கொட்டிக் கிடக்கும் மார்க்கெட்டிங் பணி வாய்ப்புகள்

0

வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றை நடத்து பவர்கள் அவரவர் களுக்கு ஏற்ற வகையில், அவரவர் களுக்கு பிடித்த வகையில் நடத்தி வருகிறார்கள். சின்ன அளவிலான நிறுவனங்கள் முதல் பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் உள்ளன. இவை வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களுடன் தொடர்பு எற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் உள்ள பணி வாய்ப்புக்கு ஏற்ப நேர்காணல்களுக்கு ஆட்களை அனுப்பி வைப்பார்கள்.

சில வேலை வாய்ப்பு நிறுவனங்கள் வேலை தேடுபவர்களிடம், கட்டணம் வசூலிப்பது இல்லை; அல்லது சிறிய கட்டணம் ஒன்றைப் பெறுகின்றன. ஆட்களைத் தேர்வு செய்து கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து, ஒரு மாத சம்பளம் அல்லது அரை மாத சம்பளம் அல்லது குறிப்பிட்ட ஏதாவது கட்டணம் பெற்றுக் கொள்கின்றன.

இத்தகைய வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், திரு. சுகவனம். மென்பொருள் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவத்துடன் தனது சுகா கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலத்தில் அவரைச் சந்தித்து பேட்டி கண்டபோது, ”இன்றைக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் இவற்றைக் கண்டறிந்து வேலை தேடுபவர்களுக்கு அந்த பணி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி அவர்கள் பணியில் சேர உதவுகிறோம்.

சுகா கன்சல்டன்சி நிறுவனத்தை 2011 ஆம் ஆண்டு தொடங்கினேன். எனக்கு மரக் கன்றுகள் நடுவதில் ஆர்வம் அதிகம். மரக் கன்றுகள் நடுவதில் ஆர்வம் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இதனால் பல ஊர்களுக்கும் மரக்கன்றுகள் நடுவதற்காக சென்று இருக்கிறேன்.

அப்போதெல்லாம் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல், சோர்வுற்று இருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம், அளவில்லாத வேலை வாய்ப்புகள் உள்ள செய்தியை கொண்டு செல்ல விரும்பினேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வேலை வாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இளைஞர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பணிகள் குறித்த செய்திகளை சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி பரப்பி வருகிறேன்.
நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பது உண்மைதான் என்றாலும், இந்த வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்குத் தேவையான திறன் மிகுந்தவர்களைத் தேட வேண்டி இருக்கிறது. எனவே வேலை தேடும் இளைஞர்களுக்கு, அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம்.

இந்த நிறுவனம் தொடங்கிய காலத்தில் நானே அனைத்து வேலைகளையும் பார்த்து வந்தேன். இப்போது எங்களிடம் பல ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
ஒரு தொழிலாக இதனைக் கையில் எடுத்தபோது, பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. எனக்கு இருந்த அனுபவம் மற்றும் பொறுமை கொண்டு இவற்றை எல்லாம் சமாளித்தேன்.

எங்களிடம் நிறுவனங்கள் தரும் காலிப் பணியிடங்கள் மற்றும் அதற்கான தகுதி ஆகியவற்றை இணைய தளத்தில் உள்ள ஜாப் போர்ட்டல்களில் (job portal) அறிவிப்போம். பின்னர், அதனைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ற தகுதி உடையவர்கள் எங்களைத் தேடி வருவார்கள். அப்போது அவர்கள் பதிவுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர், அவர்களை நேர்காணல் மூலமாக சோதித்த பின் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்போம். அங்கு மீண்டும் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் நேர்காணல்கள் இருக்கும். அதில் தேர்வானால்தான் வேலை கிடைக்கும்.

வேலை கிடைக்காமல் போனால், அவர்கள் எதனால் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்து அதனை சரிசெய்து மீண்டும் அனுப்புவோம். இவ்வாறு பல நிறுவனங்களுக்கு அனுப்புவதற்காக சேவைக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். நாங்கள் நேர்காணலுக்கு அனுப்புவோம், ஆனால் தேர்வாகும் திறமை முழுக்க முழுக்க வேலை தேடுபவர்கள் கையில்தான் உள்ளது. அதற்கு நாங்கள் எந்த பரிந்துரையும் செய்வது இல்லை. பின்கதவு வாயில்களை அணுகுவதும் இல்லை.

எங்களால் வேலை பெறுபவர்கள், மேலும் பலரை எங்களிடம் அனுப்புவார்கள். இவ்வாறு எங்கள் தொழில் வளர்ந்து வருகிறது. இப்போது 500 கல்லூரிகள் 650 கார்ப்பரேட் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்பில் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அவர்களிடம் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் அதனை நிரப்ப இளைஞர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அனைத்து தகவல்களையும் எங்களுக்கு அனுப்புவார்கள். நாங்கள் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றாற் போல் ஆட்களை அனுப்பி வைப்போம்.

பெரும்பாலான பட்டதாரிகள், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தகுதி உடையவர்களாக இல்லை. ஆண்டுகள் மட்டும் கடந்தால் கல்லூரிப் படிப்பு முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மாறாக படிக்கின்ற துறையில் போதுமான அளவு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவர்களிடையே இல்லை. அதனால்தான் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன, வேலை கிடைக்கவில்லை என்று எல்லாம் தவறான கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் எங்களிடம் வரும் பட்டதாரிகளுக்கு போதிய திறமை இல்லை என்று அறிந்தால் முதலில் அவர்களை ஊக்கப்படுத்துவோம். பின்னர், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு முதலில் புரிய வைப்போம். அவர்களுக்கு அவர்கள் துறை தொடர்பாக எவ்வளவு அறிவுக் கூர்மை இருக்கிறது என்று புரிய வைப்போம். பின்னர், அவர்கள் திறமையை வளர்க்க எங்களால் இயன்ற வழிகாட்டுதலையும் செய்கிறோம். என்னுடன் தொடர்பில் உள்ள சில திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கும் நிறுவனங்களைப் பரிந்துரை செய்கிறேன்.

சான்றாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அந்த துறையில் புதிதாக வந்து இருக்கும் தொழில் நுட்பங்கள், மென்பொருட்கள் மற்றும் அது தொடர்பான சான்றிதழ் படிப்புகளைப் படிக்க ஆலோசனை தருகிறோம். அதனால், அனைவரும் அவர்கள் துறையில் சிறந்த அறிவைப் பெற்றால் வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு கொட்டிக் கிடக்கின்றன.

பொதுவாக ஐஐடி போன்ற உயர்நிலை கல்லூரிகளிலும் கூட கேம்பஸ் இன்டர்வியூக்களில் சொற்பமான மாணவர்களே தேர்வாகின்றனர். மற்றவர்கள் நல்ல மதிப்பெண்கள் இருந்தும் தேர்வாவது இல்லை. இதற்கும் காரணம் அடிஷனல் ஸ்கில்ஸ் எதுவும் இல்லாததுதான். இதனை நான் கூறக் காரணம், பல கல்லூரிகளுக்கு நாங்கள் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த செல்லும் போதும் இதே நிலைதான் மாணவர்களிடையே இருக்கும். இவ்வாறு வேலை வாய்ப்பு முகாம்களில் வேலை கிடைக்காத மாணவர்கள் எங்களைத் தேடி வருவார்கள் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறோம்.

தற்போது அதிக வேலை வாய்ப்புகள் உள்ள துறை மார்க்கெட்டிங் துறை ஆகும். இதில் பட்டதாரிகளுக்கு மட்டும் அல்லாமல் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் கூட வாய்ப்புகள் உள்ளன. மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியமாக பேச்சுத் திறமை இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் துறையில் சில ஆண்டுகள் பணி புரிந்தாலே அவர்களுக்கு ஒரு நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு திறமை வந்துவிடும். எங்கள் நிறுவனத்திலும் தற்போது மார்க்கெட்டில் துறையில் 2000 காலிப் பணி இடங்கள் உள்ளன. பெண்களுக்கும் டெலி மார்க்கெட்டிங்கில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

அரியர் உள்ள மாணவர்கள் சிலர் தங்களுக்கு வேலை கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. சராசரி மற்றும் அரியர் உள்ள மாணவர்களை குறிப்பிட்டுக் கேட்கும் நிறுவனங்களும் உள்ளன. அவர்கள் அவ்வாறு கேட்கக் காரணம் சராசரி மாணவர்கள்தான் நிறுவனத்தில் நிலைப்புத் தன்மையுடன் இருப்பார்கள். அதனால், வேலை இல்லை என்று மற்றவர்களைக் குறை கூறாமல் அதற்கு ஏற்ற தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டால் எளிதாக வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

எங்கள் நிறுவனத்தில் எம்ப்ளாய்மென்ட் சர்வீசைத் தவிர, சுகா கிரீன் சர்வீசஸ், சுகா இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ், சுகா சாஃப்ட்வேர் கன்சல்டிங் சர்வீசஸ் என இதர சேவைகளும் வழங்கி வருகிறோம். மேலும், சுகா ரெஃபரெல் சிஸ்டம் (suரீணீ க்ஷீமீயீமீக்ஷீக்ஷீணீறீ sஹ்stமீனீ) என்ற மற்றொரு அமைப்பைத் துவங்க இருக்கிறேன். இதன் மூலம் வணிகர்கள் தங்களுக்குள் தேவைப்படும் சேவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்” என்றார், திரு. சுகவனம் (9176244989).

– எஸ். உஷா

வருமானத்தைப் பெருக்கும் பனைப் பொருட்கள்

0

மிழர்கள் இனிப்புக்குப் பயன் படுத்தியது பனை வெல்லம் என்ற கருப்புக்கட்டி. பனையில் இருந்து கிடைக்கும் நார் மற்றும் ஓலைகளைப் பயன்படுத்தி சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தே பல்வேறு                               பொருட்களை மக்கள் தயாரித்து வந்தனர்.

இன்றைக்கு பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இவற்றைத் தயார் செய்யும் மூலப்பொருள்கள் எளிதாகக் கிடைக்கவில்லை.
பனம் பழச்சாற்றை வெளியில் துணியில் பரப்பிக் காயவிட்டுத் துண்டுகளாக்கி nunku-inner“பனாட்டு” என்ற பெயரில் இனிப்பு பண்டமாகச் சுவைத்திருக்கிறார்கள்.

பனையில் ஆண்பனை அலகுப்பனை என்றும், பெண்பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண் பனையில் நுங்கு கிடைக்கிறது.
p3பதநீர் உடலுக்கு பலம் தருவது. பல்லும் எலும்பும் பதநீரால் உறுதிப்படுகின்றன.
பதநீரிலிருக்கும் இரும்புச்சத்து நரம்பு மண்டலத்துக்குச் செயலூக்கத்தை அளிப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.

பதநீரில் உள்ள தையமின் என்ற உயிர்ச் சத்து மூளையைச் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
வைட்டமின் பி2 எனப்படும் “ரிபோ ஃபிளேவின்” என்கிற சத்து குளுக்கோமா என்கிற கண் நோய் வராமல் தடுத்துப் பாது காக்கிறது. பதநீரிலிருக்கும் நியாசின் எனும் மூலக்கூறு மனத்தடுமாற்றம் வராமலும் வாய்ப்புண் வராமலும் காக்கிறது.

பதநீரைக் காய்ச்சிப் பாகு ஆக்கி சிரட்டையில் ஊற்றி எடுப்பதைக் கருப்புக்கட்டி, Berty_news_1175429214546கற்பகக்கட்டி என்கிறோம். பதநீரைப் பக்குவமாகக் காய்ச்சிக் கூழாக்கி சில நாட்கள் படிக வளர்ச்சிப்படி கற்கண்டாகத் தயாரிக்கலாம்.

ஒரு பனை மரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் 3000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்போது தமிழகமெங்கும் 3 கோடி பனைமரங்கள் நிற்பதாக வைத்துக் கொண்டால் ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய் வருமானம் பெறலாம்.

பனைப் பொருள்களின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.

பெண்களுக்கு பனைநார், பனை ஓலையின் மூலம் பயன்பாடு மிக்க பொருள் களைத் தயார் செய்யும் பயிற்சியளித்தால் அவர்களின் வருமானம் பெருகும்.

– ஜே.ஜோ.பிரகாஷ், சுற்றுச்சூழல் புதிய கல்வி

காய்கறிகளைக் கலைப்படைப்பாக்கும் இளஞ்செழியன்!

0

தேனியில் யாழ் காய்கறிச் சிற்பக் கலைக்கூடம் எனும் பெயரில் பயிற்சி மையம் ஒன்றினை நடத்தி வரும் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த திரு. இளஞ்செழியன் அவர்களை வளர்தொழில் இதழுக்காகச் சந்தித்த போது அவர் சொன்னார்.

“எனது பள்ளிப்படிப்பைக் கூடலூரில் முடித்துவிட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு சமையல் தொழில் நுட்பக் கல்லூரியில் சமையல் தொடர்புடைய தொழில் நுட்பப் படிப்பு ஒன்றை முடித்து, சமையல் கலைஞர் பணிக்காக மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி ஆற்றினேன். அந்த உணவகத்தின் முன்பகுதியில் இருக்கும் கண்ணாடிப் பெட்டியில் நாள்தோறும் காய்கறிகளில் கற்பனையாக ஏதாவதொரு உருவத்தைச் செய்து பார்வைக்கு வைப்பார்கள். அந்தச் சாலையின் வழியாகச் செல்லும் பலரும் உணவகத்தின் முன்பு நின்று காய்கறியிலான உருவத்தைப் பார்த்து செல்வார்கள்.

திரு. இளஞ்செழியன்
திரு. இளஞ்செழியன்

பள்ளிக் காலத்தில் ஓவியப் போட்டிகளில் பல்வேறு பரிசுகளைப் பெற்று இருந்ததால் எனக்கும் காய்கறிகளில் சிற்பம் செதுக்கும் ஆர்வமேற்பட்டது. ஓய்வு நேரங்களில் காய்கறிகளில் உருவங்களை உருவாக்கும் என் முயற்சியைத் தொடங்கினேன். காய்கறிகளில் விதவிதமான வடிவங்களை உருவாக்கினேன்.

இந்நிலையில் இந்தக் கலையை நாம் ஏன் தொழிலாக மாற்றிச் செய்யக் கூடாது என்று எனக்குள் புதிய எண்ணம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் நான் பார்த்து வந்த அதிக சம்பளத்துடன் கூடிய வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினேன்.

தேனி மாவட்டத் திலிருக்கும் சில வங்கிகளின் மேலாளர்களைச் சந்தித்து எனது காய்கறிச் சிற்பக் கலைத் தொழிலுக்கு கடனுதவி அளிக்கும்படி வேண்டினேன். அவர்கள் தங்கள் படிப்பிற்கு ஏற்றபடி உணவகம் ஒன்று தொடங்குங்கள்.

நாங்கள் கடன் வழங்குகிறோம். தாங்கள் திட்டமிட்டுள்ள காய்கறிச் சிற்பக் கலைத் தொழிலுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள் குறுகிய நாட்களில் அழிந்து விடக்கூடிய அழிவுப்பொருளாக இருப்பதால் கடன் வழங்க இயலாது என்று மறுத்துவிட்டனர். இதற்காக நான் மனம் உடைந்து போய்விடவில்லை, சுயமுயற்சியுடன் இத்தொழிலில் வெற்றியைப் பெறுவதே என்னுடைய இலக்கு எனும் நிலையில் எனது அடுத்த முயற்சியைத் தொடர்ந்தேன்.

மணமக்களின் உருவத்தைக் காய்கறிகளில் செய்து கொடுக்கிறேன், மணமேடையைக் காய்கறிகளைக் கொண்டு அலங்கரித்துக் கொடுக்கிறேன், எனக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று திருமணம் நடத்தத் திட்டமிட்டிருப்பவர்களின் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாய்ப்பு கேட்டேன்.

ஒரு இளைஞர் மட்டும் என்னுடைய முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் மணமக்களின் உருவங்களைக் காய்கறிகளில் உருவாக்கிடவும், மணமேடை அலங்கரிப் பிற்கான காய்கறிச் செலவுகளுக்கு மட்டும் முதலில் பணம் தருவதாகவும், திருமணத் திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும் மணமேடை அலங்காரம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டும்தான் நான் உங்களுக்கான பணத்தைத் தருவேன் என்கிற நிபந்தனையுடன் அனுமதியளித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

அந்தத் திருமணத்தில் என் உழைப்பில் உருவாகிய மணமக்களின் காய்கறி உருவச் சிற்பங்களையும், மணமேடை அலங்காரத்தையும் பார்த்துப் பலரும் வியந்து பாராட்டினர். அவர்களில் பலர் என்னுடைய கைபேசி எண்ணையும் வாங்கிச் சென்றனர். மணமகனும் எனக்கு நான் கேட்ட பணத்தை விடக் கூடுதலான பணத்தைக் கொடுத்தார். அதன் பிறகு எனக்குத் திருமணக் காலங்களில் பல அழைப்புகள் வந்தன. இந்த முயற்சியில் ஒரு முக்கியமான விசயம் என்று சொன்னால், எனக்கு வங்கியில் கடன் அளிக்க முடியாது என்று சொன்ன ஒரு வங்கி மேலாளர் அவரது மகளின் திருமணத்திற்கு மணமக்களின் காய்கறிச் சிற்பத்திற்கும், காய்கறி மேடை அலங்காரத்திற்கும் எனக்கும் முன் பணம் கொடுத்துச் சென்றது தான். இதில் என் முயற்சியின் நான் முதல் படியில் வெற்றியைத் தொட்டேன்.

அடுத்ததாக என்னுடைய கலைப் படைப்புகளைப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எப்படி எடுத்துச் செல்வது என்கிற முயற்சியில் இறங்கினேன். மாணவர்களுக்கு என்னுடைய காய்கறி உருவச் சிற்பப் பயிற்சியை இலவசமாக அளிப்பதென முடிவு செய்து சில பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அனுமதி கோரினேன்.சில பள்ளிகளில் எனக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்தனர். நான் அந்தக் காய்கறிகளில் காந்தி, காமராஜர், பாரதியார், அண்ணா, அப்துல்கலாம் என்று பல தலைவர்கள் முகத்திலான உருவங்களையும், சிறுவர்களுக்குப் பிடித்தமான கேலிச்சித்திரப் படங்களில் வரும் சோட்டா பீம், சுக்ரி, கிருஷ் போன்ற உருவங்களையும் உருவாக்கிக் காட்டினேன். அந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களில் சிலர், என்னுடைய காய்கறிக் கலைப் படைப்பில் ஆர்வமேற்பட்டு விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வருவதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கு விடுமுறை நாட்களில் அந்தப் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினேன்.

அதற்கடுத்ததாக அரசு கண்காட்சிகளில் நம் கலைப்படைப்புகளை எப்படிக் கொண்டு சேர்ப்பது என்று முயற்சித்தேன். தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப் பெற்ற கண்காட்சியில் என்னுடைய காய்கறிச் சிற்பங்களைக் காட்சிப்படுத்தும் முயற்சிக்கு வாய்ப்பளிக்கும் படி வேண்டினேன்.IMG_1855
தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் அதிகாரிகளின் சந்திப்புகளுக்குப் பின்பு எனக்கு இடம் ஒதுக்கித் தரப்பட்டது. அந்தக் கண்காட்சியில் நான் அமைத்த காய்கறிச் சிற்பங்கள் அப்போதைய முதலமைச்சர் திரு. கருணாநிதி உட்பட கண்காட்சிக்கு வந்த அமைச்சர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிக்கு வந்திருந்த பல நாட்டுத் தமிழ் ஆர்வலர்களும் என்னுடைய காய்கறிக் கலைப்படைப்பைப் பாராட்டியதுடன், என்னுடனும் என் படைப்புடனும் சேர்ந்து படமெடுத்துக் கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசுத் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத்துறை மற்றும் சில துறைகள் நடத்தும் கண்காட்சிகளில் எனது கலைப்படைப்புகள் இடம் பெறத் தொடங்கின. தோட்டக்கலைத்துறைக் கண்காட்சியில் இரண்டு டன் முள்ளங்கிகளைக் கொண்டு நான் உருவாக்கிய அன்னப் பறவை, ஒரு டன் முருங்கைக்காய்களைக் கொண்டு அமைத்த ஈபிள் டவர் போன்றவைகள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை பல்வேறு அரசு கண்காட்சிகளில் பங்கு பெற்று வருகிறேன். தேனி மாவட்டத்தில் பென்னிகுயிக் மண்டபத் திறப்பு விழாவில் நான் உருவாக்கிய பென்னிகுயிக் உருவத்துடனான மணிமண்டபம், முல்லைப் பெரியாறு அணை போன்றவை தமிழ் நாட்டின் அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களாலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலராலும் பாராட்டப் பெற்றன.

என்னுடைய பயிற்சி மையத் தினைச் சென்னையில் தொடங்கினால் இதை விடக் கூடுதலான வரவேற்பும் வருமானமும் கிடைக்குமே என்று என்னுடைய நண்பர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை, கணினியும் இணை யமும் வந்துவிட்ட பின்பு உலகத்தின் எல்லை மிகவும் சுருங்கிப் போய் விட்டது என்பார்கள்.

இணையத்திலிருக்கும் ஸ்கைப், டீம் வியூவர் மற்றும் பல்வேறு தொடர்பு வசதிகளைப் பயன் படுத்தி சிங்கப்பூர், சீனா, மலேசியா, கனடா, அரபு நாடுகள் என உலகில் பல நாடுகளிலிருக்கும் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை நான் அளித்து வருகிறேன். இந்தப் பயிற்சிக்குச் சீனா போன்ற நாடுகளில் அதிகமான வரவேற்பு இருக்கிறது.
இதற்காகச் சீனாவிலிருக்கும் ஒருவரிடம் ஆங்கிலம் வழியாகச் சீன மொழியையும் நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

இருப்பினும், நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சென்னையில் ஏதாவதொரு அமைப்புடன் இணைந்து மாதத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் பயிற்சி அளிக்கலாமென திட்டமிட்டிருக்கிறேன்.

IMG_1224தற்போது, காய்கறிகளை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும் காய்கறி மொத்த விற்பனை யகங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவைகளுக்கு அவர்களின் நிறுவனங்களுக்கான இலச்சினைகளை (Logo) குறிப்பிட்ட காய்கறிகளில் வடிவமைத்துத் தருவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துச் சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இருக்கிறேன். இந்தக் காய்கறிச் சிற்பத்திலான இலச்சினைகளைப் படமெடுத்து அதைக் கணினியில் சிறப்பாக மாற்றி அவர்கள் அதைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக செய்து தரவிருக்கிறேன்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத் துறை பாடப்பிரிவில் காய்கறிச் சிற்பம் தயாரிப்பது குறித்து ஒரு பாடத் திட்டத்தினைச் சேர்க்க வேண்டுமென்று பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கோரிக்கை வைத்தேன்.

இதற்குப் பல்கலைக்கழகச் சுற்றுலாத் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் உதவி செய்து வருவதால் கூடிய விரைவில் இப்பாடத்திட்டம் சேர்க்கப்படும் என கருதுகிறேன். அவர்களும் இதற்கான பாடப் புத்தகங்களை எழுதித் தரும்படி கேட்டிருப்பதால் அதற்கான பாடங்களையும் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

– தேனி. மு.சுப்பிரமணி

வால்மார்ட் தலைவர் சாம் வால்டன் இவற்றில் கவனம் செலுத்தினார்…

0

ஜேசி பென்னி, கேமார்ட், சியர்ஸ் போன்ற பெரிய, பெரிய நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வால்மார்ட் முன்னணிக்கு வருவதற்குச் சின்ன யோசனைதான் காரணம். வால்மார்ட்டை உருவாக்கிய சாம் வால்டன் தனது யோசனையில் நம்பிக்கை வைத்திருந்தார். பெரிய கண்டுபிடிப்புத்தான் தேவை என்று காத்திருக்கவில்லை.சாம் வால்டன் சொல்வார். நான் ஏதாவது ஒரு பொருளுக்கு ஒரேயொரு டாலர் அதிகமாகத் தர வேண்டும் என்றாலும் அதன் பின்னணியை யோசிப்பேன். யாரோ ஒருவருடைய இயலாமை காரணமாகத்தான் இந்த அதிகப்படி ஒரு டாலர் செலவு. அந்த இயலாமையை நான் விலை கொடுத்து வாங்குகிறேன் என்று._Wal-Mart
குறைந்த விலையில் கொள்முதல் செய்வது எப்படி? பொருட்களைத் தேங்கவிடாமல் விற்றுத் தீர்ப்பது எப்படி? கொள்முதல் செய்யும் இடத்தில் இருந்து நுகர்வோர் வசம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் சிக்கனத்தைப் புகுத்துவது எவ்வாறு? இவையே அவரது யோசனையாக இருக்கும்.

– நித்யா கணேசன், திண்டுக்கல்

நகைக் கடனா? கவனம்

0

ங்க நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறீர்களா? நீங்கள் பல எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் என்ன தேவைக்காகக் கடன் வாங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக          இருங்கள். விவசாயக் கடனா, வணிகத்திற்கானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடனுக்கான தவணைக் காலத்தைத் தெளிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாகவே நகைகளை மீட்டுக் கொள்வது வட்டிச் சலுகை உள்ளிட்ட பல பயன்களைப் பெற வழிவகுக்கும்.

அடகு வைத்த நகைகளுக்காக வங்கியில் தரும் அட்டையைப் பத்திரமாக வைத்திருங்கள். அதைக் கொடுத்தால்தான் மீட்கும் போது நகைகளை வாங்க முடியும். தொலைத்துவிட்டால் அப்புறம் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டிவரும். அதற்கு முத்திரைத்தாள் செலவு அதிகப்படி.

சில பேர் இந்த அட்டையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் பற்றிய விவரங்களை எழுதி வைப்பதுண்டு. எதற்காக என்று கேட்டால் என்ன நகை வைத்தோம் என்பது மறந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்பார்கள்.

நல்ல முன் யோசனை தான். எழுதி வையுங்கள். ஆனால் இந்த அட்டையின் மீது அல்ல. வேறு இடத்தில். வீட்டில். நாட்குறிப்பில்.

நகையை அடகு வைத்த பின் நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டி இருக்கிறதா? வர நாளாகுமா? அப்படியானால் உங்கள் குடும்பத் தில் உள்ள வேறொருவரின் பெயரில் அடகு வைப்பது நல்லது. அப்போதுதான் மீட்கும்போது நகைகளை வாங்க நீங்கள் இருந்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்படாது.

வாங்கிய கடனை ஒரேயடியாக முழுப் பணத்தையும் செலுத்தித்தான் மீட்க வேண்டும் என்பது இல்லை. சிறுகச் சிறுகக் கட்டலாம். அதற்கு அனுமதிக்கிறார்களா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

தாய்லாந்தில் நடைபெற்ற ஸ்பா மற்றும் உடல்நலப் பொருள்கள் வர்த்தகக் காட்சி

0

ண்மையில் தாய்லாந்து அரசு, தமிழ்நாட்டில் இருந்து சில செய்தியாளர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே பாங்காங்கில் உள்ள இம்பேக்ட் எக்சிபிஷன் அண்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உலக ஸ்பா மற்றும் நலவாழ்வு மாநாட்டில் (World Spa and Well being Convention) கலந்து கொள்ளச் செய்தது. வளர்தொழில் சார்பில் முனைவர். கிரி ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு சென்று வந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது,

giri thai”இந்த மாநாட்டை நடத்த தாய் ஸ்பா அசோசியேஷன் ஏற்பாடு செய்து இருந்தது. அதே வர்த்தக மையத்தில் பியாண்ட் பியூட்டி ஏசியான் (Beyond Beauty Asian) என்ற இன்னொரு வர்த்தகக் காட்சியும் நடைபெற்றது. இதனை இம்பேக்ட் எக்சிபிஷன் மேனேஜ்மென்ட் நடத்தியது. உடல்நலப் பேணல் தொடர்பான தொழில்களை மேம்படுத்தும் வகையில் இந்த வர்த்தகக் காட்சிகள் நடைபெற்றன. பியாண்ட் பியூட்டி ஏசியனில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழில் முறையிலான இருபத்தொன்பது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஸ்பா மற்றும் நலவாழ்வு தொடர்பான தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கோடு இந்த வர்த்தகக் கண்காட்சியும் மாநாடும் நடத்தப்பட்டன.
மாநாடு நடைபெற்ற மூன்று நாட்களும் உடல் நலம் சார்ந்த பல பொருட்கள், கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. பல வர்த்தகப் பரிமாற்றங்கள், உடன்பாடுகள் 12028668_947633801949252_2100065853810701412_oமேற்கொள்ளப்பட்டன. ஸ்பா அமைத்துத் தரும் நிறுவனங்கள் பல வகையான ஸ்பா மாதிரிகளை காட்சிக்கு வைத்து இருந்தன. மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட
அழகையும், உடல்நலத்தையும் பராமரிக்கும் பல தயாரிப்புகள் அங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தன. உடல்நலப் பராமரிப்பில் இஞ்சி, எள், கடுகு, வெள்ளரிக்காய், மஞ்சள், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றின் பயன்கள்
கருத்தரங்குகளில் விரிவாக விளக்கப்பட்டன.

தாய்லாந்து சுற்றுலாவில் சிறந்து விளங்கும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு அங்கே உள்ளவர்களின் கனிவான விருந்தோம்பல் பண்பு முதன்மையான காரணமாக அமைந்து இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வெளிநாட்டினரிடம் அங்கே உள்ள அரசு ஊழியர்கள் முதல் குடிமக்கள் வரை இன்முகத்துடன் பழகுகின்றனர். நம்முடைய நாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் பணிபுரிபவர்களையும், அங்கே உள்ளவர்களையும் மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேறுபாட்டை உணர முடிந்தது.12045767_947633558615943_8483368281825334427_o

கடந்த 2014 ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23.7 மில்லியன் என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நாட்டு தொழில் துறை அமைச்சர் அட்சகா சைபன்ருவாங்க்
(Ms. Atchaka Sibunruang), இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்க ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

ட்ராப்பிக்கல் மெடிக்கல் டெக்னாலஜி என்ற அரசு சார்ந்த அமைப்புக்கும் எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு யோகா, மசாஜ் ஆகியவற்றை உடல்நலனுக்கு ஏற்ற முறையில் பயன்படுத்துவது பற்றி விளக்கம் அளித்தனர். மனதையும் உடலையும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது குறித்த பயிலரங்குகள் நடைபெற்றன.

12087065_947633541949278_1469321071125485021_o

வருகை தந்த அனைவருக்கும் நறுமணம் மிக்க மூலிகைகளை கொதிக்க வைத்த, புத்துணர்ச்சி தரும் நீரைப் பருகக் கொடுத்தனர். துளசி, பிரண்டை, சிறியாநங்கை, இஞ்சி, மஞ்சள்தூள் ஆகியவை அந்த நீரில் கலந்திருப்பதாக கூறினர்.

மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மை குறித்தும் ஏடுத்துக் கூறப்பட்டதோடு, மசாஜ் செய்வது பற்றி நேரடியாக செய்தும் காட்டப்பட்டது. கால்வலி உள்ளவர்களுக்கு உரிய பாதத்துக்கான பயிற்சி குறித்தும் விளக்கப்பட்டது.. இந்த மாநாடு, உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அது தொடர்பான பொருட்களை காண்போரிடையே அறிமுகப்படுத்துவதிலும் வெற்றி பெற்று விட்டது என்று உறுதியாகக் கூறலாம்” என்றார்.

– நேர்மன்

 

எல்.ஐ.சி: முன்னோடும் தென் மண்டலம்

0

எல்.ஐ.சி.யின் 8 மண்டலங்களுள் ஒன்று தென் மண்டலம். தென்மண்டலம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகளை உள்ளடக்கியது.

13 கோட்டங்கள், 261 கிளைகள், 260 சாட்டிலைட் அலுவலகங்கள், 198 மினி அலுவலகங்கள் மற்றும் 4508 பிரீமியம் பாயிண்ட்கள் உள்ளன. தென்மண்டலம் 3.4 கோடி பாலிசிதாரர்களுக்கு சேவை செய்கிறது.

2015-16-க்கான புது வணிகம்- தனி நபர் காப்பீடு – 15.08.2015 வரை தென் மண்டலத்தில் விற்பனை செய்யப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை : 5.59 லட்சம். தென் மண்டலத்தின் மொத்த பிரிமீய வருமானம் ரூ.589.47 கோடிகள்.

தென் மண்டலத்தில் முதலிடம் பிடித்த கோட்டங்கள்

பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் : கோழிக் கோடு கோட்டம், 60,534 பாலிசிகள். மொத்த முதல் பிரிமீய வருமானம் அடிப் படையில் : சென்னை கோட்டம்- 1, ரூ.61.07 கோடிகள்.

Shots of T Sitharthan zonal managerof L IC of India handing over a 23 seater van key to Dr.V. Shanta the Chairperson of Adyar Cancer Institute, Adyar at LIC building, premises, Anna Salai in chennai on thursday-Express/P.Ravikumar
Shots of T Sitharthan zonal managerof L IC of India handing over a 23 seater van key to Dr.V. Shanta the Chairperson of Adyar Cancer Institute, Adyar at LIC building, premises, Anna Salai in chennai

தென் மண்டலத்தில் முதலிடம் பிடித்த கிளைகள்

பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் : வேலூர் கோட்டத்திலுள்ள திருவண்ணாமலை கிளை, 6071 பாலிசிகள்.
மொத்த முதல் பிரிமீய வருமானம் அடிப்படையில் கோயம்புத்தூர் கோட்டத்திலுள்ள திருப்பூர் கிளை, ரூ.7.53 கோடிகள்.

தென் மண்டலத்தில் முதலிடம் பிடித்த வளர்ச்சி அதிகாரிகள்

பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் : திருச்சூர் கோட்டத்திலுள்ள இரிஞா லகுடா கிளையைச் சேர்ந்த
திரு. கே. வேணு அவர்கள், 1912 பாலிசிகள்.

மொத்த முதல் பிரீமிய வருமானம் அடிப்படையில் சென்னை கோட்டம் -2- லுள்ள கிளை எண்-22-ஐச் சேர்ந்த திரு. எஸ். மனோகர் ஞானசிகாமணி அவர்கள், ரூ.3.62 கோடிகள்.

தென் மண்டலத்தில் முதலிடம் பிடித்த முகவர்கள்

பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் : வேலூர் கோட்டத்திலுள்ள திருவண்ணாமலை கிளையைச் சேர்ந்த திரு.டி. எஸ். வெங்கடேசன் அவர்கள், 487 பாலிசிகள்.

மொத்த முதல் பிரீமிய வருமானம் அடிப்படையில் சென்னை கோட்டம் – 2ல் உள்ள கிளை எண் – 22-ஐச் சேர்ந்த
திருமதி. உமா சங்கரி அவர்கள், ரூ.3.33 கோடிகள்.

வரிஷ்ட பென்ஷன் பீம யோஜனா – வணிக செயல்பாடு இந்திய அளவில் மூன்றாம் இடம்

பென்ஷன் மற்றும் குழுக் காப்பீட்டு வணிகம் – 15.08. 2015

திட்டங்களின் எண்ணிக்கை : 1349. வழங்கப்பட்ட காப்பீடு : 15.68 லட்சங்கள். புது வணிக பிரீமிய வருமானம் : ரூ.1318.65 கோடிகள். சமூக பாதுகாப்பு திட்டங்களின் மூலம் அளிக்கப்பட்ட காப்பீடு : 5.93 லட்சங்கள். எர்ணாகுளம் கோட் டம் 15.04.2015 அன்று இந்திய அளவில் முதல் கோட்டமாக சமூக பாதுகாப்பு தனிநபர் இலக்கை அடைந்துள்ளது. இலக்கு : 1.5 லட்சம் நபர்கள் முடித்தது; 2.32 லட்சம் நபர்கள். திருநெல்வேலி கோட்டம்; 04.05.2015 இந்திய அளவில் முதல் கோட்டமாக புது வணிக பிரீமிய இலக்கை அடைந்துள்ளது.

(இலக்கு : 80 கோடிகள் முடித்தது 84 கோடிகள்) 17.07.2015 அன்று மொத்த பிரீமிய இலக்கை அடைந்து உள்ளது. (இலக்கு 100 கோடிகள் முடித்தது 152 கோடிகள்). மேலும் பாரம்பரிய தனிநபர் காப்பீட்டு இலக்கை 07.08.2015 அன்று எட்டியுள்ளது (இலக்கு 60000 நபர்கள் முடித்து 61863 லட்சம் நபர்கள்). மதுரை கோட்டம் 09.07.2015 அன்று புது வணிக பிரீமிய இலக்கை அடைந்துள்ளது. (இலக்கு 55 கோடிகள் முடித்தது 58.18 கோடிகள்). சேலம் கோட் டம் 21.07.2015 அன்று பாரம்பரிய காப்பீட்டு இலக்கை அடைந்து உள்ளது. (இலக்கு; 150000 நபர்கள் முடித்தது 156000 லட்சம் நபர்கள்).

aaa

உரிமம் வழங்கியதில் ஒப்பற்ற சாதனை (2015 – 2016) (15.08.2015) வரை

4.09 லட்சம் வாழ்வுகாலப் பயன்கள் மூலம் ரூ.892.91 கோடிகள் வழங்கப்பட்டு உள்ளது. 2.34 லட்சம் முதிர்வு உரிமங்களின் மூலம் ரூ. 1921.56 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது. 23058 இறப்பு உரிமங்களின் மூலம் ரூ.257.82 கோடிகள் வழங்கப் பட்டுள்ளது. மொத்தம் வழங்கப்பட்ட ஆன்யுட்டி; 6,68,281 வழங்கப்பட்ட தொகை ரூ. 114.94 கோடிகள்.

புதுப்பித்தலில் ஒப்பற்ற சாதனை – 31.07.2015 வரை

மொத்தம் புதுப்பிக்கப்பட்ட பாலிசிகள் – 4.4 லட்சங்கள். புதுப்பித்தல் மூலம் பெறப்பட்ட பிரீமியத் தொகை – 35.94 கோடிகள்.

எல்.ஐ.சி.யின் புதிய எண்டோமென்ட் ப்ளஸ் (பங்குச் சந்தையுடன் இணைந்த பாலிசி) – திட்டம் எண் 835 – 19.08.2015 அன்று அறிமுகம்

காப்பீட்டுடன் கூடிய முதலீட்டுத் திட்டம். பாண்ட் ஃபண்டு, செக்யூர்ட் ஃபண்டு, பாலன்ஸ்ட் ஃபண்டு மற்றும் குரோத் ஃபண்டு இவை நான்கினுள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

ஃபண்டுகளுக்குள் ஒரு பாலிசி ஆண்டுக்கு நான்கு முறை இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம்.
பாலிசி அறிமுகமாகும் நாளில் அனைத்து ஃபண்டு களின் என்.ஏ.வி. ரூ.10/-. குறைந்த பட்ச நுழைவு வயது: 90 நாட்கள்.

அதிக பட்ச நுழைவு வயது : 50 வயது. பாலிசி காலம் : 10 முதல் 20 ஆண்டு கள். குறைந்த பட்ச ஆண்டு பிரீமியம் : ரூ. 20,000/-/. அதிக பட்ச ஆண்டு பிரீமி யம் : வரம்பில்லை.

தவணை முறை : ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணை (ECS மட்டும்).

அடிப்படைக் காப்பீட்டுத் தொகை : ஆண்டுப் பிரிமியத்தின் பத்து மடங்கு அல்லது செலுத்திய பிரீமியத்தின் 105% இவற்றில் எது அதிகமோ அத்தொகை. முதிர்வுத் தொகை பாலிசிதாரரின் ஃபண்டு தொகைக்கு நிகரான தொகை. முதிர்வுத் தொகையை மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ பெற்றுக் கொள்ளலாம்.

ரிஸ்க் காப்பீடு; ரிஸ்க் தொடங்கிய பிறகு, அடிப்படை காப்பீட்டுத் தொகை அல்லது பாலிசிதாரரின் ஃபண்டு மதிப்பு இவற்றில் எது அதிகமோ அத்தொகை வழங்கப்படும்.

விருப்பத் தேர்வு ரைடர்; எல்.ஐ.சி.யின் லிங்க்ட் ஆக்சிடெண்டல் டெத் பெனி ஃபிட் ரைடர் அதிகபட்ச விபத்து காப்பீட்டு பயன் அனைத்து பாலிசிகளுக்கும் சேர்த்து ரூபாய் ஒரு கோடி வரை பெரும் வாய்ப்பு. இடையில் நிறுத்தப்பட்ட பாலிசி நிதிக்கு உறுதி அளிக்கப்பட்ட வட்டி விகிதம் (தற்பொழுது 4%). பகுதித் தொகையை திரும்பப் பெறும் வசதி உள்ளது.

– டி. சித்தார்த்தன்
மண்டல மேலாளர்

நெல்லி : ஒரு ஏக்கருக்கு 110 மரங்கள்!

0

ன்கு பளுத்து முற்றிய திரண்ட மஞ்சள் நிறப் பழங்களை பாலீதின் உரச்சாக்குப் பைக்குள் 10-15 நாட்கள் நட்டு வைத்துப் பிறகு நிழலில் உலர்த்திய பின் அவை விதைகளாகத் தயாராகின்றன. பிறகு நிழலில் உலர்த்திய விதைகளை   உடனே முளைக்க வைக்க வேண்டும். தாமதம் ஆனால், முளைப்புத்திறன் பாதிக்கும். இந்த முறையில் நெல்லிவிதை தயாரிக்கப்பட வேண்டும். இந்த விதைகளே தரமான விதைகளாகும்.

விதை விதைப்பதற்கு முன் கன்றுகளின் வளர்ச்சியைத் துரிதப் படுத்திட நடவுக்குழிக்குள் மேல் மண், மண், மட்கிய எரு ஆகியவற்றைச் சாதாரணமாக 2 அடி 2 அடி 2 அடி குழிகள் போதும். விதைத்த பின் வேர் வளர்ச்சியைப் பெற ஒரு குழிக்கு 1 கிலோ சூப்பர் பாஸ்பேட்டையும் கலந்துவிட வேண்டும். இதனால் பிற்காலத்தில் கன்றானது வறட்சியைத் தாங்கிக் கொள்ள முடியும்.

உவர்-களர் நிலங்களில் கன்று தாக்குப் பிடித்து வளர்ந்திட ஒரு குழிக்கு 10-15கிலோ ஜிப்சம் கலப்பது முக்கியம். நெல்லி நடுகையின் போது வளமான மண்ணில் நீர் பாய்ச்சி வளர்த்திட 17.6 17.6 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 140 கன்றுகள் நட வேண்டும். வளமற்ற மண்ணில் மானாவாரியாகப் பயிரிட 15.5 15.5 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 180 கன்றுகள் நடவேண்டும்.

amla-berriesநெல்லி வளர்ப்பு முறைகள் :
ஒவ்வொரு செடி வளர்ப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. நெல்லி பல்வேறு வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. நீர் தேங்காத வடிகால் வசதியுடைய வளமான மண் மிகவும் உகந்தது. களிக்கூறான மண்ணிலும் வளரும். வளம் குறைந்த மண்ணிலும் வளர்ச்சி பெறும். மணற்சாரியான மண்ணிலும் வளரும்.
அளவுக்கு மீறிய மணல் நிறைந்த தேரிப் பகுதிகளில் வளர்ச்சி குறைவாகக் காணப்படும். நிலத்திலே உப்பிருந்தாலும் நீரிலே உப்பிருந்தாலும் நெல்லி பயிரிடலாம். சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த நிலத்திலும் “சாக்கியா” என்ற இரகம் நல்ல வளர்ச்சி அடைகிறது.

நெல்லி எவ்வளவு வறட்சியையும் தாங்குவதால் வறட்சிக்கு ராஜா என்று கூறப்படுகிறது. ஆனால் பூக்கத் தொடங்கிய சமயத்தில் காற்றிலே ஈரப்பதம் வேண்டும். இல்லையேல் பூக்கள் காயாக மாறாது. பிஞ்சுக் காய்களும்கூட உதிர்ந்து விடும்.
எங்கெல்லாம் கோடையில் தக்காளி பயிரிட்டு மகசூல் எடுக்க முடியுமோ, அங்கெல்லாம் நெல்லியைப் பயிரிட்டுப் பலன் பெறலாம். மேலும் குளிர்ச்சியான தென்னந் தோப்புக்குள் இடைவெளி கிடைக்கும் இடங்களில் நெல்லியைப் பயிரிட்டுப் பலன் பெறலாம். நெல்லி ஒரு அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர். அதனால் தேனீ வளர்க்க வேண்டும். ஏனெனில் வேளாண்மைக்கு உற்ற தோழன் தேனீ. ஒவ்வொரு தேனீ உழைப்பாளியும் நாளொன்றுக்கு 19,000 தடவைகள் குறுக்கம் நெடுக்குமாகப் பறந்து சென்று 300 சுற்றளவில் கடுகளவுப் பூக்களையும் விடாது தேனைச் சேகரிக்கின்றது. அப்போது ஏற்படும் அயல் மகரந்தச் சேர்க்கையினால் பூக்கள் கருத்தரிக்கும். மகசூலும் அதிக அளவில் கிடைக்கும்.

மலையடிவாரங்களிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் எப்போதும் ஈரக்காற்று இருப்பதால் இங்கு எல்லா இரகங்களும் பயிரிடலாம். ஆண்டு தொடக்கத்தில் காய்ப்பவை பனாரசி, கிருஷ்ணா, ஆண்டு கடைசியில் காய்ப்பவை சாக்கியா ஆகும்.

நெல்லி அறுவடை செய்யும் முறை
ஒரு செடி வளர்ப்பது, அதனை அறுவடை செய்து இலாபம் பெறத்தான். அவ்வாறு செய்யும் அறுவடைக்குச் சில விதிமுறைகள் உண்டு. அனுபவம் மிக்கவர்கள் மட்டும் தான் அறுவடை செய்ய முடியும். பதறிய காரியம் சிதறிப்போகும் என்ற கோட்பாட்டின் படி, நெல்லி பறிக்கும் போது அவசரம் இல்லாமல் நல்ல முற்றிய காய்களாகப் பார்த்துப் பறிக்க வேண்டும்.
நெல்லியில் காய் பறிப்பது தான் கஷ்டமான பணி, புளிய மரம் போல மேலே ஏறிக் கிளையை உலுக்கிக் கீழே உதிர்க்கக்கூடாது. உலுப்பினால் பிஞ்சுக் காய்கள் கீழே உதிரும்; நல்ல காய்களும் கூட தலையிலே அடிபட்டுக் கெட்டுப்போகும். அடிப்பட்ட காய்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. அதனால் வியாபாரம் பாதிக்கும்.

காய்களை அறுவடை செய்யும்போது நன்கு முற்றிய மஞ்சள் நிறக்கனிகளை மட்டும் பறிக்க வேண்டும். அவை அதிகமான எடை உடையதாகவும் இருக்கும். அறுவடை செய்ய உகந்த மாதம் கார்த்திகை, மார்கழி, தை ஆகும்.

அதனால் அறுவடை செய்யும் போது, சின்னக் கன்றுகளில் தலையிலே நின்று கொண்டே பறிக்க வேண்டும். வளர்ந்த கன்றுகளில் உயரமான ஸ்டூலைப் பயன்படுத்த வேண்டும். பெரிய மரங்களின் மேல் ஏறிப் போய்த்தான் காய் பறிக்க வேண்டும். காய்களை அறுவடை செய்யும் போதுத்தான் காய்பறிக்க வேண்டும். காய்களை அறுவடை செய்யும்போது நன்கு முற்றிய மஞ்சள் நிறக்கனிகளை மட்டும் பறிக்க வேண்டும். அவை அதிகமான எடை உடையதாகவும் இருக்கும். அறுவடை செய்ய உகந்த மாதம் கார்த்திகை, மார்கழி, தை ஆகும்.

நிறைந்த வருவாய் தரும் கனிimages (1)x
குறைந்த செலவில் நிறைந்த மகசூல் அள்ளித் தருவதால் இதற்கு அதிகமான முதலீடு அவசியம் இல்லை. பயிரிட்ட உடனே இலாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. காலம் தாழ்த்திப் பலனைக் கொடுத்தாலும் தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு ஏக்கருக்கு 110 நெல்லி மரங்கள் இருக்க வேண்டும். ஒரு மரத்தின் மகசூல் 150 கிலோ காய்கள் கிடைக்கின்றன. சாக்கியா, காஞ்சன், என்.ஏ.எச் 7 என்ற இரகங்கள் அதிகக்காப்புத் திறனைப் பெற்றுள்ளது. இவற்றை வளர்ப்பதன் மூலம் நல்ல வருவாய் பெறலாம். தமிழகத்துக்கு ஏற்ற வணிக இரகங்களில் இவை முதன்மையானவை.

நெல்லாக விற்பதை விட அரிசியாக விற்பதே இலாபம். கடலையாக விற்பதை விடக் கடலைப் பருப்பாக விற்பதே இலாபம். அதே போல் நெல்லியைக் காயாக விற்பதைவிட வற்றலாக விற்பது இலாபம் தரும். 3 கிலோ காயைக் காய வைத்தால் 1 கிலோ வற்றல் கிடைக்கும்.

வற்றலில் இருந்து கொட்டையை எடுத்து விட்டால் நெல்லிமுள்ளி என்று பெயர். அதற்கு இன்னும் அதிக விலை கிடைக்கும். இதன் மூலம் வியாபாரிகள் நல்ல இலாபம் பெறலாம். நெல்லி ஆண்டுக்கு 8 மாதம் காய்க்கிறது. அதனை வாங்கி வியாபாரம் செய்தாலே போதும் செல்வந்தர் ஆகி விடலாம். பாடுபட்டால் பலன் உண்டு என்பதற்கு ஏற்ப இலாபம் தரும் கனி நெல்லிக்கனி ஆகும்.

வேளாண்மைப் பொருளாதாரத்தில் நெல்லி
வேளாண்மை செய்வதே பொருளாதாரத்திற்காகத்தான். அந்தப் பொருளாதாரத்தை ஈட்டித் தரும் கனிகளில் நெல்லிக்கனி ஒன்று. பணப்பயிர்களில் முதலிடம் வகிப்பது, குறைந்த செலவில் நிறைந்த வருமானம் தருவது, காலம் காலமாக வருமானம் தருவது நெல்லிக்கனி.

– க.ஜோதி, தஞ்சாவூர்

‘தீ’ காப்பீடு : அன்றைய சந்தை மதிப்பைக் குறிப்பிடுங்கள்!

0

யுனைட்டட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின் சென்னை, மயிலாப்பூர், லஸ் கிளை மேலாளர் திரு.வி.ஆர். ரவிக்குமாரை சந்தித்து வளர் தொழில் இதழுக்காக பேட்டி கண்டோம்.
வணிக நிறுவனங்களுக்குத் ‘தீ’ காப்பீட்டு (Fire Insurance) மிக மிக அவசியமான ஒன்று என்று கூறிய அவர் அதற்கான காரணங்களை விவரித்தார். அவருடைய பேட்டியில் இருந்து…

எதிர்பாராத வகையில் ஏற்படும் தீ விபத்தில், அசையும் சொத்து-அசையா சொத்து இரண்டுமே பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு வணிகர், மேற்கூறப்பட்ட இரண்டு வகை சொத்துக்களுக்கும் ‘தீ’ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். அசையும் சொத்து என்றால், கம்ப்யூட்டர், ஜிராக்ஸ் எந்திரம் உள்ளிட்ட தளவாடங்கள், மூலப்பொருட்கள், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் போன்றவை அடங்கும்.
அசையா சொத்துக்கள் என்றால் தொழில் செய்யும் இடம் (கட்டிடம்), இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் (Interiors) ஆகியவற்றைக் குறிக்கும்.

திரு.வி.ஆர்.ரவிகுமார்
திரு.வி.ஆர்.ரவிகுமார்

காப்பீடு என்றாலே ஒரு பொருளுக்காக அதன் உரிமையாளர் எடுத்துக் கொள்வதுதான். ஆனால், தீ காப்பீட்டுத் திட்டத்தில் வணிகர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் தொழில் நிமித்தமாக வேறு நபருக்குச் சொந்தமான பொருட்களை தற்காலிகமாக தம்மிடம் வைத்திருக்க நேரிடலாம். அப்போது தீ விபத்து ஏற்பட்டு இந்தப்பொருட்களும் சேதமடையும். இது போன்ற சமயங்களில், இந்தப் பொருட்களுக்கு உரிமையாளர் இவர்கள் இல்லாவிட்டாலும் பொருளுக்காக தீ காப்பீடு எடுத்துக் கொள்ள இவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சான்றாக, ஒரு லட்சம் ஆயத்த உடைகளை ஒரு நிறுவனம் தயாரித்து அதில் குறிப்பிட்ட வடிவமைப்பு (Design). செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற சமயத்தில் இந்த ஆடைகளுக்கும் ‘தீ’ காப்பீடு எடுத்துக் கொள்ள அந்த வடிவமைப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இப்படி எடுக்கப்படும் தீ காப்பீட்டு திட்டத்தில் புயல், மழை, வெள்ளம், மின்னல்-இடி தாக்கும் நிகழ்வுகளும் அடங்கிவிடும். பூகம்பம், பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற அசாதாரண நிகழ்வுகள் மட்டும் இதில் அடங்காது. இவற்றிற்கும் சேர்த்துதான் காப்பீடு வேண்டும் என்றால் வழக்கமான பிரிமியத்துடன் கூடுதல் தொகை சிறிது செலுத்த வேண்டியிருக்கும்.

‘தீ’ காப்பீடு திட்டத்தை எந்தவொரு வணிகரும், மிகச்சிறிய கடையாக இருந்தாலும் பெரிய நிறுவனமாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். காப்பீடு எடுப்போர் தம்முடைய சொத்து விவரங்களை அன்றைய சந்தை மதிப்புப்படி குறிப்பிட வேண்டும். அப்போதுதான் காப்பீடு எடுப்பதன் நோக்கம் சரியானதாக இருக்கும். ஒரு சிலர் தவறான புரிதல் காரணமாக, பிரிமியம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மதிப்பைக் குறைத்துப் போட்டு விடுவார்கள். அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் பட்சத்தில் மிகவும் வருந்துவார்கள். எனவே விண்ணப்பத்தில் அன்றைய சந்தை மதிப்பைக் குறிப்பிடுவதுதான் சரியான செயல்பாடு.

எதிர்பாராக வகையில் தீ விபத்து நடந்துவிட்டால், அன்றைய தினத்தில் இருந்து 7 நாட்களுக்குள் தொடர்புள்ள காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுத்து மூலமாக காப்பீடு எடுத்தவர் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து இழப்பீட்டுக்காக தரப்பட்ட விண்ணப்பத்தின் மீது விசாரணை நடைபெறும். காப்பீட்டு நிறுவனத்தின் ‘சர்வேயர்’ நிகழ்வு இடத்துக்கு வந்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிக்கை தருவார். அந்த அறிக்கையில், தீ விபத்துக்கான காரணம், இழப்பீட்டின் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

தீ விபத்து உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், இழப்பீடு கிடைக்காது. எனவே உண்மையாக நடந்து கொள்வது மிக மிக இன்றியமையாதது.

‘தீ’ காப்பீட்டுக்கான ‘பிரிமியம்’ தொகை பெரிய அளவுக்கு இருக்காது. ஒவ்வொரு வணிகரும் மிக எளிதாக செலுத்தும் வகையில்தான் இருக்கும்.

வணிகர் அல்லாத தனிநபர் வீடுகளுக்கும் தீ காப்பீட்டு திட்டம் உண்டு. வணிக நிறுவனமாக இருந்தால் ஆண்டுதோறும் பிரிமியம் தொகை செலுத்த வேண்டும். தனிநபர் வீடுகளுக்கு 3, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரிமியம் கட்டினால் போதும் என்ற காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன.

‘தீ’ காப்பீடு கோரும் தொழில் நிறுவனங்களுக்கு அவை வைத்திருக்கும் பொருள் மற்றும் அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப பிரிமியம் நிர்ணயிக்கப் படுகிறது, என்றார் திரு.வி.ஆர்.ரவிகுமார்.

-ம.வி.ராஜதுரை

ஆயுள் காப்பீட்டு கழகம் : காலாவதி பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

0

ந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 59ம் ஆண்டு நிறைவு நாளை, அதன் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்விழாவில் தென்மண்டல மேலாளர் திரு. டி. சித்தார்த்தன்                                     கூறியதாவது;

2222

“ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் தேதி நாங்கள் விழாவாகக் கொண்டாடி வருகிறோம். அப்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக இரண்டு புதிய பாலிசிகள் அறிவிப்போம். இந்த ஆண்டும் அந்த பாலிசிகளை வரும் மாதங்களில் அறிவிக்க இருக்கிறோம்.

அடுத்ததாக, இதுவரை எல்.ஐ.சி. பாலிசி எடுத்தவர்கள், தங்கள் பாலிசியை கட்ட தவறி இருந்தாலோ அல்லது காலாவதியாகி இருந்தாலோ அவைகளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தள்ளுபடி சலுகையில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால், 10 ஆண்டுகளுக்குள் காலாவதியான பாலிசியாக இருக்கவேண்டும்.

எங்களது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புகளில் ரூ.2.26 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. தென் மண்டலத்தில் விற்பனை செய்யப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 5.59 லட்சம். பிரிமிய வருமானம் ரூ. 589.47 கோடிகள் ஆகும்.

2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜீவன் தருண் பாலிசி மற்றும் எண்டோமென்ட் ப்ளஸ் பாலிசி சிறப்பாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.
காப்பீட்டு நிறுவனங்களிலேயே ஆயுள் காப்பீடு நிறுவனம் (LIC) மட்டுமே லாபகரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. சான்றாக, 2015-16 ஆண்டுக்கான வாழ்வுக்காலப் பயன் அடைந்தோர் 4.09 லட்சம். அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.892.91 கோடிகள் ஆகும்” என்றார் திரு. சித்தார்த்தன்.

– குறளமுதன்