நெல்லி : ஒரு ஏக்கருக்கு 110 மரங்கள்!

ன்கு பளுத்து முற்றிய திரண்ட மஞ்சள் நிறப் பழங்களை பாலீதின் உரச்சாக்குப் பைக்குள் 10-15 நாட்கள் நட்டு வைத்துப் பிறகு நிழலில் உலர்த்திய பின் அவை விதைகளாகத் தயாராகின்றன. பிறகு நிழலில் உலர்த்திய விதைகளை   உடனே முளைக்க வைக்க வேண்டும். தாமதம் ஆனால், முளைப்புத்திறன் பாதிக்கும். இந்த முறையில் நெல்லிவிதை தயாரிக்கப்பட வேண்டும். இந்த விதைகளே தரமான விதைகளாகும்.

விதை விதைப்பதற்கு முன் கன்றுகளின் வளர்ச்சியைத் துரிதப் படுத்திட நடவுக்குழிக்குள் மேல் மண், மண், மட்கிய எரு ஆகியவற்றைச் சாதாரணமாக 2 அடி 2 அடி 2 அடி குழிகள் போதும். விதைத்த பின் வேர் வளர்ச்சியைப் பெற ஒரு குழிக்கு 1 கிலோ சூப்பர் பாஸ்பேட்டையும் கலந்துவிட வேண்டும். இதனால் பிற்காலத்தில் கன்றானது வறட்சியைத் தாங்கிக் கொள்ள முடியும்.

உவர்-களர் நிலங்களில் கன்று தாக்குப் பிடித்து வளர்ந்திட ஒரு குழிக்கு 10-15கிலோ ஜிப்சம் கலப்பது முக்கியம். நெல்லி நடுகையின் போது வளமான மண்ணில் நீர் பாய்ச்சி வளர்த்திட 17.6 17.6 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 140 கன்றுகள் நட வேண்டும். வளமற்ற மண்ணில் மானாவாரியாகப் பயிரிட 15.5 15.5 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 180 கன்றுகள் நடவேண்டும்.

amla-berriesநெல்லி வளர்ப்பு முறைகள் :
ஒவ்வொரு செடி வளர்ப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. நெல்லி பல்வேறு வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. நீர் தேங்காத வடிகால் வசதியுடைய வளமான மண் மிகவும் உகந்தது. களிக்கூறான மண்ணிலும் வளரும். வளம் குறைந்த மண்ணிலும் வளர்ச்சி பெறும். மணற்சாரியான மண்ணிலும் வளரும்.
அளவுக்கு மீறிய மணல் நிறைந்த தேரிப் பகுதிகளில் வளர்ச்சி குறைவாகக் காணப்படும். நிலத்திலே உப்பிருந்தாலும் நீரிலே உப்பிருந்தாலும் நெல்லி பயிரிடலாம். சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த நிலத்திலும் “சாக்கியா” என்ற இரகம் நல்ல வளர்ச்சி அடைகிறது.

நெல்லி எவ்வளவு வறட்சியையும் தாங்குவதால் வறட்சிக்கு ராஜா என்று கூறப்படுகிறது. ஆனால் பூக்கத் தொடங்கிய சமயத்தில் காற்றிலே ஈரப்பதம் வேண்டும். இல்லையேல் பூக்கள் காயாக மாறாது. பிஞ்சுக் காய்களும்கூட உதிர்ந்து விடும்.
எங்கெல்லாம் கோடையில் தக்காளி பயிரிட்டு மகசூல் எடுக்க முடியுமோ, அங்கெல்லாம் நெல்லியைப் பயிரிட்டுப் பலன் பெறலாம். மேலும் குளிர்ச்சியான தென்னந் தோப்புக்குள் இடைவெளி கிடைக்கும் இடங்களில் நெல்லியைப் பயிரிட்டுப் பலன் பெறலாம். நெல்லி ஒரு அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர். அதனால் தேனீ வளர்க்க வேண்டும். ஏனெனில் வேளாண்மைக்கு உற்ற தோழன் தேனீ. ஒவ்வொரு தேனீ உழைப்பாளியும் நாளொன்றுக்கு 19,000 தடவைகள் குறுக்கம் நெடுக்குமாகப் பறந்து சென்று 300 சுற்றளவில் கடுகளவுப் பூக்களையும் விடாது தேனைச் சேகரிக்கின்றது. அப்போது ஏற்படும் அயல் மகரந்தச் சேர்க்கையினால் பூக்கள் கருத்தரிக்கும். மகசூலும் அதிக அளவில் கிடைக்கும்.

மலையடிவாரங்களிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் எப்போதும் ஈரக்காற்று இருப்பதால் இங்கு எல்லா இரகங்களும் பயிரிடலாம். ஆண்டு தொடக்கத்தில் காய்ப்பவை பனாரசி, கிருஷ்ணா, ஆண்டு கடைசியில் காய்ப்பவை சாக்கியா ஆகும்.

நெல்லி அறுவடை செய்யும் முறை
ஒரு செடி வளர்ப்பது, அதனை அறுவடை செய்து இலாபம் பெறத்தான். அவ்வாறு செய்யும் அறுவடைக்குச் சில விதிமுறைகள் உண்டு. அனுபவம் மிக்கவர்கள் மட்டும் தான் அறுவடை செய்ய முடியும். பதறிய காரியம் சிதறிப்போகும் என்ற கோட்பாட்டின் படி, நெல்லி பறிக்கும் போது அவசரம் இல்லாமல் நல்ல முற்றிய காய்களாகப் பார்த்துப் பறிக்க வேண்டும்.
நெல்லியில் காய் பறிப்பது தான் கஷ்டமான பணி, புளிய மரம் போல மேலே ஏறிக் கிளையை உலுக்கிக் கீழே உதிர்க்கக்கூடாது. உலுப்பினால் பிஞ்சுக் காய்கள் கீழே உதிரும்; நல்ல காய்களும் கூட தலையிலே அடிபட்டுக் கெட்டுப்போகும். அடிப்பட்ட காய்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. அதனால் வியாபாரம் பாதிக்கும்.

காய்களை அறுவடை செய்யும்போது நன்கு முற்றிய மஞ்சள் நிறக்கனிகளை மட்டும் பறிக்க வேண்டும். அவை அதிகமான எடை உடையதாகவும் இருக்கும். அறுவடை செய்ய உகந்த மாதம் கார்த்திகை, மார்கழி, தை ஆகும்.

அதனால் அறுவடை செய்யும் போது, சின்னக் கன்றுகளில் தலையிலே நின்று கொண்டே பறிக்க வேண்டும். வளர்ந்த கன்றுகளில் உயரமான ஸ்டூலைப் பயன்படுத்த வேண்டும். பெரிய மரங்களின் மேல் ஏறிப் போய்த்தான் காய் பறிக்க வேண்டும். காய்களை அறுவடை செய்யும் போதுத்தான் காய்பறிக்க வேண்டும். காய்களை அறுவடை செய்யும்போது நன்கு முற்றிய மஞ்சள் நிறக்கனிகளை மட்டும் பறிக்க வேண்டும். அவை அதிகமான எடை உடையதாகவும் இருக்கும். அறுவடை செய்ய உகந்த மாதம் கார்த்திகை, மார்கழி, தை ஆகும்.

நிறைந்த வருவாய் தரும் கனிimages (1)x
குறைந்த செலவில் நிறைந்த மகசூல் அள்ளித் தருவதால் இதற்கு அதிகமான முதலீடு அவசியம் இல்லை. பயிரிட்ட உடனே இலாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. காலம் தாழ்த்திப் பலனைக் கொடுத்தாலும் தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு ஏக்கருக்கு 110 நெல்லி மரங்கள் இருக்க வேண்டும். ஒரு மரத்தின் மகசூல் 150 கிலோ காய்கள் கிடைக்கின்றன. சாக்கியா, காஞ்சன், என்.ஏ.எச் 7 என்ற இரகங்கள் அதிகக்காப்புத் திறனைப் பெற்றுள்ளது. இவற்றை வளர்ப்பதன் மூலம் நல்ல வருவாய் பெறலாம். தமிழகத்துக்கு ஏற்ற வணிக இரகங்களில் இவை முதன்மையானவை.

நெல்லாக விற்பதை விட அரிசியாக விற்பதே இலாபம். கடலையாக விற்பதை விடக் கடலைப் பருப்பாக விற்பதே இலாபம். அதே போல் நெல்லியைக் காயாக விற்பதைவிட வற்றலாக விற்பது இலாபம் தரும். 3 கிலோ காயைக் காய வைத்தால் 1 கிலோ வற்றல் கிடைக்கும்.

வற்றலில் இருந்து கொட்டையை எடுத்து விட்டால் நெல்லிமுள்ளி என்று பெயர். அதற்கு இன்னும் அதிக விலை கிடைக்கும். இதன் மூலம் வியாபாரிகள் நல்ல இலாபம் பெறலாம். நெல்லி ஆண்டுக்கு 8 மாதம் காய்க்கிறது. அதனை வாங்கி வியாபாரம் செய்தாலே போதும் செல்வந்தர் ஆகி விடலாம். பாடுபட்டால் பலன் உண்டு என்பதற்கு ஏற்ப இலாபம் தரும் கனி நெல்லிக்கனி ஆகும்.

வேளாண்மைப் பொருளாதாரத்தில் நெல்லி
வேளாண்மை செய்வதே பொருளாதாரத்திற்காகத்தான். அந்தப் பொருளாதாரத்தை ஈட்டித் தரும் கனிகளில் நெல்லிக்கனி ஒன்று. பணப்பயிர்களில் முதலிடம் வகிப்பது, குறைந்த செலவில் நிறைந்த வருமானம் தருவது, காலம் காலமாக வருமானம் தருவது நெல்லிக்கனி.

– க.ஜோதி, தஞ்சாவூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here