உலக அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடக்க நிலையில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு பின்னர் பெரிய அளவில் வளர்ந்து உள்ளன.
இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த தொழில் நிறுவனங்களாக மாறி உள்ளன. மேலும் இவை குறைந்த முதலீட்டில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஊரக மற்றும் நகர்ப் புற பகுதிகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கி உள்ளன. வட்டார அளவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை குறைத்து பொருளாதாரம் சம அளவில் இருக்க உதவுகின்றன. இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சார்பு நிறுவனங்களாக உள்ளன.
தமிழ் நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு விதமான பொருட்களை தயாரிக்கின்றன. இவற்றில் முன் நிற்பவை ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி துணைப் பொருட்கள், தோல் பொருட்கள், இரசாயனம், பிளாஸ்டிக் உறுப்புகள், ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் முதலானவை
தமிழ்நாட்டில் msmeonline.tn.gov.in எனும் இணைய தளம் வாயிலாக தொழில் முனைவோர் ஒப்புதல் பதிவறிக்கை பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரையறை:
நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி இந்நிறுவனங்களை எந்திரம் மற்றும் தளவாடங்களின் (நிலம் மற்றும் கட்டடங்கள் தவிர) முதலீட்டின்படி வரையறுக்கப்பட்டு உள்ளது.
சிறு தொழில் முனைவோர் பதிவறிக்கை பதிவு செய்தல்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுச் சட்டம் 2006ன்படி தொழில் முனைவோர் பதிவறிக்கை (தொ.ப.) அறிமுகப்ப டுத்தப்பட்டு உள்ளது. குறு மற்றும் சிறு உற்பத்தி/ சேவை தொழில்கள் விருப்பத்தின் அடிப்படையில் இது பதிவு செய்யப்படுகிறது. ஆயினும், நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு இப்பதிவு கட்டாயமானது. எந்த ஒரு தொழில் முனைவோரும் msmeonline. tn.gov.inஇணையதள வழியாக தொழில் முனைவோர் பதிவறிக்கை ஒப்புகையினை மாவட்ட தொழில் மையத்திற்கு செல்லாமலே பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் தொழில் முனைவோரி டையே வரவேற்பினை பெற்று உள்ளது.
மானியத் திட்டங்கள்:
மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைத் திட்டங்கள் கீழ்வருமாறு:
முதலீட்டு மானியம்:தகுதியான எந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிக அளவாக ரூ.30 இலட்சம் வரை.
மகளிர், பட்டியலிடப்பட்ட இனம்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகிய தொழில் முனைவோருக்கு தகுதியான எந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம், கூடுதல் முதலீட்டு மானியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதியான எந்திரத் தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிக அளவாக ரூ.30 இலட்சம் வரை.
மகளிர், பட்டியலிடப்பட்ட இனம்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகிய தொழில் முனைவோருக்கு தகுதியான எந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம், கூடுதல் முதலீட்டு மானியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியச் சான்றின் பேரில் அந்நிறுவ னங்களுக்கு தகுதியான எந்திர தளவாடங்கள் மீதான முதலீட்டின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.3 இலட்சம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
உற்பத்தி தொடங்கிய நாளில் இருந்து முதல் 5 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்குள், குறைந்த பட்சம் 25 வேலையாட்களைப் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு அவற்றின் தகுதியான எந்திர தளவாடங்களின் மீதான முதலீட்டின் மதிப்பில் 5 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடிப்படைத் தகுதி:
மாநிலத்தில் எப்பகுதியிலும் நிறுவப்படும், அனைத்து புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள்.
தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் நிறுவ ப்படும் கீழ்க்கண்ட 13 சிறப்பு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் (கூடுதல் முதலீட்டு மானியம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் நீங்கலாக)
- மின் மற்றும் மின்னணு பொருள்கள்
- தோல் மற்றும் தோல் பொருள்கள்
- வாகன உதிரி பாகங்கள்
- மருந்து மற்றும் மருத்துவ பொருள்கள்
- சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள்
- ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள்
- மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்
- விளையாட்டுப் பொருள்கள் மற்றும் உதிரிபாகங்கள்
- சிக்கன கட்டுமானப் பொருள்கள்
- ஆயத்த ஆடைகள்
- உணவு பதப்படுத்துதல்
- பிளாஸ்டிக் பொருட்கள்
- ரப்பர் பொருட்கள்
- தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 251 வட்டாரங்களில் அமைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
மாநிலத்தின் 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண் சார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்.
மேற்கண்ட வகையை சார்ந்த தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழில்கள் துவங்கும் பொழுது.
குறைந்தழுத்த மின் மானியம்:
20 விழுக்காடு குறைந்த அழுத்த மின் மானியம், வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிய நாள் அல்லது மின்இணைப்பு பெற்ற நாள் இவற்றில் எது பிந்தியதோ அந்நாளிலிருந்து 36 மாதங்களுக்கு வழங்கப்படும்.
மதிப்பு கூட்டு வரிக்கு ஈடான மானியம்:
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, அவற்றின் எந்திர தளவாடங்களின் மதிப்புக்கு ஈடான தொகை, அவை உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டு வரிக்கு ஈடாக அவர்களுக்கு 100 சதவிகிதம் திருப்பி வழங்கப்படும்.
மின்னாக்கி மானியம்:
இம்மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் எப்பகுதியிலும் அமைந்து உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் வாங்கி உள்ள மின்னாக்கியின் மதிப்பில் 25 விழுக்காடு (320 ரிக்ஷிகி வரை) அதிக அளவாக ரூ. 5 இலட்சம் வரை மின்னாக்கி மானியம்
பின்முனை வட்டி மானியம்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனப் படுத்துதல், கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் ஆகியவற்றிற்காக வாங்கும் ரூ.1 கோடி வரையிலான கடன்களின் மீது 5 ஆண்டுகளுக்கு அதிக அளவாக ரூ. 10 இலட்சத்திற்கு கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு என்ற அளவில் பின்முனை வட்டி மானியமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read: புதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்!
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீன படுத்துதல், தேசிய பங்கு நிதி திட்டம், பன்னாட்டு தரநிலைப்படுத்தல் நிறுவனத்தின் தரச்சான்று பெறுதல், காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கான காலக் கடன்களுக்கும், 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில் நுட்ப மேம்பாட்டுக்கான திட்டங்கள்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட் டிற்காக கீழ்கண்ட திட்டங்கள் உள்ளன:-
உரிமைக்காப்பு (கண்டறிதல் உரிமை) பதிவு விண்ணப்பத்திற்கான தொகையில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.2 இலட்சம் மானியம்.
வர்த்தக குறியீடு (டிரேட் மார்க்) பதிவு தொகையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம் தொழில் குழுமங்கள் மற்றும் சிறு கருவி மையங்கள் அமைப்பதற்கு, அவற்றின் திட்டமதிப் பீட்டில் 25 விழுக்காடு, அதிக பட்சமாக ரூ.1 கோடி வரை மானிய உதவி.
தூய்மையான, மின் திறனுள்ள தகவல் தொழில் நுட்பம் சார்புடைய தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ஏற்படுத்துதல், நேர்த்திமிகு மையங்கள் மற்றும் தொழில் நுட்ப வணிக சேவை வளர்ப்பகங்களை உருவாக்கி அதன் மூலம் நவீன உற்பத்தி உத்திகள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு மேற்கொள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப வணிக சேவை வளர்ப்பகம் / நேர்த்திமிகு மையத்திற்கும் ரூ.50 இலட்சம் வரை மானிய உதவி.
சந்தை வாய்ப்பு உதவி:
அரசு, குறு மற்றும் சிறுதொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கீழ்க்கண்ட சந்தை வாய்ப்பு உதவிகளை வழங்குகிறது –
ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொள்வதற்கு முன்வைப்புத் தொகை செலுத்துவதிஸீயீ sருந்து விலக்கு.
இம்மாநிலத்திலும் மற்றும் மற்ற மாநிலங் களிலும் நடைபெறும் பொருட்காட்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்புடைய சங்கங்கள் கலந்து கொள்ளும் நேர்வுகளில் அரங்க வாடகையில் 50 விழுக்காடு மானியம் பொதுவான பெயர் அல்லது பொது வணிக சின்னத்தில் விற்பனை செய்ய ஆதரவு அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துப் படுகின்றன. இவற்றை தொழில் முனைவோர் முயன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
-விகாஸ்