மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி

0

மதுரையில் அனைத்து உலக உணவு வர்த்தகப் பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது. வேளாண் உணவு உற்பத்தி, உணவு பதனீட்டுத் தொழில், வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகத்தை ஒரு துடிப்பு மிக்க மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பொருட்காட்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் விளையும், தயாரிக்கப்படும் மற்றும் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை நம் நாட்டின் பிற மாநிலங்களில் சந்தைப் படுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த பொருட்காட்சி அமையும்.

கால்நடைகள் உற்பத்தி, பால், எருமை இறைச்சி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. காய்கறிகள், முட்டை, ஆட்டு இறைச்சி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிராய்லர் கோழி உற்பத்தியில் இந்தியா முன்றாம் இடத்தில் உள்ளது. 278 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இன்னும் அரிசி, வேர்க்கடலை, பட்டாணி, சோளம், காய்கறிகள், பழங்கள், மணப்பொருட்கள், பூக்கள் உற்பத்தியிலும் இந்தியா குறிப்படத்தக்க இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும், வைப்ரன்ட் தமிழ்நாடு உலக அளவிலான உணவு வர்த்தகப் பொருட்காட்சி தமிழ் நாட்டின் வேளாண் உணவுத் தொழில், வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பங்கள், உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங், கோல்ட் ஸ்டோரேஜ், சரக்குப் போக்குவரத்து போன்றவற்றில் இன்னும் வளர்ச்சிக்கான வேகத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

 

மாணவர்களுக்கு ஏற்ற பகுதிநேர வேலைகள்!

0

இன்றைய பெற்றோர் கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதிகமாக செலவும் செய்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஒரு அழுத்தத்தை மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் புரிந்து படிக்காமல், மனப்பாடம் செய்கிறார்கள். மாணவர்கள் புரிந்து படிக்கும் தன்மையை இழக்கிறார்கள். ஒரு சில மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் அருமையும் தெரிவது இல்லை.

சில முறைகளைப் பின்பற்றினால், மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பையும், அருமையையும் உணர்த்த முடியும். அவை பின்வருமாறு,

“பகுதி நேர வேலை பார்த்தால் மட்டுமே, மாணவர்களால் படிக்க முடியும்” என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பகுதி நேர வேலை ஆனது படிப்பிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். படிக்கும் போதே, அதற்குத் தேவையான செலவுகளை அவனே பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு பணத்தின் அருமையும் கல்வியின் மதிப்பும் தெரியும். நாம் நமது நாட்டில் உள்ள கல்வி முறையை மாற்றி அமைத்தால், கல்வித்தரம் உயர்வதோடு நம் நாட்டின் மக்களிடையே பொருளாதாரமும் முன்னேறும்.

மாணவர்கள், அவர்களது கடின உழைப்பால் முன்னேறலாம். குறிப்பாக ஒரு மாணவி வீட்டில் இருக்கும்போதே, கைத் தொழில் ஒன்றைச் செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம். சான்றிற்கு ஒரு பெண் கைத்தொழிலாக தையல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, வாஷிங் பவுடர் தயாரித்தல், மெழுகுவர்த்தி போன்ற சிறு தொழில்களைச் செய்து வருமானத்தை ஈட்டலாம். பெண் தொழில் முனைவோராக ஆகலாம். இதற்கு செய்ய வேண்டியது கடினமாக உழைப்பது மட்டுமே.

ஒரு கல்லூரியில் படிக்கும் போது மாணவர்கள் எவ்வாறு வருமானத்தை ஈட்டலாம்? படித்துக் கொண்டு இருக்கும்போது டியூசன் எடுப்பது, நமக்கு நல்ல அறிவைக் கொடுக்கும். நல்ல ஒரு சிந்தனையையும் தெளிவையும், புரிந்து கொள்ளும் திறனையும் வெளிப்படுத்தும். முக்கியமாக அரசு போட்டித் தேர்வுகளுக்கு உதவியாக இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் வொர்க், டைப்பிங் வொர்க் செய்து கொடுக்கலாம். அதன் மூலமும் வருமானம் கிடைக்கும்.

இவ்வாறு மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே இந்த வேலையை செய்தால், பிற்காலத்தில் ஒரு தொழிலைச் செய்வதற்கு, இது ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்.

பகுதி நேர வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி?

பகுதி நேர வேலையைத் தேர்ந்தெடுக்கும் போது, நாம் செய்யும் வேலை, நம் படிப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சான்றாக, பி.எஸ்சி., வேளாண்மையைப் பற்றிப் படிப்பவர்கள், பகுதி நேர வேலையாக மூலிகைச் செடி வளர்த்தல், மரக்கன்றுகள் விற்றல், மண்புழு உரம் தயாரித்தல், அழகுச் செடி வளர்த்தல் மற்றும் விற்றல் போன்றவற்றைச் செய்யலாம்.

எம்பிஏ, எம்சிஏ, பிபிஏ, பிசிஏ படிப்பவர்கள், பகுதி நேர வேலையாக ப்ராஜெக்ட் வொர்க், டைப்பிங் வொர்க், புரோகிராமிங் உருவாக்கித் தருதல், மற்றும் மார்க்கெட்டிங் போன்ற வேலைகளை செய்யலாம்.

– அ. விஜயராணி, எம்பிஏ,

எப்போதும் நம்பிக்கை தருபவராக இருங்கள்!

0

பிறரை ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்துவதும் ஒரு நேர்மறை அணுகுமறை எனலாம். குறைகளை குறைகளை சுட்டிகாட்டுவதோ விமர்சனம் செய்வதோ பெரிய விஷயமில்லை. நிறைகளை மனமார பாராட்டவும் குறைகள் இருப்பின் பிறர் ̃ மனம் புண்படாதவாறு நாசுக்காக சுட்டவும், அதனைக் களைய என்ன செய்யலாம் சொல்வதுமே  தலைமைப் பண்பு சொற்களால், செயல்களால் மனதால் எப்போதும்  நம்பிக்கையும் ஊக்கமும் தருபவராக இருங்கள்.

“அட சரியாக செய்தாய்” என்று ஒரு புன்னகை, ஒரு தலை அசைப்பு, முதுகில் ஒரு செல்லத் தட்டு – இவை நிகழ்த்தும் மாற்றங்கள் அளப்பரியது. உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், முகம் அறியாதோர் என யாராகிலும் அவர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் இருக்கும் ஒரு நேர்மறை விஷயத்தைப் பற்றி உண்மையாக பாராட்டுங்கள்.

அது அவர்களுக்கு மட்டில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு, உங்களைப் பற்றி ஒரு பாசிட்டிவ் இமேஜையும் (positive image) உருவாக்கும். இடியும் மின்னலும் ஒரு செடியை வளர்க்காது. இதமான பருவ நிலையும், நல்ல நீர் வளமும் பக்குவமான மண்ணுமே வளர்க்கும். கோபம் கொண்டு இடியைப் போல் சத்தம் போடுவதால் எந்த வேலையும் நடக்காது. பண்பான இதமான பேச்சால்தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.

சொற்பொழிவாளர்களைப் பார்த்தி ருப்பீர்கள். சில பேச்சாளர்கள் பேசும்போது, மக்கள் அப்பேச்சுகளில் கட்டுண்டுக் கிடப்பார்கள். அதில் உண்மை இருக்கின்றதா, அறிவார்ந்ததாகப் பேசுகிறார்களா என்றெல்லாம் பெரும் பாலானவர்கள் பகுத்தறிந்து பார்ப்பதில்லை. ஏனெனில் கேட்பதற்கு இனிமையாக, நேர்மறை சொற்களால் கோர்வையாகக் கட்டமைக்கப்பட்டு பேசும் அவர்களின் திறன் மக்களுக்குப் பிடிக்கும்.
மனிதர்கள் எப்போதும் அன்புக்கு ஏங்குபவர்கள்.

தன்னை மற்றவர்கள் அங்கீகாரம் செய்ய மாட்டார்களா எனத் தவித்துக் கிடப்பவர்கள். இது சரியில்லை என்று சொல்வதைக் காட்டிலும் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று சொல்லுதல் நலம் பயக்கும். வெற்று விமர்சனங்களால் ஒன்றும் விளைவது இல்லை.

ஒரு உரையாடலுக்குப் பிறகு நம்முடன் பேசியவருக்கு நாம் என்ன மாதிரியான உணர்வை விட்டு வைக்கிறோம் என்பது முக்கியம். அவருக்கு நம் சொற்கள் மகிழ்வுறச் செய்ததா, சோர்ந்து இருந்த மனத்திற்கு நம்பிக்கைகளை அளித்ததா, குழம்பிய மனதை ஆற்றுப்படுத்தியதா, எதுவும் இல்லை எனினும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இறுதியில், சரி சரி சீக்கிரம் சரியாகும் என்று ஆறுதல்

கொடுத்ததா? என்பவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நல்ல உரையாடல் என்பதை ஒரு அழகான கலை என்றே கூறலாம். சொல்ல வரும் கருத்தினை தெளிவாக, சரியான சொற்களைப் பொருத்தி எதிரில் இருப்பவருக்கு புரியும்படி பேசுகிறோமா என்பது முக்கியம். நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் மனதின் கண்ணாடி அல்லவா?
ஊக்கம் அளியுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கம் அளிக்கும் போது அவர்களின் சுயமதிப்பைப் பெருக்குகிறீர்கள், தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள், அவர்களை உழைக்கத் தூண்டுகிறீர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கிறீர்கள். எனவே ஊக்கம் அளிப்பவராகவே இருங்கள், எப்போதும்! என்று அறிவுறுத்துகிறார் ராய்.டி.பென்னட் என்ற எழுத்தாளர்.

செயல்பாட்டை நோக்கி உந்தித் தள்ளும் பேரார்வம்
Money is not a motivating factor. Money doesn’t thrill me or make me play better because there are benefits to being wealthy. Iam just happy with a ball at my feet . My motivation comes from playing the game.. I love. If I was not paid to be a professional footballer I would willingly play for nothing.

Lionel Messi. பேரார்வம், உணர்ச்சிகரமான விருப்பம் என்பதை ஆங்கிலத்தில் பேஷன் (passion) என்று கூறுகிறார்கள். ஒருவரின் வெற்றியும் அவரின் பேரார்வமும் பின்னிப் பிணைந்தவை. ஆர்வம் இல்லை எனில் வெற்றி இல்லை என்றே சொல்லலாம்.

எது உங்களின் பேஷன் என்பதை நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். எது உங்களை மிகவும் ஈர்க்கின்றது? எதனைச் செய்யும் போது உங்கள் மனம் மலர்கின்றது? எது உங்களை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றது? எதில் வெல்ல முடியும் என்ற அசையா நம்பிக்கை தருகின்றது? எதனை எப்போதும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறது உங்கள் மனம்?

பிறர் கேலி செய்தாலும் உங்கள் பேஷன் மீது நீங்கள் எரியும் தணல் போல் பெரும் விருப்பத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம். உங்களுக்கு அந்த பேஷனில் இயல்பாகவே திறமை இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு வைரத்தைப் பட்டை தீட்டும் செயல்தான்.

நேரம் காலம் பார்க்காமல் அதில் ஈடுபட முடியும். ஆரம்ப கால தோல்விகள் நேர்ந்தாலும், மனம் சோர்வு அடையாமல் மீண்டும் உழைக்க முடியும். சொல்லப்போனால் நம் பேஷனைப் பின் தொடரும் போது அது வேலை என்ற சுமையாகத் தோன்றாது.

உங்கள் வேலை என்பது உங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை நிரப்பப் போகின்றது. உங்களுக்கு முழு நிறைவு வேண்டுமாயின் அது சிறந்த வேலை என்று நீங்கள் நம்ப வேண்டும். அதனை காதலித்து செய்தால்தான் அது சிறந்ததொரு வேலை என்று தோன்றும். அப்படியானதொரு வேலையை உங்கள் இதயம் கண்டு அடையும் வரை ஓயாதீர்கள் – இவை ஆப்பிள் நிறுவனர் திரு.ஸ்டீவ் ஜாப்சின் கருத்துரைகள்.

பெரும் வெற்றி பெறலாம் என்ற அளவிற்கு உங்கள் ஆர்வம் உங்களை வழி நடத்தும். உங்களின் படைப்பு, ஊக்கத்தின் அடிக்கல் இதுதான். எத்தனை இடர்கள், தடைகள் வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் துணிவைத் தரும்.
அவர் ஒரு அறிஞர். சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார்.

இடைமறித்த ஒருவர், “ஐயா, நான் ஒரு ஓவியனாக வெற்றி பெற வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டேன். ஆனால் நடைமுறை வாழ்வின் சமரசங்களுக்குள் விழுந்து ஒரு சாதாரண வேலையில் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்” என்று குறைபட்டுக் கொண்டார்.

“அது வெறும் ஆசைதான். உன்னிடம் ஓவியத்தின் மீது பேஷன் இருந்து இருந்தால் நீ அவ்வாறே ஆகியிருப்பாய் ” என்று பதில் உரைத்தார் அந்த அறிஞர்.
வெற்றி அடைந்தவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தோம் எனில், அவர்களின் பேஷன்தான் அவர்களை வழி நடத்தி இருக்கும்.

பணம் மட்டும் ஒரு ஊக்கம் தரும் காரணி அல்ல. பணம் எனக்குக் கிளர்ச்சி ஊட்டுவது இல்லை; நான் செல்வந்தன் ஆவேன் என்று விளையாடச் செய்வதில்லை. என் காலடியில் இருக்கும் பந்து என்னை மகிழச் செய்கிறது. நான் காதலிக்கும் விளையாட்டை நான் ஆடுவதில்தான் என் ஊக்கம் பிறக்கின்றது. தொழில் ரீதியான ஒரு கால்பந்தாட்டக்காரனாக ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் நான் இவ்வாட்டத்தை ஆடுவேன்.

– ஜான்சிராணி, போரூர்

வருமான வரித் தூதர்களாக செயல்படும் டிஆர்பி-க்கள்!

0

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இவர்கள் உதவுகிறார்கள்!

கடந்த ஆண்டுக்கு முன் மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, உங்களது வங்கிக் கணக்கில் பெரு தொகை டெப்பாசிட் செய்தவரா?
இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வந்து உள்ளதா? ‘இத்தனை ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. ஆனால் வரும் நாட்களிலும் இப்படியே தொடர்வது இயலாதோ?’ என்ற சந்தேகத்தில்… யோசனையில் இருப்பவரா?”வரி கட்டுவதும்,வரிக்கணக்கு தாக்கல்செய்வதும் சரிதான்.

ஆனால், அதற்கானஆடிட்டர் கட்டணமே பெரிய தொகைபோல தெரிகிறதே!” என்ற ஐயத்தில் உள்ளவரா கவலையை விடுங்கள்! மேலே சொல்லப்பட்டு உள்ள 4 விதமானவர்களில், நீங்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள் பயிற்சி பெற்ற இளைஞர்கள். வருமான வரித்துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள். ஒருவகையில் இதற்கான உரிமம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.

ஆம். டிஆர்பி…. அதாவது, டேக்ஸ்ரிட்டர்ன் பிரப்பேரர் என்ற பெயரில்,செயல்படும் இவர்கள் மேலே உள்ள 4 தரப்பினருக்குமான தேவைகளை நிறைவு செய்வார்கள்.அதோடு, இவர்கள் அதிக அளவாக 1000 ரூபாயில் இருந்து, குறைந்த அளவாக 250 ரூபாய் வரை கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் உங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த தொகை மாறுபடும் என்கிறது இவர்களுக்கான வலைதளம்.ஆங்கிலத்தில் TRP எனக் குறிப்பிடப்படும், இவர்கள் மத்திய அரசின் வருமான வரித்துறையால் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.

இவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டம் குறித்து நன்றாகத் தெரியும்.அதன்படி,ஒருவரது ஆண்டு மொத்த வருமானத்தைக் கணக்கிடுவது எப்படி, அதில் இருந்து அவர் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு… அதை செலுத்துவது எப்படி…, எப்போது செலுத்த வேண்டும்…, ஒருவேளை கூடுதலாக வரி செலுத்தி இருந்தால், அதை அரசிடம் இருந்து திரும்பப் பெறுவது எப்படி…உள்ளிட்டபல செய்திகள் பற்றியும் பயிற்சிஅளிக்கப்படுகிறது.

அதனால், வருமானவரித்துறை என்றாலே, ஒரு விதமானஅச்சத்தில் உள்ளவர்களும், ஆடிட்டர் அலுவலத்தைப் பார்த்த மிரட்சியில், அந்ததிசையையே தவிர்த்து வருபவரும் கூட,இவர்களிடம் தேவையான சேவையைப் பெற்றுக் கொள்வது சாத்தியமே.

சரி… இவர்களை எங்கே தேடிக் கொண்டுபோவது என்பதுதான் அடுத்த உங்களதுகேள்விஎன்றால், அதற்கு உடனடி, நேரடிபதில் – அவர்களைத் தேடி நீங்கள் போகவேண்டியது இல்லை. இருவருக்கும்ஏற்புடைய நேரம், தூரம் என்றால்,அவர்களே கூட உங்களைத் தேடிவந்து நீங்கள் சொல்லும்இடத்தில் உங்களைச் சந்திக்க வாய்ப்புண்டு.

இது போன்ற பயிற்சிபெற்றவர்களை, அவர்கள்வசிக்கும் பகுதி வாரியாகபிரித்து, அவர்களை நீங்கள் அடையாளம்காண, அஞ்சல் முகவரிஎண் அதாவது பின்கோடு வாரியாக பிரித்து இவர்களுக்காகவே தனியாகசெயல்படும் வலைத்தளத்தில் பட்டியலாகத் தரப்படுகிறது. www.trpscheme.com/locate-trps /12 12> என்ற முகவரிக்குச் சென்று தேடினால், உங்களுக்கு சேவை அளிக்க தேவையானவரை அடையலாம் காணலாம்.

நிதி நிர்வாகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை,மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கிய பலமுயற்சிகளை,தற்போது மோடி தலைமையிலான மத்தியஅரசும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிலையில், வரி வசூல் முயற்சிகளும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகின்றன. இதில், கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகக் கூறி, செய்யப்பட்டபணமதிப்பு நீக்கம் (Demontisation) தொடர்பான நடவடிக்கைகள் வருமானவரி வசூல்விஷயத்தில் பலரதுஎண்ணங்களை மாற்றி உள்ளது.

அதனால்,இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள்,அலுவலகங்களில் வரி பிடித்தம் செய்துவிட்டார்கள் என வரிக் கணக்கு தாக்கல்செய்யாதவர்கள் என பலரும் வரிக் கணக்குதாக்கல் செய்யவேண்டி உள்ளது.மறுபுறம், ஒருவரது ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கு மேல் என்றால் அவர்கள் கட்டாயமாக ஆன்லைன் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று இருந்த வரம்பு படிப்படியாகக்குறைக்கப்பட்டு, இப்போதுகிட்டத்தட்டவரிக்கணக்கு தாக்கல் செய்யும் அனைவரும் ஆன்லைன் முறையை நாட வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.

எனவே, ஆன்லைனில் தாக்கல் செய்யும்வரிக் கணக்கு குறித்த விவரங்களை குறைந்தசெலவில் செய்ய, இந்த டிஆர்பி-க்கள் பொருத்தமானவர்களாக தெரிகிறது.இந்த திட்டம் 2006-07ம்ஆண்டு தொடங்கப்பட்ட போது நாடு முழுவதும்5000 டிஆர்பிக்கள் நியமிக்கப்பட்டார்கள்.பின்னர் 2012-13ம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை இவ்விதம் டிஆர்பி-க்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். எனவே, நாடுமுழுவதும் பல நடுத்தர நகரங்களில் கூட,இவ்விதம் அங்கீகரிக்கப்பட்ட ஓரிருவர்கள் உள்ளதால் அவர்களை அணுகி பயன்அடையலாம்.

மறுபுறம் ஒருகுறிப்பிட்ட டிஆர்பிசரியான முறையில் சேவை வழங்கவில்லைஎன்றால், அவர்கள் மீது புகார்செய்யவும்வாய்ப்பு உண்டு. இதற்கு அவர்களுக்கானதனி வலைதளத்தையோ, அதில் உள்ளமின்னஞ்சல் [email protected]
முகவரியிலோ…., 011 – 2341 4177, 011 – 23415311 என்ற தொலைபேசி எண்களையோபயன்படுத்திக் கொள்ளலாம்.தற்போதைய நிலையில் தமிழகத்தில் மட்டும், அதன் பல்வேறு நகரங்களில் சுமார்425 பேர் இவ்விதமான பொறுப்பில்,பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சரிதானே! வருமான வரி கட்ட, அதைசரியாகக் கணக்கிட்டுதர வேண்டும்என்றால், அதற்கு உடனடியாகவும்,வரிக்கணக்கு தாக்கல் மட்டும் செய்யவேண்டுமானால், அதற்கானநேரமானஜூலை மாதத்திலும் இந்த டிஆர்பிக்களைப் பயன்படுத்திக் கொள்வது, இன்றையசூழலுக்கு புத்திசாலித்தனமானசெயல்மட்டுமல்ல; சிக்கனமானதும் கூட!

– ஆர். சந்திரன்

வழிகாட்டுகிறார், திரு. சுரேஷ் கிருஷ்ணா

0

டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த
சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக திருமதி.ஆரத்தி கிருஷ்ணா அதன் இயக்குநர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் இதுவரை அந்த நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநராகசெயல்பட்டு வந்தார். இவருடைய தங்கை திருமதி. அருந்ததி கிருஷ்ணா இணை மேலாண் இயக்குநராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

இவர் இதற்கு முன் துணை மேலாண் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவர்களின் அக்கா திருமதி. ப்ரீத்தி கிருஷ்ணா. இவரும் டிவிஎஸ் குழுமத்தின் இன்னொரு நிறுவனத்தை நிர்வகிக்கிறார். மூவரும் திரு. சுரேஷ் கிருஷ்ணாவின் மகள்கள். இதுவரை சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த திரு. சுரேஷ் கிருஷ்ணா வரும் ஏப்ரல் இருபதாம் தேதி முதல் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று, சேர்மன் ஆவதைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

இயக்குநர் குழுவிலும் அவர் தொடர்ந்து நீடித்து தன் அனுபவங்களையும், ஆற்றலையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவார். பொதுவாகவே வணிகர்களும், தொழில் அதிபர்களும் தங்களுக்கு மகள்கள் மட்டுமே இருந்தால், அது குறித்து சற்று சோர்வாகப் பேசுவதைப் பார்க்க முடியும். மகன்கள் மட்டுமே வாரிசுகள் என்கின்ற பொதுப் புத்தியில் இருந்தே இந்த சோர்வு உருவாகிறது. ஆனால் இந்த மனநிலையை திரு. சுரேஷ் கிருஷ்ணா உடைத்துத் தள்ளி இருக்கிறார். தனது மூன்று மகள்களையும் தங்கள் தொழிலுக்கான சரியான வாரிசுகளாக உருவாக்கி இருக்கிறார்.

இந்த வகையில் டிவிஎஸ் குழும, குடும்ப உறுப்பினர்கள் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். டிவிஎஸ் குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் டிவிஎஸ் குழுமத்தின் பல நிறுவனங்களை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். எனவே டிவிஎஸ் குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொழில் முனைவோரும், வணிகர்களும் தங்கள் மகள்களையும் தங்கள் தொழில்களுக்கு வாரிசுகளாக்கும் வகையில் தகுந்த படிப்பையும், பயிற்சிகளையும் அளித்து உருவாக்கி மகிழ வேண்டும். தொழில் முனைவோர் வீட்டுப் பெண்களும் அதற்குரிய தன்னம்பிக்கையைப் பெற்று செயல்பட வேண்டும்.

– க. ஜெயகிருஷ்ணன்

இவர்களால்தான் வேலை வாய்ப்பு பெருகுகிறது

0

எல்லோராலும் தொழில் தொடங்கி இலாபகரமாக நடத்த முடியாது. அதற்குத் தனித்திறமை வேண்டும். தகுதி வேண்டும். எந்தத் தொழிலும் இலாபகரமாக நடக்க வேண்டும்.
உண்மையில் சிலகாலமாக நம்மிற் பலர் தம்மையறியாமலேயே நாட்டுக்குத் தீங்கு பயக்கும் செயல் செய்து கொண்டு வருகிறார்கள்.
நாம் அன்றாடம் பார்க்கும் சினிமாப்படங்களில் கூட அதன் தாக்கம் தெரியும். அதாவது ‘பணக்காரர்கள் எல்லாம் மோசமானவர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் சுயநலவாதிகள்’ என்ற தவறான கருத்தைப் பெரும்பான்மையான ஏழைகள், அல்லது வசதி இல்லாதவர்கள் நம்பும் படியாக வளர்த்து வருகின்றார்கள். இது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, உள்ளத்தையும் கெடுத்து மக்களை மயங்க வைத்துவிடும்.
உண்மை என்னவென்றால் தன் சொந்த முதலைப் போட்டு, சிந்தித்துத் தொழில் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தும் ஒரு தொழிலதிபர் வேறு எவரைக் காட்டிலும் இந்த நாட்டிற்கு அதிகமான சேவை செய்கின்றவர் ஆவார்; அவரால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது; உற்பத்தியும் பெருகுகின்றது; உண்மையான செல்வமும் நாட்டிற்கு மிகுதியாகக் கிடைக்கின்றது. செலாவணியும் கிடைக்கின்றது; அவர்கள் தான் நாட்டிற்கு பயனுள்ளவர்கள். ஒரு நாட்டு மக்களுக்கு அவர்கள் தன்மைக்கு ஏற்ப ஆட்சி அமையும் என்பார்கள்!
உற்பத்திப் பெருக்கத்திற்கும், செல்வச் செழிப்பிற்கும் முதல் காரணமானவர்கள் தொழிலதிபர்களும் மேலாண்மை வித்தகர்களும்தான். நாம் மதிப்புக் கொடுத்துக் கோபுரத்தில் வைத்திருக்கும் கவர்ச்சிப் பொம்மைகளல்லர்! உழைக்கின்றவனுக்கும் அதை விட உழைப்பிற்கு வழி வகுக்கின்றவனுக்கும் நாம் எப்போதும் உற்சாகம் கொடுக்க வேண்டும்.
அவர்கள்மேல் பொறாமை கொள்ள வைத்து ஆதாயம் தேட அந்த அறியாமையை பயன்படுத்தக் கூடாது.

– டி.ஆர். கள்ளப்பிரான், திருநெல்வேலி

தொழில் முனைவோரின் நண்பனாக,எம்எஸ்எம்இ

0

எம்எஸ்எம்இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் என்ற தொழில் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மத்திய அரசின், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செய்வதற்கு என உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு புதிய தொழில் முனைவோருக்கான, ஏற்றுமதியாளர் களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தொழில் தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்குகளையும் நடத்துகிறது. மேலும் தொழில்கள் செய்முறை தொடர்பான எண்ணற்ற பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான பதிவுச் சான்றிதழ்களையும் வழங்குகிறது. உத்யோக் ஆதார் மெமொரண்டம் பதிவுச் சான்றிதழ்களையும் வழங்குகிறது.

தமிழ்நாட்டுக்கான இதன் தலைமை அலுவலகம் சென்னை, கிண்டியில் உள்ளது. இங்கே தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்வதற்கான நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இதன் கூடுதல் தொழில் ஆலோசகராக உயர் பொறுப்பு வகிப்பவர், திரு. எஸ். சிவஞானம். இவர் ஏற்கெனவே இங்கு பத்தாண்டுகளுக்கும் மேல் இயக்குநர் ஆக செயல்பட்டவர். பின்னர் டெல்லியில் உள்ள எம்எஸ்எம்இ தலைமை அலுவலகத்தில் பணியாற்றினார். அண்மையில் சென்னைக்கு மாறுதல் பெற்று வந்து கூடுதல் தொழில் ஆலோசகராக செயல்படுகிறார்.

நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையானவை குறித்து அவரிடம் பேசியபோது, அவர் கூறிய கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.
”இந்தியா அடிப்படையில் ஒரு வேளாண்மை நாடு. வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். அரபு நாடுகளில் பெட்ரோல் நிறையக் கிடைத்ததைப் பயன்படுத்தி அவை முன்னேறி உள்ளன.

பாலைவன நாடு என்று கூறப்பட்ட இஸ்ரேல் இப்போது வேளாண்மைத் தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்குக் காரணம் புதிய, பொருத்தமான தொழில் நுட்பங்களை அவர்கள் முழுமையாக பயன்படுத்துவதுதான்.
நம் நாட்டிலும் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில் வாய்ப்புகளை அதிகம் உருவாக்கலாம்.

படித்த இளைஞர்கள் வேளாண்மைத் தொழிலில் இறங்குவதற்கான சாதகமான சூழல் தற்போது நிலவுகிறது. இதையொட்டி சில படித்த இளைஞர்கள், தாங்கள் பார்த்துக் கொண்டு இருந்த அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த பணிகளில் இருந்து விலகி, தாங்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தைக் கொண்டு பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று நிலம் வாங்கி வேளாண்மை செய்வதைப் பார்க்க முடிகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் வேளாண்மை தொடர்பான உலக அளவிலான பார்வை இவர்களுக்கு இருக்கிறது.
படித்த இளைஞர்கள் கூட்டுறவு முறையில் வேளாண்மைப் பண்ணை அமைக்க முன்வந்தால் நபார்டு வங்கி, இவர்களுக்கு உதவ பல திட்டங்களை வைத்து இருக்கிறது. சிறுசிறு அளவில் நிலங்களை வைத்து இருப்பவர்கள் லாபகரமாக விவசாயமோ, விவசாயம் சார்ந்த மதிப்புக் கூட்டுத் தொழிலோ செய்ய இயலாது. ஆகவே இவர்களை ஒன்று சேர்த்து, உறுப்பினர்களாக்கி கூட்டுறவு வேளாண்மைப் பண்ணையம் அமைத்து, அவர்கள் நிலங்களில் வல்லுநர்களின் உதவியுடன் மொத்தமாக வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டால் அதிக பயன் அடையலாம்.

விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பது தொடர்பான விழிப்புணர்வும் இத்தகைய இளைஞர்கள் நடுவே அதிகரித்து வருவதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். வேளாண்மைத் தொழில்கள் நல்ல லாபத்துடன் நடைபெறத் தொடங்கினால் கிராமப் புறங்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கான அரசின் திட்டங்களையும், வாய்ப்புகளையும், எம்எஸ்எம்இ நிறுவனம் தொழில் முனைவோருக்கு அறிமுகப் படுத்துகிறது.

அதே போல மூலிகைகளுக்கும், மூலிகை சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களுக்கும் விற்பனை வாய்ப்பு உள்ளது. இவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது.
நீலகிரி, ஏலகிரி, ஏற்காடு, ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களின் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இல்லை. காரணம் அவர்கள் செய்யும் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் சேகரித்து வரும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான முயற்சிகளை சில இடங்களில் அரசாங்கம் எடுத்து வருகிறது.
மலைப் பகுதிகளில் காளான் வளர்த்தல், தேன் சேகரித்தல், தினை மற்றுக் குதிரைவாலி போன்ற சிறு தானியங்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மலைப் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் பொருட்களை ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.

பொதுவாக நாங்கள் கிராமப்புறம் சார்ந்த தொழில் முனைவோருக்கு வேளாண்மை சார்ந்த தொழில்கள், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், மேலும் அவர்கள் வாழும் ஊர்களைச் சுற்றிலும் உள்ள தொழில்களை மேம்படுத்திச் செய்தல் போன்றவற்றுக்கான ஆலோசனை களைச் சொல்கிறோம். நகர்ப் புறங்களைச் சார்ந்த தொழில் முனைவோருக்கு புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு நகர்ப்புறங்களில் செய்யக் கூடிய தொழில்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறோம்.

தொழில் முனைவோர் சிறப்பாகச் செயல்பட அவர்களுக்கு உள்ள தேவையற்ற தடைகள் நீக்கப்பட வேண்டும். ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும். அனுமதி பெறும் முறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
ஒருவர் தொழில் தொடங்கிய பின்பு அதிகாரிகளை அணுக பல்வேறு வகையான அரசுத்துறை அலுவலகங்களுக்கு தனித்தனியே செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் தொழிலில் கவனம் செலுத்துவது குறைகிறது என்றும் தொழில் முனைவோர் கூறுகிறார்கள்.

இந்த சிக்கலும் தீர்க்கப்பட வேண்டும் என்பது பல தொழில் முனைவோர் அமைப்புகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இத்தகைய தொழில் முனைவோர் அமைப்புகளின் வேண்டுகோள்கள் குறித்தும் அரசு சிந்தித்து வருகிறது.
தங்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதைத் தேர்ந்து எடுப்பதற்கு உதவுவதற்காக, ‘என்ன தொழில் செய்யலாம்? என்ற தலைப்பில் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்த உள்ளோம். பல்வேறு தொழில்கள் பற்றிய பயிற்சி வகுப்புகளையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்த உள்ளோம். இந்த பயிற்சிகள் பற்றிய விவரங்களை எம்எஸ்எம்இ அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம்.

எம்எஸ்எம்இ ஜாப் என்ற பெயரில் ஒரு இணைய தளத்தை உருவாக்கி வருகிறோம். இந்த தளத்தைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்களையும், வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்களையும் இணைக்க இருக்கிறோம். இது சிறுதொழில் முனைவோருக்கு மிகுந்த பயன் அளிப்பதாக அமையும். அடுத்ததாக மொபைல் ஆப் ஒன்றையும் வடிவமைத்து வருகிறோம். இப்போது இணையத்தில் தேடுவதை விட எளிமையாக தேட உதவும் இந்த மொபைல் ஆப் உடனுக்குடன் மேம்படுத்தப்படுத்தப்படும்.

மேலும் மரபு சார்ந்த தொழில்களுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்காக அவற்றையும் கிளஸ்டர் முறையின் கீழ் கொண்டு வருவது குறித்தும் சிந்தித்து வருகிறோம். பல பாரம்பரிய தொழில்கள் புதிய தொழில் நுட்பங்களின் பார்வை படாமல் இருக்கின்றன. அவர்களிடையே கிளஸ்டர் தொழில் முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

தொழில் முனைவோருக்கு உதவுவதற்காகவே நாங்கள் செயல்படுகிறோம். தொழில் முனைவோர் எங்களிடம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

திரு. எஸ். சிவஞானம். (044 – 22501011/12/13

website: msmedi-chennai .gov.in)

– ஆ. வீ. முத்துப்பாண்டி

மின்வாரியம் குழப்பங்களை நீக்க வேண்டும்!

0

தமிழ்நாடு மின்சார வாரியம் 25 எச்பி-க்கு மேல் மின் இணைப்பு உள்ள பயனீட்டாளர்களின் மின் அளவைக் கணக்கிடும்போது பவர்ஃபேக்டர் என்கின்ற ஒன்றையும் கணக்கிட்டு, அதை மின்கட்டணத்துடன் சேர்க்கிறது. பவர்ஃபேக்டரை முன்பு எல்லாம் தனியாக குறிப்பிட்டுக் காட்டுவார்கள். இதனால் மின் பயனீட்டாளர்கள், மின்சார பயன்பாட்டுக்கான கட்டணம் சரியாக கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை அறிய முடிந்தது.

ஆனால், இப்போது மீட்டர் கணக்கீட்டு அட்டையில், இதர கட்டணங்கள் என்ற தலைப்பில் மின்சார வரி, அனுமதிக்கப்பட்ட கிலோ வாட்டுக்கான(ரிகீ) கட்டணம் ஆகியவற்றுடன் பவர்ஃபேக்டர் கட்டணத்தையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக இதர கட்டணம் என்று குறிப்பிடுகிறார்கள். இது மிகவும் குழப்பத்தை விளைவிக்கிறது. இதனால் மின் பயனீட்டாளர்களுக்கு பண இழப்பும் ஏற்படுகிறது.

மின் பயனீட்டாளர்களுக்கு அவர்கள் எந்தெந்த இனத்தின் கீழ் எவ்வளவு பணம் செலுத்துகிறோம் என்பது தெளிவாக தெரிய வேண்டும். ஆகவே இனி வரும் காலங்களில் டான்ஜெட்கோ மீட்டர் அட்டையில் இதர கட்டணங்கள் என்ற தலைப்பில் குறிப்பிடும் கட்டணத்தில் மின்சார வரி, அனுமதித்த கிலோ வாட்டுக்கான கட்டணம், பவர்ஃபேக்டர் கட்டணம் போன்றவற்றை தனித்தனியே தெளிவாக குறிப்பிட்டுத் தர வேண்டும்.

தற்போது மின் பயனீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதன் கணக்கு விவரங்களை கணினி மூலம் தெரிந்து கொள்ள முடிவதும், கணினி வாயிலாகவே மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடிவதும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. ஆனால் கணினி முறையில் பணம் செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் பல தவறான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. அவை,

கணினி முறையில் இணையத்தில் கட்டணங்களை பதிவேற்றுவது, மின் கணக்கீடு எடுத்துச் சென்ற நாளில் இருந்து இத்தனை நாட்களுக்குள் பதிய வேண்டும் என்ற கணக்கு இல்லாமல், பலமுறை மிகவும் தாமதமாக பதியப்படுகிறது. இதனால் வாடிக்கையாளருக்கு மின்வாரியம் அளிக்கின்ற கருணைக் காலம் குறைகிறது. இதைத் தவிர்க்க கணக்கு எடுத்த அடுத்த நாளிலேயே கட்டண விவரங்களை இணையத்தில் பதிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

பல முறை மின் கணக்கீட்டுத் தொகை இல்லாமல் ஸ்லிப் என்ற தலைப்பில் பல்வேறு தொகைகள் பதியப் படுகின்றன. அந்த தொகை எதற்கானது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படுவது இல்லை. இது தொடர்பாக உரிய அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டால், உதவிப் பொறியாளரைக் கேளுங்கள்; கணினியில் பதிபவரைக் கேளுங்கள்; மின் கணக்காளரைக் கேளுங்கள் என அலைக்கழிக்கிறார்கள். இதற்குள் பணம் செலுத்த வேண்டிய நாட்கள் நெருங்கி விடுவதால் விவரம் தெரியாமலேயே பணத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு முன்னர், மின் கட்டணத்தைத் தவிர்த்து வேறு இனங்களில் பணம் கட்ட வேண்டும் என்றால், ஒப்புகை பெறத்தக்க கடிதத்தை நேரடியாக பயனீட்டாளருக்குக் கொடுப்பார்கள். தற்போது கணினியில் எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்காமல் வெறும் ஸ்லிப் என்ற தலைப்பில் தொகைகளைக் குறிப்பிட்டு, அதையும் உடனடியாக செலுத்தச் சொல்வது முறையானதாக இல்லை.

எனவே, ஏற்கெனவே செய்தது போல நேரிடையாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ பயனீட்டாளருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது மேற்படி பணம் செலுத்த வேண்டிய கடிதத்தை கணினியில் பதிவேற்றம் செய்து, பயனீட்டாளர் அதை அச்சு எடுத்துக் கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட வேண்டும். இதை தவிர்த்து வெறும் ஸ்லிப் என்ற பெயரில் தொகையை மட்டும் குறிப்பிட்டு கட்ட சொல்வது நியாயமானது அல்ல.

அண்மைக் காலமாக மின்சார வாரிய மீட்டர்கள் பழுது அடைவது அதிகரித்து உள்ளது. தொழில் முனைவோர் வாரியத்துக்கு புகார் அளித்தால், விரைவில் பழுதான மீட்டரை மாற்றி புது மீட்டரைப் பொருத்தித் தருவது இல்லை. மேலும் ஒவ்வொரு முறை மீட்டரை மாற்றும் பொழுதும், புது மீட்டருக்கு உண்டான தொகையையும் வசூலிக்கிறார்கள். கழற்றிக் கொண்டு போன பழைய மீட்டர்களே பெரும்பாலும் பழுது நீக்கி மாட்டப்படுகின்றன. அப்படி பழுது நீக்கி மாட்டப்பட்ட மீட்டர்களுக்கும் புது மீட்டருக்கான தொகையை வசூலிக்கிறார்கள்.

இன்றைய காலக் கட்டத்தில் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையேதான் தொழிலை நடத்திக் கொண்டு இருக் கின்றன. இதைப் போன்ற நிலையில் மின்சார வாரியம் தொழில் முனை வோருக்கு ஆதரவாக நடந்து கொண்டால் தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். இவற்றை எல்லாம் சிந்தித்து மின்வாரிய அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் குறைகளைக் களைந்து தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

– ஜி. சங்கரன், தலைவர், டான்பா (26692324, 26692758)

பிளாஸ்டிக் தொழில்களின் எதிர்பார்ப்பு என்ன?

0

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) பதினாறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் திரு. ஜி. சங்கரன் கூறிய போது,

”தென் இந்தியாவில் எந்த ஒரு பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால் ஒட்டு மொத்த தென் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது, அதனை விற்பனை செய்வது என்பதோடு அந்த வணிகம் முடிந்து விடுவது இல்லை. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு, மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மணிகள் தயாரிப்பது, மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகளை மூலப் பொருட்களாகக் கொண்டு மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது, அதன் பிறகு அந்த பொருள்களை மக்கள் பயன்படுத்துவது, அதன் பிறகு அவை கழிவுகள் ஆவது என்கின்ற ஒரு சுழற்சி முழுவதற்கும் இடையே உள்ள சிக்கல்களைக் களைந்தால்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை முழுமையாக தீர்க்க முடியும்.

ஆகவே, தெரு ஓரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வரியைக் குறைத்தது போல, மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகள், மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தற்போதைய ஜிஎஸ்டி வரி 18% என்று இருப்பதையும் 5% ஆக குறைக்க வேண்டும்.

மேக் இன் இந்தியா என்கின்ற முழக்கத்தைப் போலவே, நமது அரசால் அண்மைக் காலமாக தூய்மை இந்தியா என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற, முதல்படியாக ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துப் பெற தேவையான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டம் இயற்றி பதினேழு ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த முயற்சிக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை.

பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் எந்த ஒரு சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய பின் தெருக்களில் கண்டபடி வீசி எறிவதால்தான் சுற்றுச் சூழல் மாசு படுகின்றது. இது பிளாஸ்டிக் சிக்கல் இல்லை; குப்பை சிக்கல்தான். உலகத்தின் மற்ற நாடுகள் அனைத்திலும் தரம் பிரித்த குப்பைகளை பல்வேறு வண்ணங்களில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் சேகரித்துதான், குப்பைகளை கையாளுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கையாண்டால்தான் தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெற்றி கிடைக்கும். மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த முடியும். இவ்வாறு செய்யாமல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலித்து, செலவழித்தாலும் விழலுக்கு இரைத்த நீராகத்தான் ஆகும்.

இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருக்கிறது. மேக் இன் இந்தியா என்ற முழக்கத்துக்கும் பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் இங்கு தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன. தொ­ழில் தொடங்க அனுமதி பெற உள்ள சிகப்பு நாடா நடைமுறை, மின் உற்பத்தியை பெருக்காதது, தரமற்ற சாலைகள், நடைமுறைக்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள், திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி பெற ஆகும் அதிக காலதாமதம் போன்ற அடிப்படையான, தொழில் வளர்ச்சிக்கு எதிரான நிலையை மாற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு, நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மேக் இன் இந்தியா என்ற முழக்கம் மட்டும் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை உருவாக்கி விடும் என்று நினைப்பது பகல் கனவுதான். எனவே இது தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி, தேவையான ஆவணங்கள் இருப்பின் உடனுக்குடன் அனுமதி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு இயற்றிய பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இடையில் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளைப் புரிந்து கொண்டு, தங்கள் மனம் போனபடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு இனியாவது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் முனைவோர் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டு உள்ளது. தமிழ் நாட்டில் தொழில் தொடங்க, துறை சார்ந்த அலுவலகங் களுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்கும் பொழுது ஏற்படும் ஏமாற்றங்கள் மிகவும் கசப்பானவை. ஆன்லைன் வாயிலாக அனைத்து விண்ணப்பங்களையும் அனுப்பும் படி கூறினாலும், அனைத்து துறைகளிலும் நேரடி யாக வந்து விண்ணப்ப நகல் ஒன்றைக் கொடுக்கவும் சொல் கிறார்கள்.

நேரடியாக அதிகாரிகளைச் சந்திக்கத் தேவை இல்லை என்பதற்காகத்தான் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற முறையே நடைமுறைப் படுத்தப்படுகிறது. நேரடியாகவும் வந்து விண்ணப்ப நகல்களை வழங்கச் சொல்வது ஒற்றைச் சாளர முறையின் அடிப்படை நோக்கத் தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. இவ்வாறு நேரடியாக வந்து விண்ணப்ப நகல்களை துறைதோறும் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும். அனுமதிகள் ஒவ்வொரு துறையில் இருந்தும் குறிப்பட்ட நாட்களுக்குள் வழங்கப் படாவிட்டால், அதற்கு நிர்வாக ரீதியில் யார் காரணமோ அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கிடைக்கா விட்டால் அனுமதி வழங்கியதாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முறையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசும் முன்வந்தால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல மடங்கு ஆகும்.
பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கேஸ் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ஹால்டியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு குழுவாக செயல்பட்டு (கார்ட்டல்) தொடர்ந்து பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு சிறு-குறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 7.5% வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். பிவிசி மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் பொருள்குவிப்பு தடுப்பு வரியையும் (ஆன்டி டம்பிங் ட்யூட்டி) முழுவதுமாக நீக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழில் பெருமளவு குறைக்கிறது. மறுசுழற்சி தொடர்பான தொழில் தொடங்க சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் தனி தொழிற்பேட்டைகள் அமைத்து, குறைந்த விலையில் மனைகள், மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும். இவை எல்லாம் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் அமையும்.

பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்ததாலும், பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்தாலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிற்சாலை என்னென்ன நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பத்தாயிரம் ரூபாய் தொழிலும் நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. பிளாஸ்டிக் தொழிலில் 98% தொழில்கள் குறுந்தொழில் வகையைச் சார்ந்தவை ஆகும். பெரும்பாலான பிளாஸ்டிக் தொழில்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் முதலீடு செய்துதான் தொடங்கப்படுகின்றன.

ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு அவரே முதலாளியாகவும், அவரே தொழிலாளியாகவும் இருப்பார். அவருடைய குடும்பத்தினரே சக தொழிலாளிகளாக இருப்பார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்படி குறுந்தொழில்களை நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை நமது அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக பச்சைப் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்ட குறுந் தொழில்களுக்கு மனைப்பிரிவு நிபந்தனையில் இருந்தாவது விலக்கு அளிக்க அரசு ஆணை இட வேண்டும்.

புதுச்சேரி அரசு புதிய தொழிற்கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்கு உரியது. புதுச்சேரி அரசு முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்தும் பதினைந்து தொழில்களில் பிளாஸ்டிக் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. மேலும் பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு தொழிற் கொள்கையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன் இருக்கும் பெரிய சிக்கல்கள் இடம் கிடைப்பதும், பழைய பிளாஸ்டிக்கை அரைக்கும்போது வெளியேறும் கழிவு நீரை எப்படி அகற்றுவது என்பதும்தான்.

இதற்கு, புதுச்சேரி அரசு பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு என்று சுமார் ஐம்பது ஏக்கரில் தனியாக ஒரு தொழிற்பேட்டையை அமைக்கலாம். மேலும், இங்கே அமைக்கப்படும் மறுசுழற்சித் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரை தூய்மை செய்து வெளியேற்றும் வகையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தித் தரலாம்.” என்றார். திரு. ஜி. சங்கரன்.

தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) பதினாறாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் திரு. ஜி. சங்கரன் கூறிய போது,
”தென் இந்தியாவில் எந்த ஒரு பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால் ஒட்டு மொத்த தென் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழில் முனைவோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது, அதனை விற்பனை செய்வது என்பதோடு அந்த வணிகம் முடிந்து விடுவது இல்லை. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மூலப் பொருட்களாகக் கொண்டு, மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மணிகள் தயாரிப்பது, மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகளை மூலப் பொருட்களாகக் கொண்டு மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது, அதன் பிறகு அந்த பொருள்களை மக்கள் பயன்படுத்துவது, அதன் பிறகு அவை கழிவுகள் ஆவது என்கின்ற ஒரு சுழற்சி முழுவதற்கும் இடையே உள்ள சிக்கல்களைக் களைந்தால்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை முழுமையாக தீர்க்க முடியும்.

ஆகவே, தெரு ஓரங்களில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வரியைக் குறைத்தது போல, மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் மணிகள், மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தற்போதைய ஜிஎஸ்டி வரி 18% என்று இருப்பதையும் 5% ஆக குறைக்க வேண்டும்.

மேக் இன் இந்தியா என்கின்ற முழக்கத்தைப் போலவே, நமது அரசால் அண்மைக் காலமாக தூய்மை இந்தியா என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற, முதல்படியாக ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துப் பெற தேவையான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டம் இயற்றி பதினேழு ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த முயற்சிக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை.

பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் எந்த ஒரு சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய பின் தெருக்களில் கண்டபடி வீசி எறிவதால்தான் சுற்றுச் சூழல் மாசு படுகின்றது. இது பிளாஸ்டிக் சிக்கல் இல்லை; குப்பை சிக்கல்தான். உலகத்தின் மற்ற நாடுகள் அனைத்திலும் தரம் பிரித்த குப்பைகளை பல்வேறு வண்ணங்களில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் சேகரித்துதான், குப்பைகளை கையாளுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கையாண்டால்தான் தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெற்றி கிடைக்கும்.

மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த முடியும். இவ்வாறு செய்யாமல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலித்து, செலவழித்தாலும் விழலுக்கு இரைத்த நீராகத்தான் ஆகும்.
இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருக்கிறது. மேக் இன் இந்தியா என்ற முழக்கத்துக்கும் பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் இங்கு தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன.

தொ­ழில் தொடங்க அனுமதி பெற உள்ள சிகப்பு நாடா நடைமுறை, மின் உற்பத்தியை பெருக்காதது, தரமற்ற சாலைகள், நடைமுறைக்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள், திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி பெற ஆகும் அதிக காலதாமதம் போன்ற அடிப்படையான, தொழில் வளர்ச்சிக்கு எதிரான நிலையை மாற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு, நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மேக் இன் இந்தியா என்ற முழக்கம் மட்டும் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை உருவாக்கி விடும் என்று நினைப்பது பகல் கனவுதான். எனவே இது தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி, தேவையான ஆவணங்கள் இருப்பின் உடனுக்குடன் அனுமதி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு இயற்றிய பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இடையில் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளைப் புரிந்து கொண்டு, தங்கள் மனம் போனபடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு இனியாவது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் முனைவோர் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டு உள்ளது. தமிழ் நாட்டில் தொழில் தொடங்க, துறை சார்ந்த அலுவலகங் களுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்கும் பொழுது ஏற்படும் ஏமாற்றங்கள் மிகவும் கசப்பானவை. ஆன்லைன் வாயிலாக அனைத்து விண்ணப்பங்களையும் அனுப்பும் படி கூறினாலும், அனைத்து துறைகளிலும் நேரடி யாக வந்து விண்ணப்ப நகல் ஒன்றைக் கொடுக்கவும் சொல் கிறார்கள்.

நேரடியாக அதிகாரிகளைச் சந்திக்கத் தேவை இல்லை என்பதற்காகத்தான் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற முறையே நடைமுறைப் படுத்தப்படுகிறது. நேரடியாகவும் வந்து விண்ணப்ப நகல்களை வழங்கச் சொல்வது ஒற்றைச் சாளர முறையின் அடிப்படை நோக்கத் தையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது.
இவ்வாறு நேரடியாக வந்து விண்ணப்ப நகல்களை துறைதோறும் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும். அனுமதிகள் ஒவ்வொரு துறையில் இருந்தும் குறிப்பட்ட நாட்களுக்குள் வழங்கப் படாவிட்டால், அதற்கு நிர்வாக ரீதியில் யார் காரணமோ அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கிடைக்கா விட்டால் அனுமதி வழங்கியதாக எடுத்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முறையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசும் முன்வந்தால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல மடங்கு ஆகும்.
பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கேஸ் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ஹால்டியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு குழுவாக செயல்பட்டு (கார்ட்டல்) தொடர்ந்து பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு சிறு-குறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்டிக் மூலப்பொருள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 7.5% வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். பிவிசி மூலப்பொருட்கள் மீது விதிக்கப்படும் பொருள்குவிப்பு தடுப்பு வரியையும் (ஆன்டி டம்பிங் ட்யூட்டி) முழுவதுமாக நீக்க வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழில் பெருமளவு குறைக்கிறது. மறுசுழற்சி தொடர்பான தொழில் தொடங்க சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களை ஒட்டிய பகுதிகளில் தனி தொழிற்பேட்டைகள் அமைத்து, குறைந்த விலையில் மனைகள், மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும். இவை எல்லாம் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் அமையும்.

பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்ததாலும், பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலாக இருந்தாலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் தொழிற்சாலை என்னென்ன நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பத்தாயிரம் ரூபாய் தொழிலும் நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. பிளாஸ்டிக் தொழிலில் 98% தொழில்கள் குறுந்தொழில் வகையைச் சார்ந்தவை ஆகும். பெரும்பாலான பிளாஸ்டிக் தொழில்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் முதலீடு செய்துதான் தொடங்கப்படுகின்றன.

ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு அவரே முதலாளியாகவும், அவரே தொழிலாளியாகவும் இருப்பார். அவருடைய குடும்பத்தினரே சக தொழிலாளிகளாக இருப்பார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்படி குறுந்தொழில்களை நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை நமது அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக பச்சைப் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்ட குறுந் தொழில்களுக்கு மனைப்பிரிவு நிபந்தனையில் இருந்தாவது விலக்கு அளிக்க அரசு ஆணை இட வேண்டும்.

புதுச்சேரி அரசு புதிய தொழிற்கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருவது பாராட்டுக்கு உரியது. புதுச்சேரி அரசு முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்தும் பதினைந்து தொழில்களில் பிளாஸ்டிக் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. மேலும் பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு தொழிற் கொள்கையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன் இருக்கும் பெரிய சிக்கல்கள் இடம் கிடைப்பதும், பழைய பிளாஸ்டிக்கை அரைக்கும்போது வெளியேறும் கழிவு நீரை எப்படி அகற்றுவது என்பதும்தான்.

இதற்கு, புதுச்சேரி அரசு பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிலுக்கு என்று சுமார் ஐம்பது ஏக்கரில் தனியாக ஒரு தொழிற்பேட்டையை அமைக்கலாம். மேலும், இங்கே அமைக்கப்படும் மறுசுழற்சித் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரை தூய்மை செய்து வெளியேற்றும் வகையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் ஏற்படுத்தித் தரலாம்.” என்றார். திரு. ஜி. சங்கரன்.

வறுமை வளையத்துக்குள் இந்தியா மீள்வதற்கு என்ன வழி ?

0

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 7.1 விழுக்காடாக இருந்ததாக அரசு அறிக்கையில் காண்கிறோம். IMF World Economic outlook (october-2016) அறிக்கை, 2016-17 -ல் மிக வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. சராசரி ஆண்டு வளர்ச்சி 1980-2016 ஆண்டுகளில் 6.3% என்றும், 2010 -ல் மிக உயர்ந்து 10.3% என்றும், மற்றும் மிகத் தாழ்வாக 1991-ல் 1.1.% எனவும் வளர்ச்சி இருந்தது என்று இவ்வறிக்கை கூறுகிறது.

இதற்கு எதிர்மாறாக, ஏப்ரல் – ஜுன் 2017 காலாண்டில் பொருள் உற்பத்தி உயர்வு 5.7% என வீழ்ச்சி அடைந்து உள்ளது.

பொதுவாக அரசும், அரசியல்வாதிகளும், மற்றும் பொருளாதாரம் தெரியும் என்பவர்களும், பொருள் உற்பத்தி உயர்வு, மக்கள் நலன் உயர்வுக்கு சான்று என்பர்; ஆகவே பொருள் உற்பத்தி உயர்வு நல்ல அரசாட்சியைக் குறிக்கிறது என மனநிறைவு அடைவதையும் பார்க்கிறோம்.

மக்கள் நலன்

நாட்டின் உற்பத்தி உயர்ந்து வருவதால் மாத்திரமே மக்கள் நலன் மேம்படுகிறது என்று கூறுவது சரி அல்ல. ஏழை மக்களுக்கு மேலும் மேலும் இலவசங்களை கொடுப்பதை “மக்கள் நல திட்டங்கள்” என்று கூறினால் கூட, மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்த அவை உதவாது.

அடிப்படையில், பொருளாதார நல உயர்வு என்பது, ஒரு தனி நபர் வேலை வாய்ப்பு மூலமாக உண்டாகும் நிதி சார்ந்து தேவைகள் சந்திக்கப்படும் நிலை உயர்வைக் குறிக்கிறது.

பொதுவாக, நாட்டின் பொருள் உற்பத்தி, எழுத்தறிவு, மருத்துவர்கள் எண்ணிக்கை, சுற்றுச்சூழல் தூய்மை, போன்றவற்றின் உயர்வை வைத்தும் மக்கள் நலன் நன்றாக இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும், வேலை இன்மை குறைந்து மக்களின் வருவாய் உயர்வின் உறுதிப்பாடு மூலமாக வாங்கும் திறன் அதிகரிப்பதும், அரசு மக்களுக்குத் தேவையான பொது நல வசதிகளை ஏற்படுத்துவதும்தான் மக்கள் நலன் (அல்லது வாழ்க்கைத்தரம்) உயர வழி வகுக்கும்.

அதிக வருவாய் உள்ளவர்களுக்கும், சொற்ப வருவாய் உள்ளவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமானால் பொருள் உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி மக்கள் நலனை உயர்த்தவில்லை என்பதைக் குறிக்கிறது.

வறுமைக்கோடு மாயை

மத்திய திட்டக் கமிஷன், மற்றும் பொருளாதார வல்லுநர் குழுக்கள் கணித்து இருக்கும் இந்தியாவின் வறுமையில் இருப்போர் தொகை ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக இருக்கிறது. மக்கள் தொகையில் (2010), வறுமையில் இருப்போர் 37% என டெண்டுல்கர் குழுவும், 50% என்று சாக்சனா குழுவும், 77% என அர்ஜுன் சென்குப்தா கமிஷனும் கணித்து இருக்கின்றன. ரங்கராஜன் கமிட்டி (2014), நாள் வருமானம் ரூ.47 க்கு குறைவாக ஆகப் பெறுபவர்கள் வறுமையில் இருப்போர் எனவும், இதன்படி 30% மக்கள் வறுமையில் இருப்பதாகவும் கணக்கு இட்டிருக்கிறார்கள்.

இவை எல்லாமே மாயையான அல்லது உண்மை நிலைக்கு முரணான கணிப்புகள் ஆகும். ஒருவருக்கு வேண்டிய வீடு, உணவு, உடை, சுகாதாரத் தேவை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வருமான அளவுக்குக் கீழே உள்ளவர்கள் எல்லாருமே ஏழைகள்தான் என்று கூறுவதுதான் சரியானதாகும். இதன்படி, நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.

வறுமை வளையம்

பொருளாதார மேதை ரக்னர் நர்க்ஸ், “ஒரு ஏழை நாடு தொடர்ந்து ஏழை நாடாகவே இருக்கும்” (A country is poor because it is poor) என்றார். இக்கூற்று, ஒரு ஏழை நாடு “வறுமை வளையம்” என்பதற்குள் சிக்கிக் கொண்டு இருப்பதைக் குறிக்கிறது.

ஏழை நாடுகள், “வருமானம் குறைவு, சேமிப்புக் குறைவு, மூலதனம் குறைவு, உற்பத்திக் குறைவு வருமானம் குறைவு” என்ற பொருளாதார சுழற்சியிலேயே சிக்கி இருப்பதுதான், வறுமை வளையத்துக்குள் சிக்கி இருக்கும் நிலையாகும்.

வள உயர்வு?

ஒரு நண்பர் என்னிடம்: “25 ஆண்டுகளுக்கு முன் மாதம் ரூ.500 சம்பாதித்த பொழுது வரவும் செலவும் சமமாக இருந்து மீதம் இல்லாமல் இருந்தது; இப்பொழுது மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறேன். இன்றும், வரவு முழுவதும் செலவாகி மீதி ஒன்றும் இல்லாமல்தான் இருக்கிறேன்” என்று கூறினார். ஆகவே, இவருக்கு வாழ்க்கைத் தரம் பல ஆண்டுகளாக உயரவில்லை என்பது உண்மையாகும்.

பொருளாதார வளர்ச்சி கூடி வரும் பொழுது, மக்கள் வாழ்க்கைத் தரம் உயராவிட்டால், பொருளாதார கொள்கையில் குழப்பமோ அல்லது குறைபாடோ இருக்கிறது. என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில், நாட்டின் வேகமான உற்பத்தி உயர்வு மக்களிடையே வருவாய் ஏற்றத் தாழ்வுகளை மிகவும் அதிகப்படுத்தி விட்டது.

விலையேற்றம்

எப்பொழுதும் இல்லாத அளவு மொத்த விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் 2.2% -ஆக இப்பொழுது குறைந்து விட்டதாகவும், இது பொருட்களின் விலை குறைவதற்கு ஏற்றதாக இருப்பதாகவும் அரசு அறிக்கை கூறுகிறது. இக்கூற்றை மக்களிடம் சொன்னால், “பல பொருட்களின் விலை குறையவில்லையே; மாறாக, விலைவாசி ஏற்றத்தால் முன்பு இருந்ததை விட எங்கள் பொருளாதார நலன் குறைந்து விட்டது” என்றுதான் சொல்கிறார்கள்.

இதற்குக் காரணம், மொத்த விலை ஏற்றத்தை விட (2.2%), அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது..
சான்றாக, கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு 2015-ல் ரூ.100 என்றிருந்து, 2016-ல் ரூ.200 என உயர்ந்து, இப்பொழுது ரூ.140-க்கு விற்கப்படுகிறது. அதாவது, இதன்படி, விலை ரூ.60 குறைந்தாலும், 2015-ல் இருந்தததை விட இப்பொழுது ரூ.40 விலை உயர்ந்து இருக்கிறது.

ஆகவே, விலை உயரும் வேகத்தில் வருமானம் உயரவில்லையானால் வாழ்கைத் தரம் பாதிக்கப்படுகிறது.

பல காரணங்கள்

மக்கள் தொகை வேக வளர்ச்சி (இந்தியா: ஆண்டுக்கு 1.7%; வளர்ந்த நாடுகள்: 0.7%),
தனி நபர் சராசரி வருமான வளர்ச்சி 2016-17ல் 5.8% ஆக (மொத்த உற்பத்தி வளர்ச்சி 2016-17-ல் 7.1%) குறைவாக உள்ளது.

2016-17-ல் நாட்டின் மொத்த வருவாயில், வேளாண் உற்பத்தி 15.1%, தொழில் உற்பத்தி 31.1%, சேவைத்துறை பங்கு 53.8%. ஆகவே, கிராமப் புறங்களில் வாழும் சுமார் 65% மக்களின் வருவாய், நாட்டின் மொத்த வருவாயில் 15% மட்டுமே ஆகும். இவை நாட்டின் விடாப்பிடியான வறுமை நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.

விளைவுகள் 

தொடர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், பெருவாரியான மக்களை மிகவும் பாதித்துக் கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், “சேவா” எனும் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, விலை ஏற்றத்தினால், ஏழைக் குடும்பங்கள்:
3 வேளைக்குப் பதில் 2 வேளை தான் உணவு உண்ண முடிகிறது;
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாத்திரமே செல்ல முடிகிறது;
பேருந்தில் பயணம் செய்ய பணம் இல்லாமல் நடந்து செல்கின்றனர்;
75% வருமானம் உணவுச் செலவுக்கே போய்விடுகிறது,

பொருளாதார வல்லுநரும், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருமான திரு. ரகுராம் ராஜன் கூறுகிறார்: ”’இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, 8 முதல் 10 சதவீதம் வளர்ச்சியை எட்டும் முன்பு யாரும் மார்தட்டிக் கொள்ளக் கூடாது. நாம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு உள்ளோம் என்று கருதிக் கொள்கிறோம். ஆனால், சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட 5 மடங்கு பெரிதாக உள்ளது. ‘இந்தியா வேகமாக வளர்கிறது’ என்று கூறப்படுவது விவரம் இல்லாமல் கூறப்படுவதுதான்”, என்று.

ஆகவே, இந்தியா ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதப் பொருள் உற்பத்தியை தொடர்ந்து அடைய வேண்டுமானால் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும். மேலும், நாட்டின் வேலை இல்லாத மக்களுக்கு வேலை வாய்ப்புகளை விரைவாக ஏற்படுத்துவதற்கு ஏற்ப பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைத்து செயல் படுத்துவதும் மிக அவசியமாகும்.

வறுமை வளையத்திற்குள் சிக்கி இருக்கும் பெரும்பான்மை மக்களை அவ்வளையத்தை உடைத்தெறிந்து விடுவித்து நலன் பெறச் செய்யும் விதமாக அரசு செயல்படுவது அவசரமான அவசியமாகும்.

– எஸ். ஜெ. எஸ். சுவாமிதாஸ் (9841024391)

  முன்னாள் இயக்குநர், பொருளாதாரத் துறை,

 இந்திய ரிசர்வ் வங்கி