம்லா, ஹைதராபாத், சென்னை, நெல்லை, கோவை போன்ற மாநகரங்கள்லேயும், உலகளவுல லண்டன், கத்தார், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, நார்வே போன்ற நாடுகள்லயும் மாரத்தான்ல ஓடியிருக்கேன். ஓடத் தொடங்கின ரெண்டு ஆண்டுகளில 25 போட்டிகள் – ல கலந்துக்கிட்டு ஓடி முடிச்சேன். இதனால, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ல தேசிய அளவிலான சாதனையாளரா என் பேர் வந்துச்சு. 29 போட்டிகள்ல ஓடி முடிச்சதும், `ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல என் பேர் வந்தது. 50 மாரத்தான் போட்டிகள்ல ஓடி முடிச்சதும் `வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டி’ (World records university) எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துச்சு.  என் அறுபது வயசுக்குள்ள 100 போட்டிகள்ல ஓடி முடிக்கணும்னு இலக்கு வெச்சுக்கிட்டேன். இதுவரை, 75 மாரத்தான் போட்டிகள்ல ஓடிப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். 50 வயசுக்கு மேல இருக்குற ஒருத்தர், இத்தனை மாரத்தான் போட்டிகள்ல கலந்துகிட்டு ஓடுறதை கௌரவிக்கத்தான் இந்த விருதுகள் எல்லாம்.

நான் காலைல 5 மணிக்கு மேல தூங்கி ஒரு 28 வருஷம் இருக்கும். எந்த வெளிநாட்டுல, வெளி மாநிலத்துல, வெளியூர்ல இருந்தாலும் 5 மணிக்கு எழுந்து நடக்கத் தொடங்கி விடுவேன். ஒருவேளை அதிகாலைல வெளியூர்களுக்கு போறதா இருந்தா செங்கல்பட்டு / பூந்தமல்லி தாண்டினதும் வண்டிய விட்டு இறங்கி 10 கி.மீ ஓடிடுவேன், வண்டி பின்னாடியே வரும். அப்புறம் ரோடு ஓரத்துல கிணறு, பம்புசெட் இருந்தா அங்கேயே குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்குவேன். அப்படி எதும் இல்லன்னா, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல போய் ஃப்ரெஷ் ஆகிடுவேன். ஏதாச்சும் போட்டிக்குப் போறதுக்கு முன்னாடி வழக்கமா தினமும் செய்யும் உடற்பயிற்சிகளை மட்டும்தான் செஞ்சிட்டுப் போவேன்.

சாப்பாட்டு விஷயத்துல எந்தக் கட்டுப்பாடும் வெச்சுக்கறதில்லை. மீனையும் சிக்கனையும்தான் அதிகமா விரும்பிச் சாப்பிடுவேன். வாரத்துல ரெண்டு, மூணு நாள் பழையசோறு கூட சாப்பிடுவேன். பொதுவா சர்க்கரை நோயாளிகள் பழையசோறு சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நான் அதைப் பத்திக் கவலைப்படுறது இல்லை. எல்லா வகை பழச்சாறுகளையும் குடிப்பேன். இனிப்பு சாப்பிடுவேன். விருப்பப்படுவதையெல்லாம் சாப்பிடுறேன். ஆனாலும், என்னோட சர்க்கரை அளவு கன்ட்ரோல்லதான் இருக்கு.”

இதுக்கிடையிலே மாசத்துல குறைஞ்சது ரெண்டு படமாவது தியேட்டர்ல போய் பார்த்துடுவேன். நான் சிவாஜி ரசிகன். சமூகக் கண்ணோட்டத்தோட வர்ற படங்களை யார் நடிச்சிருந்தாலும் பார்ப்பேன். நெறயா புத்தகங்களும் படிப்பேன்.” என்றவரிடம் மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது ஒன்றை சொல்லுங்க? -ன்னு கேட்ட போது, ஒவ்வொரு ஊர்ல ஓடும் போதும், நீங்க தான் இன்ஸ்பிரேஷன்னு ஒரு 10 பேராச்சும் சொல்லுவாங்க. ஒரு முறை புனேவில் பவ்தான் மலையில் கிறிஸ்துமஸ் மாரத்தானில் கலந்து கொண்டிருந்தேன். அப்போ என்ன மாதிரியே ஒரு பெரியவரும் ஓடிட்டு இருந்தாரு. அவருக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ, மும்பைல இருந்து வந்திருக்கறதாகவும், ஒன்றரை ஆண்டில் 60 வயசாகப் போகுதுன்னு சொன்னாரு. உங்களுக்கு என்ன லட்சியம்ன்னு அவர் கிட்ட கேட்டேன். இதுவரைக்கும் 48 மாரத்தான் ஓடியிருக்கேன். 10 வருஷமா ஓடிட்டு இருக்கேன். 60 வயசுல 60 மாரத்தான் முடிக்கணுன்னு சொன்னாரு. ஏன் இந்த இலக்குன்னு கேட்டேன், சென்னைல சுப்பிரமணியன்னு ஒருத்தர் 5 வருஷத்துல 100 மாரத்தான் ஓடியிருக்காரு. அவர் தான் இன்ஸ்பிரேஷன்னு சொன்னாரு. அப்புறம் நான்தான் அந்த சுப்பிரமணியன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். பிறகு 2,3 மாரத்தான்ல அவரைப் பாத்தேன். மொழி கடந்து மானசீகமா அவர் என்ன நினைச்சிருந்தது, எனக்கு ஊக்கமா இருந்துச்சு.” என்றார்.

அடிக்கடி மா.சு. தன் நண்பர்களுக்கு சொல்லும் செய்தி :
பெரும்பாலானவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்குக் காரணம், மன அழுத்தம்தான். அதனாலே இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் அவசியமானது உடற்பயிற்சி. வெகுவாக மாறிய வாழ்க்கை முறைகளால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூச்சுப் பயிற்சியை விடாம செய்யுங்க. ஏன்னா இதுக்கு தனியா எந்த இடமும் தேவைப்படாது. கார்ல போகும் போது, சும்மா உட்கார்ந்திருக்கும் போதும், காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து செய்யலாம்.

என்று உடல் நலம் சார்ந்தே அனுதினமும் இயங்கிக் கொண்டிருக்கும் மா. சுப்பிரமணியன் அவர்களுக்குப் பொருத்தமாகவே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொடுக்கப்பட்டு உள்ளது.

– செந்தில் குமார்

Follow Thiru. Ma. Subramanian on Twitter

In the picture: Thiru. M.  Subramanian, Minister for Health and Family Welfare, Tamil Nadu in a marathon race.

”உளமார” உரிமையை முதன் முதலாக பயன்படுத்தியது யார்?

0
கடவுளின் பெயரால் உறுதி ஏற்க மறுப்பது அல்லது நிராகரிப்பது, அதற்கு மாற்றாக, ‘உளமார’ உறுதி ஏற்பது என்பது எளிதாகக் கிடைத்த வாய்ப்பு அல்ல.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு தனி மனிதனின் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம், சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பிறகு கிடைத்த, மகத்தான உரிமை. அந்த ஒற்றை மனிதர், பிராட்லா.
நார்த்தாம்ப்டனிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 1880ல் லிபரல் கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார், இறை மறுப்பாளரான பிராட்லா. மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்.
அதற்கான அமைப்பையும் நடத்தியவர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும்போது, ‘உண்மையான நம்பிக்கை உள்ள கிறிஸ்தவனாக கடவுளின் பெயரால் உறுதி ஏற்கிறேன்” எனச் சொல்வதற்கு பிராட்லா மறுப்புத் தெரிவித்தார்.
”கடவுள் மீது உறுதி எடுக்கச் சொல்கிறீர்கள். இதில் ஆரம்பச் சிக்கல் என்னவென்றால் கடவுள் என்ற சொல்லை விளக்குவதுதான். சரியாக விளக்க முடியாத நிலையில், இந்த உறுதி மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லின் அடிப்படையில், கடவுளை ஏற்கிறோமா, மறுக்கிறோமா என்பதும் சமமாக விளக்க முடியாததாகும்.
என்னைப் பொறுத்தவரை, கடவுள் என்பது எவ்வித பொருளும் இல்லாமல் தனித்து நிற்கும் ஒரு சொல். கடவுள் என்பது விளக்க முடியாததாக இருக்கும் வரையில், நான் கடவுளை மறுப்பதாகவும் கொள்ள முடியாது”, என்றார் பிராட்லா.
அவர், கடவுள் பெயரால் உறுதியேற்க மறுத்ததால், அவரை அதிகாரப்பூர்வ உறுப்பினராக நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்க முடியவில்லை. மசோதாக்கள் மீதான அவரது வாக்கு உரிமையும் நிராகரிக்கப்பட்டன. சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார்.
ஆனாலும், தன் நிலையில் உறுதியாக இருந்த பிராட்லா, மாற்று வகையில் உறுதி மொழி ஏற்க வழி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இதனை அடுத்து, 1880ல் ஒரு தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது தேர்வு கமிட்டியும் அமைக்கப்பட்டது. கடவுளை மறுத்து உறுதிமொழி ஏற்பதா என பெரும்பாலான உறுப்பினர்கள் பிராட்லாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
பிராட்லாவின் போராட்டம் தொடர்ந்தது. அரை மாமாங்க காலப் போராட்டத்திற்குப் பிறகு, 1886ல் கடவுளின் மீது ஆணையாக என்பதற்குப் பதிலாக, உளமார (மனசாட்சியின்படி) உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு பிராட்லா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மட்டுமல்ல, உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடவுள் பெயராலோ, உளமாரவோ உறுதியேற்க அனுமதி வழங்கப்பட்டது.
உறுதி குலையாத அறவழிப் போராட்டத்தின் வழியாகப் பெற்றதுதான், ‘உளமார’ உறுதி ஏற்கும் வாய்ப்பாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தைப் பெருமளவில் தழுவி, சட்டம் இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன.
அதில், தமிழ்நாடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியானதாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1967ல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசில் அத்தனை பேரும் ‘உளமார’ (மனசாட்சியின்படி) பதவி ஏற்றனர்.

1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்!

0
எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?
இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்திலும் பின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலும் கதை வசன எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் கோவைக்குத்தான் சென்றார்.சென்னைக்கு அல்ல)
மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.
அப்போது அவருக்கு வயது 23. அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்.
கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.
1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார். கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955). அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.
எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார். எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950) அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.
ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.
அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது. இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்
இன்னொன்று சொல்கிறேன். திமுக தொடங்கப்பட்டது 1949ல் முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல். வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.
1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.அது மட்டுமல்ல. எம்ஜிஆர், சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.
அவர் செல்வந்தர் ஆகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.
கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்று அவருடைய எதிர்ப்பாளர்கள் கூக்குரல் இடுவது வழக்கம். அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதைத் தேடிப் படியுங்கள். அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக கோயில்கள் தொடர்பான திருப்பணிகளைப் பார்த்தால் அத்தனை வியப்பாக இருக்கும். எண்ணற்ற குடமுழுக்குகள், தேரோட்டப் பணிகள், கோயில் குளங்கள் சீரமைப்பு, கோயில்கள் புனரமைப்பு பணிகள் என்று ஏராளமான பணிகள் நடைபெற்றன.
இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் தொடர்ந்து வெறுப்பது ஏன்? அதற்கு காரணம் கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள்தான்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,
1. பரிவட்ட மரியாதை நிறுத்தம்
2. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
3. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சகர் பணி- இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம்தான் அவர்களுக்கு.
போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்; மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்; 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்;  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்; குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்; கைரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்;
கோவில்களில் குழந்தைகளுக்கான ” கருணை இல்லம் ” தந்தது கலைஞர்;  சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்; SIDCO உருவாக்கியது கலைஞர்; SIPCOT உருவாக்கியது கலைஞர்; பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்; இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்; பெண்ணுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்; அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர்;  ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்; விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்; நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்; தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்; கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்; பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்; உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்; இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்; சமத்துவபுரம் தந்தது கலைஞர்; கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர்; இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கர் பெயரில் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர்; உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்; 133 அடி திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் வைத்தவர் கலைஞர்;  டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்; காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு நாள் ஆக அறிவித்தவர் கலைஞர்;  பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்; உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியவர் கலைஞர்; ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கலைஞர்;  மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தியவர் கலைஞர். – இப்படி நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கலைஞர்.
                                                                                         – ஆறுமுகம் சொக்கலிங்கம்

 

Comment
Share

 

 

தர்ம சங்கடம் என பகுத்தறிவாளர்கள் எழுதுவதை தவிர்க்கவும்
தர்ம சங்கடம் என்பதற்கு மகாபாரதப் புராணக் கதைகள் பல உண்டு அதில் ஒன்று ஆபாசமானது ;
எனவே பகுத்தறிவாளர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தலை தவிர்க்கவும்…

See More

 

 

Prince Ennares Periyar, Ezhilan Duraisamy and 185 others

 

21 Comments

5 Shares

 

Like

Comment
Share

Comments

 

Most Relevant



 

  •  

    குழப்பமா போச்சுன்னு எளிமையா பயன் படுத்தலாம்

     

    7

     

     

    • Like

       

       

     

  • Reply
  • 16h

 

பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது!

0
தமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது.
ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண். ஓடை மண் என்றும் சொல்வார்கள். சுண்ணாம்புச் சத்து மிகுந்து இருப்பதால், வெள்ளை நிறமாக இருக்கின்றது. உறுதியான பாறைகள் கிடையாது. சரளை போல உதிரக்கூடியது.
என்னுடைய நிலத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை உரம்தான் பயன்படுத்துகின்றேன். இதுவரை ஒரு மூடை யூரியா கூடக் கலந்தது இல்லை.
விளைச்சல் குறைவாக கிடைத்தாலும், யூரியா போட்டு விளைவித்த மஞ்சள், குவின்டாலுக்கு 6500 ரூபாய் எனைறால் எங்களுக்கு, குவின்டாலுக்கு ரூ 13000 தருகின்றார்கள்.
இப்போது நாங்கள் தென்னை நார் ஏற்றுமதியும் செய்கிறோம். தேங்காய் மட்டையை உரிக்கும்போது, அதிலிருந்து தூளாக விழுகின்ற ஒரு துணைப்பொருள், காயர் பித் (Coir Pith).
2000 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையிலும், இந்த காயர் பித் என்கின்ற, தென்னை நார்க்கழிவின் பயன்பாடு யாருக்குமே தெரியாது. எனவே, மொத்தமாகத் திரட்டி வைத்து, சாலையின் ஒரு ஓரமாகப் போட்டு எரித்து விடுவதுதான் வழக்கமாக இருந்தது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இந்தத் தென்னை நார்த் துகள்களை எடுத்துச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டது. இந்தக் துகள்களை, மண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தி, பயிர்களை விளைய வைக்கலாம்; அதுவும் குறைந்த அளவு தண்ணீரில் பன்மடங்கு விளைச்சல் பெறலாம் என்பதைக் கண்டு அறிந்தார்கள்.
இந்தக் துகள்களில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்றவற்றுடன் நீர் கலந்து,
அவற்றின் வீரியத்தைக் குறைத்து, கட்டி கட்டியாக வார்ப்பித்து, அவற்றின் மீது பயிர்களை விளைய வைக்கின்றார்கள்.
இந்தக் கழிவுகளை, சாலை ஓரங்களில் போட்டு எரிப்பது, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்பதால், அந்தத் துறையினர் வந்து பிடித்துக் கொள்வார்கள். கடுமையான தண்டத் தொகை விதித்துப் பணம் பறித்து விடுவார்கள்.
அந்தக் காலகட்டத்தில், நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன்.
இந்த கழிவுத் துகள்களை என்ன செய்வது? எங்கே கொண்டு போய்க் கொட்டுவது? என்று திகைத்துக் கொண்டு இருந்த விவசாயிகளிடம், ‘அவற்றை என் நிலத்தில் கொண்டு வந்து கொட்டுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.
அப்படியே அவர்களும் கொண்டு வந்து கொட்டினார்கள். அப்படிக் கொட்டுவதற்கு, ஒரு டிராக்டருக்கு 200 ரூபாய் கட்டணமாகவும் கொடுத்து விட்டுப் போனார்கள்.
ஆனால், இருபது ஆண்டுகளுக்கு உள்ளாக, நிலைமை தலைகீழாகி விட்டது.
இப்போது, நார் பிரித்து எடுக்கின்ற ஒரு சிறு தொழிற்கூடத்தில் இருந்து,
நான் அந்தக் கழிவுகளைப் பெறுவதற்கு, அவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும்; ஒரு டிராக்டர் கழிவுதுகள்களுக்கு 12000 ரூபாய் கட்டணம் நான் கொடுக்க வேண்டும்;
அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாக அங்கே சென்று, நான் அள்ளிக்கொண்டு வர வேண்டும். தவறினால், வேறு போட்டியாளர் உள்ளே புகுந்து விடுவார். அந்த அளவிற்கு, அது விலை மதிப்பு உள்ள பொருள் ஆகி விட்டது.
இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் கழித்து, பூச்சி மருந்து தெளிக்காமல் பயிர் விளைவிக்க வேண்டும் என்று சொன்னால், காயர் பித்தில் மட்டும்தான் நடக்கும்.
இன்று, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சில தெற்கு ஆசிய நாடுகளைத் தவிர, சீனா உட்பட அனைத்து நாடுகளிலும், இந்த முறையிலும் விவசாயம் பெருமளவில் நடைபெறுகின்றது.
ஐரோப்பா மற்றும் ஜப்பானில் விளைநிலங்களின் மீது பசுமைக் குடில்கள் அமைத்து, வெப்பத்தைக் குறைத்து, அதன் மூலமாக இரண்டு மடங்கு வேளாண்மையைப் பெருக்குகின்றார்கள். ஒரு விதையை ஊன்றி, அது முளைப்பதற்குத் தேவையான பருவநிலையை ஏற்படுத்துவதுதான் அந்த முறை.
எந்த விதையாக இருந்தாலும், அதை முளைக்க வைத்து விடுவார்கள்.
அப்படி முளைக்க வைப்பதற்குப் பயன்படுத்துகின்ற மண்தான் இந்தத் தென்னை நார்த் துகள்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்,
இப்போது பெரும்பாலும், காயர் பித் விவசாயம்தான் நடைபெறுகின்றது.
அன்றாடத் தேவையான காய்கறிகள் முழுமையும் மண்ணில் விளைவிப்பது இல்லை;
காயர் பித்தில்தான் விளைய வைக்கின்றார்கள்.
ஒரு கிலோ காயர் பித், 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி உள்வாங்கி வைத்துக் கொள்ளும். அந்தத் தண்ணீரை, அதில் இருந்து நீங்கள் பிரித்து எடுக்கவே முடியாது.
எனவே, அதில் செடிகள் விளைவதற்கு, நீங்கள் கூடுதலாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை மிகமிகக் குறைவு. தென்னை நார்க்கழிவில் இருந்து சுமார் 150 பொருள்களை ஆக்க முடியும்.
சான்றாக, சாதாரண விளைநிலத்தில், பத்து ஆயிரம் சதுர அடியில், பத்து ஆயிரம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி, 100 கிலோ தக்காளியை விளைய வைக்கின்றீர்கள் என்றால், அதுவே, இந்தக் காயர் பித்தைப் பயன்படுத்தி, 1000 சதுர அடியில், 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 1000 கிலோ தக்காளி விளைய வைக்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இந்த நான்கு மாநிலங்களில்தான் தென்னை மரங்கள் அதிகம்.
ஒரு இஞ்ச் கூட விடாமல் தேங்காய் மட்டைத் துகள்களை ஏற்றுமதி செய்கின்றார்கள்.
இன்னும் சொல்லப்போனால், தலைநகர் சென்னையில் மட்டும், காயர் பித் ஏற்றுமதி செய்கின்ற 120 நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே, தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;
தென்னிந்தியா முழுமையுமே இந்தத் தொழில் வேகமாகப் பரவி விட்டது.
கடந்த ஆண்டில் மட்டும், காயர் பித் ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பணம் 1200 கோடி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகையில் ஒரு ரூபாய் கூடக் கிடைத்தது இல்லை என்பதை ஒப்பிடுகையில், இது எவ்வளவோ முன்னேற்றம்.
இந்த ஆண்டு, அதை விட உயரும்.
காயர் பித் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் செல்கின்றது. நான் மட்டுமே, 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றேன். இப்போது இந்தத் தொழிலுக்கு,
அரசு 75 விழுக்காடு மானியம் தருகிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து இருக்கின்றோம். அதற்கு நான்தான் பொருளாளர்.
கயிறு மற்றும் தென்னை நார் கழிவு ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற பத்து அல்லது பதினைந்து பேர்கள் சேர்ந்து ஒரு குழுமத்தை, உருவாக்கினால், நடுவண் அரசின் கயிறு வாரியம் காயர் போர்டு, 75 விழுக்காடு மானியமாகத் தருகின்றார்கள்.
தற்போது, காங்கேயம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மூன்று குழுமங்கள் தொடங்கி, தொழில் நடக்கின்றது. எங்களுடைய திருப்பூர் மாவட்ட தென்னை நார்க்கழிவுத் தொழில் முனைவோர் சேர்ந்து,
ஒரு குழுமத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இந்த காயர் பித் விவசாயம் குறித்து நமது மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை.
இதுவும் விவசாயத்தைக் கெடுக்கின்றது என்று சில போட்டியாளர்கள் பொய்ப் பரப்புரை செய்து, இந்தத் தொழிலையும் தடை செய்ய முயற்சிக்கின்றார்கள்.
இப்போது காயர் பித்தைப் பயன்படுத்தி பல வகையான பயிர்களை விளைவிக்கத் தொடங்கி விட்டார்கள். வியப்பான செய்தி என்ன என்றால், இத்தாலியில் ஒரு இடத்தில் காயர் பித்தைப் பயன்படுத்தி மஞ்சள் விளைவிப்பதைப் பார்த்தேன்.
மஞ்சள் விளைவதற்கு ஏற்ற பருவநிலை அந்த நாட்டில் இல்லாவிட்டாலும் பசுமைக் குடில்கள் அமைத்து, தேவையான அளவில் ஏற்பாடு செய்து கொள்கின்றார்கள்.
எனவே, இனி எந்தப் பயிரையும், எந்த நாட்டிலும் விளைய வைக்க முடியும் என்கிற அளவிற்கு வேளாண்மையில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டு இருக்கின்றது.
நான் துபாயில் இருந்து அபுதாபி செல்கின்ற வழியில், எமிரேட்ஸ் ஆர்கானிக் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சென்றேன். அந்த ஒரு நிறுவனத்தில் மட்டும், காயர் பித் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு, 1200 கிலோ தக்காளி விளைவித்து, அமீரகக் கூட்டு அமைப்பில் உள்ள ஆறு நாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் வெறும் வெண்மணல் பரப்புதான். பாலை நிலம்தான்.
நாம் எப்படி இரும்புத்தொழிற்சாலை அமைத்து இருக்கின்றோமோ, அதுபோல அவர்கள் விவசாயத் தொழிற்சாலை அமைத்து இருக்கின்றார்கள்.
காயர் பித் மட்டும் அல்ல, ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில், தரையில் அல்லாமல், தண்ணீரில் மிதக்கின்ற செடிகளில் முட்டைக்கோஸ் விளைகின்றது. அதற்குப் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகின்றார்கள்.
என்னிடம் பொருள்கள் வாங்குகின்ற ஒரு அமெரிக்க நிறுவனம்,
பாக்கு மட்டைத் தட்டு கேட்டார்கள். நான் சோதனை முறையில் 25000 ரூபாய் மதிப்புள்ள தட்டுகளை அனுப்பினேன். எனக்கு முன்பாகவே நமது ஆட்கள் எத்தனையோ பேர், நமது பாக்கு மட்டைத் தட்டுகளை அமெரிக்காவில் கொண்டு போய் விற்கின்றார்கள்.
ஆனால், அவர்கள் palm leaf plates என பில் எழுதுவது இல்லை. palm tree plates என்றுதான் எழுதுகின்றார்கள். வேறுபாடு என்ன என்றால், அமெரிக்கச் சட்டப்படி, இலைத்தட்டு என்றால், அந்த இலையில் அமிலங்கள் இல்லை என அதற்கு ஒரு சான்று பெற வேண்டும். எனவே, பாக்கு மரத் தட்டு என எழுதி தப்பித்துக் கொள்கின்றார்கள்.
எனக்கு இதைப் பற்றித் தெரியாது. palm leaf plates என்று எழுதி அனுப்பி விட்டேன். இறக்குமதி அதிகாரிகள் அதைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள்.
இனி அதை அவர்களிடம் இருந்து விடுவிக்க முடியாது; அதில் அல்கலின்;! இல்லை என்பதற்கு நீங்கள் சான்று தர வேண்டும்; அல்லது எரிக்கத்தான் வேண்டும்; அல்லது நீங்கள் இந்தியாவுக்குத் திரும்ப எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
சரி; எப்படியும் இனி நாம் இதை கூடுதலாக அனுப்பத்தான் போகின்றோம்.
எனவே, அதில் அல்கலின்ஸ் இல்லை என்பதற்கான சான்று பெற்று விடுவோம் என முடிவு செய்து, தமிழ்நாட்டில் அதற்கான சான்று தருகின்ற வேளாண் ஆய்வுக்கூடங்களை அணுகினேன். அந்தச் சோதனையைப் பல இடங்களில் செய்கின்றார்கள்.
ஆனால், ஒரு சோதனைக்கு ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் கட்டணம் கேட்கின்றார்கள். எங்கே குறைவான கட்டணத்தில் செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்ததில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் செய்யலாம் என்று சொன்னார்கள். அங்கே சென்றேன்.
அங்கே நிறைய புதிய கருவிகள் இருக்கின்றன. அதைப்பற்றி, அங்கே உள்ள பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றார்கள். ஆனால், யாருக்குமே அதை எப்படிச் செய்வது என்ற பயிற்சி இல்லை.
அவரைப் பாருங்கள், இவரைப் பாருங்கள் என்று சொன்னார்கள். அலைய வைத்தார்கள். கடைசியாக ஒருவரைப் பிடித்தோம்.
ஒரு பொருளை, 100 டிகிரி வெப்பத்தில், அரை மணி நேரம் வைத்து இருந்தால்தான், அதில் உள்ள அமிலப் பொருள்கள் தனியாகப் பிரிந்து வருகின்றது. இந்த சோதனைகளுக்குப் பிறது சான்று தந்தார்கள். அதை வைத்துக்கொண்டு, நான் இதுவரை 150 கன்டெய்னர்களுக்கும் மேல் ஏற்றுமதி செய்து விட்டேன்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தருகின்ற சான்றிதழை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
வேளாண்மைக் கருவிகளை ஆக்குவதில் முதல் இடத்தில்  ஜெர்மனிதான் இருக்கிறது..
ஜப்பானியர்களுக்கு விளை நிலம் இல்லை. எனவே, கடலில் கப்பல்களை நிறுத்தி, அதில் கூட விவசாயம் செய்கின்றார்கள். பன்மடங்கு விளைய வைக்கின்றார்கள்.
நாம்தான் விவசாயம் என்கின்றோம். ஆனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், தக்காளி தொழிற்கூடம் (Tomato Factory), புளுபெர்ரி தொழிற்கூடம், ஸ்ட்ரா பெர்ரி தொழிற்கூடம் என்றுதான் பேசுகின்றார்கள்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு லில்லிபுட் தொழிற்கூடத்திற்கு நான் சென்று பார்த்தேன். அவர், 1000 ஓக்ஸ் (Thousand Oaks) என்ற இடத்தில் ஒரு வேளாண் தொழிற்கூடம் வைத்து இருக்கின்றார். அது, 2,50,000 சதுர அடிப் பரப்பில் பரந்து விரிந்து இருக்கின்றது. 11 இலட்சம் பூங்கொத்துகளுக்குத் தேவையான பூக்களை ஒரு நாளில் விளைவிக்கின்றேன் என்றார்.
ஒரு பூங்கொத்து என்ன விலை? என்று கேட்டேன். ஒரு டாலர் என்றார். அப்படியானால், அவருடைய ஒருநாள் வரவு செலவு 11 இலட்சம் டாலர். இந்திய ரூபாயில் 8.8 கோடி ரூபாய்.
– ஈரோடு ஏற்றுமதியாளர் திரு. பூங்கொடி செந்தில் அவர்களின் பேட்டியில் இருந்து..
                                                                                                              – அருணகிரி

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

0

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதனிடையே, 2009 ஆம் ஆண்டு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் KP. சிவசுப்பிரமணியம் தலைமையிலான ஆய்வுக் குழு அறிக்கை இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஆய்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்திய கள் குறித்த கள ஆய்வில் மக்களிடையே கள்ளுக்கு ஆதரவு இருக்கிறது தெரிய வரும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் கள் தடை இருக்கும் காரணத்தினால் பனையேறும் வல்லுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் முறையாக உரிமம் பெற்று மரம் ஏறுபவர்கள் மீது காவல் துறையினர் பொய்யாக “விஷக்கள் மற்றும் கள்ளச் சாராய” வழக்கு பதிவு செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் மரம் ஏறும் வல்லுநர்கள் ஏராளமானோர் இத்தொழிலை விட்டு வெளியேறி விட்டனர்.

கள் என்பது உணவின் ஒரு பகுதியாக இருந்து வந்ததாக, தமிழ் இலக்கியங்களின் குறிப்புகளில் மூலம் தெரிய வருகிறது. அத்தகைய சிறப்பு மிக்க கள் எனும் மென்பானத்தின் மீதான தடையை நீக்குவதன் மூலம் பனையேறும் வல்லுநர்களின் பொருளாதாரத்தை அரசு மேம்படுத்தலாம். தற்போது நாங்கள் தமிழகம் முழுக்க மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் கள் தடை நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணவோட்டமாக இருப்பதைக் காணமுடிகிறது. பிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் கள்ளுக்கு ஆதரவாக உள்ளதை அறிகிறோம்.

கள் மீதான தடையை நீக்கி, பனை தென்னை மற்றும் ஈச்ச மரங்களிலிருந்து நீராவாகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கவும் ,குடிக்கவும் அனுமதித்து அவற்றின் விற்பனையை கிராமப் புறங்களில் அந்தந்த பனையேறும் வல்லுநர்களே தனிப்பட்ட முறையில் விற்பனை செய்து கொள்ள தனியுரிமை அளிக்க வேண்டும் .நகர்ப்புற விற்பனைக்கும் மற்றும் ஏற்றுமதிக்கு, பனைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களே அதை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள், பதநீர்,நீரா மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஏராளமான பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக, உள்நாட்டிலும் உலக அளவிலும் சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் பன்னாட்டு சந்தையில் பெரும் அந்நிய செலாவணியை ஈட்டும்.
கள் தடை நீக்குவதற்கான அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு.
இவைகளை நிறைவேற்றிட கள் நீக்கத்திற்காக போராடும் பல்வேறு அமைப்புகள் கூட்டாக கீழ் குறிப்பிட்டுள்ள ஆறு அம்ச கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். இத்தீர்மானத்தை சட்டமாக்கும் கட்சிக்கே வரும் தேர்தலில் பனைத் தொழில் வல்லுநர்கள் ஒட்டளிக்க முடிவு எடுத்து உள்ளோம்.
1) கள்ளுக்கான தடையை நீக்கபட்டு
பனை, தென்னை மற்றும் ஈச்சம் தொழிலாளர் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் (கடை இருக்கக் கூடாது) .பனைத் தொழில் கூட்டுறவு மூலம் கள் விற்பனை செய்ய அனுமதி வேண்டும்.
அதாவது உள்ளூர் கள் விற்பனையை அந்தந்த கிராமங்களில் உள்ள பனையேறும் வல்லுநர்களே மேற்கொள்ள வேண்டும்.
நகர விற்பனை மற்றும் ஏற்றுமதி இவைகளை பனைத்தொழில் கூட்டுறவு சங்கங்களே செய்ய வேண்டும்.
1)KP சிவசுப்பிரமணியம் குழுவின் கள் சார்ந்த கள ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.
2) கேரளாவில் கள் குறித்து கள ஆய்வு நடத்திய உதயபானு கமிஷன் ‘கள் போதைப்பொருள் அல்ல, உணவுப்பொருள்’ என்று அறிவித்து உள்ளது, 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தென்னை நீராவுக்கு அனுமதி அளித்தது போல், மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
3) பனை வளத்துறை அமைத்து அனைத்து பனை பொருட்கள் அரசு கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் போன்று விற்பனை செய்ய வேண்டும்.
மாவட்டம் தோறும் பனை மையம் அமைத்து அரசு அனைத்து பயற்சிகளும் அளிக்க வேண்டும். மேலும் பனை மையமே பனை சார்ந்த அனைத்து அரசு செயல்களும் ஒற்றை தொடர்பு புள்ளியாக இருக்க வேண்டும்
4) பனை மரங்களை அடங்கலில் சேர்க்கப்பட வேண்டும். இதுவரை அரசு நிலங்களில் இருக்கும் பனைகளை அரசு பாதுகாக்க வேண்டும். அரசு நிலங்களில் உள்ள பனை மரங்களை பனையேறிகளுக்கு மட்டும் குத்தகைக்கு விடவேண்டும்.
                                                                                     – தமிழ்நாடு கள் கூட்டமைப்பு