அஞ்சலக சேமிப்பு வங்கி திட்டமானது, அனைவருக்கும் சேமிப்பதற்கு ஆர்வத்தை தூண்டுவதோடு நிறைவானதாகவும் இருக்கிறது. அந்த வகையில், அவற்றின் சிறிய அளவிலான சேமிப்பு திட்டங்கள் பற்றி காண்போம்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு:
அஞ்சலக அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்பு கணக்குகள் உண்டு. மேலும், வங்கிகளில் 3.5 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், அஞ்சல் அலுவலகத்தில் 4 சதவீதம் வட்டி தரப்படுகின்றது. தனிநபர், இருவர் என அனைவரும் இந்த கணக்கை தொடங்கி சேமித்து வரலாம். குறைத்தபட்ச டெபாசிட் தொகை ரூபாய் 20 மட்டுமே. குறைந்த பட்ச இருப்புத்தொகை ரூபாய் 500 வைத்து தொடங்கும் போது காசோலை வசதி CHEQUE வசதி மற்றும் டெபிட் கார்டு வசதி அளிக்கப்படுகிறது. சேமிப்பு கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய அல்லது எடுக்க அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். டெபாசிட் செய்ய அதிக பட்ச வரம்பு இல்லை. அனைத்து காசோலைகளையும் டெபாசிட் செய்து பணத்தை தமது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் (அதற்கு உரிய கட்டணம் பிடித்துக் கொள்ளப்படும்)
ஐந்து வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள்:
தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஒரு வருடத்திற்கு 7..2 சதவீதம் லாபம் அளிக்கிறது. கணக்கை தொடங்குவதற்கு குறைந்த பட்ச தொகை ரூபாய் 10 மட்டுமே. உச்சவரம்பு ஏதும் இல்லை. சிறுவர் சிறுமியருக்கும் சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.
அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் கணக்கு:
அஞ்சல் அலுவலக டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி வீதம் அளிக்கப்படுகிறது. தற்போது, ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை வட்டி விகிதம் கீழ்கண்டவாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருட கணக்கு 6.9 %
வருடங்கள் 6.9 %
வருடங்கள் 6.9 %
வருடங்கள் 7.7 %
அதிகபட்ச தொகை வரம்பு இல்லை. 5 வருடங்கள் டெபாசிட் செய்யும்போது வருமானவரி விலக்கு உண்டு.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டக்கணக்கு:
தற்போது அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.6 சதவீதம் வட்டிவிகிதம் லாபம் அளிக்கப்படுகிறது ஒரு கணக்கில் அதிகப்பட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் இதுவே இருவர் (ஜாயிண்ட் ) JOINT கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. இருவரும் சம அளவிலான டெபாசிட் செய்ய வேண்டும் முதிர்வு காலம் ஒரு வருடத்திற்கு பிறகு பணம் தேவை பட்டால் முன் கூட்டியே சேமிப்பு விதிகளின் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மூத்தகுடி மக்களுக்கான சேமிப்பு திட்டம்:
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் இந்த திட்டத்தில் சேரலாம் குறைத்த பட்ச முதலீடு ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 15 லட்சம் இந்தக்கணக்கை கணவன் மனைவி அல்லது மனைவி கணவன் மட்டுமே ஜாயிண்ட் JOINT கணக்காக வைத்து கொள்ளலாம். வட்டிவீதம் 8.6% முதிர்வு காலம் 5 வருடம் 80சி சட்டத்தின் படி வருமான வரி சலுகை உண்டு.
பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி:
இதில் முதலீடு செய்ப்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.9 % வட்டி வழங்கப்படுகிறது முறைத்தபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் முதலீடு செய்யலாம் மொத்தமாக அல்லது 12 தவணைகளாகவும் செலுத்தலாம் வருமானவரி சட்ட விதிகளின்படி, வரி சலுகை உண்டு. இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி சலுகை உண்டு.
ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரம்:
5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 7.90 % லாபம் தருகிறது இன்று ரூபாய் 100 முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு ரூபாய் 146.25 கிடைக்கும் அதிகபட்ச வரம்பில்லை வருமான வரி சலுகை உண்டு டெபாசிட் செய்ய அதிக பட்ச வரம்பில்லை.
கிசான் விகாஸ் பத்ராஸ்:
கிசான் விகாஸ் பத்ராஸ் திட்டம் ஆண்டு 7.6 % வட்டி தருகிறது இந்த திட்டத்தில் 118 மாதஙகளுக்கு முதலீட்டு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் அதிக பட்ச முதலீட்டு வரம்பு இல்லை சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
சுகன்யா ஸ்ம்ரிதி யோஜனா( செல்வமகள் சேமிப்பு திட்டம் ):
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாக இது செயல் பட்டு வருகிறது பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை இத் திட்டத்தில் இணைந்து 15 வருடங்கள் பணம் செலுத்தலாம். அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் 8.4% வருமானவரி விலக்கு உண்டு.
பொன் மகன் சேமிப்பு திட்டம்:
செல்வமகள் சேமிப்புத்திட்டம் போலவே மத்திய அரசு ஆண் குழந்தைகளுக்காக சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பெயர் பொன் மகன் சேமிப்பு திட்டமாகும். 10 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் பெற்றோர் உதவியுடனும், 10 வயதுக்கு மேற்பட்டோர் தனியாகவும் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. தற்போதைய அறிவிப்பின்படி வட்டி விகிதம் 7.9 வழங்கப்படுகிறது. வழக்கம் போல், வருமான வரி விலக்கு உண்டு.
– முனைவர் த. செந்தமிழ்ச் செல்வன்