Friday, October 30, 2020

ஓவியங்களில், டிசைன்களில் பயன்படுத்தப்படும் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வோம்

ஓவியத்துக்கு அடிப்படைக் கலைக் கூறுகளாக கோடு, வடிவம், இடப்பரப்பு, வண்ணம், தகை நேர்த்தி, இழைநயம் போன்றவைகள் எவ்வாறு இன்றி அமையாதவை ஆக இருக்கின்றனவோ, அவற்றைப் போலவே, ஓவியத்தின் பண்புக் கூறுகளாக சமநிலை (பேலன்ஸ்),...

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

சரியும் பொருளாதாரத்தை தடுக்க என்னதான் தீர்வு?

பொருளாதார மந்தநிலை என்ற சொல் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகின்றது. முதல்நிலை, வளர்ச்சிக் குன்றிய நிலை, மற்றொன்று, முற்றிலும் வளர்ச்சி இல்லாத நிலை. இப்பொழுது நிகழ்வது முதல்நிலை ஆகும். இதை ஆங்கிலத்தில் Slow Down என்பார்கள். நீண்ட நாட்களாக இதை யாரும் அங்கிகரிக்கவில்லை. பாஜக- க்கு ஆதரவாக இருப்பவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இதை ஏற்கவில்லை. ஆனால், அமைச்சர்களும், வலதுசாரியில் இருக்கின்ற பொருளாதார வல்லுநர்களும் ஏற்கின்றனர். பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மந்தநிலையின் தீவிரமானது, நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்றும் கூறுகின்றனர்.

கடந்த கால் ஆண்டில், இந்தியாவில் GDP -யின் வளர்ச்சி 5.2 விழுக்காடாக குறைந்து உள்ளது. இந்த விழுக்காடுகளை எப்படி கணக்கிடுகின்றனர்? CSO (Central Statistics Office) நிறுவனமானது, தினமும் பொருளாதாரத்தின் நிலைமைகளான ஏற்றம், இறக்கம் போன்றவற்றை பெரிய நிறுவனங்களை அடிப்படையாக வைத்து கணக்கிடுவார்கள். அவற்றை விழுக்காட்டில் கூறுவார்கள். அந்த வகையில் 9 விழுக்காட்டில் இருந்து 5.2 விழுக்காடாகக் குறைந்து உள்ளது. இந்த நிலையைதான் பொருளாதார மந்தநிலை என்கின்றனர்.

இதற்கு முதன்மைக் காரணம், அந்த மந்தநிலையை ஏற்காததே ஆகும். அவற்றை ஏற்று, அதன் நிலை அறிந்தால் மட்டுமே அதற்கு தீர்வுக் கிடைக்கும். நிதி அமைச்சரும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இது தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை.

கடந்த தேர்தலின்போது, இவர்களின் நோக்கம் ‘வளர்ச்சி’ என்று இருந்தது. பின், இரண்டு லட்சம் பேருக்கு கட்டாய வேலை என்று கூறினார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து, இரண்டு அழிவுகளை அதாவது பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டனர். முதல் அழிவு இரவோடு இரவாக அமல்படுத்திய 500ரூ., 1000ரூ நோட்டுகள் ஒழிப்பு, அடுத்தது ஜிஎஸ்டி.

இந்த ரூபாய் நோட்டுகள் ஒழிப்பின் விளைவு என்ன என்றால், நிறுவனமாக்கப் படாத வணிகங்கள் முற்றிலும் சரிந்து விட்டன. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ஜிஎஸ்டி-யை அமலுக்குக் கொண்டுவந்து விட்டனர். அதற்கு காரணம், அனைத்தையும் ஒரே வணிகமயமாக்குவது ஆகும். சிறு சிறு பகுதிகளாக இருந்தால், ஒவ்வொரு முறையும் ஏற்றுமதிக்கு பொருளாதார செலவு அதிகம் ஆகும். ஆனால், ஒரே மயமாக இருந்தால் செலவுக் குறையும்; உழைப்புக் குறையும்; பணத்தின் மதிப்பு அதிகம் ஆகும்.இதனால் பெரிய வணிக நிறுவனங்களின் தரம் உயரும். குறு மற்றும் சிறியத் தொழில்கள் முற்றிலும் சரிந்து விடும். பொருட்களின் மதிப்பு உயரும்; எந்தவொரு பொருளையும் வாங்க முடியாது. தேவைகள் அதிகம் ஆகும்; வறுமை அதிகரிக்கும். நிர்வாகச் செலவுகள் குறையும்.

உலகம் முழுதும் ஒரே சந்தையாக மாற்ற வேண்டும், ஐரோப்பா யூனியன் போன்று ஒரு சந்தையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் ஆகும். ஏனென்றால், இதன் மூலம் அதிக லாபம் மற்றும் வருவாயை ஈட்டலாம்.

WTO (World Trade Organization) என்னும் அமைப்பானது, அனைத்து வர்த்தகத்தையும் மேம்படுத்துவது தொடர்பாக அனைத்து நாடுகளிடமும் கையொப்பம் வாங்கி உள்ளது.

மேம்பாட்டுக்காகவே இந்த திட்டத்தை வகுத்தோம், ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தோம் என்று அவர்கள் கூறுகின்றனர். முன்பெல்லாம் நிர்வாக வரி, சேவை வரி, விற்பனை வரி என்று அனைத்தும் தனித் தனியாக இருந்தது. இப்பொழுது அவை எல்லாம் சேர்ந்தது தான் ஜிஎஸ்டி ஆகும்.

இந்த முறையானது முழுக்க முழுக்க பெரிய நிறுவனங்களை உயர்த்துவதற்கே ஆகும். ஆனால், இதை அவர்கள் சீர்திருத்தம் என்கிறார்கள். ஜிஎஸ்டி என்பது ஒரு வலைப்பின்னல் ஆகும். இதில் ஒரு இழை அறுந்தாலும் அனைத்து நெட்வெர்க்கும் சரிந்து விடும். வணிகம் செய்ய இயலாது. ஏனென்றால் அனைத்தும் சேர்ந்ததே ஜிஎஸ்டி.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 30 மாதங்கள் ஆகின்றன. இத்தனை மாதங்கள் கழித்து, நாங்கள் வரி வசூல்களைக் கொண்டு குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவப் போகின்றோம் என்கின்றனர். ஆனால், இதற்குள் எத்தனை சிறுத் தொழில் நிறுவனங்கள் சாம்பல் ஆகி இருக்கும். எத்தனைபேர் சுண்ணாம்பு ஆகி சுடுகாட்டுக்குப் போய் இருப்பார்கள்.

ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு, ஜிஎஸ்டி இவற்றைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு.
விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே விலைவாசி உயர்வை அமல்படுத்தினோம் என்கின்றனர்.

அடுத்து, பணவீக்கம் என்பது முக்கியமான ஒன்று ஆகும். உணவுப்பொருட்களின் பணவீக்கம் என்றால், கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான ஏற்ற விலை, இலாபம் உற்பத்தியாளருக்குக் கிடைக்கவில்லை என்பது ஆகும். வருமானம் என்பதே அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். ஒரே நிலைதான் தொடர்ந்து இருக்கும். ஆனால், அவர்களின் தேவையானது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அவர்களால் எந்தப் பொருளையும் வாங்க முடியவில்லை. இவைகளே அவர்களை கடன் வாங்க வைக்கின்றன. பின், நகைகளை அடகு வைக்கின்றனர். மேலும் மாதங்கள் கழியக் கழிய அவர்களால் சமாளிக்கமுடியாத சூழ்நிலை உருவாகின்றது. இந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 11 வருடங்களாக விவசாயிகளின் விலைப் பட்டியலானது (Terms of Trade) அவர்களுக்கு எதிராக உள்ளது.

அடுத்து, ஆட்டோ மொபைல்ஸ் தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது. டூவீலர் விற்பனையானது 40% பாதிப்பை அடைந்துள்ளது.

டூவீலர் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளது எனில், பணவீக்கம் அதிகம் உள்ளது என்று பொருள். இதேபோல, ஒன்றோடு ஒன்று தொடர்ந்து பாதிப்பு அடைய அடைய பெரும் சரிவை தீர்வாய் தரும். நாட்டில் சாலையில் ஓடக்கூடிய 90% கார்கள் கடன் மூலம் வாங்கப் பட்டவை ஆகும்.

உற்பத்திப் பொருட்களில் பாதிப்பு ஏற்படும்போது, அது உற்பத்தியாளர் களையும் பாதிக்கின்றது. நிரந்தரப் பணியாளர்களுக்கு ஓரளவு ஊதியம் கிடைக்கின்றது. தற்காலப் பணியாளர்களுக்கு வேலை இல்லாமல் போகின்றது. விடுமுறைக் கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.

அடுத்து, இந்தியாவின் பொருளாதார நிலைகளில் முதன்மை படி நுகர்வு அடுத்து முதலீடு. நுகர்வு என்பது இங்கு குறைந்து விட்டது. இந்த சரிவுகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. நாளை சரி ஆகிவிடும் என்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களும் அச்சம் அடைகின்றனர். முதலீடு போடுவதற்கு தயங்குகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக இதே நிலைதான். இந்த பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்றால், நுகர்வை அதிகரிக்க வேண்டும். அடுத்து, 18% GST என்ற சட்டத்தைத் திருத்த வேண்டும். இது தொடர்ந்தால் பொருளாதாரம் நிலை மிகவும் மோசமாகிவிடும்.

ஒரு பொருளானது, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா என மாறி மாறி வர அவற்றின் விலை அதிகரிக்கும் டாலர் கணக்கில். 10,000 ரூ. பொருள்களை வைத்து 65,000ரூ. சம்பாதித்து விடுகின்றனர்.

100 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய ஒரு சிறந்த திட்டம் ஆகும். அதை முடக்காமல் விரிவு படுத்தவேண்டும். கிராமப் புறத்தில் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டுமே மந்தநிலையை சரிசெய்ய இயலும். ஏனென்றால், பெரும்பான்மையான உற்பத்தியாளர்கள் அவர்களே.

ரிசர்வ் வங்கியில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பணம் எடுத்து உள்ளனர். ஆனால், அதை என்ன செய்யப்போகிறார்கள் என்று இன்னும் கூறவில்லை. விவாதம், செய்தியாளர்கள் சந்திப்பு, என எதிலும் அவற்றைப் பற்றி கூறவில்லை.தயங்குகின்றனர். நிர்மலா சீதாராமன் இதுவரை இரண்டுமுறை செய்தியாளர்களை சந்தித்து உள்ளார் அவரும் கூறியது இல்லை. நாளை சரி ஆகிவிடும் என்று இன்னும் நம்புகிறார்கள்.

– பொருளியல். பேரா. ஜெயரஞ்சன்

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

Don't Miss

மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி?

இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய்...

கோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்!

கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்!...

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...

உலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது?

உணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...

மனிதன் படைப்பிலேயே சிறந்தது எது?

மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.