Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதனிடையே, 2009 ஆம் ஆண்டு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் KP. சிவசுப்பிரமணியம் தலைமையிலான ஆய்வுக் குழு அறிக்கை இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஆய்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்திய கள் குறித்த கள ஆய்வில் மக்களிடையே கள்ளுக்கு ஆதரவு இருக்கிறது தெரிய வரும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் கள் தடை இருக்கும் காரணத்தினால் பனையேறும் வல்லுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் முறையாக உரிமம் பெற்று மரம் ஏறுபவர்கள் மீது காவல் துறையினர் பொய்யாக “விஷக்கள் மற்றும் கள்ளச் சாராய” வழக்கு பதிவு செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் மரம் ஏறும் வல்லுநர்கள் ஏராளமானோர் இத்தொழிலை விட்டு வெளியேறி விட்டனர்.

கள் என்பது உணவின் ஒரு பகுதியாக இருந்து வந்ததாக, தமிழ் இலக்கியங்களின் குறிப்புகளில் மூலம் தெரிய வருகிறது. அத்தகைய சிறப்பு மிக்க கள் எனும் மென்பானத்தின் மீதான தடையை நீக்குவதன் மூலம் பனையேறும் வல்லுநர்களின் பொருளாதாரத்தை அரசு மேம்படுத்தலாம். தற்போது நாங்கள் தமிழகம் முழுக்க மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் கள் தடை நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணவோட்டமாக இருப்பதைக் காணமுடிகிறது. பிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் கள்ளுக்கு ஆதரவாக உள்ளதை அறிகிறோம்.

கள் மீதான தடையை நீக்கி, பனை தென்னை மற்றும் ஈச்ச மரங்களிலிருந்து நீராவாகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கவும் ,குடிக்கவும் அனுமதித்து அவற்றின் விற்பனையை கிராமப் புறங்களில் அந்தந்த பனையேறும் வல்லுநர்களே தனிப்பட்ட முறையில் விற்பனை செய்து கொள்ள தனியுரிமை அளிக்க வேண்டும் .நகர்ப்புற விற்பனைக்கும் மற்றும் ஏற்றுமதிக்கு, பனைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களே அதை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள், பதநீர்,நீரா மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஏராளமான பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக, உள்நாட்டிலும் உலக அளவிலும் சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் பன்னாட்டு சந்தையில் பெரும் அந்நிய செலாவணியை ஈட்டும்.
கள் தடை நீக்குவதற்கான அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு.
இவைகளை நிறைவேற்றிட கள் நீக்கத்திற்காக போராடும் பல்வேறு அமைப்புகள் கூட்டாக கீழ் குறிப்பிட்டுள்ள ஆறு அம்ச கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். இத்தீர்மானத்தை சட்டமாக்கும் கட்சிக்கே வரும் தேர்தலில் பனைத் தொழில் வல்லுநர்கள் ஒட்டளிக்க முடிவு எடுத்து உள்ளோம்.
1) கள்ளுக்கான தடையை நீக்கபட்டு
பனை, தென்னை மற்றும் ஈச்சம் தொழிலாளர் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் (கடை இருக்கக் கூடாது) .பனைத் தொழில் கூட்டுறவு மூலம் கள் விற்பனை செய்ய அனுமதி வேண்டும்.
அதாவது உள்ளூர் கள் விற்பனையை அந்தந்த கிராமங்களில் உள்ள பனையேறும் வல்லுநர்களே மேற்கொள்ள வேண்டும்.
நகர விற்பனை மற்றும் ஏற்றுமதி இவைகளை பனைத்தொழில் கூட்டுறவு சங்கங்களே செய்ய வேண்டும்.
1)KP சிவசுப்பிரமணியம் குழுவின் கள் சார்ந்த கள ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்.
2) கேரளாவில் கள் குறித்து கள ஆய்வு நடத்திய உதயபானு கமிஷன் ‘கள் போதைப்பொருள் அல்ல, உணவுப்பொருள்’ என்று அறிவித்து உள்ளது, 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தென்னை நீராவுக்கு அனுமதி அளித்தது போல், மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
3) பனை வளத்துறை அமைத்து அனைத்து பனை பொருட்கள் அரசு கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் போன்று விற்பனை செய்ய வேண்டும்.
மாவட்டம் தோறும் பனை மையம் அமைத்து அரசு அனைத்து பயற்சிகளும் அளிக்க வேண்டும். மேலும் பனை மையமே பனை சார்ந்த அனைத்து அரசு செயல்களும் ஒற்றை தொடர்பு புள்ளியாக இருக்க வேண்டும்
4) பனை மரங்களை அடங்கலில் சேர்க்கப்பட வேண்டும். இதுவரை அரசு நிலங்களில் இருக்கும் பனைகளை அரசு பாதுகாக்க வேண்டும். அரசு நிலங்களில் உள்ள பனை மரங்களை பனையேறிகளுக்கு மட்டும் குத்தகைக்கு விடவேண்டும்.
                                                                                     – தமிழ்நாடு கள் கூட்டமைப்பு

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news