Sunday, October 25, 2020

சின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்

வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...

Latest Posts

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்

சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...

கூகுள் அனாலிடிக்சை பயன்படுத்துவது எப்படி? டிஜிட்டல் மார்க்கெட்டிங் – 3

டிஜிட்டல் மார்கெட்டிங்கில் தொடக்கத்தில் சில அடிப்படை செயல்களைச் செய்து விட வேண்டும். நம் தொழில், பொருட்களை பற்றி விளம்பரம் செய்வது மட்டும் டிஜிட்டல் மார்க்கெடிங் இல்லை. ஒரு வீடு அழகாக கட்டுவதற்கு முதலில் தேவையான அளவுக்கு கடைக்கால் கட்ட ஆழமான பள்ளம் எடுத்து, கட்டுமானத்தைத் தொடங்கு வார்கள். அங்கிருந்து எழுப்பி வருவார்கள். பள்ளம் இல்லாமல் எப்படி வீடு கட்ட முடியாதோ அதேபோல் டிஜிட்டல் மார் கெட்டிங் செய்யவும் சில அடிப்படைப் பணிகளைச் செய்ய வேண்டும். அத்தகைய அடிப்படைகளில் ஒன்றுதான், கூகுள் அனாலிடிக்ஸ் (Google Analytics) ஆகும்.


வணிகம் செய்யும் பலரும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விற்பனையாகும், எந்த நாட்களில் அதிகமாக விற்பனை ஆகிறது; எந்த நாட்களில் குறைவாக விற்பனை ஆகிறது; எந்த பொருள்கள் அதிகம் வாங்கப்படுகின்றன போன்ற தகவல்களை துல்லியமாக தெரிந்து அதற்கு ஏற்றாற் போல் செயல்படுவார்கள். சான்றாக பல சரக்குக் கடை வைத்து இருப்பவர் களுக்கு, மாதம், முதல் ஐந்து நாட்கள், முகூர்த்த நாட்கள், விழா நாட்களில் நல்ல விற்பனை யாகும். மாதக் கடைசி நாட்களில் விற் பனை குறைவாக இருக்கும் என்பதும், இந்த பகுதியில் எந்தெந்த பொருட்கள் அதிகம் விற்பனையாகும் என்பது போன்ற தகவல் களை தெரிந்து அதன்படி வணிகம் செய்வார்கள். இதே போல் நம் வலைத் தளத்தை பற்றிய தகவல்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் ஒருநாள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

யாரெல்லாம் நம் வலைத்தளத்தைப் பார்க்கிறார்கள், எந்த நாட்டில், மாநிலத்தில், ஊரில் இருந்து வலைத்தளத்திற்கு வருகிறார்கள், வலைத்தளத்தில் எந்த பக்கத்தை, பொருட்களை அதிகம் பேர் பார்க்கிறார்கள், ஆண் – பெண் எத்தனை பேர் இதில் அடக்கம், கணினி மற்றும் மொபைல் வழியாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை, எந்த ப்ரவ்சர் மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய தகவல்கள், இது போல் இன்னும் துல்லியமான தகவல்களை நம் வலைத்தளத்தை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.


இவ்வளவு தகவல்களையும் எப்படி பெறுவது?


பணம் செலுத்தி தகவல்கள் தரும் மென்பொருட்கள் உண்டு. ஆனால் கூகுள் இவற்றை நமக்கு இலவசமாகவே தருகிறது. அதுதான் கூகுள் அனாலிடிக்ஸ் ஆகும்.


நம் ஜிமெயில் முகவரி கொண்டு analytics.google.com என்ற வலைத்தளத்தில் signup செய்து கொள்ள வேண்டும். பெயர், வலைதள முகவரி (Website URL) கொடுத்து பதிவு செய்தால் tracking id ஒன்றை வழங்கும். இரண்டு விதமான Tracking id வழங்கும். ஒன்று Code மற்றொன்று Number வடிவில் இருக்கும். உதாரணம் Number Tracking ID- UA-456983284-1 மற்றும் code tacking id – கீழே உள்ளது போல் இருக்கும்.


[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o), gtag(‘config’, ‘UA-456983284-1’);


உங்களது வலைத்தளம் wordpress அல்லது blogger வழியாக உருவாக்கப்பட்டிருந்தால் அதற்கு Number id யை அனாலிட்டிக் என்ற இடத்தில் பதிவு செய்தால் போதும்.


HTML மொழியைகொண்டு உருவாக் கப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு code எடுத்து உங்கள் வலைத்தள வடிவமைப் பாளரிடம் கொடுத்தால் அவற்றை எச்டிஎம்எல் பக்கத்தில் பதிவு செய்து தருவார்கள். அனைத்து பக்கங்களிலும் பதிவு செய்து கொடுக்க சொல்லுங்கள்.


அடிப்படையான இந்த பணி முடிந்த உடன் கூகுள் உங்கள் வலைத்தளத்தை கண்காணிக்கத் தொடங்கி, மிகத் துல்லி யமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கி விடும். மாதம் ஒரு முறை தகவல்களைப் பார்த்து அதற்கு தகுந்த முறையில் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தலாம்.


ஒவ்வொரு முறையும் கூகுள் அனாலி டிக்ஸ் உள்ளே சென்று அனைத்து தகவல்களையும் பார்க்கலாம். எந்த ஊரில் இருந்து பார்க்கிறார்கள் என்று தகவல் களைக் கொண்டு அந்த ஊருக்கு முன்னுரிமை கொடுத்து சலுகைகள் கொடு ப்பது, புதிய கிளை திறப்பது என்று முடிவு எடுக்கலாம் . எந்த ஊரில் அல்லது மா நிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களையும் நமக்கு கூகுள் வழங்குகிறது.


நிகழ் நேரத்தில் எத்தனை பேர் வலைத்தளத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் எந்த பக்கத்தை பார்க் கிறார்கள் என்பதை கூகுள் அனாலிடிக்ஸ் உள்ளே சென்ற உடன் டாஷ்போர்டில் (Dashboard) பார்க்கலாம்.


கூகுள் அனாலிடிக்சின் முதன்மைப் பணியே வலைத்தளத்திற்கு வருபவர்களின் தகவல்களை சேகரிப்பது மட்டுமே. அதைக் கொண்டு முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். சரியான தகவல்கள் கிடைப்பதால், தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க முடியும்.


இன்றைக்கு பெரும்பாலானோர் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் ஒரு வலைத்தளத்தை பார்வை இடுவது இல்லை. ஒருவர் நம் வலைத்தளத்தை எவ்வளவு நேரம் பார்வையிட்டு எந்த பக்கத்தை அதிகம் பார்த்து உள்ளார்கள் என்ற தகவலும் கூகுள் அனாலிடிக்ஸ் தருவதால், அந்த பக்கத்தில் இருக்கும் செய்திகள், படங்களை இன்னும் எப்படி மேம்படுத்தலாம், அவை தொடர்பாக வேறு என்ன சேர்க்கலாம் என்று முடிவு செய்யலாம். இதன் வழியாக பார்வையாளர்களை அதிக நேரம் வலையகத்தில் இருக்கச் செய்ய முடியும்.


ஒருவர் எந்த பக்கத்தில் இருந்து, எந்த பக்கத்திற்கு செல்கிறார் என்ற தகவலை அறிந்து, அதனை ஆராய்ந்து, அவர்கள் விரும்பும்படியான பக்கங்களை உருவாக்கலாம். இப்படி நிறைய தகவல்களை கூகுள் அனலிடிக்ஸ் தருவதால் நம் வணிக வளர்ச்சிக்கு பெரும் உதவியாய் இருக்கும். எனவே, இன்றே உங்கள் தொழில் தொடர்பான வலைத்தளத்தை கூகுள் அனாலிடிக்சில் இணைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை தகவல்களைப் பார்த்து அறிந்து கொண்டு வணிகத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆராய்ந்து செயல்படுங்கள்

-செழியன். ஜா

Latest Posts

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்

சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...

Don't Miss

கோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்!

கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்!...

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...

உலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது?

உணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...

மனிதன் படைப்பிலேயே சிறந்தது எது?

மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...

ஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா!

நிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.