fbpx
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சைனா அதிபர் திரு. சி ஜின்பிங்க் (Xi Jinping) அரசு, உலக பொருளாதாரத்தின் மீது, சைனாவின் உள்ளூர் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 'மேட்-இன் சைனா 2025' என்ற தொழில் உத்தியை (Strategy) வகுத்தது. இதனால், அமெரிக்கா, முதன்மையாகக் கருதும் உடல்நலம் மற்றும் நலவாழ்வுத் துறையில் (ஹெல்த் கேர்) முதலீடு செய்ய சைனா முன்வந்தது.
இதுவரையில் ஒரு சிறுதொழில் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருளைக் கொண்டு ஈட்டும் விற்பனை வருமானமானது ஆண்டு ஒன்றிற்கு ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் இந்த சரக்கு சேவை வரியின் கீழான கலவை திட்டத்தினை (Composition Scheme) தெரிவு செய்து, பல்வேறு வரி விகிதங்களுக்கு பதிலாக அவைகளுள் ஏதேனும் ஒரு வரி விகிதத்தை மட்டும் அனைத்திற்கும் பின்பற்றி வரி செலுத்தினால்...
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ரொக்கமில்லாத பணப்பரிமாற்றம் ஓரளவு உயர்ந்து வருகிறது. 160 மில்லியன் மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்கின்றனர். பாதுகாப்பு தன்மையை கூடுதலாக்கும் வகையில் புதிய விர்ச்சுவல் கிரடிட் /டெபிட் (Virtual Credit/Debit Cards) எனும் புதிய வசதி தற்போது அறிமுகப் படுத்தபட்டு உள்ளது. இதன் பயன்கள் பின்வருமாறு. இழப்பு ஏதேனும் ஏற்படுமாயின்...
இன்றைய உலகில் சில புகழ்பெற்ற குறியீடு (Brand) கொண்ட பொருள்களுக்குக் கூடச் சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான பொருள்களுக்கே புகழ்பெற்ற மனிதர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மருந்துகள், வீட்டுக் கருவிகள் போன்றவற்றை விற்பதற்குப் பிரதி நிதிகள்தான் முக்கியம். இப்போது புறநகர்களில் கூட நிறைய அடுக்கு வீடுகள் (Flats) எழும்பி வருகின்றன. உள் அலங்காரம், சமையலறைக்குத் தேவையான...
நிதி ஆண்டு இறுதியில் நிறுவனங்கள் கணக்குகளை முடித்து இலாப நட்ட கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயார் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு இறுதி இருப்பை அடுத்த நிதியாண்டிற்கான தொடக்க இருப்பாக கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு செல்லும் போது அதிக எண்ணிக்கையிலான கணக் கிருப்புகளைக் கொண்டு செல்லும் போது அந்த தொகைகள் அனைத்தும் சரியான...
பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நெட்ஃபிளிக்ஸ் சுமார் ஏழு மில்லியன் அமெரிக்க சந்தாதாரர்களுக்கு இணையம் மூலம் வீடியோ சேவை செய்வதுடன் தொடங்கியது. ஓரிரண்டு ஆண்டுகளிலேயே அது உலகம் முழுவதும் 93 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடைந்தது. 1990 களில் நெட்ஃபிளிக்ஸ் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது மின்னஞ்சல் மூலம் வீடியோக்களை முக்கியமாக திரைப்படங்களை வழங்கியது. இது அந்தக் கால...
ஏற்றுமதி-இறக்குமதி தொழிலை முழுமையாக தெரிந்து கொண்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் இணையதளம் வழியாக இலவசமாக ஏற்றுமதி - இறக்குமதி தொழில் பற்றிய அடிப்படை முறையை கற்கலாம். தனியார் அமைப்புகள் நடத்தும் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் ஒரு கருத்தரங்கம் போலவே நடைபெறுகிறது. இதில் பங்கு பெறுவோர் ஒரே நாளில் முழுமையான தகவல்களைழீயீ பெற இயலாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்...
குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களை (Micro, Small, Medium Enterprises) சுருக்கமாக எம்எஸ்எம்இ (MSME) என அழைக்கிறார்கள். பொதுவாக தொழிலகங்களை, அவை எந்திரங்களுக்கும், கருவிகளுக்கும் முதலீடு செய்யும் தொகை அடிப்படையில் இவை வரையறுக்கப்படுகின்றன. குறுந் தொழிலகம் எனில் எந்திரங்களுக்கு ரூ. 25 இலட்சம் வரையிலும், கருவிகளுக்கு ரூ. 10 இலட்சம்...
விதைகள் மற்றும் உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கான விவரங்களை பல்லாயிரம் உழவர்களிடம் இருந்து சேகரித்து, திரும்ப அதே உழவர்களிடமே விற்பனை செய்கின்றன. ஆறு தலைமுறைகளாக, பென் ரெயின்ஸ்கி-யின் குடும்பம், மேற்கு லோவாவில் உள்ள விண்ட்ஸ்வெப்ட் சமவெளியில் மக்காச் சோளமும் சோயாபீன்சும் பயிரிட்டு வருகிறது. ஆனால் இன்று அவர், தனது 12 ஆயிரம் ஏக்கரில் தனது புதிய பயிர்களுடன்...
வீட்டு மனைகளை முதலீட்டுக் காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் மனை/நிலங்களுக்கு “L” out கட்டுமானம் & ஃபென்சிங் ஏன் அவசியம்? வீட்டு மனைகளை முதலீட்டுக்காகவோ, அல்லது எதிர்கால வீட்டு மனை தேவைக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் எல்லைகளில் “L” கட்டுமானம் கட்டாயம் கட்ட வேண்டும். சுற்றிலும் சுவர்...