பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி என்பது அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். இது ஒரு நீண்ட கால முதலீடாகும். LONG TERM INVESTMENT சேமிப்பு பாதுகாப்பு, வருமானம் வரி சலுகை ஆகியவை முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அரசாங்க ஆதரவுடைய பிபிஎஃப் உங்கள் முதலீட்டிற்கு உத்திரவாதம் தருகின்றது. கடன் மற்றும் குறைத்த பராமரிப்பு செலவுகள் இதன் சிறப்புகள் ஆகும். பொது மற்றும் தனியார் வங்கிகளில் மட்டும் இன்றி அனைத்து அஞ்சல் அலுவலங்களிலும் பிபிஎஃப் கணக்கை எளிதாக திறக்கலாம்.

தகுதிகள்
ஊதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் சுய வேலை வாய்ப்பு அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் பிபிஎஃப் கணக்கிற்கு அஞ்சலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். 18 வயதிக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமியருக்கும் பிபிஎஃப் கணக்கு தொடங்கலாம். (செல்வமகள் அல்லது பொன்மகன் திட்டத்தில் சேர இயலாத போது) அது அவர்களது மேற்படிப்புக்கு திருமணம் முதலான செலவுகளுக்கு பயன்படும். தந்தை அல்லது தாய் யாராவது ஒருவர் அவர்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

என்ஆர்ஐ -க்கு non resident of India இந்த கணக்கு தொடங்க அனுமதி இல்லை. குறைந்தபட்சம் முதலீடு ரூபாய் 500 அதிகப்பட்சம் வருடத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் வருடதிற்கு 12 தவணைகள் மட்டுமே பணம் செலுத்தலாம். வட்டி விகிதம் வருடத்திற்கு 7.9 சதவீதம் இந்த கணக்கில் செலுத்தப்படும் பணத்திற்கு வருமானவரி 80சி இன் படி வரிவிலக்கு உண்டு. 3 வருடங்கள் முடித்தவுடன் 6 வருடங்கள் வரை நிதியாண்டின் கணக்குபடி கடன் பெறலாம். 7வது ஆண்டில் இருந்து கட்டிய தொகையில் 50 சதவீத தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

மாதிரி கணக்கீடு
ஒருவர் மாதத்திற்கு ரூபாய் 10,000/- இந்த கணக்கில் செலுத்தி வந்தால் 12 மாதங்களுக்கு அவர் செலுத்தும் மொத்த தொகை 18,00,000/- 15 வருடங்கள் முடிவில் கிடைக்கும் வட்டி மாத்திரம் ரூபாய் 15,71,350/- ஆக முதலும் வட்டியும் சேர்த்து அவர் பெறும் தொகை ரூபாய் 33,71,350.59 வேறு ஏந்தவொரு திட்டத்திலும் இந்த அளவுக்கு வட்டி கிடைக்காது.

– த. செந்தமிழ்ச் செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here