சில இணைய தளங்கள் நம் திறமைகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டுவதற்கு வாய்ப்பு தருகின்றன. இவை தரும் பணி வாய்ப்புகளை முழு நேரமாக அல்லது பகுதி நேரமாகச் செய்து முயற்சிக்கலாம். அவற்றுள் சில தளங்கள் –
Upwork
இந்த தளம் 12 மில்லியன் பயனாளர் களையும், பல்வேறு வாடிக்கையாளர் களையும் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் அல்லது பணிக்கும் எவ்வளவு என தனித்தனியாக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, நம் பணிக்கேற்றவாறு அல்லது கால அளவிற்கு ஏற்றவாறு தொகை வழங்கப்படுகின்றது. மனுழுத்துப் பணி, வடிவமைத்தல், விர்ச்சுவல் உதவியாளர்களாக செயல்படுதல் போன்ற பல பணிவாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் விவரங்களுக்கு upwork.com என்ற தளத்துக்கு செல்லவும்.
Fiverr
இது அனைத்து வகையான பணிகளும் கிடைக்கச் செய்கின்றது. பணிவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும், பணி செய்வோருக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக விளங்குகிறது. மேலும் இந்த தளத்தின் வாயிலாக நம் சேவையை விற்பனை செய்ய முடியும். இதில் பணி ஒன்றிற்கு அடிப்படை ஊதியம் ஆறு டாலரில் இருந்து தொடங்கு கின்றது. fiverr.com/> என்ற இணைய தளத்துக்குச் சென்றால் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
People per Hour
இது கணினி செயல் திட்டங் களான devel opers, SEO, writers, coders ஆகிய வற்றில் அதிக பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. இதில் உள்ள WorkStream எனும் கருவி, நிறுவனங்களையும் பணிபுரிபவர்களையும் இணைக்கிறது. நாம் செய்யும் பணிகளைப் பற்றிய விவரங்களை வீடியோ படங்களாக இதில் பதிவு செய்து கொண்டால், நமக்கு ஏற்ற பணி வாய்ப்புகள் வரும்போது, அவற்றை நமக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கின்றது. நமக்கான பணியை பெறவும், தொடர்ந்து பணிக்கான தொகை கிடைக்கவும் இடைமுகமாக செயல்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு peopleperhour.com.
Guru
நீண்ட காலமாக வேலை வாய்ப்புகளை வழங்கும் இணைய தளம். இது தொழில்நுட்ப திட்டங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்குகிறது. நாம் நமது விவரங்களை இதில் பதிவு செய்து கொண்டால், அதனை பார்வையிடும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றவர் களை தேர்வு செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது குறிப்பிட்ட பணி முடிப்பதற்கு மட்டுமென தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு .guru.com.
99 Designs
வடிவமைப்பாளர்களுக்கான பணி வாய்ப்புகளை வழங்கிடும் இணய தளமாகும். இது அனைத்து வாடிக்கை யாளர்களுடனும் இணைப்பினை ஏற் படுத்தி தங்களின் வடிவமைப்புத் திறனை காண்பிக்குமாறு செய்கின்றது. வாடிக்கை யாளர்களும் தங்கள் தேவை தொடர் பான விவரங்களை வழங்கி அவற்றுக் கான டிசைன்கள், லோகோக்களை வடி வமைத்துத் தரும் பணிவாய்ப்புகளை வழங்குகின்றனர். 99designs.com என்ற இணையத்தில் இருந்து மேலும் விவரங்களைப் பெறலாம்.
iFreelance
இது photography, videography, traditional art, writing, marketing, architecture translation, engineering என்பன போன்ற பல்வேறு வகையான பணிகளை வழங்கும் இணைய தளமாகும். இதில் நம் விவரங்களை பதிவு செய்து கொண்டு நமக்கான பணிகளைத் தேடிப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு ifreelance.com.
Freelancer
இது சந்தைப்படுத்தல், எழுத்துப் பணிகள், வெப் டிசைன் என்பன போன்ற பணிகளை வழங்கும் ஒரு இணைய தளம். இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பணப் பரிசுகளின் வாயிலாக தங்களுக்கு தேவையான பணிபுரிபவர்களை தேர்வு செய்கின்றனர். மேலும் விவரங்களுக்கு freelancer.com.
-குப்பன்