Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

- Advertisement -

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை “Prevention” என்ற அமெரிக்க இதழ் பட்டியல் இட்டு உள்ளது.

அதில் வலுவான கால் தசைகள் முதலாவதாக குறிப்பிப்பட்டு உள்ளது. நலமான வாழ்க்கைக்கு வலுவான கால்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் இரண்டு வாரங்களுக்கு உங்கள் கால்களை நகர்த்தாவிட்டால், உங்கள் காலின் வலிமை 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்கிறது இந்த இதழ்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் நடந்த ஓர் ஆய்வில், வயதானவர்களும் இளம் வயதினரும் இரண்டு வாரங்களுக்கு செயலற்று இருந்தால், கால்களின் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு குறையக் கூடும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். நம் கால் தசைகள் பலவீனமடைந்தால், குறிப்பிட்ட காலம் பொருத்தமான உடற்பயிற்சிகள் செய்தால்தான் மீண்டும் வலு அடையும்.

எனவே, நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் மிகவும் இன்றியமையாதவை.நம் முழு உடல் எடையையும் நம் கால்கள்தாம் தாங்கி நிற்கின்றன. கால்கள் என்பவை மனித உடலின் எடையைத் தாங்கும் தூண்கள். ஒரு நபரின் எலும்புகளில் 50 சதவீதமும் தசைகளில் 50 சதவீதமும் இரண்டு கால்களிலும் உள்ளன.மனித உடலின் மிக வலிமையான மூட்டுகளும் எலும்புகளும் கால்களில்தாம் உள்ளன.

“வலுவான எலும்புகள், வலுவான தசைகள், நெகிழ்வான மூட்டுகள் – உறுதியான முக்கோணத்தை உருவாக்குகின்றன. ஒருவரது வாழ்க்கையில் 70% மனித செயல்பாடுகளும் 70% ஆற்றலை எரிப்பதும் இரண்டு கால்களால் மட்டுமே செய்யப்படுகின்றன.

இது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய தொடைகள் ஒரு சிறிய காரைத் தூக்க போதுமான வலுவைப் கொண்டு உள்ளன!

பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்தத்தின் மின்னோட்டம் சீராக ஓடுகிறது. எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக வலுவான இதயம் இருக்கும்.மனித உடலின் வயது மூப்பு கால்களிலிருந்து மேல்நோக்கி தொடங்குகிறது.

60 வயதிற்குப் பிறகும் கால்களுக்கு உரிய பயிற்சிகள் எடுப்பது என்பது ஒருபோதும் தாமதமாகாது. நம் கால்களுக்கும் படிப்படியாக காலப்போக்கில் வயது மூப்பு ஏற்படும் என்றாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணியாகும்.கால்களை வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதாவதைத் தடுக்க முடியும். கால்கள் போதுமான உடற்பயிற்சியைப் பெறுவதை உறுதி செய்யவும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாகவும் நெகிழ்வாகவும் இருப்பதை உறுதி செய்யவும் தினமும் குறைந்தது 35-45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

  • குணசேகரன்
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news