ஆயுள் காப்பீட்டு கழகம் : காலாவதி பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

ந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 59ம் ஆண்டு நிறைவு நாளை, அதன் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவ்விழாவில் தென்மண்டல மேலாளர் திரு. டி. சித்தார்த்தன்                                     கூறியதாவது;

2222

“ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் தேதி நாங்கள் விழாவாகக் கொண்டாடி வருகிறோம். அப்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக இரண்டு புதிய பாலிசிகள் அறிவிப்போம். இந்த ஆண்டும் அந்த பாலிசிகளை வரும் மாதங்களில் அறிவிக்க இருக்கிறோம்.

அடுத்ததாக, இதுவரை எல்.ஐ.சி. பாலிசி எடுத்தவர்கள், தங்கள் பாலிசியை கட்ட தவறி இருந்தாலோ அல்லது காலாவதியாகி இருந்தாலோ அவைகளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தள்ளுபடி சலுகையில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால், 10 ஆண்டுகளுக்குள் காலாவதியான பாலிசியாக இருக்கவேண்டும்.

எங்களது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புகளில் ரூ.2.26 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. தென் மண்டலத்தில் விற்பனை செய்யப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 5.59 லட்சம். பிரிமிய வருமானம் ரூ. 589.47 கோடிகள் ஆகும்.

2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜீவன் தருண் பாலிசி மற்றும் எண்டோமென்ட் ப்ளஸ் பாலிசி சிறப்பாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.
காப்பீட்டு நிறுவனங்களிலேயே ஆயுள் காப்பீடு நிறுவனம் (LIC) மட்டுமே லாபகரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. சான்றாக, 2015-16 ஆண்டுக்கான வாழ்வுக்காலப் பயன் அடைந்தோர் 4.09 லட்சம். அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.892.91 கோடிகள் ஆகும்” என்றார் திரு. சித்தார்த்தன்.

– குறளமுதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here