சுற்றுலாத் தொழிலில் இணையம் ஏற்படுத்திய மாற்றங்கள்

0

யண ஏற்பாடு மற்றும் சுற்றுலாத் தொழில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் தொழில்களில் ஒன்றாகும். சில நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கு சுற்றுலாத் தொழிலையே நம்பி இருக்கும் நிலையும் உள்ளது. மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை வசூலித்து, சுற்றுலா அழைத்துச் செல்லும், சிறிய அளவில் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் முதல், பன்னாட்டு அளவில் பயண மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தரும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன.

 திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா
திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா

கண்டிப்பாக வரிசையில் நின்றுதான் தொடர்வண்டி பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டி இருந்த நிலை இன்றைக்கு அடியோடு மாறி விட்டது. அதே போல விமான பயணச் சீட்டுகளும், இருந்த இடத்தில் இருந்தே இணையம் வாயிலாக பதிவு செய்ய முடிகிறது. நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகளையும் இணையம் வாயிலாகவே பெற முடிகிறது.

இணையம் வந்த பிறகு எல்லா தொழில்களிலும் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைப் போலவே, சுற்றுலாத் தொழிலிலும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. உலகின் எந்த மூலைக்கு செல்வதற்கும் ஆன பயணச் சீட்டுகளையும், தங்கும் விடுதிகளையும் எங்கிருந்தும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆகும் செலவினங்ளையும் முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ள முடிகிறது.

தாங்களாகவே பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் என்றால், சுற்றுலா நிறுவனங்கள் வாயிலாக ஏற்பாடுகளைச் செய்து கொள்பவர்கள் மறுபக்கம். இவ்வாறு சுற்றுலா ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்களின் தேவை அண் மைக் காலமாக பெருகி வருகிறது. ஏற்பாடுகள் செய்து தருவதை ஒரு அனுபவமுள்ள சுற்றுலா நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டு நாம் எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் சென்று விட்டு வரலாம் என்று பலரும் கருதுவதே இதற்குக் காரணம்.

சுற்றுலா சேவை நிறுவனங்களுக்கு, இணையத்தின் வருகை மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. அவர்களின் பணியையும் எளிமையாக்கி உள்ளது. வெளிப்படைத் தன்மை அதிகரித்து உள்ளது. இணையம் சுற்றுலாத் தொழிலுக்கு அறிமுகமான காலத் தொடக்கத்திலேயே இணையத் தைப் பயன்படுத்தத் தொடங்கிய சுற்றுலா நிறுவனங்களில் ஒன்று மேக்மைடிரிப் (MakeMyTrip).

ஆன்லைன் பயண ஏற்பாட்டுச் சேவை நிறுவனங்களில் அதிக அளவில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ள நிறுவனம். இதன் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஆக இருப்பவர்,திரு. சவ்ஜன்யா ஸ்ரீவத்சவா. ஆன்லைன் வழி பயண ஏற்பாட்டுத் தொழில் பற்றி இவர் கூறிய போது, ”இந்த தொழில் துறையில் இன்று நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம். இதை ஒரு தனியார் சந்தை ஆய்வு நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மகிழ்ச்சிக்காக ஊர் சுற்றுபவர்களின் வேலையை எளிதாக்கித் தருவது தான் எங்கள் பணி என்று சொல்லலாம். மேலும் எல்லா தரப்பினருக்கும் இந்த சேவையை கொண்டு செல்வதும் எங்கள் இலக்கு ஆகும்.

இதற்கு நாங்கள் ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வது போக, வேறு பல முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.  குறிப்பாக எங்கள் இணைய தளத்தில் உள்ள நீங்களே உங்கள் விடுமுறை சுற்றுலாவை திட்டமிடுங்கள் என்ற டூ இட் யுவர் செல்ஃப் வசதி தங்களுக்கேற்ற பயணங்களை தாங்களே சிறப்பாக திட்டமிட உதவுகிறது. இதன் வாயிலாக வண்டிகளின் முன்பதிவு கிடைக்கும் நாட்கள், விடுதிகளில் அறைகள் கிடைக்கும் நாட்கள், கட்டண விவரங்கள் போன்றவற்றை முன்பே அறிந்து கொண்டு திட்டமிடலாம். வாடிக்கையாளர்களின் செலவழிக்கும் வசதிக்கு ஏற்ப, பின்னரும் சில சுற்றுலா சார்ந்த செயல்பாடுகளைச் சேர்த்துக் கொள்ளவும் இந்த வசதி பயன் உள்ளதாக இருக்கிறது.

இதே போல நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கும் இன்னொரு வசதி, வழி அறிவோம் என்ற பொருள் உள்ள ரூட் பிளானர். இதைப் பயன்படுத்தி, பயணம் செய்ய இருக்கும் இரண்டு முனைகளுக்கு இடையே உள்ள வெவ்வேறு வகையான வாய்ப்புகளை அறியலாம். விமானம் முதல் பேருந்து வரையில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் கட்டணங்களுடன் அறிந்து கொள்ளலாம்.

எங்கள் சேவைகளை சந்தைப்படுத்த பல்வேறு உத்திகளையும் செயல்படுத்துகிறோம். நாங்கள் அளிக்கும் தள்ளுபடித் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில் எங்களின் சேவைகளை ஏற்கெனவே பயன்படுத்தி உள்ள வாடிக்கையாளர்களை எங்களின் இணைய தளத்தை பார்வையிட உள்ள வாய்ப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்துகிறோம். மொபைல்களிலும் எங்கள் சேவைகளைப் பார்வையிட்டு பதிவு செய்யலாம். இதற்கான சிறந்த ஆப் எங்களால் வழங்கப்படுகிறது. இது இணையத்தை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களையும் இணையப் பயன்பாடு நோக்கி வரச் செய்கிறது.

இந்த துறையில் வளர்ச்சிக்கு உகந்த தரமான போட்டி நிலவுகிறது. இது எதிர்காலத்தில் இணையம் வழி டிராவல் வணிகத்தை இன்னும் மேல் எடுத்துச் செல்லும். ஆன்லைன் இணையம் வழி டிராவல் வணிகத்தைப் பொறுத்த வரை மிதக்கும் ஐஸ் கட்டியின் மேல் முனையை மட்டுமே தொட்டு இருக்கிறோம். இன்னும் அடையப்படாத பெரிய பகுதி உள்ளே மறைந்து இருக்கிறது.

மொத்தத்தில் சுமார் ஐம்பது முதல் அறுபது மில்லியன் வாடிக்கையாளர்கள் இணையம் வழி வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் டிராவல் வணிகத்தைப் பொறுத்தவரை இது சுமார் பதினைந்து மில்லியன் இருக்கக் கூடும். மீதி உள்ள முப்பத்தைந்து முதல் நாற்பது மில்லியன் பேர்கள் ஆன்லைன் பயன்பாடு பற்றித் தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிராவல் தொடர்பான பயன்பாட்டுக்காக இன்னும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இதை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். இணையம் வழியாக விடுதிகளுக்கு முன்பதிவு செய்பவர்கள் சுமார் பத்து விழுக்காட்டினர்தான். இங்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

தற்போது மக்களிடம் சுற்றுலா ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவர்களின் சுற்றுலாக் கனவை நிறைவேற்ற துணை நிற்பதுதான் எங்கள் பணி. இதற்கான சேவைகளை வழங்குபவர் என்ற நிலையில் இருந்து எங்களை நாங்களே பயண வல்லுநர்கள், அதாவது டிராவல் எக்ஸ்பர்ட் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.
வாடிக்கையாளர்கள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களிடம் பயண திட்டங்கள் குவியல் குவியலாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த திட்டங்களில் ஈடுபாடு இல்லை.

தங்களுக்கெனவே ஒரு திட்டத்தை அமைத்துக் கொள்ள விரும்பு கிறார்கள். அவர்களுக்கு ஏற்ப நாங்கள் செயல்பட வேண்டி இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு சுற்றுலா என்ற மனப்பான்மையும் மாறி வருகிறது. நீண்ட நாட்கள் செல்லும் ஒரு சுற்றுலாவை விட குறுகிய நாட்களில் அமையும் சுற்றுலாக்களை விரும்புகிறார்கள்.

ஒரு சுற்றுலா செல்வது என்றால் பல நாட்கள் திட்டமிட்டு, காத்திருந்து செல்வது பழங்காலமாகி விட்டது. இப்போது உடனுக்குடன் திட்டமிட்டு நினைத்த நேரத்தில் சுற்றுலா செல்ல விரும்பும் காலம் ஆகி விட்டது. இதற்கு ஏற்ப நாங்களும் வேகமாக செயல்பட வேண்டி இருக்கிறது.

எங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல பலவிதமான விளம்பர முயற்சிகளை மேற்கொள்கிறோம். தொலைக்காட்சி ஊடகம், பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் செய்தியைக் கொண்டு சேர்க்கிறது. வெளிப்புற விளம்பர போர்டுகளை அமைத்து மக்களிடம் நினைவூட்டுகிறோம். சில வானொலிகளிலும் எங்கள் விளம்பரங்கள் ஒலிக்கின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களையும் பெரிய அளவில் பயன்படுத்துகிறோம்.

சுமார் இருபத்தைந்து முதல் நாற்பது வயதுள்ள வாடிக்கையாளர்களையே நாங்கள் குறி வைக்கிறோம். அதே போல ஐந்து லட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் குறி வைக்கிறோம்.

நாடு முழுவதும் எங்களுக்கு பதினெட்டு அலுவலகங்கள் இருக்கின்றன. நாற்பது தனி உரிமை (ஃப்ரான்சைசி) பெற்ற நிறுவனங்களும் உள்ளன. நாங்கள் தற்போது நேரடி வணிகத்தை விட ஆன்லைன் வணிகத்திலேயே கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
ஆன்லைன் எனும்போது, ஒரு வாடிக்கையாளர் எல்லா போட்டி நிறுவனங்களின் கட்டண விவரங்கள், அவை தரும் சேவைகள், பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் அளித்துள்ள கருத்துரைகள் அடிப்படையிலேயே தேர்வு செய்கிறார்கள். எனவே கட்டண நிர்ணயம் தொடர்பாக நாங்கள் எச்சரிக்கையாகவே செயல்படுகிறோம். சேவை சரியில்லை என்றால் மறு நாளே இணையத்தில் ஏற்றி விடுகிறார்கள்.

உள்நாட்டைச் சேர்ந்த சுமார் முப்பதாயிரம் விடுதிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சம் விடுதிகளும் எங்கள் தொடர்பில் உள்ளன. மகிழ்வு உலாவை உண்மையிலே மகிழ்ச்சியாக்குவதில் விடுதிகளுக்கு பெரும்பங்கு உண்டு.

மொபைல்கள் தரும் இணைய வசதிகள் ஒரு புதுப் பாதையை அமைத்து வருகின்றன. எங்களிடம் தொடர்பு கொள்பவர்களில் சுமார் நாற்பது விழுக்காட்டினர் மொபைல் ஆப் வழியாகவே தொடர்பு கொள்கிறார்கள். எனவே மாநில மொழிகளிலும் ஆப்களை உருவாக்கி வருகிறோம். அவர்கள் தங்கள் தாய்மொழி வாயிலாகவே எங்கள் ஆப்களை பயன்படுத்தும் காலம் விரைவிலேயே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து எங்களின் சிந்தனையும், செயல்பாடுகளும் பயணங்களை எளிமையாக்குவது தொடர்பாகவும், வாடிக்கையாளர்களுக்கு சுமையற்ற மகிழ்ச்சியை கூடுதல் ஆக்கும் வாய்ப்புகளை தேடுவதுமாகவே இருக்கிறது.” என்றார்.

– நேர்மன்

பின்னலாடைத் தொழிலை கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்குக் கொண்டுவந்தவர்

0

திருப்பூர் பின்னல் ஆடைத் தொழிலின் தந்தை யார்? நண்பர் தி.மு.இராசேந்திரன் உடன் பேசிக்கொண்டு இருந்தேன். பின்னல் ஆடைத் தொழில் திருப்பூருக்கு அறிமுகமானது எப்படி என்ற கேள்வி எழுந்தது.          பின்னல் ஆடை துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா) முன்னாள் தலைவர் அகில் ரத்தினசாமி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன்.

profile
சங்கத்தின் வெள்ளி விழா மலரை அனுப்பி வைத்தார். அதில் இடம் பெற்றுள்ள கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன். கிறித்து பிறப்பதற்கு முன்பே நெசவுத் தொழிலுக்குக் கருவிகள் அறிமுகம் ஆகிவிட்டன. 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் பெருமளவில் கையினாலேயே ஆடைகளைப் பின்னிக்கொண்டு இருந்தனர்.

1589 ஆம் ஆண்டு வில்லியம் லீ என்ற ஆங்கிலேயர் பின்னல் ஆடைப் பொறியைக் கண்டுபிடித்தார். 1853 ஆம் ஆண்டு மாத்யூ டவுன்சென்ட் என்பவர் லாட்ச் (Latch) என்ற ஊசியைக் கண்டுபிடித்தார். இதைப் பயன்படுத்தி மிக எளிய பின்னல் கருவிகள் வந்தன.அவரது கண்டுபிடிப்பை, பக்ஸ்டார்ப் என்ற பிரெஞ்சுக்காரரும், லாம்ப் என்ற அமெரிக்கரும் காப்புரிமை பெற்று பெருமளவில் வணிகம் செய்யத் தொடங்கினார்கள்.
1867 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த உலகக் கண்காட்சி ஒன்றில், பக்ஸ்டார்ப், லாம்ப் ஆகியோர் வடிவமைத்த கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹென்றி எட்வர்டு டிபைட் அண்டு சீ என்ற நிறுவனத்தின் நிறுவனர், இக்கருவிக்கு ஐரோப்பாவில் காப்புரிமை பெற்று, பெருமளவில் விற்பனை செய்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லியம் காட்டன் என்பவர் பல்முனை என்கின்ற (Multihead) என்ற கருவி மூலம் செங்குத்து ஊசியும், ஊசி பிணைப்பு தகடு செலுத்தும் முறையையும் அறிமுகப் படுத்தினார்.

இதே நூற்றாண்டில் பீட்டர் ஸ்காட் தொழிற்கூடத்தில், முதன் முதலாக பெண்களுக்கான பின்னல் ஆடைகள் தைக்கப் பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தொழில் வேகமாக வளரத் தொடங்கியது. அங்கிகள், கோட்டுகள், விளையாட்டு ஆடைகள் பின்னல் இழைகளால் பின்னப்பட்டன.

1893 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பின்னல் கருவிகள் இறக்குமதியாகின. கொல்கத்தாவில் கிட்டர்பூர் என்ற இடத்தில் சிறிய அளவில் பின்னல் ஆடை நெசவு நடைபெற்றது.

1935 ஆம் ஆண்டு திருப்பூர் முன்சீப் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த திரு. முகம்மது கவுஸ் புதல்வர் திரு. எம்.ஜி. குலாம் காதர், தான் நடத்தி வந்த சினிமா தொழில் தொடர்பாக கொல்கத்தா நகருக்குச் சென்றபோது, அங்கு ஒரு வீட்டில் கையால் இயங்கக்கூடிய பின்னல் பொறியில் பனியன் நூற்பதைக் கண்டார். அதில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. கொல்கத்தாவின் பல பகுதிகளில் குடிசைத் தொழிலாக நடந்து கொண்டு இருந்த பல வீடுகளுக்குச் சென்று பார்த்தார். அந்தப் பொறியை வாங்கிக் கொண்டு திருப்பூருக்கு வந்தார். காதர்பேட்டை பகுதியில் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பனியன் ஆடைத் தொழிலகத்தை நிறுவினார்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் பெத்தி செட்டிபுரம் என்று அழைக்கப்படும் ராயபுரம் பகுதியில், பெத்தி செட்டியாரின் மருமகள் திருமதி செல்லம்மாள், செல்லம்மாள் நிட்டிங் என்ற பெயரில் பனியன் தொழிலைத் தொடங்கினார்.

இவர்கள் இருவரும்தான் திருப்பூர் பனியன் தொழிலின் முன்னோடிகள். அந்தக் காலத்திலேயே ஒரு பெண் தொழில் முனைவோராகத் திகழ்ந்து இருக்கின்றார் என்பது தமிழகத்திற்கே ஒரு பெருஞ்சிறப்பு.

1930-களின் தொடக்கத்தில் திருவாரூரில் பேபி டாக்கீஸ், நாகப்பட்டினத்தில் ராபின்சன் ஹால் ஆகிய திரை அரங்கு களை நடத்திக் கொண்டு இருந்தவர்கள், எம்.ஜெ. குலாம் காதரின் உறவினர்கள்.

குலாம் காதர் பனியன் நிறுவனம் 1980 வரையிலும் நடைபெற்றது. அவர்களது ஒரு குடும்பம் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குப் போய் விட்டது. தற்போது அவருடைய பேரன் திரு. லியாகத் அலிகான் வேறு பெயரில் தொழில் நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

குலாம் காதர் அவர்களை, ‘திருப்பூர் பனியன் தொழிலின் தந்தை’ என, பனியன் துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) ஏற்றுக் கொண்டு இருக்கின்றது. சங்க வெள்ளி விழாவின்போது, குலாம் காதர் அவர்களுடைய வழித்தோன்றல்களை அழைத்துச் சிறப்புச் செய்து உள்ளனர்.

– அருணகிரி

என் தொழில், இசை!

0

ருபத்தி நான்கு ஆண்டு கால இசைப் பயணத்தில் கிட்டார் வாசிப்பாளராக, மேடை இசையமைப்பாளராக, மெல்லிசைப் பாடகராக ஒலிப்பதிவாளராக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டவர், திரு. ஸ்டீபன் ராயல். திரைப்பட                 இயக்குநர் சஞ்சய்ராம் உதவியுடன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இனி அவர் கூறியதிலிருந்து;

“எனக்கு சொந்த ஊர் எல்லப்பட்டி. மூணாறு தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ளது. நான், என் தாய் தந்தைக்கு 12ஆவது மகன். குடும்ப பொருளாதார சிக்கலில் உழன்றாலும், தனக்கான இரையை தானே தேடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், 1990ல் சென்னைக்கு வந்தேன்.

முதலில் சாந்தோம் கம்யூனிகேசன் மைய ஒலிப்பதிவு கூடத்தில் சிறிய வேலை கிடைத்தது. ஒலிப்பதிவு கூடத்தில் வேலை பார்த்ததால் நாமும் இசைக்கருவி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கிட்டார் இசையைக் கற்றுக் கொண்டேன்.

பின்னர், ஜெயஸ்ரீ ஒலிப் பதிவு கூடத்தில் வேலை கிடைத்தது. ஜெயஸ்ரீ ஒலிப் பதிவு கூடம் இசைஞானி இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்கள் பயன்படுத்திய கூடம். அதாவது, இசையமைப்பாளர் அனிருத் தாத்தாவின் ஒலிப்பதிவு கூடம். அங்கேதான் ஒலிப்பதிவு செய்யும் நுட்பத்தைக் கற்றுக் கொண்டேன்.
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வமணி ஒலிப்பதிவுக் கூடம் என்ற பெயரில் சொந்தமாக ஒலிப்பதிவு செய்யும் தொழிலை தொடங்கினேன். சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒலிப்பதிவு கூடம், இன்று ரூ.50 லட்சம் செலவில் விரிவாக்கப்பட்டு, பின்னணி பாடுதல், பின்னணி இசை, பின்னணி பேசுதல் மற்றும் எடிட்டிங் என பல பிரிவுகளை உள்ளடக்கிய பெரிய தொழிலகமாக உள்ளது.

தமிழ் பாடல்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் ஆல்பம் (Album) தயாரிக்க விரும்பும்போது என்னையே தேடி வருகிறார்கள்.

தமிழ் மீது பற்று கொண்ட தமிழன் நான் என்பதால் அவர்கள் எங்கள் நிறுவனத்தை விரும்புகிறார்கள். அதன் பயனாக சுமார் ஐநூறு பாடல் ஆல்பங்களுக்கு இசையமைத்து தயாரித்துக் கொடுத்திருக்கிறேன்.

திரு.வைகோ, திரு. திருமாவளவன், திரு. சீமான் போன்ற அரசியல் தலைவர்களின் கொள்கைப் பாடல்களை என் கூடத்தில்தான் ஒலிப்பதிவு மற்றும் இசை அமைத்து வாங்கிச் செல்வார்கள்.

என்னுடைய இசையமைப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆற்றலைப் பார்த்து, திரைப்பட இயக்குநர் திரு. சஞ்சய் ராம், குற்றாலம் என்கிற படத்திற்கு இசையமைக்க வைத்தார்.
அந்தத் திரைப்படம் வெளிவரும் முன்பே ஆனந்த மழை, ஒரு ஓவியம் உயிராகிறது. அதிர்ஷ்டம் 143, முத்துராமலிங்க தேவர் என நான்கு திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

முன்பைவிட இப்போது இசையமைப்பதற்கு புதிய கருவிகள் அதிகம் வந்து உள்ளன. அதனால், வாய் மொழி பாடல், இசை, ராகம் போன்றவற்றை படிக்காதவர்கள்கூட எளிமையாக பாடிவிடலாம்.

காரணம், அவர்களில் குரலை மாற்றி அமைக்கும் வகையிலான டோன்ஸ், பிளக்கிங்ஸ் கருவிகள் மற்றும் குரல், சுதியை மாற்றி அமைக்கும் மென்பொருள்கள், இசைத் தொகுப்புக்கான சி.டி.கள் என வந்து குவிந்து உள்ளன. எனவே, இன்றைக்கு இசை அமைப்பது எளிது. நிலைத்து நிற்பது தான் கடினம்.

- திரு. ஸ்டீபன் ராயல்
v – திரு. ஸ்டீபன் ராயல்

நிலைத்து நிற்பதற்கு கிரியேட்டிவிட்டி வேண்டும். அது மண் சார்ந்ததாக, பண்பாடு சார்ந்ததாக, புதிய தொழில்நுட்பம் சார்ந்ததாக எதுவாகவும் இருக்கலாம். அவை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த வெற்றிக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

தற்போது, திரைப்படத்திற்கு இசையமைப்பது எப்படி? பாடகராக பயிற்சி எடுப்பது எப்படி? வெஸ்டர்ன் இசையைக் கற்றுக் கொள்வது எப்படி? குறும் படம் தயாரிப்பது எப்படி? ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் என அரங்கத்தி லேயே தனி வகுப்பறைகள் வைத்து இருக்கிறேன். அதற் கான பயிற்றுநர்களை கொண்டு நடத்தி வருகிறேன்.

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச் சியை எட்டியிருப்பதாக நினைக்கிறேன்.

இப்போது, என்னுடைய கனவு திரைப் படங்களுக்கு இசையமைப்பது, இளைஞர்களுக்கு இசையமைக்கச் சொல்லிக் கொடுப்பது. வேறு சிந்தனைகளில் கவனத்தை சிதறவிட விரும்பவில்லை” என்றார், திரு.ஸ்டீபன் ராயல். ஆனந்த மழை திரைப்படத்திற்கான பாடலை ஒலிக்க விட்டு நம்மையும் கேட்க வைத்து மகிழ்வித்தார். (9840111103)

-ஆ.வீ. முத்துப்பாண்டி

முன்னேற்றத்தை முழங்கியவர்

0

ரு அறிவியல் அறிஞர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆன அதிசயம், முனைவர் அபஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் ஆன போது நடந்தது. இவர் போல மக்களிடம் நெருக்கமாக இருந்த குடியரசுத்                   தலைவர் வேறு யாரும் இல்லை.

குறிப்பாக இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் இவர் காட்டிய அக்கறை நாடு முழுவதும் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது. இவர் மாணவர்களுக்கு மட்டும் வழி காட்டவில்லை. மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்றும், பெற்றோரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.

அண்மைக் காலமாக இவர் அளவுக்கு இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர் எவரும் இல்லை. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இவர் பேச்சைக் கேட்கவும், இவர் நூல்களைப் படிக்கவும் காட்டிய ஆர்வம் அளவிட முடியாதது. அதற்கேற்ப இவருடைய பேச்சும், எழுத்தும் ஒவ்வொருவரையும் முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளியது.

மாணவர்களை மட்டும் அல்ல தொழில் முனைவோரையும் இவருடைய நூல்கள் வழி நடத்தின. மேலாண்மைக் கல்லூரிகள் பலவும் இவரை தங்கள் கல்லூரிகளுக்கு அழைத்து மகிழ்ந்தன. அவருடைய திடீர்மறைவும் ஒரு மேலாண்மைக் கல்லூரியில், மாணவர்களுக்கு நடுவே நடந்து இருப்பது இன்னும் வியப்புக்கு உரிய ஒன்றாகும்.

அவர் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு, சாதாரண மக்களின் பிரச்சனைகள் புரிந்து இருந்தன. வளர்ச்சி எது என்பதில் உள்ள தெளிவான புரிதலை மக்களிடையே ஏற்படுத்தினார். அவருடைய கருத்துகள் சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ளவர்களுக்கும் எட்டியது. குடியரசுத் தலைவர் பொறுப்புக் காலம் முடிந்த பின்னரும், அவர் எப்போதும் தனக்குள்ள அதே வேகத்தோடு இயங்கிக் கொண்டு இருந்தார்.

hfghfg1மாணவர்களுடன் இருப்பதை, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்துவதில், அவர்களின் வளர்ச்சிக்கு பயன்படும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு இந்தியாவே வியந்தது.
தன்னுடைய கருத்துகளை எப்போதும் உறுதியுடன் கூறிய இவர், எல்லா கட்சிகளில் உள்ளவர்களுக்கும், எல்லா மாநிலங்களில் உள்ளவர்களுக்கும், எல்லா மதங்களில் உள்ளவர்களுக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் மிகமிக விருப்பமான சமுதாயத் தலைவராக விளங்கினார்.

Abdul Kalam Tamil Quotes 11இவருடைய பிறந்த நாளை மாணவர் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் எழுந்து உள்ளது. இந்த வேண்டுகோளை வளர்தொழில் அதன் வாசகர்கள் சார்பில் வழிமொழிகிறது. இதை அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையுடன் வளர்தொழில் மக்கள் குடியரசுத் தலைவருக்கு தனது ஆழ்ந்த இதய அஞ்சலியை செலுத்துகிறது.
– ஆசிரியர்

பெண்கள் சிந்தனைக்கு சில தொழில்கள்

0

ன்று நிறைய பெண்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களில் சிலர் என்ன தொழில் தொடங்கலாம் என கேட்கின்றனர். அவர்களின் சிந்தனைக்காக சில தொழில்களின் பட்டியல் இதோ:                            அழகுக்கலை பார்லர் மற்றும் பயிற்சி மையம் பெண்கள், ஜிம், கிரச், நர்சரி பள்ளி, நர்சரி (செடிகள்/ கன்றுகள்) விற்பனை, டிடிபி மற்றும் செராக்ஸ், சிறு ரியல் எஸ்டேட் நிறுவனம், டெய்லரிங் / ஜரி ஒர்க் / எம்ப்ராய்டரி, பேன்சி ஸ்டோர், உணவு பதப்படுத்துதல் (குடிநீர், ஜூஸ், ஊறுகாய், அப்பளம், மசாலா பொடிகள்), சிமென்ட் ஹாலோ பிளாக், பெண்களுக்கான டிரைவிங் பயிற்சிப் பள்ளி, ரெடிமேட் துணிகள் தயாரிப்பு / ஜவுளி வியாபாரம், மருத்துவ ஆய்வு மையம், மருத்துக்கடை, மகளிர் ஹாஸ்டல், செல்போன் சர்வீசிங், பர்னிச்சர் தயாரிப்பு / விற்பனை.computer lab3

இன்சூரன்ஸ் ஏஜென்சி, திருமண தகவல் நிலையம்,  போட்டோ ஸ்டுடியோ,  பழங்கள், காய்கறி விற்பனை நிலையம், பழச்சாறு கடை, வெப் டிசைனிங்,  சிறு ஓட்டல், பால் பண்ணை, பால் பொருட்கள் தயாரிப்பு, சூப் விற்பனையகம், இட்லி / தோசை மாவு.

உப்பு மொத்த / சில்லறை விற்பனை, இன்டர் நெட் மையம், வாடகை பாத்திர நிலையம், இன் வெட்டர் / யுபிஎஸ் / ஸ்டெபிலைசர் விற்பனை / ரிப்பேரிங் / சர்வீசிங், சிப்ஸ் (வாலை, உருளை) தயாரிப்பு,  வீட்டு கட்டுமான பொருள்கள்.

beauti

கண் கண்ணாடி கடை, லாண்டரி, வணிக நிறுவனங்களுக்கு ஸ்டேஷனரி சப்ளை, செயற்கை நகை உற்பத்தி, பசை தயாரிப்பு, கண்ணாடி பிரேம், வேலை வாய்ப்பு மையம், சிறு பைனான்ஸ் (நகை அடகு) போன்ற தொழில்கள் பல உள்ளன.

தங்களுக்குப் பொருத்தமான தொழிலைத் தேர்ந்தெடுத்து முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

– எம். ஞானசேகர்

தர்பூசணி வகைகளும், பயிரிடும் முறையும்

0

ப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய இப்பயிர் உலகின் வெப்ப மண்டலத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது. நன்கு முற்றிப் பழுத்த பழங்களின் சதைப்பகுதி                                  இனிமையான சுவையுடனும், அதிக சாறுடனும் இருக்கும். பாலைவனப் பகுதிகளில் தாகத்தை அடக்கும் முக்கிய பழமாக இது பயன்படுகிறது. பூசணி இனப் பயிர்களிலேயே இப்பழத்தில்தான் இரும்புச்சத்து மிக அதிகமாக இருக்கிறது.

மண்வளத் தேவை மற்றும் தட்ப வெப்ப நிலை

அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத் தன்மை குறைவாயும், நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்ப வெப்பநிலை, இந்தப் பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்ப நிலையில் விதைகள் முளைப்பு குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சியடையும் பருவத் தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங் களின் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைப் படும்.
மணல் கலந்த இருமண்பாட்டு நிலம் மிகவும் உகந்தது. மண்ணின் கார – அமில நிலை 6.5-7.0 என்ற அளவில் இருப்பது மிகவும் நல்லது. இருப்பினும் அமிலத் தன்மை 5.0 என்ற அளவு வரையிலும் கூட இப்பயிர் தாங்கி வளரும். இறைவைப் பயிராகப் பயிர் செய்யப்பட்டாலும் குளங் களில் நீர் வற்றியவுடன் கிடைக்கும் ஈரத் தைக் கொண்டே இப்பயிரைப் பயிர் செய்யலாம்.

இரகங்கள்                                                                                                                  

ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஓர் இரகம். பழங்கள் சிறியவையாயும், நீள் உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களின் சராசரி எடை 15-20 கிலோ. தோல் பசுமையான நிறத்துடன் கரும்பச்சை கோடுகளுடன் காணப்படும். சதைப்பகுதி சிவப்பு நிறம் கொண்டது.

download சுகர் பேபி

இந்த இரகமும் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். பழத்தின் எடை 4-5 கிலோ. உருண்டையான வடிவமும் கருநீலத் தோலும் கொண்டது. சதைப்பகுதி ஆழ்ந்த சிவப்புநிறம் கொண்டது. இதன் விதைகள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆஷாஹியமாடோ

இது ஜப்பான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓர் இரகம். பழங்களின் தோல் இலேசான பசுமை நிறமுடையது. மேலே மெல்லிய கோடுகள் கொண்டது. சதைப் பகுதி கருஞ்சிவப்பு, ஊதா நிறமுடையது. பழங்களின் சராசரி எடை 7-8 கிலோ.
இதுவும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் தருவிக்கப்பட்டு நம் நாட் டிற்கு ஏற்ற இரகம் எனத் தேர்வு செய்யப் பட்டு உள்ளது.

பெரியகுளம் 1

இது பெரியகுளத்திலுள்ள தோட் டக்கலைக் கல்லூரியில் உருவாக்கப் பட்டது. பழங்கள் உருண்டையாகவும், கரும்பச்சை நிறத்தோலுடனும், சிவப்பு நிற சதைப் பற்றுடனும் காணப்படும். எக்டருக்கு சுமார் 37 டன் மகசூல் அளிக்கும். வயது 120-135 நாட்கள்.

அர்கா மானிக்

இது இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கருஓட்டு மூலம் உருவாக்கப் பட்டு (ஐ.ஐ.எச்.ஆர். 21 ஜ் கிரிம்சன் ஸ்வீட்) தேர்ந்தெடுக்கப்பட்ட இரகம். பழங்கள் உருண்டையாகவும், நீள உருண்டையாகவும் இருக்கும். தோல் பசுமை நிறமாயும் கரும் பச்சைக் கோடுகளுடன் காணப்படும். சதைப் பகுதி ஆழ் ஊதா கலந்த சிவப்பு நிறம் கொண்டது. பழங்களின் சராசரி எடை 6 கிலோ. எக்டருக்கு 60 டன் வரை மகசூல் அளிக்க வல்லது. இதன் வயது 100 முதல் 110 நாட்கள் வரையாகும்.

துர்காபுரா மீதா மற்றும் துர்காபுரா கேசர்

இந்த இரண்டு இரகங்களும் இராஜஸ் தான் மாநிலத்தின் துர்காபுராவிலுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக் கப்பட்டவை. மேலே கூறப்பட்ட இரகங் களைத்தவிர சில வீரிய ஒட்டு இரகங்களும் உள்ளன.

அர்கா ஜோதி

இது ஐ.ஐ.எச்.ஆர். 20 ஜ் கிரிம்சன் ஸ்வீட் என்ற கரு ஓட்டின் முதல் தலைமுறை வீரிய ஒட்டு இரகம். பெங்களூரிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. பழங்களின் சராசரி எடை 6 முதல் 8 கிலோ வரை இருக்கும். சதைப்பற்று ஊதா கலந்த நல்ல சிவப்பு நிறத்துடன் அதிக இனிப்புத் தன்மை கொண்டது. பழங்களில் விதையின் எண் ணிக்கை குறைவு. பழத்தின் தோல் வெளிர் பச்சை நிறத்துடன் கரும்பச்சை கோடு களுடன் காணப்படும். பழங்கள் தொலை தூரத்திற்கு அனுப்பினாலும் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை பெற்றவை. சுமார் 90 நாட்களில் எக்டருக்கு 80-85 டன் வரை மகசூல் அளிக்கவல்ல இரகம் இது.

பூசா பேதனா

புது டெல்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு இரகம். பழங்களில் விதையில்லாதது இதன் சிறப்புத்தன்மை. டெட்ரா 2 ஜ் பூசா ராசல் என்ற கரு ஓட்டின் முதல் தலை முறை வீரிய ஒட்டு இந்த இரகம். சதைப் பகுதி அதிக இனிப்புச் சுவை கொண்டது.

அம்ருத்

மஹிகோ நிறுவனத்தினரால் உருவாக்கப் பட்ட வீரிய ஒட்டு இரகம். பழங்கள் சிறிது நீள் உருண்டை வடிவில் 6-8 கிலோ எடையுடன் காணப்படும். மேல் தோல் கரும்பச்சை நிறத்துடன் சதைப்பற்று ஆழ்ந்த சிவப்பு நிறத்துடனும் காணப்படும். சுமார் 94-100 நாட்களில் எக்டருக்கு 100 டன் வரை மகசூல் அளிக்கவல்து.

பருவம்

ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் விதைக்கப் படும் பயிர், கோடை காலத்தில் அறுவடைக் குத் தயாராகும். கோடை காலத்தில் அறு வடை செய்யப்படும் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத்தவிர ஜூன் – ஜூலை மாதங்களிலும் விதைப்பு செய்யப் படுகிறது.

நிலம் தயாரிப்பு, முன்செய் நேர்த்தி மற்றும் அடியுரமிடல்

நிலத்தை 3-4 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளி யில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். இந்த வாய்க்கால்களின் உட்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45, 45, 45 செ.மீ. நீள, அகல, ஆழ அளவில் குழிகள் தோண்ட வேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல் மண் மற்றும் தொழு உரம் ஆகியவற்றுடன் கீழே கூறப்பட்ட இரசாயன உரங்களைக் கலந்து இட வேண்டும்.

எக்டருக்குத் தேவையான இரசாயன உரங்கள்

தழைச்சத்து – 30 கிலோ (யூரியா 66 கிலோ)
மணிச்சத்து – 65 கிலோ (சூப்பர் பாஸ்பேட் – 400 கிலோ)
சாம்பல் சத்து – 85 கிலோ (மியூரியேட் ஆஃப் பொடடாஷ் – 142 கிலோ)
மொத்த குழிகள் 5000. எனவே குழி ஒன்றிற்கு 13 கிராம் யூரியா, 80 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிராம் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் கலந்து இட வேண்டும்.
விதையளவு மற்றும் விதைப்பு ஓர் எக்டர் விதைக்க சுமார் 3-4 கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4-5 விதைத்து பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்து விட வேண்டும்.

நீர்ப்பாசனம்

பருவ மழைக்காலங்களில் இது மானாவாரியாகப் பயிர் செய்யப்படுகிறது. கோடைக்காலத்திற்கு அறுவடை செய்யப் படும் பயிர். பாசனப் பயிராகப் பயிர் செய்யப்படுகிறது. மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்ய வேண்டும். இறைவையில் விதைப்ப தற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றிப் பின்னர் விதைக்க வேண்டும். பின்பு 3-ஆம் நாளும் அதன் பின்னர் 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்து வந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாய்ச்சுதல் ஒரே சீரான இடைவெளியில் செய்ய வேண்டும். (சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை என) அதிக நாட்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்குப் போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்துவிடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்துபோக ஏதுவாகும்.

பின்செய் நேர்த்தி மற்றும் மேலுரமிடல்

விதைத்த 15 மற்றும் 30ஆம் நாட்களில் களைக்கொத்து கொண்டு கொத்திக் களை நீக்கம் செய்ய வேண்டும். விதைத்த 15-ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும் போது) டிபா என்ற பயிர் ஊக்கியை 25-50 பி.பி.எம். என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். (25-50 மி.கிராம்/ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது 250 மி.கிராம் – 500 மி.கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலக்க வேண்டும்) மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒருமுறை தெளிக்க வேண்டும்.
இதற்கு பதிலாக எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 4 முறை தெளிக்கலாம். (12 மி.லி. மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து)
1. முதல் இரண்டு இலைப்பருவம்
2. ஒரு வாரம் கழித்து
3. மேலும் ஒரு வாரம் கழித்து
4. மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்க வேண்டும்.
கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப் பகுதியில் படரச் செய்ய வேண்டும். பிதைத்த 30ஆம் நாள் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு குழி ஒன்றிற்கு 13 கிராம் யூரியா இட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இலை கடிக்கும் வண்டுகளைக் கட்டுப் படுத்த நனையும் செவின் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். சம்பல் நோயி னைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பெவிஸ்டின் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் போன்ற நச்சு குறைந்த மருந்தினை பயன்படுத்தலாம். ஏனெனில் பழங்களை நாம் சமைத்தோ, வேகவைத்தோ சாப்பிடுவது இல்லை. மற்ற பூசணி இனப்பயிர்களைப் போன்றே இதற்கும் டி.டி.டீ., பி.எச்.சி. போன்ற பூச்சி மருந்துகளையும் தாமிரப் பூசணக் கொல்லி களையும் பயன்படுத்தலாகாது.

அறுவடை

பழங்கள் முற்றிப்பழுத்து அறுவடைக்குத் தயாராகும் நிலையைக் கீழ்க்குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.
நன்கு முற்றிய பழுத்த பழத்தை விரலால் தட்டிப்பார்க்கும்போது ஒரு மந்தமான ஒலி உண்டாகும். பழுக்காத காய்களைத் தட்டிப் பார்க்கும் போது மணி போன்ற ஓசை எழுப்பும்.

பழத்தில் தரையைத் தொட்டுக் கொண்டி ருக்கும் பகுதி பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும்.
கொடியில் பழத்தின் அருகிலுள்ள பற்றிப் படரும் கம்பிச்சுருள் காய்ந்துவிடும்.
பழங்களைக் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும்போது அப்பகுதி எளிதில் உடைந்து நொறுங்கும்.

சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து சுமார் 30-40 நாட்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். மேற் கூறப்பட்ட எல்லாவித அடையாளங் களையும் பயன்படுத்திப் பார்த்து அறுவடை செய்வது சாலச் சிறந்தது. எக்டருக்கு சுமார் 45-60 டன் வரை மகசூல் கிடைக்கும்.

– டாக்டர் தே. வீரராகவத்தாத்தம்
டாக்டர் மு. ஜவஹர்லால்
டாக்டர் (திருமதி) சீமந்தினி ராமதாஸ்

நேற்று…, இன்று…!

0

லக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் மேலாண்மைச் சிந்தனைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இன்று உற்பத்தித் துறையிலும், சந்தையிலும் காணப்படும் பல உத்திகள், உலகமெங்கும் பரந்து விரிந்து இருக்கும் வாடிக்கையாளர்களே. அவர்களுக்கு மனநிறைவை அளிப்பதில் எல்லா நாடுகளும் ஒருமுகமாக ஈடுபட்டு இருப்பதால், உருவாகிய இந்த உத்திகள் நமது நிறுவனத்திலும் வரவேண்டுமா என்ற ஐயப்பாடு கொண்டவர்கள். இந்தச் சிந்தனை மாற்றங்களின் தொகுப்பை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதோ சில காலம் மட்டுமே இருந்துவிட்டு, பழைய நிலைக்கே உலகப் பொருளாதாரம் சென்றுவிடும் என எவரும் நம்பிவிடக் கூடாது. அப்படி நம்பினால் அது நிறுவன த்தின் வளர்ச்சிக்கும், நாளையச் சந்தையில் நிலைத்து விற்பதற்கும் பெரும் ஊறு விளைவிக்கக்கூடும். அந்தப் புதிய சிந்தனைகள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பார்ப்போம்.

நேற்றைய சிந்தனை
நமது நிறுவனத்தின் பொருளாதார முடிவுகள் சரியாக இருந்தால்போதும், அது எவ்வாறு வந்தன என்பது பற்றிக் கவலை, இல்லை.

இன்றைய சிந்தனை
முடிவுகள் மட்டுமே முக்கியமல்ல, அவற்றை எத்தகைய செயல்பாடுகளின் சீரமைப்பால் பெறப் போகிறோம் என்பது முக்கியம். செயல்படுமுறைகள் (Processes) சரியாக இருந்தால் முடிவுகள் சரியாகத்தான் அமையும்.………………………………………………………………………………………………………………..

நேற்றைய சிந்தனை
தனி மனிதத் திறமைகள் தாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றது.

இன்றைய சிந்தனை
மனிதக் குழுக்களின் (Teams) கூட்டுத் திறமைகள்தான் வெற்றி தரும்

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
ஒவ்வொரு துறையும் (Functional) தனது திறமையை அதிகரிக்கும்போது, நிறுவனத்தின் திறமை அதிகமாகிறது.

இன்றைய சிந்தனை
எல்லா செயல்பாடுகளும், பல துறைப் பணியாளர்களும் (Cross functional teams) செயல்படும் போது மட்டுமே சிறக்கும்.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
முரண்பாடுகளிடையே முடிந்தவரை சரியான நிலையை (Optimisation) அடைவது. (சான்று: இந்த விலையில், நாம் நிர்ணயித்த தரத்தை தருவது).

இன்றைய சிந்தனை
முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்திச் சிறந்த நிலையை (Extremi sation) அடைவது. (சான்றாக; விலையும் குறைவாக  வேண்டும், தரமும் மிகச் சிறந்ததாக வேண்டும்).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
எல்லா பணியாளாகளையும் ஆணையிட்டும், கட்டுப்படுத்தியும் பணி செய்ய வைப்பது (Direct Control).

இன்றைய சிந்தனை
அவர்கள் சிறப்பாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி அவர்கள் பணியை மேம்படுத்துவது (Catalyse).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
மாற்றம் செய்வதைத் தவிர்த்து ஒரே சீராகப் பணி நடந்தால் மகிழ்ச்சி அடைவது.

இன்றைய சிந்தனை
ஏன் வேறு வழிகளில் செய்ய முனையக்கூடாது? சரியாக வரவில்லை என்றால் எப்படியும் ஒரு வழிதான் இருக்கிறதே? (Multi-form).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
ஒழுங்காகச் செல்லும் பணியினை மாற்றாமல் இருப்பது (Stabilise).

இன்றைய சிந்தனை
பணி ஒழுங்காகச் சென்றாலும் சில நேரங்களில் அதை வேண்டுமென்றே மாற்றி பணியாளர்களை ஒரு தயார் நிலையில் வைப்பது (Destablise).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
நிறுவனத்தின் மேலாளர்களுக்கு முக்கியத்துவம்.

இன்றைய சிந்தனை
நிறுவனத்தின் முதல்நிலைப் பணியாளர்களுக்கு (Front line) முக்கியத்துவம்.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
சிக்கல்கள் வரும்போது மனத்தடுமாற்றமடைவது.

இன்றைய சிந்தனை
சிக்கல்கள் – புதிய வாய்ப்புகளுக்கு முன்னோடி.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
நிறுவனத்தைப் பொறுப்பாக நடத்தி வந்தால்போதும் (Caretakers).

இன்றைய சிந்தனை
சிக்கல்களை அறிந்து, தெரிந்து, அளந்து – அவற்றை எதிர்கொண்டு தீர்வு காணுவது. (Problem solver)

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
சந்தையில் தேக்கம் அல்லது போட்டியாளர் விலை குறைப்பு ஏற்படும்போது மட்டும் இவற்றை எதிர்கொள்ளச் செலவினைக் குறைக்க மேற்கொள்ளும் முனைப்பு (Reactive cost reduction).

இன்றைய சிந்தனை
வாடிக்கையாளர் என்றுமே குறைந்த விலையில் நிறைந்த பொருளை வாங்க விரும்புகிறார் என்று எண்ணி, தொடர்ந்து மேலும் மேலும் செலவினைக் குறைக்கும் தொடர் முனைப்பு (Continuous cost reduction).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
வாடிக்கையாளர் நினைக்கும் தரத்தை தருவது (Customer driven quality).

இன்றைய சிந்தனை
நாம் எந்தத் தரம் தர வேண்டும் என்று பெருமிதத்துடன், மேலும் மேலும் உயர் தரத்தை தருவது (Internally – driven quality).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
அந்தந்த நேரங்களில் மற்றவருடன் சமநிலை வர மேற்கொள்ளும் முனைப்புகள்.

இன்றைய சிந்தனை
மற்றவரைவிட முன்னிலை அடைய மேற்கொள்ளும் முனைப்புகள்.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
மேலிருந்து கீழே பாயும் ஆலோசனைகள், ஆணைகள்.

இன்றைய சிந்தனை
எல்லோருமே பங்கேற்று, சொந்தம் கொண்டாடிச் (Ownership) செயல்படுவது.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
நேற்றைய நிலைகளை ஒப்பிட்டு இன்று செயல்படுவது (Compare with past).

இன்றைய சிந்தனை
இத்துறையில் மிகச் சிறப்பாகச் செயல்படுபவர்களுடன் ஒப்பிட்டுத் தம்மை உயர்த்திக் கொள்வது.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
உற்பத்தித் திறமை, உற்பத்தித் திறன் இவற்றை மையப்படுத்திய செயல்பாடுகள் (Focus on productiity, production).

இன்றைய சிந்தனை
வாடிக்கையாளரின் மனநிறைவை மையப்படுத்திய செயல்பாடு(Focus on customer satisfaction).

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
இலாபம் மட்டுமே குறிக்கோள்

இன்றைய சிந்தனை
வாடிக்கையாளரிடம் மதிப்பை உயர்த்துவது (Value to users)

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
தரம், செலவு, கட்டுப்பாடு மேலாளரின் பொறுப்பு

இன்றைய சிந்தனை
எல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
சரியான நிர்வாகத்திற்குச் சிக்கலான முறைகள் தேவை.

இன்றைய சிந்தனை
செயல்பாடுகள் எளிதாக இருக்க வேண்டும்.
………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
நிறுவனக் கட்டமைப்பு பல நிலைகள் (Multi-level) கொண்டு செயல்படும்.

இன்றைய சிந்தனை
நிறுவனக் கட்டமைப்பு தட்டையாக அமைத்துச் செயல்படுவது.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
மேலாளர்கள் கட்டுப்பாட்டிற்காகவும் முடிவு எடுக்கவும் தேவை.

இன்றைய சிந்தனை
பல திறமைகளைப் பயிற்சிகள் மூலமாக எல்லாப் பணியாளர்களுக்கும் அளித்து, மேலாளர்களை கண்காணிக்கும் பணியிலிருந்து விடுவித்து புதியமுறைகளை கற்றுத் தரும் ஆசான்களை உருவாக்குவது.

………………………………………………………………………………………………………………..
நேற்றைய சிந்தனை
நமது அணுகுமுறைகளும், தொழில் நுட்பமும், திறமைகளும் நாம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படப்போதும் என்று எண்ணுவது.

இன்றைய சிந்தனை
நம்மைவிடச் சிறப்பாகப் பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் அடக்கக் குணம் வேண்டும்.

இந்தப் புதிய சிந்தனைகளில் முழு நம்பிக்கை வைக்காமல் இங்கே ஒன்று அங்கே ஒன்று என்று சில அணுகுமுறைகளையும், செயல்பாடுகளையும் மட்டுமே நடைமுறைப்படுத்தினால் அது விழலுக்கு இறைத்த நீராகும்.

இந்தச் சிந்தனைகளில் உள்ள தத்துவத்தின் கனம் எவ்வளவு என்று அறியும்போது, அவை ஏன் வெற்றி பெற்றன என்பதற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்கு விளங்கும்.

– எம்.எஸ். ராஜகோபாலன்

தமிழர்களின் வேளாண் பொறியியல் சிந்தனைகள்

0

னித உழைப்பே மிகுந்திருந்த மரபு வழி வேளாண்மைத் தொழிலில், இன்று எந்திரங்கள் மிகுதியாக இடம் பெற்று வருகின்றன. குறைந்த உடல் உழைப்பைக் கொண்டு, குறுகிய காலத்தில் விரிந்த நிலப்பரப்பில் கூடுதலான வேலைகளைச் செய்து முடிக்கப் புதிய பண்ணைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பண்டை நாள் கருவிகள் மனித சக்தியை எண்ணத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. பெரும்பான்மையும் மனித சக்தியால் இயங்கக்கூடியவையாகவும் இருந்தன. மனித சக்திக்கு அப்பாற்பட்டவற்றிற்குக் கால்நடைகள் பயன்படுத்தப் பெற்றன. இப்போது விசையால் இயங்கும் கருவிகள் அதிகமாய்க் கண்டறியப்பட்டுள்ளன.

வேளாண்மைக் கருவிகளின் பாகுபாடு

பண்டை நாள் கருவிகளையும் இப்போது விசையால் இயங்கும் கருவிகளையும் ஒப்பியல் அடிப்படையில் கீழ்க்காணுமாறு பாகுபடுத்தலாம்.

உழவுக் கருவிகள் (கலப்பை)
மென்புலமாகிய நன்செய்யையும், வன்புலமாகிய புன்செய்யையும் உழுவதற்கு ‘நாஞ்சில்’ என்ற உழவுக் கருவியைப் பண்டைக்கால மக்கள் பயன்படுத்தினர்.

கலப்பையை நாஞ்சில் என்பது இலக்கிய வழக்கு. இதை, ‘தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா’ (பதிற். 26-1) என்னும் பாடலின் மூலம் அறியலாம்.
கலப்பையின் முதன்மையான உறுப்பு ‘கொழு’ என்பதாகும். அது நிலத்தைப் பிளந்து உழும் தன்மையுடையது என்பதைக் ‘கொல்லை உழு கொழு ஏய்ப்ப’ (பொரு.117) என்று குறிப்பிடுகின்றது.

இந்நாஞ்சிலின் உருவ அமைப்பு, பெண் யானையின் வாய் போல் வளைந்தும், அதில் பொருத்தப்பட்டுள்ள பெருங்கொழு, உடும் பின் முகம் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். இக்கலப்பை கொண்டு வறள் நிலத்தையும் உழுவர் என்பதை, ‘பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் உடுப்பு முக முழுக்கொழு மூழ்க ஊன்றி தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை’ (பெரும். 199-201) என வரும் பாடல் குறிக்கின்றது.
தொன்றுதொட்டுப் பயன்பாட்டில் இருக் கும் மரக்கலப்பையையும் அண்மையில் அறிவிய லால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கலப்பையும் உந்து விசையால் இயங்கும் எந்திரக் கலப்பையும் இன்றைய உழவுக் கருவிகளாகும். இவை தவிர பார் பிடிப்பதற் கென்று ‘பார்’ கலப்பையும் உள்ளது.

                                                                  சமன்படுத்தும் கருவிகள் (தளம்பு)
garden-tools                                                                நன்செய் நிலத்தை உழுதபின் வயல் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருத்தற் பொருட்டு, பரம்பு கொண்டு சமன்படுத் துவர். ஓரோ வழி புன்செய் நிலத்தையும் சமன்படுத்துவதுண்டு. அக்கருவிக்குத் ‘தளம்பு’ என்று பெயர். இது பண்டை மக்கள்          பயன்படுத்திய கருவியாகும். உழவுக்குப் பின்னர், நிலத்தைச் சமன் படுத்தும் கருவிகளும், மண்கட்டிகளை உடைக்கும் ‘பலுகுகள்’ போன்ற கருவிகளும் வரப்புக்கட்டும் கருவிகளும் இப்போது புழக் கத்தில் உள்ளன.

இறைப்புக் கருவிகள் (ஏற்றம்)

ஆற்றில் நீர் குறைந்தபோது ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும் உள்ள நீரை வயலுக்குப் பாய்ச்சுவதற்கு இறைப்புக் கருவி யைப் பயன்படுத்தினர். அந்நீர் நிலைகளில் நீரை ஏற்றம் வைத்து இறைத்தனர். அவ்வேற்றத்தில் ‘ஆம்பி’ என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். வாய் அகன்ற ஆம்பி கொண்டு நீரை முகந்து ஏற்றத்தின் வழியாக மேலே கொணர்ந்து வாய்க்காலில் செலுத்திப் பாய்ச்சுவர். இதை ‘ஏற்றத்தோடு வழங்கும் அகல் ஆம்பி’ (..மது.90) என்னும் தொடரால் அறியலாம்.  002489இறைப்புக் கருவிகளில் இப்பொழுது மின்சாரத்தால் இயங்கும் 3 முதல் 10 குதிரைச் சக்தி விசையுள்ள மின்விசைப்பம்பு செட்டுகளும் டீசலைக் கொண்டு இயங்கும் எஞ்சின்களும் புழக்கத்தில் உள்ளன. இவை, தாமே நீரை இறைத்து நிலத்துக்கு அனுப்பி வைக்கின்றன.
தமிழகததில் எந்திரத்தின் பயன்பாட்டைக் கவனித்துப் பார்த்தால் அடிப்படைக் கருவி களில் இறைப்புக் கருவிகள் மிகுதியாகப் பயன்பட்டு, வேளாண் எந்திரங்களில் முதல் இடம் பெறுகின்றன எனலாம்.

பயிர்ப்பாதுகாப்புக் கருவிகள்

விளையும் பயிர்களைக் களைகளினின்று காப்பாற்றவும், விளைந்த பயிர்களைப் பறவைகள் மற்றும் விலங்குகளினின்றும் காப்பாற்றவும் கருவிகளைக் கையாண்டனர்.

துளர்

புன்செய் நிலத்தில் வளர்ந்த களைகளைத் ‘துளர்’ என்ற கருவியால் வெட்டி எடுத்தனர். இதனை, ‘துளர்எறி வினைஞர்’ (அகம்.184), ‘துளர்படு துடவை’ (பெரும்.201) என்ற பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன. இந்நா ளில் இக்கருவியைக் ‘களைக்கொட்டு’ என்பர்.

அரிப்பறை
image080இது ‘அரித்து எழுகின்ற பறை ஓசையை உடையது’ என்பர். நெல்லரியும் உழவர் வயலில் விளைந்த நெல்லை அறுக்கப் புகுமுன், அவ்வயலில் கூடமைத்து வாழும் பறவையினங்கள் முன்னதாக அறிந்து ஏது மின்றி நீக்குவதற்காக இப்பறையோசையை எழுப்புவது பண்டைத்தமிழர் மரபாகும்.
‘சுழி சுற்றிய விளை கழனி, அரிப்பறையால் புள்ளோப்புந்து’ (..புறம் 395) என்ற பாடல் வரியால் அறியலாம்.

தண்ணுமை

விளைந்த நெல் வயலில் உள்ள பறவை இனங்களை ஓட்டத் தண்ணுமை இசைத்தல் உழவர்களின் வழக்கமாகும். வெண்ணெல் அரிவோர் இசைத்த தண்ணுமையினது ஒலி கேட்டு கழனியிலுள்ள பறவைகள் அஞ்சி ஓடும். இதை, ‘வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ பழனப் பல்புள் இரிய’ (..நற்.350) என்ற பாடல் மூலம் அறியலாம்.

பரண்

தினைப் புனங்கள் பரந்து பட்ட பகுதியை உடையன. மலைச் சாரலின் அமைந்து இருப்பதால், மேடு பள்ளங்கள் நிறைந்து இருக்கும். இப்பரப்பினில் பறவைகள் படாவண்ணமும், விலங்குகள் புகா வண்ண மும் பாதுகாக்க வேண்டும். அதனால் தினைப்புனத்தில் உயர்ந்த பகுதியில் எல்லாப் பக்கமும் பார்வை விழும்படியாக உள்ள பகுதியில் பரண் அமைப்பர். பரணை இதணம், கழுது, பணவை என்ற பெயர்களால் வழங்கினர். (அகம் 388, அகம். 292, கலி 41).

குளிர்

குளிர் எனும் கருவி கொண்டு தினைப்புனத்தில் மேய வரும் கிளியை விரட்டுவர். இது மகளிர் பயன்படுத்தும் மென்மையான கருவியாகும். ‘ஏனலம் சிறுதினை காக்கும் சேணோன் ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை” (குறு. 357) என்ற பாடல் மூலம் அறியலாம்.

தட்டை

விளைந்த கதிர்களைக் கவர வரும் கிளிகளையும், பறவைகளையும் குறிஞ்சி நிலப்பெண்கள் இத்தட்டையைப் புடைத்து ஓட்டுவர். நற்றிணைப் பாட லில் ‘செவ்வாய் பாசினங் கடீஇயர் கொடிச்சி அவ்வாய்த் தட்டை’ (134) என்ற பாடல் குறிக்கின்றது.
தழலை, கவண், ஞெகிழி, சுணை, கிணை, அடார், குறுந்தடி, பொய்ப் புலி போன்ற கருவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்தியமை தெரிய வருகின்றது. பயிர்ச்சால்களின் இடை வெளியில் கருவியைச் செலுத்திக் களை எடுக்க ‘ஊடு சாகுபடிப் பலுகு’ என்ற கருவி உதவுகின்றது.

இப்போது பயிர்களைப் பூச்சிகளும் நோய்களுமே பெரும்பாலும் தாக்குவதால் இவற்றைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளும், பூசணக்கொல்லி மருந்துகளும் பயன்படுகின்றன. திரவ வடிவில் உள்ள மருந்துகளைத் தெளிப்பான் கருவியாலும் துகள் வடிவிலுள்ள மருந்துகளைத் தூவு வான் கருவி கொண்டும் தெளிக்கின்றனர்.

பெரும் பண்ணைகளில் தானே இயங்கி, ஓசையை எழுப்பிப் பறவையை விரட்டும் கருவியைக் கொண்டு தானியங்களைக் கொண்டு செல்லும் பறவைகள் விரட்டப் படுகின்றன. நெல் வயல்களில் தானியங் களைக் கொண்டு செல்லும் எலிகளைக் கொல்லக் கிட்டிகளும், மருந்துகளும் பயன் படுத்தப்படுகின்றன. இரவில் நுழையும் பன்றி கள், நாய்கள் போன்றவற்றை மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலிகளைக் கொண்டு துரத்துவது இன்றைய நடைமுறையாகும்.

அறுவடைக் கருவிகள் (குயம் வாள்)

விளைந்த நெல்லை அறுவடை செய்ய வளைந்த அரிவாளை பயன்படுத்தினர். அதற்குக் ‘குயம்’ என்று பெயர். இதனை, ‘கூனிக்குயத்தின் வாய்நெல்லரிந்து’ (பொரு. 242) என்ற பாடல் குறிக்கின்றது. நெல்லரிவோர் தங்கள் கூர்வாள் மழுங்கின் வயலில் புதைந்துள்ள ஆமையோட்டில் தீட்டிக் கூராக்கிக் கொள்வர் என்பதை, ‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் பின்னை மறத்தோடு அரிய கல் செத்து’ (..புறம்.379) என்ற பாடல் மூலம் அறியலாம்.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான நெல் அறுவடை எந்திரம் நன்செய் நிலங்களில் பயன்படுத்தப்படுகிறது. அறுத்த நெற்கதிரிலிருந்து மணிகளைப் பிரித்தெடுக்கும் கருவிகளும், பதர்களைப் பிரித்தெடுக்கும் கருவிகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

ancient-plow
புன்செய் கருவி (குதிர்)

விளைந்த நெல்லை நெடுங்கூட்டில் இட்டு வைப்பது வழக்கம். நெல்லைக் கொட்டி வைத்திருக்கும் நெடுங்கூட்டின் அடிப்பாகம் பருத்தும் மலை போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும். அதன் மேற்பகுதியில் கூட்டின் உள்ளே இருக்கும் நெல்லின் அளவைக் காட்டும் புள்ளிகளை அழகாக இட்டு வைப்பர். அத்தகைய வளமான மனைகள் பண்டைய நாளில் பல இருந்தன. இதை, ‘செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை’ (..நற். 2-6) என்ற நற்றிணைப்பாடல் மூலம் அறியலாம்.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பால் தானியங்களைச் சேமிக்கத் தகட்டால் செய்யப்பட்ட குதிர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. பெரும் சேமிப்புக் கிடங்கு களில் தானிய மூட்டைகள் குறுக்கும், நெடுக்குமாய் வரிசையில் அடுக்கப்பட்டும் சேகரிக்கப்படுகின்றன.

பண்ணைக்கருவி (வட்டி)

பயிர்த் தொழில் விதைகளை எடுத்து விதைக்க, சிறு மூங்கிற் கூடைகளைப் பயன் படுத்துவர். அக்கூடைகளைப் பனங் குருத்தா லும் செய்வர். இதனைக் கடகப் பெட்டி என்றும் கூறுவர். வட்டி என்பதும் இதுவே; இதனை ‘விதைக்குறு வட்டி போதொடு பொதுள’ (குறு. 155) எனக் குறுந்தொகைப் பாட்டால் அறியலாம்.
விதைகளை இட்டு எடுத்துச் செல்லவும், விதைத்த பிறகு பூக்களைப் பறித்து எடுத்து வரவும், மீன் முதலிய பிற பொருள்களைக் கொண்டு வரவும் வட்டி பயன்படும்.

அளவைக் கருவி (அம்பணம்)

நெல்லை அளக்கும் அளவுக் கருவிக்கு அம்பணம் என்று பெயர். இக்கருவி மரத் தால் செய்யப்பட்டுச் சுற்றிலும் செம்பினால் செய்த உறை போடப்பட்டு இருக்கும். நெல்லைத் தணித்து அளக்க அளக்க அதன் வாய் விரிந்து செப்புப்பட்டைகள் கழன்று போதலும் உண்டு. இதனை, ‘… நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர்பதம் நல்கும் …’ (பதிற். 66) என்ற பாடல் மூலம் அறியலாம்.

கரும்பு அரைவை எந்திரம்

ஆண்டு முழுவதும் கரும்பு அறுவடை நடந்து கொண்டிருந்தால் அதனை ‘கால மன்றியும் கரும்பறுத்து ஒழியாது’ (பதிற்) என்ற பாடல் வரி கூறுகிறது.
கரும்பு பிழியும் எந்திர அமைப்பைக் ‘கரும்பின் எந்திரங்களிற்றெதிர் பிளிற்றும்’ (ஐங். 55). கரும்பு இடும்போது எழுகின்ற ஓசை களிறு பிளிறுவது போல் இருக்கும் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

கரும்பின் சாற்றில் வெல்லக்கட்டி செய்யும் ஆலைகளை ‘கார்க்கரும்பின் கமழ் ஆலை’ (பட்டி. 9) என்று குறிப்பிடுகின்றது.

Shaduf2
பண்டைக்காலத்தில் தேவைக்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் கருவிகளை அமைத் துக் கொள்வதை மரபாகக் கொண்டார்கள். பண்டைய நாளில் வேளாண்மையில் மனித உழைப்பே முதன்மையாக இருந்தது. அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகள் முதன்மை இடம் பெற்றன. பண்டைய நாளில் உழுவதற்கும், இறைப்பதற்கும் கால்நடைகள் குறிப்பிடத்தக்க அளவு இன்றியமையாத இடத்தைப் பெற்றிருந்தன. இன்று கால்நடைகள் உழவுத் தொழிலில் இருந்து பெரும்பான்மையும் விலக்கம் பெறக்கூடும் என்றே கூறலாம்.

தனி மனிதன் உழைப்பைப் பயன்படுத்திப் பணி செய்யும் களைக் கொட்டுக்கும் அரிவாளுக்கும் இணையான புதிய கருவிகள், அதே உழைப்பைக் கொண்டு அதிகப்பயன் அடையும் வகையில் அறிவியல் மிக வளர்ந்த நிலை குறிப்பிடத்தக்கது.

விசையைப் பயன்படுத்தும் கருவிகள் அமைப்பதே இன்றைய கண்டுபிடிப்புகளின் அடிப்படை நோக்காக உள்ளது. மனித உழைப்பைப் பயன்படுத்திக் கூடுதல் பலன் பெறும் வகையில் கண்டுபிடிப்புகள் அமைந்தால் மனித உழைப்பு முழுமையாகப் பயன்படுத்தப் பெறும். எரிபொருள் செலவு மீதமாகும்; வேளாண்மையில் வேலை வாய்ப்பும் பெருகும்.

– கு. சாரதாம்பாள்,
கோயம்புத்தூர்

தொழில் வெற்றிக்கு உதவும் சில அடிப்படைகள்!

0

தமிழ்நாட்டில் சிறு, குறுந் தொழில்கள் நலிவடைய என்ன காரணம்? அவ்வாறு நலிவு அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆராய்ந்து திரட்டிய சில முதன்மையான வழிகாட்டல்கள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

தொடங்கும் முன் சந்தை ஆய்வு செய்ய வேண்டும். தொடங்கிய பின் முழுக் கவனம் செலுத்த வேண்டும். 100% கவனமும், அக்கறையும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

பணம் இருக்கிறது; கடனாக கிடைக்கிறது; என்பதால் எந்த தொழிலையும் தொடங்கக் கூடாது. எந்த தொழிலையும் யோசித்து, பயிற்சி பெற்று, அனுபவம் கிடைத்த பின், லாபகரமானதுதான் என உறுதி செய்தபின் தொடங்க வேண்டும்.
முழு நேரத் தொழிலா? பகுதி நேரமா? பகுதி நேரத்தில் செய்தால் வெற்றி கிடைக்குமா? யாராவது அதே தொழிலைச் செய்து வெற்றி பெற்றுள்ளனரா? என ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.

தொடங்கிய உடனேயே அதிக சம்பளத்தில் ஆட்கள் பலரை நியமித்து விட்டு அவதிப்படாதீர்கள். நல்ல லாபம் வந்த பின் பணியாளர்களை நியமிப்பது நல்லது. ஆரம்பத்தில் தேவையான சிலரை மட்டும் வைத்து சமாளிக்க முயல வேண்டும்.

ஒருவரை பணியில் சேர்க்கும் முன் அவரது வரலாறு, படிப்பு, அனுபவம் இவற்றை தீரவிசாரித்து பின்புதான் சேர்க்க வேண்டும். அவரால் 1:5 என்ற விகிதத்தில் லாபம் வந்தால்தான் சேர்க்க வேண்டும். சான்றாக, ஒரு சலூன் என வைத்துக் கொண்டால் ஒருவர் 25,000/- ரூபாய் மாதம் சம்பாதித்து கொடுத்தால் தான் ரூ.5000/- சம்பளம் கொடுக்க முடியும்.

பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்குவதை தவிர்க்க முயலுங்கள். முடியாவிடில் தங்களுக்கு பல ஆண்டுகள் அறிமுகமான உறவினர்கள், நண்பர்களை கணக்கு வைத்து, தெளிவாக பேசி முடிவு செய்து சேர்க்க வேண்டும்.

இன்று பலர் முதலில் கடுமையாக உழைத்து விட்டு, சிறிது லாபம் வர ஆரம்பித்ததும், வீண் செலவு செய்வது, அதிக விலை உள்ள வாகனம் வாங்குவது, பல கிளப்களில் உறுப்பினராகி சுற்றுவது என தொடங்கி விடுகின்றனர். இந்த தவறைச் செய்யவே செய்யாதீர்கள்.  ClipartGuy_HappySuccessfulBusinessஒரு ஊழியர் வரவில்லை; அந்த எந்திரத்தை இயக்க வேறு ஏற்பாடு செய்யத் தெரிய வேண்டும். ஒரு சேல்ஸ் மேன் வரவில்லை, அதற்கான மாற்று ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

மார்க்கெட்டிங் மிக கஷ்டமானது, அதுவும் கடனில் கொடுத்தால் பணம் முழுமையாக வராது. எனவே முதலி லேயே சர்வே செய்து, உடனுக்குடன் பணம் வருமா, நாணயமானவர்களா என ஆய்ந்து, அறிந்து பின் கடனுக்கு கொடுக்க வேண்டும்.
லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை உங்கள் தொழிலுக்கு ஏற்ப பல வகை விளம்பரங்களுக்கு செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
– எம். ஞானசேகர்

மறுபக்கம்

0

அந்த உணவகத்தின் உரிமையாளர் மலர்முகிலனுக்கு, உணவகத்தில் இருந்து தொலைபேசி வந்தது. பேசியவர் தலைமை சமையல்காரர்.

”சார், நீங்க வச்சிருக்கிற சூப்பர்வைசர், எங்களை எல்லாம் மோசமாக நடத்துகிறார், அவர் இருந்தா எங்களால வேலை செய்ய முடி யாது, நாங்க எல்லாம் வேலையை விட்டுப் போறோம்.”
”நீங்க எல்லாம் என்றால்..?”
”அவரைத் தவிர மற்ற எல்லோரும்..!”
”ஒருவரை வேலைக்கு சேர்ப்பதும், வேலையை விட்டு அனுப்புவதும் என்னுடைய வேலை, அதை நீங்கள் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?
”நேற்று, பணியாளர் ஒரு வரை இவர் அவமானப்படுத்தியதால் அது கைகலப்பு வரை போய் விட்டது. அவரை இவர் அடிக்க, இவரை அவர் அடிக்க.. வாடிக்கையாளர்கள் நடுவே உங்கள் ஓட்டலுக்கே கெட்ட பெயர் ஏற்படுவது மாதிரி ஆகிவிட்டது. எங்களையும் அவர் இப்படி நடத்த மாட்டார் என்பதற்கு எந்தவிதமான உறுதியும் இல்லை. அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுக்க வேண்டி இருக்கிறது. ஒன்று அவரை வைத்துக் கொள்ளுங்கள், அல்லது எங்களை வைத்துக் கொள்ளுங்கள்.”
”சரி, நான் சிறிது நேரம் கழித்துப் பேசுகிறேன்”

மலர் முகிலனுக்கு வேறு தொழில் இருக்கின்றது. கூடுதலாக ஒரு உணவகமும் நடத்தலாம் என்ற விருப்பத்துடன் அந்த உணவகத்தைத் தொடங்கி இருந்தார். திறமையான ஆட்களைத் தேர்வு செய்து போட்டிருந்தார். எல்லா உணவுப் பொருட்களும் சுவையாக இருந்தன. வாடிக்கையாளர்களின் வருகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மளிகைப் பொருட்கள் முதல் காய்கறிகள் வரை அத்தனையையும் முதல் தரமாக வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது என்று உறுதியுடன் கூறி இருந்தார்.

பத்திரிகையில் போட்டிருந்த ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்து விட்டு வந்தவர்தான் அந்த சூப்பர்வைசர் சுதந்திரம். ஓட்டல் பணிக்கு என்று முதன்முதலாக அவரைத்தான் பணிக்கு எடுத்தார்.

நிறைய உணவகங்களில் பணிபுரிந்த அனுபவம் இருந்தது. நகரில் உள்ள ஏதாவது ஒரு உணவகத்தின் பெயரைச் சொன்னால் போதும், நான் அங்கே இருந்திருக்கிறேன். அந்த முதலாளிக்கு என்மீது பிரியம் அதிகம். குடும்பச் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து அங்கே இருந்து விலக வேண்டியதாகி விட் டது” என்று கூறுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

உணவகத்துக்கு வேண்டிய தளவாடச் சாமான்கள் முதல் அத்தனைக்கும் அவரை நம்பி செயல்பட்டார். வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது கூட அவர் ஆலோசனையுடனேயே எடுத்தார்.

திடீரென்று தொலைபேசியில் அழைப்பார். ”சார், இவர் சரியாக இல்லை, நாணயமாக இல்லை, எல்லா உணவுகளுக்கும் பில் போடுவது இல்லை, அனுப்பிவிடலாம்” என்பார். அல்லது சமையல் பொருட்களை இவர் நிறைய வீணடிக்கிறார், குடித்து விட்டு சமையலறைக்குள் வருகிறார் என்பார். ஓட்டல் தொழிலில் நிரம்ப அனுபவம் பெற்றவர் சொல்வது தவறாகவா இருக்குமா? என்ற எண்ணத்துடன், இவரும் சரி சொல்வார்.

அப்படி ஒருவரை அனுப்ப நேரும் போது, அவருக்கு உரிய ஊதியத்தை உடனே கொடுத்து கனிவாகப் பேசி அனுப்புங்கள் என்று மலர்முகிலன் சொன்னதை, அப்படியே செயல்படுத்தி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்காது. செயல்படுத்தாமல் நடந்த தால்தான் இந்த தொல்லை ஏற்பட்டு இருந்தது.

தன்னுடைய ஊதியத்துக்காக காலை முதல் காத்துக் கொண்டிருந்தவரை சற்றும் மதிக்காமல் மாலை வரை இழுத்தடித்ததில் அவர் கடுமையான கோபத்துக்கு ஆளாகி இவரை திட்ட, பதிலுக்கு இவர் திட்ட கை கலப்பு வரை போயிருக்கிறது.
பணியாளர்கள் அத்தனை பேரும் போய் விட்டால் எப்படி உணவகத்தை நடத்துவது என்ற கவலையுடன் சுதந்திரத்தை தொலைபேசியில் அழைத்தார்.

தொலைபேசிக்காக காத்திருந்தது போல, அவர் எடுத்த உடனேயே, ”அந்த ஆள் என்னை அடிக்க வருகிறான், நம்ம ஆட்கள் அதைத் தடுக்க வரவில்லை. கேட்டதற்கு நாங்கள் எல்லாம் வேலையை விட்டுப் போகிறோம் என்கிறார்கள். இவங்களை நம்பியா சார் நாம ஓட்டல் தொடங்கினோம். அவங்க போனா அடுத்த நாளே எல்லா வேலைக்கும் நான் ஆட்களைக் கொண்டு வருவேன்…” என்று படபடத்தார்.

உரிமையாளருக்கும், ஒருவரை வேலையை விட்டு அனுப்புங்கள் அப்போது தான் நாங்கள் வேலைக்கு வருவோம் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. மேலும் சுதந்திரம் தொடக்கம் முதலே கூடவே இருக்கிறார். பெருக்குவது முதல் மாப் போடுவது வரை எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்பவர். கொஞ்சமும் அதைப் பற்றி நினைக்காமல், நன்றி இல்லாமல் எப்படி அவரை போகச் சொல்வது என்று சிந்தித்தவர், அவரை வேலையை விட்டு போகச் சொல்ல, வேண்டாம் என்று முடிவு எடுத்தார்.

மற்ற பணியாளர்களிடம், ”இனி இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம். நீங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கூறியதற்கு அவர்கள் ஒட்டு மொத்தமாக மறுத்து விட்டு, சம்பளத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். அவர்களில் இருவர் மட்டும் சற்று யோசனைக்குப் பின் நாங்கள் வேலை பார்க்கிறோம் என்று தங்கினார்கள்.

அவர்களையும், பிறகு அவசரத்துக்கு கிடைத்தவர்களையும் வைத்துக்கொண்டு ஓட்டல் நடந்தது. வாடிக்கையாளர்களின் வருகை குறையத் தொடங்கியது. புதிய ஆட்களைப் போட்டு முயற்சித்ததில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது.

ஓட்டல் தொழிலில் ஆட்கள் நிர்வாகம் எந்த அளவுக்கு முதன்மையானது என்பதும், நல்ல ஆட்கள் கிடைப்பது எவ்வளவு சிரமம் என்பது உரிமையாளருக்குப் புரிந்தது. தான் நேரடியாக இருந்து பார்க்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் அந்த தொழிலில் அனுபவம் உள்ள சுதந்திரத்தை நம்பி செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.

அவர் சிந்திக்க மறந்த ஒன்று, பார்க்கும் ஓட்டலில் எல்லாம் நான் இருந்தேன் என்று சொல்கிறார், ஏன் இத்தனை ஓட்டல்களுக்கு மாறும் நிலை அவருக்கு ஏற்பட்டது? இவர் சரியான ஆளாக இருந்தால் எப்படி அவர்கள் இவரை விட்டு இருப்பார்கள்? என்று மட் டும் நினைக்க மறந்து விட்டிருந்தார்.

ஒரு தொழிலுக்கான அனுபவத்தை இரு வழிகளில் பெற முடியும். ஒரு வழி, அத்தகைய தொழில் நிறுவனத்தில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து அனுபவம் பெறுவது; இன்னொரு வழி, அந்த தொழிலைத் தொடங்கி தானே செலவழித்து அனுபவம் பெறுவது. இந்த இரண்டாவது வழியில் மலர்முகிலன், ஓட்டல் தொழில் பற்றிய அனுபவ அறிவைப் பெற்றுக் கொண்டு இருந்தார்.

அவர் முதன்மையாக நடத்திக் கொண்டிருந்த தொழில், வேறு ஒரு நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்ற பின் தொடங்கியது. அதனால் அவரால் அந்த தொழிலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

ஓட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர வேறு அனுபவமும் இல்லாமல் தொடங்கிய இந்த தொழிலிலும் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.

ஆனால் தொடர்ந்து, ஆட்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
பொதுவாக இந்த உணவகப் பணிகளுக்கு வருகிறவர்கள், பெரும்பாலும் குடிப்பவர்களாக இருந்தார்கள். திடீர் திடீர் என்று வேலையை விட்டுப் போகிறவர்களாக இருந்தார்கள். அப்படிப் போகாதவர்களை சுதந்திரம் அவர்களுடன் சண்டை போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். தான் உணவகத்தின் நலனுக்காகவே இப்படிச் செய்வதாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறது? நல்ல திறமையாளர்களை சுதந்திரம் ஏன் விரட்டிக் கொண்டு இருக்கிறார்? பெரிய கேள்வியாக உரிமையாளர் மனதில் எழுந்தது.

ஒரு தொழில் முனைவர் காலத்துக்கும் ஒரே மாதிரி சிந்தனையில் இருக்க முடியாது. அவ்வப்போது எழும் சூழ்நிலைகளை மனதுக்குள் போட்டு ஆய்வு செய்து கொண்டுதானே இருப்பார்? பொதுவாக தொழில் முனைவோருக்கு ஏற்படும் சிக்கல்களில் ஒன்றுதான் இது என்பது அவருக்கு புரிந்தே இருந்தது.
திடீரென்று, அன்றும் அதே போல ஒரு தொலைபேசி.

”நாங்கள் எல்லாம் வேலையைவிட்டுப் போறோம்”
”ஏங்க? என்ன ஆச்சு?”
”ஒன்று அவரை வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது எங்களை வைத்துக் கொள்ளுங்கள்”
மீண்டும் முதல்லே இருந்தா..?
அதைத் தொடர்ந்து உணவகத்தில் இருந்து வெயிட் டர் ஒருவரின் தொலைபேசி வந்தது.
”சார், இங்கே எல்லாம் வெளியே உட்கார்ந்து கொண்டு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. சுதந்திரத்தை திட்டிக்கிட்டு இருக்காங்க..”
அடுத்ததாக இவர் எதிர் பார்த்தபடியே சுதந்திரம் தொலைபேசி வந்தது.
”என் செல்போனை பிடுங்கிக்கிட்டாங்க. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கப்போறேன்..”

மலர்முகிலன், இது எது வரை போகுமோ போகட்டும் என்று காத்திருந்தார்.
காவல் நிலையத்துக்கு போகிறேன் என்று போன சுதந்திரம் பாதியிலே திரும்பி வந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

சரி, இனிமேலும் நாம் நேரடியாக களத்தில் இறங்காமல் இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட மலர்முகிலன் உடனே உணவகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். பொதுவாக இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம், நம்முடைய திறமையை வளர்த்துக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பாகக் கருதுபவர் என்பதால் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் சென்றார்.
அங்கே போனதும், சுதந்திரமும், மற்றவர்களும் ஒருவர் மீது ஒருவர் காட்டமாக இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலை வருவது இது இரண்டாவது முறை. என்ன முடிவு எடுக்கலாம்? முடிவு எடுப்பதை கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்று கருதினார் மலர்முகிலன்.
முதலில் அவருடைய செல்போனை அவரிடம் கொடுங்கள்.
செல்போனை சுதந்திரத்திடம் கொடுத்தார்கள்.

”சுதந்திரம் நீங்க நம்முடைய இன்னொரு அலுவலகத்தில் இரண்டு நாட்கள் தங்கி இருங்கள்” என்று அனுப்பி வைத்தார். அங்கே இருந்தவர்களிடம் நீங்கள் போய் வேலையைப் பாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
மறுநாள், சுதந்திரம், தொலைபேசியில் அழைத்து ”என்னுடைய செல்போனில் இருந்த மெமரி கார்டு ஒன்றை அவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். வாங்கிக் கொடுங்கள்” என்றார்.

அதன் பிறகுதான் அந்த திருப்பம்.
மெமரி கார்டை எடுத்தவர்கள், அதை மலர்முகிலனிடம் கொடுத்து, ”நிச்சயமா நீங்க இதை கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்து விட்டுத்தான் அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றார்கள்.

“இன்னொருவர் மெமரி கார்டை நாம் போட்டுப் பார்ப்பது நாகரிகம் இல்லையே”
”இல்லை. இதை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிய வேண்டிய பல செய்திகள் இதில் உள்ளன. நம்முடைய உணவகத்தின் வளர்ச்சி தொடர்பானவை உள்ளன” என்றனர்.

மெமரி கார்டில் உள்ள வற்றை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தார். காவல் நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனவர் ஏன் பாதியிலேயே திரும்பி வந்தார் என்பதற்கான காரணம் புரிந்தது.

உணவகத்தில் பணிபுரிந்த சில பெண்களின் படங்கள் பதிந்து வைக்கப்பட்டு இருந்தன. அவருக்கு வரும் செல்பேசி அழைப்புகளை பதியும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.

உணவகத்தில் பணிபுரிந்த ஒரு பெண் பெயரில் ஒரு ஃபோல்டரையே போட்டு அவருடன் பேசியது அத்தனையையும் பதிந்து வைத்து இருந்தார்.

இன்னொரு ஆடியோவில், ”ஓனர் இந்த வாட்டி விளம்பரத்துல அவருடைய நம்பரையே கொடுத்து விட்டார். அதனால உங்க ஒட்டலுக்கு தேவையான ஆட்களை என்னால எடுத்து அனுப்ப முடியவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க. நான் காய் நகர்த்துறேன்..”- இதைக் கேட்டதும் மலர்முகிலனுக்கு வியப்பாக இருந்தது.

சில ஆட்கள் தேவை விளம்பரங்களில் சுதந்திரத்தின் செல்பேசி எண்ணைக் கொடுத்து, வேலை கேட்பவர்களிடம் பேசச் சொல்லி இருந்தார். இவர் அந்த விளம்பரங்களைப் பார்த்து தொடர்பு கொண்டவர்களை இவருக்குத் தெரிந்த வேறு ஓட்டலுக்கு அனுப்பி வைத்து இருப்பது இதன் மூலம் தெரிந்தது.

இன்னொரு ஆடியோவில், ஒரு பெண்ணிடம், ”இது என்ன மயிர் வேலை. நான் வேறு ஒரு காரணத்துக்காக இங்கே வேலை செய்து கொண்டு இருக்கிறேன்” என்று கூறுகிறார்.. அது என்ன காரணமாக இருக்கும்? மலர்முகிலன் பல கோணங்களில் சிந்திக்கத் தொடங்குகிறார். இப்படியே பல வில்லத்தனமான பேச்சு உள்ள ஆடியோ ஃபைல்கள்.

மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக காட்சி அளித்த சுதந்திரம், என்னமா தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்? கெட்டிக்காரன் புளுகை எட்டு நாளில் தெரிந்து விடும் என்று முன்னோர் சொல்லி இருக்கிறார்கள். இந்த தந்திரத்தின் புளுகு விரைவிலேயே தெரியாமலா போய்விடும்?
காத்திருந்தார், மலர்முகிலன்.
மறுநாள்..
சுதந்திரம், மலர்முகிலனைச் சந்திக்க நேரம் கேட்டு, குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வந்தார்.
மெமரி கார்டு செய்திகள் பற்றி எதுவும் கேட்காமல் சுதந்திரத்திடன் இனிமையாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

”என்ன சுதந்திரம்? தொடர்ந்து இப்படி சிக்கலாகவே இருக்கே, என்ன செய்யலாம்?”
”உங்க கிட்ட சொல்ல தயக்கமா இருக்கு…”
”சும்மா சொல்லுங்க..”
”அனுபவம் இல்லாம நீங்க இந்த ஓட்டல் தொழில்ல இறங்கிட்டு கஷ்டப்படுறீங்க. நான் வேணும்னா எடுத்து நடத்தட்டுமா? உங்களுக்கு மாதம் ஒரு தொகை கொடு த்து விடுகிறேன். அதுக்காக அதிகமா கேட்டா என்னால கொடுக்க முடியாது…”
ஏதோ மலர்முகிலன் ஒரு முடிவுக்கு வந்து விட்டதைப் போலவே எண்ணிப் பேசினார், சுதந்திரம்.

இப்போது புரிந்து விட் டது, சுதந்திரத்தின் தந்திரம்.
ஆட்களை எல்லாம் ஏன் விரட்டிக் கொண்டிருந்தார் என்பதற்கான காரணமும் புரிந்தது.
என்னமா சிந்திக்கிறாங்க..- வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர், கணினியை இயக்கினார். ஸ்பீக்கரில் சுதந்திரத்தின் குரல் தெளிவாக ஒலித்தது, இது என்ன மயிர் வேலை….

– நேர்மன்