Latest Posts

சட்டப் பெயர், வணிகப் பெயர் – என்ன வேறுபாடு?

- Advertisement -

வணிகப் பெயர் (Trade Name) என்பது ஒரு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள் அல்லது அந்த நிறுவனம் வழங்கும் சேவை பற்றி பொதுமக்கள் அறிந்து கொண்டிருக்கின்ற பிரபலமான பெயராகும். அதாவது நிறுவனம் உற்பத்தி செய்கின்ற அல்லது அளிக்கின்ற சேவையை பற்றி பொதுமக்கள் இடையே கிடைக்கும் புகழ் பெற்ற அல்லது நம்பிக்கை பெற்ற பெயரே வணிகப் பெயர் ஆகும்.


சட்டப்படியான (Legal Name) பெயர் என்பது அவ்வணிக நிறுவனத்தின் நடவடிக்கைகளை அரசுத் துறைகளாலும் நீதிமன்றங்களாலும் அறியப்படுகின்ற பெயராகும். அதாவது ஒரு அரசின் ஆவணங்களில் பதிவு செய்யப்படுகின்ற, பிற்காலத்தில் எந்தவொரு சிக்கல்களையும் தீர்வு செய்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற பெயரே சட்டப்படியான பெயராகும்


சான்றாக இண்டிகோ என்பது விமான சேவை செய்கின்ற நிறுவனத்தின் பெயர் என அனைவரும் அறிந்து வைத்து இருக்கின்றனர் இந்த பெயரே வணிகப் பெயர் ஆகும். அதற்கு பதிலாக நிறுவனங்களின் விவாகாரத் துறை பதிவேட்டில் இந்த இண்டிகோ எனும் விமான சேவை செய்கின்ற நிறுவனத்தின் பெயராக Interglobe Aviation Ltd என பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்ற பெயரே சட்டப்படியான பெயராகும்.


அவ்வாறே தமிழ்நாடு முழுவதும் தலப்பாகட்டு என்ற உடனே அனைவருக்கும் பிரியாணி என்ற உணவு நினைவில் தோன்றிடும். இந்த பெயர் வணிகப் பெயர் ஆகும். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள பல நகரங்களில் அந்த பிரியானி செய்கின்ற நிறுவனத்தின் பெயர் வெவ்வேறாக இருக்கக் கூடும்.


இந்த சட்டப்படியான பெயரைப் பற்றி பொதுமக்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் ஆவணங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயராக இதனை அறிந்து கொள்ள முடியும்.

-ச. குப்பன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news