Thursday, September 23, 2021

5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்?

இன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

ஏன் டேட்டா சயின்ஸ் முன்னணியில் இருக்கிறது?

காலங்காலமாக மனிதன் பயன்படுத்தி வந்த ஆயுதங்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பரிணாமங்களைப் பெற்று வந்திருக்கின்றன. கற்கள், வில் அம்பு, துப்பாக்கி, விமான தாக்குதல், ஏவுகணை, அணுகுண்டு என்ற வரிசையில் இருந்து தற்போது, நவீன ஆயுதமாக தகவல் எனப்படும் டேட்டாவாக மாற்றம் கொண்டுள்ளது.

- Advertisement -

பொருளாதாரம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் டேட்டா எனும் ஆயுதம் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டேட்டாவை கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அதனால் தான் ‘டேட்டா சயின்ஸ்’ முன்னணி படிப்பாக இருக்கின்றது.

மார்க்கெட்டிங் செய்பவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை, கல்லூரி பேராசிரியர்கள் முதல் சமூக உளவியலாளர்கள் வரை டேட்டாக்களை சேகரிக்க பயன்படுத்திய வழி சர்வே எடுப்பது ஆகும். ஆய்வின்போது, பங்கு பெறுபவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் தரும் பதில்களை ஒருங்கிணைத்து செய்வார்கள்.

Also read: இணையம் வழி வணிகம் உங்களுக்கும் தேவை!

ஆனால், இப்போது டேட்டா சேகரிக்கும் முறைகள் முற்றிலும் மாறிவிட்டன. மாறி வரும் உலகில் அன்றாடம் நம்மையும் அறியாமல் விட்டுச்செல்லும் டிஜிட்டல் தடயங்கள் தான் டேட்டா. எதற்கு சர்வே நடத்தி கேள்வி கேட்டுக்கொண்டு என்கிறார்கள் டிஜிட்டல் துறை நிபுணர்கள். மக்கள் விட்டுச்செல்லும் டிஜிட்டல் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்வதுதான் இன்றைய போக்கு. கூகுளில் நம் தேடல்கள் டேட்டா. இன்டர்நெட்டில் நாம் செய்யும் கிளிக்குகள் தான்! டேட்டா. பேசும் மொழி டேட்டா, பதிவாகும் ஒவ்வொரு சொற்களும் டேட்டா, நாம் எடுக்கும் படங்கள் கூட டேட்டா தான்.

படங்களைக் கொண்டு மனித மனம் பற்றியும் மாறி வரும் குணங்களையும் படம் பிடித்து காட்டலாம் என்கிறார் ‘செத் ஸ்டீஃபன்ஸ்-டேவிடோவிட்ஸ்’(Seth Stephens-Davidowitz). இவர் ஒரு இன்டர்நெட் டேட்டா எக்ஸ்பர்ட். தினம் இன்டர் நெட்டில் பயணிக்கும் மக்களின் டிஜிட்டல் பாதைகளைக் கண்காணிப்பவர். முக்கியமாக கூகுளில் மக்கள் தேடும் செய்திகளை பிரித்து ஆராய்பவர். மனிதர்களின் ஆழ்மனதை, அதிலுள்ள எண்ணங்களை, வேறு யாரிடமும் கூறாத ரகசியங்களை அவர்களிடமிருந்தே கண்டெடுக்க முடியும் என்று தனது ஆய்வை தொடங்கியுள்ளார். இவர் எழுதியிருக்கும் புத்தகம் ‘Everybody Lies’ இன்டர்நெட் தேடல்கள் மூலம் மனித மனதை ஆய்வு செய்வது பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம். ஆய்வு செய்ய அளவெடுத்து செய்தது போன்றது படங்கள் என்கிறார்.

ப்ரவுன் மற்றும் பெர்க்லி (Brown Berkeley) பல்கலைக்கழக கம்ப்யூட்டர் அறிவியலாளர் கள் செய்த ஆய்வு ஒன்றிலிருந்து தொடங்குவோம். அமெரிக்காவில், பள்ளி இறுதி நாளன்று மாணவர்கள் படம் எடுத்து அதை ஆல்பமாக்கும் வழக்கம் உண்டு. இதை இயர்புக் என்கிறார்கள்.

அப்படி இன்டர்நெட்டில் போஸ்ட் செய்யப்பட்டிருந்த 949 பள்ளிக்கூட இயர் புக்குகளை சேகரித்தார்கள் ஆய்வாளர்கள். 1905 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான இயர்புக்குகள். அதிலிருந்த அத்தனை முகங்களையும் காலவரிசைப்படி அடுக்கி ஆராய்ந்தனர்.

வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு பெட்டகங் கள் ஆக்குங்கள் என்று விளம்பரப் படுத்தின. இன்று உங்கள் குழந்தைகள் போட்டோ எடுக்கும் முன் ‘சே சீஸ்’ என்று சொல்லி ஃபோட்டோ எடுப்பதை பார்த்திருப்போம்.

‘சீஸ்’ என்ற சொல்லை கூறும்போது பற்கள் தெரியும் அளவுக்கு உதடுகள் விரிகின்றன. ஃபோட்டோ எடுக்கும் போது, சிரிப்பது போல் தெரிகிறது. ஃபோட்டோக்களில் உள்ள தலைமுறை இடைவெளிக்கான காரணம் இதுவே.

Also read: பணியாளர் நிர்வாகத்துக்கு என “எச் ஆர்” என்ற பெயரில் தனிப்பிரிவு உருவானது எப்படி?

உலகப் பொருளாதாரம், உள்நாட்டு வளர்ச்சி போன்ற செய்திகளில் கூட படங்களின் பங்களிப்பு புதைந்து கிடக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அந்நாட்டின் படங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் ‘வெர்னான் ஹெண்டர்ஸன்’, ‘ஆடம் ஸ்டோரிகார்ட்’, ‘டேவிட் வீல்’ ஆகிய பொருளாதார வல்லுநர்கள். உலக நாடுகள் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு இன்னமும் சரியாக மதிப்பிடப்படுவதில்லை.

சில நாடுகளின் பொருளாதார செயல்கள் சரிவர தெரிவதில்லை. இதை ஓரளவு சரியாய் மதிப்பிட இந்த வல்லுநர்கள் பரிந்துரைக்கும் வழி படங்கள். அதுவும் இரவு நேரத்து படங்கள். இரவு நேரத்தில் ஒரு நாட்டில் எந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கிறது என்பதை பார்த்தால் போதும், அவர்களின் பொருளாதார நிலை தெரிந்துவிடும் என்கிறார்கள்.

மின்சார பயன்பாடு

உலகின் ஏழ்மையான நாடுகளில் வசிப்பவர்களில் பலர் மின்சார கட்டணம் செலுத்தக்கூட முடியாமல் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். அமெரிக்க சாட்டிலைட்கள் தினமும் பூமியை பதினான்கு முறை சுழன்று வருகின்றன. போகும் வழியில் பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஃபோட்டோ எடுத்து அனுப்புகின்றன.

இதில் பூமியை இரவில் எடுக்கும் ஃபோட்டோக்களும் அடங்கும். அப்படி இரவில் எடுக்கும் படங்களில் ஒவ்வொரு நாடுகளின் மேற்பரப்பிலும் பதிவாகும் வெளிச்ச அளவைக் கொண்டு ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலையை அளவிட முடியும் என்கிறார்கள். தங்கள் ஆய்வுகளை ‘American Economic Review’ என்ற ஜர்னலில் ‘Measuring Economic Growth From Outer Space’ என்ற கட்டுரையில் விவரமாக விளக்கியிருக்கிறார்கள்.

Also read: மகிழ்ச்சி

சாட்டிலைட் படத்தின் ஒவ்வொரு பிக்சலும் பூமியின் ஒரு சதுர கிலோமீட்டருக்கு சற்று குறைவான இடத்தை குறிக்கும். பூமியில் அந்த இடம் பிரகாசமாக இருந்தால் ஃபோட்டோவில் பிக்சல் பிரகாசமாக இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி கூடி தனிநபர் வருமானம் உயரும் போது அந்நாட்டு மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கும்

அதனால், அந்நாடு மேலிருந்து பார்க்கும் போது மற்ற நாடுகளை விட பளிச்சென்று தெரியும்! வெளிச்ச அளவை டேட்டாவாய் பாவித்து பொருளாதார நிலைமையை கணக்கிடுவது துல்லியமாக இருக்காதுதான். ஆனால், நாடுகள் அளிக்கும் பொருளாதார டேட்டாவோடு அந்நாட்டின் வெளிச்ச அளவை சேர்த்து பார்க்கும் போது அந்நாடுகளின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.

டேட்டா ஆய்வு என்பது கடல் போன்றது. டேட்டாவைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளும் உள்ளன. அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டு மக்களின் தகவல்களை எங்கே சேமிக்கின்றன, எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதெல்லாம் பெரும் சிக்கலாக மாறிவருகிறது.

டிஜிட்டல் உலகில் உலா வரும் டேட்டாக்களின் நம்பகத்தன்மையும் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், இந்த நவீன உலகில் மனிதன் கையில் எடுத்திருக்கிற மிகப்பெரும் ஆயுதம் ‘டேட்டா’ என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

– த. செந்தமிழ்ச் செல்வன்

Latest Posts

வலுவான கால்களுக்கு நடைப்பயிற்சி

நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை "Prevention"...

கடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும்? – திரு. வி. கே. சுப்புராஜ்

கடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...

ஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக?

CHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம்! ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...

Don't Miss

இந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா?

பிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...

மண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.

மண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

அறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..

இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...

”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்

கல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.