ஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்?

ஆண்டு ஒன்றிற்கு ரூ5 கோடிக்கு மிகாமல் விற்பனை வருமானம் உடையவர்களின் வசதிக்காக 27 ஆம் ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அறிக்கை வழங்குவதை எளிமைப்படுத்தி சஹாஜ் (SAHAJ), சுகம் (SUGAM) ஆகிய இரு வடிவங்களில் அறிக்கைகளை வழங்கினால் போதும் எனும் எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.


சஹாஜ் எனும் அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அறிக்கையாக வழங்கினால் போதும். ஆயினும் தாம் வழங்கும் பொருள் அல்லது சேவையானது B2C எனும் வகையில் அதாவது வணிகரிடம் இருந்து நேரடியாக நுகர்வோருக்கு என்ற வகையில் இருக்க வேண்டும்.


உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப் படாது. இணையம் வாயிலான விற்பனையை நிகழ்த்துபவர்கள் இந்த வகை அறிக்கை வழங்க அனுமதிக்கப்பட மாட்டா£ர்கள்.


இவ்வாறான விதிமுறைகளுக்கு உடபட்ட வர்கள் இந்த சஹாஜ் அறிக்கையை வழங்க விரும்பினால் ஜிஎஸ்டி இணைய தளத்தில் SAHAJ எனும் வகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் நாம் வழங்க விரும்புவது காலாண்டு அறிக்கையா, அல்லது மாதாந்திர அறிக்கையா எனவும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


இந்த வகையில் காலாண்டு அல்லது மாதாமாதம் என்ற இரண்டிற்கும் இடையே மாறிக் கொள்ளும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆயினும் சஹாஜில் இருந்து சுகம் அறிக்கைக்கு மாறும்போது, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே என்ற வரையரை எதுவும் இல்லை.


சுகம் எனும் அறிக்கை வழங்கவும் விற்பனை வருமானம் ரூ5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். B2B அல்லது B2B ஆகிய அதாவது வணிகரிடம் இருந்து வணிகருக்கு; வணிகரிடம் இருந்து நுகர்வோருக்கு ஆகிய இரு வழிகளில் செயல்படுபவர்கள் இந்த வகையில் ஜிஎஸ்டி அறிக்கையை வழங்கக அனுமதிக்கப்படுகின்றது.


இதிலும் உள்ளீட்டு வரிக்கழிவு அனுமதிக்கப்படுவது இல்லை. இணையம் வாயிலான வணிகத்துக்கு இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது. மூன்று மாதத்திற்கு ஒருமுறையான காலாண்டு அறிக்கையாக அல்லது மாதாந்திர அறிக்கையாகவும் வழங்கலாம்.


மூன்றாவதாக RET-1 எனும் படிவம். இந்த படிவத்தை வழங்க விரும்புவோர், தாம் வழங்கும் பொருள் அல்லது சேவை B2B ஆக அதாவது வணிகரிடம் இருந்து வணிகருக்கு செல்லும் வகையில் இருக்க வேண்டும். இதில் உள்ளீட்டு வரிக் கழிவு அனுமதிக்கப்படும். இணையம் வாயிலான விற்பனையாளர்களும் இதில் அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here