கூகுள் மை பிசினசில் பதிவு செய்யுங்கள் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் -4

கூகுள் வழங்கும் கூகுள் மை பிசினஸ் (Google My Business) என்பது ஒரு இலவச சேவையாகும். இணையத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நம் தொழில் விவரங்களை பதிவு செய்து விட வேண்டும். நம் வலைத்தளம் என்று மட்டும் இல்லாமல் இணையத்தில் பரவலாக நம் தொழில் தொடர்பான விவரங்கள் பரவி இருந்தால் வாடிக்கையாளர்கள் தேடும்பொழுது நம் தொழில் பற்றிய செய்திகள் அவர்களுக்கு தெரிய வரும். அப்படி நம் தொழில் பற்றிய விவரங்கள், பொருட்கள் பற்றி பதிவு செய்யும் ஒரு இடம்தான் கூகுள் மை பிசினஸ் ஆகும்.


சொந்தமாக வலைத்தளம் இல்லாதவர்களும் கூகுள் மை பிசினசில் பதிவு செய்து பொருட்களை விற்பனை செய்யலாம். ஒருவர் வலைத்தளத்தில் பொருட்களை அல்லது நிறுவனத்தை தேடும் பொழுது அந்த நிறுவனம் கூகுள் மை பிசினசில் பதிவு செய்து இருந்தால் கூகுள் மேப், உடனே அந்த பொருட்களை, நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை கூகுள் வழங்கும். சான்றாக ValarThozhil என்று கூகுளில் தேடிப் பார்த்தால், வலது பக்கம் வ்ளர்தொழில் இதழ் தொடர்பான விவரங்கள், வலைத்தள முகவரி, அலுவலகம் அமைந்து உள்ள இடத்தின் கூகுள் மேப், தொடர்பு எண், அலுவலக வேலைநேரம் என்று பல தகவல்கள் இருப்பதை பார்க்க முடியும்.


யாரெல்லாம் இதில் பதிவு செய்யலாம்? வலைத்தளம் வைத்திருப்பவர்களும், வலைத்தளம் இல்லாதவர்களும் தங்கள் நிறுவனம் பற்றி, பொருட்கள் பற்றி பதிவு செய்து காட்சிப்படுத்தலாம்.


google.com/business என்ற வலைத்தள முகவரிக்கு சென்று உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கைக் கொண்டு பதிவு செய்யுங்கள். (கூகுளின் ஒரு கணக்கை அனைத்து கூகுள் சேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.)


முதலில் உங்கள் தொழில் பெயர் கொடுத்து அடுத்த பக்கத்திற்கு சென்றால் அங்கு, வாடிக்கையாளர் உங்களைத் தேடி வர வேண்டிய தொழில் என்றால் ஆம் என்று தேர்ந்து எடுத்து அடுத்த பக்கத்திற்கு சென்று முழு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: பணி வாய்ப்பு தரும் இணைய தளங்கள்


இவை முடிந்த பிறகு, அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் அங்கு உங்கள் தொழில் எந்த வகை (Category) என்று தேர்ந்து எடுக்க வேண்டும். சான்றாக மொபைல் ஃபோன் விற்பனை செய்கிறீர்கள் என்றால், எலக்ட்ரானிக் வகை என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த பக்கத்தில் மற்ற விவரங்கள் கொடுத்து முடித்த பிறகு அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


இந்தப் பக்கத்தில் உங்கள் தொடர்பு எண் கொடுக்க வேண்டும் மற்றும் உங்களுக்கு வலைத்தளம் இருந்தால் அதன் முகவரி கொடுங்கள். முகவரி கொடுத்த பிறகு அதன் கீழ் கூகுள் கூட உங்களுக்கு இலவசமாக வலைத்தளம் வழங்கும். தேவை என்றால் அதனை தேர்ந்து எடுங்கள், வேண்டாம் என்றால் அதனை தவிர்த்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.


இந்தப் பக்கத்தில் எந்த தகவல்களும் தர வேண்டாம். Finish என்பதை தேர்ந்து எடுங்கள். இப்பொழுது நீங்கள் கொடுத்து உள்ள முகவரிக்கு அந்த முகவரி சரியானதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள கூகுள் ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.


முழுவதும் சரியான தகவல்களைக் கொடுக்க வேண்டும். இலவச சேவை என்பதற்காக தவறான தகவல்களைக் கொடுக்கக் கூடாது.

தகவல்: தமிழ் தொழில்நுட்ப செய்திகளை படிக்க, தமிழ் கம்ப்யூட்டர்.

அனைத்தும் முடிந்து கூகுள் மை பிசினஸ் உள்ளே சென்று information என்பதை தேர்ந்து எடுத்து உங்கள் அலுவலகம் திறந்து இருக்கும் நேரம் போன்றவற்றை தந்து விடுங்கள். அங்கு கேட்கப்படும் தகவல்கள் அனைத்தையும் முடிந்த வரை தந்து விட்டால் வாடிக்கையாளர்கள் நம் தொழில் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

create post என்பதை தெரிவு செய்து உங்கள் பொருட்கள் பற்றி படங்கள், விவரங்கள், விலை போன்ற தகவல்கள் கொடுத்து சேமித்து விட்டால் அவை வாடிக்கையாளர் பார்வைக்கு தெரிய வரும். யாருக்கு தேவையோ அவர்கள் கூகுள் மை பிசினஸ் மூலம் வாங்க முடியும். நம் தொழில் அடுத்த நிலைக்கு செல்ல கூகுள் மை பிசினஸ் ஒரு அருமையான தேர்வு ஆகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய நினைப்பவர்கள் அனைவரும் கூகுள் மை பிசினசில் பதிவு செய்தால் பயன் கிடைக்கும்.

ஒரு நாள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் பங்கு பெறுங்கள்.

-செழியன். ஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here