வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இவர்கள் உதவுகிறார்கள்!
கடந்த ஆண்டுக்கு முன் மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, உங்களது வங்கிக் கணக்கில் பெரு தொகை டெப்பாசிட் செய்தவரா?
இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வந்து உள்ளதா? ‘இத்தனை ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. ஆனால் வரும் நாட்களிலும் இப்படியே தொடர்வது இயலாதோ?’ என்ற சந்தேகத்தில்… யோசனையில் இருப்பவரா?”வரி கட்டுவதும்,வரிக்கணக்கு தாக்கல்செய்வதும் சரிதான்.
ஆனால், அதற்கானஆடிட்டர் கட்டணமே பெரிய தொகைபோல தெரிகிறதே!” என்ற ஐயத்தில் உள்ளவரா கவலையை விடுங்கள்! மேலே சொல்லப்பட்டு உள்ள 4 விதமானவர்களில், நீங்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள் பயிற்சி பெற்ற இளைஞர்கள். வருமான வரித்துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள். ஒருவகையில் இதற்கான உரிமம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.
ஆம். டிஆர்பி…. அதாவது, டேக்ஸ்ரிட்டர்ன் பிரப்பேரர் என்ற பெயரில்,செயல்படும் இவர்கள் மேலே உள்ள 4 தரப்பினருக்குமான தேவைகளை நிறைவு செய்வார்கள்.அதோடு, இவர்கள் அதிக அளவாக 1000 ரூபாயில் இருந்து, குறைந்த அளவாக 250 ரூபாய் வரை கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.
அவர்கள் உங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த தொகை மாறுபடும் என்கிறது இவர்களுக்கான வலைதளம்.ஆங்கிலத்தில் TRP எனக் குறிப்பிடப்படும், இவர்கள் மத்திய அரசின் வருமான வரித்துறையால் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.
இவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டம் குறித்து நன்றாகத் தெரியும்.அதன்படி,ஒருவரது ஆண்டு மொத்த வருமானத்தைக் கணக்கிடுவது எப்படி, அதில் இருந்து அவர் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு… அதை செலுத்துவது எப்படி…, எப்போது செலுத்த வேண்டும்…, ஒருவேளை கூடுதலாக வரி செலுத்தி இருந்தால், அதை அரசிடம் இருந்து திரும்பப் பெறுவது எப்படி…உள்ளிட்டபல செய்திகள் பற்றியும் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
அதனால், வருமானவரித்துறை என்றாலே, ஒரு விதமானஅச்சத்தில் உள்ளவர்களும், ஆடிட்டர் அலுவலத்தைப் பார்த்த மிரட்சியில், அந்ததிசையையே தவிர்த்து வருபவரும் கூட,இவர்களிடம் தேவையான சேவையைப் பெற்றுக் கொள்வது சாத்தியமே.
சரி… இவர்களை எங்கே தேடிக் கொண்டுபோவது என்பதுதான் அடுத்த உங்களதுகேள்விஎன்றால், அதற்கு உடனடி, நேரடிபதில் – அவர்களைத் தேடி நீங்கள் போகவேண்டியது இல்லை. இருவருக்கும்ஏற்புடைய நேரம், தூரம் என்றால்,அவர்களே கூட உங்களைத் தேடிவந்து நீங்கள் சொல்லும்இடத்தில் உங்களைச் சந்திக்க வாய்ப்புண்டு.
இது போன்ற பயிற்சிபெற்றவர்களை, அவர்கள்வசிக்கும் பகுதி வாரியாகபிரித்து, அவர்களை நீங்கள் அடையாளம்காண, அஞ்சல் முகவரிஎண் அதாவது பின்கோடு வாரியாக பிரித்து இவர்களுக்காகவே தனியாகசெயல்படும் வலைத்தளத்தில் பட்டியலாகத் தரப்படுகிறது. www.trpscheme.com/locate-trps /12 12> என்ற முகவரிக்குச் சென்று தேடினால், உங்களுக்கு சேவை அளிக்க தேவையானவரை அடையலாம் காணலாம்.
நிதி நிர்வாகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை,மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கிய பலமுயற்சிகளை,தற்போது மோடி தலைமையிலான மத்தியஅரசும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிலையில், வரி வசூல் முயற்சிகளும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகின்றன. இதில், கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகக் கூறி, செய்யப்பட்டபணமதிப்பு நீக்கம் (Demontisation) தொடர்பான நடவடிக்கைகள் வருமானவரி வசூல்விஷயத்தில் பலரதுஎண்ணங்களை மாற்றி உள்ளது.
அதனால்,இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள்,அலுவலகங்களில் வரி பிடித்தம் செய்துவிட்டார்கள் என வரிக் கணக்கு தாக்கல்செய்யாதவர்கள் என பலரும் வரிக் கணக்குதாக்கல் செய்யவேண்டி உள்ளது.மறுபுறம், ஒருவரது ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கு மேல் என்றால் அவர்கள் கட்டாயமாக ஆன்லைன் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று இருந்த வரம்பு படிப்படியாகக்குறைக்கப்பட்டு, இப்போதுகிட்டத்தட்டவரிக்கணக்கு தாக்கல் செய்யும் அனைவரும் ஆன்லைன் முறையை நாட வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.
எனவே, ஆன்லைனில் தாக்கல் செய்யும்வரிக் கணக்கு குறித்த விவரங்களை குறைந்தசெலவில் செய்ய, இந்த டிஆர்பி-க்கள் பொருத்தமானவர்களாக தெரிகிறது.இந்த திட்டம் 2006-07ம்ஆண்டு தொடங்கப்பட்ட போது நாடு முழுவதும்5000 டிஆர்பிக்கள் நியமிக்கப்பட்டார்கள்.பின்னர் 2012-13ம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை இவ்விதம் டிஆர்பி-க்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். எனவே, நாடுமுழுவதும் பல நடுத்தர நகரங்களில் கூட,இவ்விதம் அங்கீகரிக்கப்பட்ட ஓரிருவர்கள் உள்ளதால் அவர்களை அணுகி பயன்அடையலாம்.
மறுபுறம் ஒருகுறிப்பிட்ட டிஆர்பிசரியான முறையில் சேவை வழங்கவில்லைஎன்றால், அவர்கள் மீது புகார்செய்யவும்வாய்ப்பு உண்டு. இதற்கு அவர்களுக்கானதனி வலைதளத்தையோ, அதில் உள்ளமின்னஞ்சல் [email protected]
முகவரியிலோ…., 011 – 2341 4177, 011 – 23415311 என்ற தொலைபேசி எண்களையோபயன்படுத்திக் கொள்ளலாம்.தற்போதைய நிலையில் தமிழகத்தில் மட்டும், அதன் பல்வேறு நகரங்களில் சுமார்425 பேர் இவ்விதமான பொறுப்பில்,பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சரிதானே! வருமான வரி கட்ட, அதைசரியாகக் கணக்கிட்டுதர வேண்டும்என்றால், அதற்கு உடனடியாகவும்,வரிக்கணக்கு தாக்கல் மட்டும் செய்யவேண்டுமானால், அதற்கானநேரமானஜூலை மாதத்திலும் இந்த டிஆர்பிக்களைப் பயன்படுத்திக் கொள்வது, இன்றையசூழலுக்கு புத்திசாலித்தனமானசெயல்மட்டுமல்ல; சிக்கனமானதும் கூட!
– ஆர். சந்திரன்